( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வாங்க கோடிஸ்வரர் ஆகலாம் !


ரு மனிதனின் சமூக அந்தஸ்து எதை வைத்து தீர்மானிக்கப் படுகிறது?

நம்மில் பலர் நினைக்கிறோம் சொத்துசுகம் பணகையிருப்பு அதிகமுடயவன் சமூகத்தால் மதிக்கப்படுவான் என்று அது நிஜம் தானா? நிச்சயம் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை
நான் எத்தனையோ பணக்காரர்களை பார்த்திருக்கிறேன் அவர்களிடம் பல நேரங்களில் நெருக்கமாகவும் பழகியிருக்கிறேன் பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அவர்கள் மதிக்கப்படுவதே இல்லை எனக்கு தெரிந்த ஒருவர் ஏராளமான சொத்துக்களையும் பணத்தையும் வைத்திருந்தார் அவர் ஒரு திருமண வீட்டிற்கு போனால் கூட எதோ வந்துவிட்டாரே என்று ஒப்புக்காக வரவேற்பார்களே தவிர கடுகளவு கூட மரியாதை காட்டமாட்டார்கள் அவர் இருக்கும் இடத்தை சுற்றி கண்காணிக்க ஆட்களை போட்டுவிடுவார்கள்

வேறொன்றும் இல்லை மனிதர் வெற்றிலையை மடித்து வாயில் வைத்து மெல்ல ஆரம்பித்தார் என்றால் என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் அதன் பின்விளைவுகள் என்ன என்பதை யோசிக்காமல் கொட்டி தீர்த்துவிடுவார் இவர் பேச்சால் சில கல்யாணங்கள் நின்று போயிருக்கிறது சில பஞ்சாயத்து மேடைகள் சண்டைக்களமாக மாறியும் இருக்கிறது


ஆனால் அவர் அதை பற்றியெல்லாம் அலட்டிக்கொண்டதே கிடையாது அட எல்லா பசங்களும் சுத்த மடையன்கள் சொல்லுறத ஒழுங்க கேட்காமல் மல்லுக்கு நிற்கிராணுவ என்று தனக்கு தானே மேதாவி பட்டம் சூட்டிக்கொண்டு சந்தோசப்படுவார் உண்மையை சொல்லப்போனால் அவரிடம் இருந்த பணம் அவருக்கு அடி உதை கிடைக்காமல் தடுத்ததே தவிர மரியாதையை வாங்கி தரவில்லை இப்படியும் இதை விட வித்தியாசமான பணக்கார கிறுக்கர்கள் ஊருக்கு ஊர் ஏராளம்

ஆயிரம் பணம் இருந்தாலும் அதிகார மிக்க ஒரு பதவி இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாக வருமென்று சிலர் நினைக்கிறார்கள் நேற்று வரை வீதியில் சோடாபுட்டி வீசிக்கொண்டு திரிந்தவன் இன்று சட்டமன்ற உறுப்பினராகிவிட்டால் எல்லோருமே கையெடுத்து கும்பிடுகிறார்கள் மரியாதையாக எழுந்து நிற்கிறார்கள் ஒதுங்கி வழிவிடுகிறார்கள் என்று நினைக்கிறோம்

