( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வெளிநாடு போகாத ஜாதகம் எது..?


  •    யா என் வயது 33 சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறேன் வாழ்க்கையை நல்லவிதத்தில் நடத்தக்கூடிய அளவிற்கு சம்பளம் வருகிறது என் மனைவி வேலைக்கு போகவில்லை என்றாலும் வீட்டில் இருந்தே சில தொழில்கள் செய்கிறாள் கடவுள் அருளால் வருமானத்திற்கு பெரிய குறைகள் இல்லை ஆனாலும் எனக்கு சிறியவயது முதலே ஒரு ஆசை இருந்து வருகிறது ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்பதே அந்த ஆசை பல முறை அதற்கான முயற்சி எடுத்தும் அது நடக்க வில்லை தற்போது நான் பணி புரியும் நிறுவனத்தில் அயல்நாடு செல்ல எனக்கு நல்ல வாய்ப்பு வந்தது ஆனால் அந்த நேரத்தில் எனக்கு அம்மை நோய் தாக்கம் இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அனுமதிக்க வில்லை பல முயற்சிகள் செய்கிறேன் ஆனால் ஒவ்வொரு முயற்சியும் கூடிவரும்போது எதாவது ஒரு தடை ஏற்பட்டு விடுகிறது என் ஜாதகப்படி வெளிநாடு செல்லும் வாய்ப்பு எனக்கு அமையுமா? அமையும் என்றால் எந்த காலகட்டத்தில் அதற்கான முன் முயற்சியை எடுக்கலாம் என்பதை என் ஜாதகத்தை பார்த்து சொல்லுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
முல்லைவனநாதன் சென்னை


   ண்பரே முதலில் உங்கள் பெயர் மிகவும் அழகாக இருப்பதை தெரிவிக்க வேண்டும் இது சிவபெருமானின் பெயர் என்றாலும் நமது தமிழ் நாட்டில் அதிகமான பேர் இந்த பெயரை சூட்டிக்கொண்டது கிடையாது இவ்வளவு அழகான பெயரை உங்களுக்கு வைத்தவர்களை நான் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்

அடுத்ததாக உங்கள் கேள்விக்கு வருவோம் இந்த காலத்தில் அயல்நாடு செல்வது ஒன்றும் பெரிய காரியம் அல்ல நேரமும் பணமும் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் வெளிநாடு போய்வரலாம் 

ஆனால் நீங்கள் விருப்பப்படுவது உல்லாச பயணத்திற்கு அல்ல பணிபுரிவதற்காக கடல் தாண்ட ஆசைபடுகிறீர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது தான் நமது தமிழ் மக்களின் தொன்மையான பண்பாடாகும் அதற்கு நீங்கள் ஆசைபடுவது ஒன்றும் தவறல்ல

ஆனால் மனித வாழ்வில் ஆசைபடுவது எல்லாம் நடந்து விடுவது கிடையாது நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் கடவுள் என்று ஒருவன் தேவையே இல்லை அதனால் தான் கடவுள் தான் நினைப்பதை மட்டுமே நம் வாழ்க்கையில் நடக்கும் வண்ணம் செய்கிறான்

எனவே நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் எல்லாம் இறைவனின் லீலை என்று எடுத்துக்கொண்டாலே வாழ்வில் பாதி துன்பம் குறைந்து விடும் என்னை பொறுத்தவரை நடக்க வேண்டுமென்று ஆசைபடுவதை விட நடந்தததை நினைத்து சந்தோசப்படுவதே சிறப்பு என்று கருதுவேன் 

உங்கள் ஜாதகத்தை ஒருமுறைக்கு நான்கு முறை அலசி பார்த்தேன் அதிலுள்ள கிரகங்கள் சொல்லும் விஷயத்தை அப்படியே உங்கள் முன் வைத்து விடுகிறேன் 

பொதுவாக எந்தவொரு ஜாதகத்திலும் பிறந்த லக்கிணதோடு சந்திரன் ராகு அல்லது சந்திரன் கேது ஆகிய கிரகங்கள் சம்பத்தப்பட்டு இருக்க வேண்டும் மிக முக்கியமாக தொழிலை குறிக்கும் பத்தாம் இடத்தில் இந்த கிரகங்களின் சம்பந்தம் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்கள் அயல் நாடுகளில் தொழில் செய்வதற்கான வாய்ப்பை பெறுவது மிகவும் கஷ்டம் 

மேலும் லக்கிணத்திலோ திரிகோணத்திலோ சந்திரன் அல்லது ராகு இருந்தாலும் அயல்நாட்டு வாய்ப்பு கிடைக்கும் அல்லது லக்கிணத்திற்கு பத்தாம் இடத்தில் ராகு அல்லது சந்திரன் இருக்க வேண்டும் இப்படி மேலும் சில ஜோதிட விதிகள் உள்ளன 

இவைகள் எதுவும் உங்கள் ஜாதகத்தில் சரிவர அமையவில்லை என்பதை முதலில் உணரவேண்டும் எனவே உங்களை பொறுத்தவரை வெளிநாட்டு வேலை என்பது கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை 

ஆனால் உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்திலிருந்து திரிகோணத்தில் ராகு இருக்கிறது இது உங்கள் மகன் வெளிநாட்டு வேலையில் வருங்கலத்தில் அமர்வான் என்பதை தெளிவாக காட்டுகிறது 

எனவே நீங்கள் மனதை மாற்றிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை 

ஒரு விஷயத்தை நன்றாக கவனத்தில் கொள்ளவேண்டும் இறைவன் உங்களுக்கு சகல சம்பத்தையும் தந்துள்ளான் அதை வைத்து திருப்திகரமாக வாழ்வது தான் புத்திசாலி தனம் இல்லாததை நினைத்து ஏங்குவது அறிவாளிக்கு அழகல்ல

நீங்கள் அறிவாளி என்று நம்புகிறேன்.


+ comments + 3 comments

யோகியர் ராமானந்த குருஜி அவர்களே,
உங்களுடைய ஒவ்வொரு பதிப்பும் எனக்குள் மிகுந்த தன்னம்பிக்கை அலைகளை ஏற்படுத்துகிறது. அதற்கு நன்றிகள் கூற கடமை பட்டுள்ளேன். இம்மின்னஞ்சல் அனுப்பிய அன்பரின் பெயரை கூட ரசிக்கும் உங்களின் குணம் அனைவரும் கற்றுக் கொள்வதும் போற்றக் கூடியதுமான ஒன்றே.

Anonymous
12:56

Dear Sir,

Nice explanation, your messages are really useful and worth.

Sathi kurup

Dear Sir
good and encouraging reply to the querry.
regards
visveswaran


Next Post Next Post Home
 
Back to Top