( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வாஸ்துப்படி திண்ணை வைக்கலாமா...?


  • ழைய காலத்தில் வீட்டின் இருபுறமும் திண்ணை வைத்து கட்டுவார்கள் வழிபோக்கர்கள் தங்கவும் வீட்டு பெரியவர்கள் மாலைநேரத்தில் காற்று வாங்கவும் வசதியாக இருக்கும் இப்போது எந்த வீட்டிற்கும் திண்ணைகள் இல்லை மக்கள் மனதில் பரந்த எண்ணமும் ஈரமும் இல்லை அதனால் நான் புதிதாக கட்டப்போகும் வீட்டிற்கு திண்ணை வைத்து கட்டலாம் என்று விரும்புகிறேன் வாஸ்து முறைப்படி திண்ணைகள் எப்படி இருக்க வேண்டும் எந்த திசையில் அமைக்க வேண்டும் தயவு செய்து விபரமாக சொல்லவும் 

மணிவண்ணன், திண்டிவனம்     திண்ணை இல்லாத வீடுகள் மூக்கு இல்லாத முகம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் ஒரு முகம் அழகாக இருக்க மூக்கின் அமைப்பு மிக முக்கிய பங்காற்றுவது போல் வீட்டின் அழகும் வீதியின் அழகும் திண்ணையில் தான் இருக்கிறது மாலை நேரத்தில் நீர்தெளித்து கோலம் போட்ட வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் வருவோர் போவோரிடம் கதை பேசும் சுகம் இருக்கிறதே அது கோடி ரூபாய் கொடுத்தால் கூட கிடைக்காது கூட்டு குடும்பம் என்பது எப்படி இல்லாமல் நமது பண்பாடு சீர்கெட்டு விட்டதோ அப்படியே திண்ணைகள் இல்லாமல் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதி இல்லாமல் போய்விட்டது உங்களை போன்ற சில நல்லவர்கள் திண்ணைவைத்து வீடுகேட்ட நினைப்பதே தமிழ்பண்பாடு இன்னும் சிறிது உயிரோடுதான் இருக்கிறது என்பதை நினைவு படுத்துகிறது 

நமது இந்திய வாஸ்து சாஸ்திரம் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டே சில கருத்துக்களை வலியுறுத்தி கூறுவது போல் சமூக ஆரோக்கியத்தையும் மனதில் வைத்து சில விஷயங்களை சொல்லியிருக்கிறது அதில் இந்த திண்ணையும் ஒன்று பொதுவாக திண்ணை என்பது ஒரு மனிதன் உட்காரும் அளவிற்கு அகலம் கொண்டதாக மட்டும் இருக்க கூடாது செளகரியமாக படுக்கும் அளவிற்கு அகலத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறது அதே நேரம் ஒற்றை திண்ணை என்பது அவ்வளவு விஷேசம் இல்லை இரட்டை திண்ணையே விஷேசமானது என்றும் சொல்கிறது 

உங்கள் வீடு எந்த திசையை பார்த்து கட்டப்படுவதாக இருந்தாலும் திண்ணை வீட்டிற்கு முன்புறத்திலேயே இருக்க வேண்டும் தோட்டம் அல்லது பின்புறத்தில் திண்ணை வேண்டாம் என்று வாஸ்து சொல்கிறது மேலும் கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த வாசலுடைய வீடுகளில் திண்ணை அமைக்கும் போது வீட்டின் தளமட்டத்தை விட திண்ணையின் மட்டம் தாழ்வாக இருக்க வேண்டும் என்றும் தெற்கு அல்லது மேற்கு திசையை பார்த்த வாசலுடைய வீடுகள் தளமட்டத்தை விட திண்ணை மட்டம் உயர்வாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது 

அதே போல திண்ணையின் தெற்கு பகுதி வடக்கு பகுதியை விட சற்று உயரமாக இருக்க வேண்டும் மேற்கு பகுதி கிழக்கு பகுதியை விட உயர்ந்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது எந்த காரணத்தை கொண்டும் வீட்டு சுற்று சுவரை வடக்கு மற்றும் கிழக்கு பக்கங்களில் திண்ணை தொட்டவாறு இருக்க கூடாது இந்த முறைகளை கவனத்தில் கொண்டு வீட்டு திண்ணைகளை அமைக்க வேண்டும் இதனால் வீட்டு தலைவனுக்கு பல நன்மைகள் ஏற்படும்.


+ comments + 2 comments

Selvaa Siva
11:13

nice information

Anonymous
16:33

குருஜி உங்கள் கட்டுரைகள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பாக உள்ளது. சிவா மலேசியா


Next Post Next Post Home
 
Back to Top