பதவியால் மரியாதை கிடைக்கும் என்ற எண்ணத்தாலே பல அப்பாவிகள் தேர்தலில் நின்று டெபாசிட் இழந்து போகிறார்கள் பலர் பதவிக்கனவால் நிஜவாழ்வை தொலைத்துவிட்டு பரிதாப ஜீவன்களாக நடமாடி கொண்டிருக்கிறார்கள் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பல வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார் புகழ் பெற்ற தேசிய கட்சி ஒன்றின் மாநில தலைவராகவும் இருந்திருக்கிறார் அவர் பதவியில் இருக்கும் காலத்திலேயே கூட அவர் முன்னால் எல்லோரும் கூழை கும்பிடு போடுவார்களே தவிர முதுகிற்கு பின்னால் கசப்பாக விமர்சிப்பதோடு மட்டுமில்லாமல் அசிங்கமான வார்த்தைகளாலும் திட்டுவார்கள் காரணம் அவரால் நன்மை அடைந்தவர்களை விட கெட்டவர்களே அதிகம் தனது சொந்த லாபம் என்று வந்துவிட்டால் ஈவு இறக்கம் என்பதே பார்க்க மாட்டார் அதனால் தான் நல்ல அரசியல் அறிவு இருந்து கூட இன்று முகவரி இல்லாமல் மூலையில் கிடக்கிறார்எனவே பதவியோ பணமோ ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை தீமானிப்பது கிடையாது அவனிடம் உள்ள நல்ல பண்புகளே அந்தஸ்தை தீர்மானம் செய்கிறது நாய் வாலில் தேன்கூடு இருந்தால் யாருக்கு என்ன லாபம் அதை அந்த நாய் கூட எடுத்து சுவைக்க முடியாது அதே போல தான் பண்பாடு இல்லாத மனிதர்களிடம் பணம் இருந்தாலும் பதவி புகழ் இப்படி எல்லாம் இருந்தாலும் அதனால் எந்த பயனும் கிடையாது உலகம் அவனை போலியாக புகழுமே தவிர நெஞ்சார வாழ்த்தவே வாழ்த்தாது

அரகண்டநல்லூரில் ரங்கநாதன் வாத்தியார் என்று ஒரு டுயூசன் மாஸ்டர் இருந்தார் அவர் எந்த பள்ளியிலும் ஆசிரியர் அல்ல ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மாகா நிபுணத்துவம் வாய்ந்தவர் அறிவில் மட்டும் சிறந்தவர் அல்ல அவர் பண்பாட்டிலும் ஒழுக்கத்திலும் மிக உன்னத நிலையில் வாழ்ந்தவர் அவர் ஒரு இடத்திற்கு போகிறார் என்றால் அவரை கண்டவுடன் மிக பெரிய கோடிஸ்வரர்களும் சாதாரண குடியானவர்களும் எழுந்து நின்று மரியாதை தருவார்கள் ஒரு சின்ன குழந்தையை கூட முகம் சுளித்து பேச மாட்டார் அவரிடம் படித்தவர்கள் பலர் பொறியாளர்களாகவும் மருத்துவர்களாகவும் சிலர் மாவட்ட ஆட்சி தலைவர்களாகவும் காவல் துறையில் பெரிய பதவியில் உள்ளவராகவும் இன்றும் இருக்கிறார்கள்

அவர் வாழும் காலம் வரையிலும் யாரிடமும் எந்த உதவியும் பெற்றதில்லை தனது சுய சம்பாத்தியத்திலேயே வறுமையிலும் செம்மையாக வாழ்ந்துவிட்டு போய் விட்டார் ஆனாலும் இன்றும் பலரின் நினைவுகளில் அமரத்தன்மை பெற்று வாழ்கிறார் செத்த பிறகும் ஒரு மனிதன் வாழமுடியும் என்றால் அது பணத்தாலோ பதவியாலோ நிச்சயம் முடியாது பண்புகளால் மட்டுமே அமரத்தன்மை பெற இயலும்எனவே நாம் பணம் சம்பாதிப்பதில் பதவிகளை பெறுவதில் ஆர்வம் காட்டுவதை சிறிதளவாவது பண்பை சம்பாதிப்பதில் காட்ட வேண்டும் பணம் பதவி வாழ்க்கைக்கு தேவையில்லை என்று நான் சொல்லமாட்டேன் ஆனால் அவைகள் மட்டுமே ஒருவனை மனிதனாக வாழவைத்து விடாது உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பதை போல் பண்பு இல்லாத மனிதன் சாக்கடையாகவே கருதப்படுவான் அதனால் ஒரு கையால் பணம் பதவியையும் மறுகையால் பண்பையும் பெற பாடுபடுவோம் அது தான் நிறைவான மனித வாழ்க்கை கோடிஸ்வரர் ஆகும் தத்த்துவம் இது தான்.

+ comments + 1 comments

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்


Next Post Next Post Home
 
Back to Top