( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சொத்து மட்டும் வேணும் பாட்டன் வேண்டாமா?


  சிராத்தம் என்ற வார்த்தைக்கு சிரத்தையுடன் மன ஒருமை பாட்டுடன் செய்யும் காரியம் என்பது பொருளாகும். 

ஆர்வமில்லாமல் செய்யப்படும் எதுவும் அது தவமாக இருந்தாலும் கூட எந்த பயணும் இல்லை என்று கீதை சொல்லுவதும் சிராத்ததின் முக்கியதுவத்தை உணர்ந்தேயாகும்.

  நன்மை தரக்கூடிய சிரார்த்தம் தர்பபணம் முதலிய பித்ரு காரியங்கள் யாரை உத்தேசித்து செய்கிறோமோ அவர் பித்ரு உலகில் இருக்கலாம்.  அல்லது தேவ உலகில் இருக்கலாம்.  ஏன் மனித உலகில் நமக்கு பக்கத்திலலேயே கூட இருக்கலாம்.

 அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ உயர்ந்ததாகவோ இருக்கலாம்.


   நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் சிரார்த்தம் அவர் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்கு கிடைக்கும்.  தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரின் நிலை உயர உதவும்.

  மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இக உலக துன்பம் தீர உதவும்.

 அதனால் தான் வள்ளுவர் கூட இல்லறத்தார்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாக தென்புலத்தார் கடமைகளை அதாவது பித்ரு காரியங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார்.

  ஆயுள் முடிந்து போன நமது முன்னோர்கள் பரவுலகத்தில் அல்லது பித்ரு உலகத்தில் வாழ்கிறார்கள்.

 அவர்கள் வசு மித்திரர்கள் ஆதித்யர்கள் என்ற பிரிவில் அடங்குவார்கள்.


   உடல் அழிந்தாலும் பிரேத நிலையில் குறிப்பிட்ட காலம் இருந்து தங்களது வாரிசுகள் செய்யும் நற்கர்மங்களால் பிரேத தோஷம் நீங்கப் பெற்று தங்களது பூரண அன்பையும் நம் மீது காட்டலாம்.

 இறந்து போன ஒருவருக்காக அவரது மைந்தன், பேரன், சகோதரன் முதலானோர்களும் அவர்களின் சுய கோத்திரத்தில் பிறந்த ஏழு தலைமுறையினரும் கோத்திரம் மாறிய பெண் வழி வாரிசுகளும் சிரர்த்தம் செய்யலாம்.

  நித்தியம், நைநித்தியம், காமிகம் என சிரர்த்தம் மூவகைப்படும்

  மாத அம்மாவாசையில் செய்கின்ற தர்ஸ்ர சிரர்த்தம், மகாளய பட்சத்தில் செய்யும் ஆத்திக, பிராத்தாதிக சிரர்த்தம், தினசரி செய்கின்ற பிரம்ம யக்ஷ தேவர்ஷ, பித்ரு தர்ப்பண பித்ரு க்ரியம் முதலியவை நித்ய சிரர்த்த வகையாகும்.


   மாத பிறப்பு, கிரகணம் முதலிய புண்ணிய காலங்களில் செய்கின்ற தர்ப்பணம், விவாகம் மற்றும் சுப காரியம் நிகழும் போது செய்யப்படும் மாத்திமுக சிரர்த்தம், சௌவுடிக கரணத்தன்று செய்யும் ரகோத்தரம் பார்வன சிரர்த்தம், பூன மாசி, காணு மாசிகங்கள் சோத கும்பக முதலியவைகள் நைநித்திக சிரர்த்தம் ஆகும்.

 வருடப்பிறப்பு, புனித யாத்திரை, புண்ணிய தீர்த்த கரைகள் போன்றவற்றில் செய்யப்படுவது காமிக சிரர்த்தமாகும்.

  நாம் செய்யும் சிரர்த்தத்தின் ஆத்ம அர்ப்பணிப்பை அஷ்ட வசுக்கள் ஏகாதச ருத்தரர்கள் துவாதச ஆதித்தர்கள் போன்ற தெய்வங்கள் நமது முன்னோர்களிடத்தில் கொண்டு சேர்க்கிறார்கள்.

  சிரர்த்தம் செய்வதற்கு இறப்பு ஏற்பட்ட நேரத்தில் நடைமுறையில் இருந்த திதி மிகவும் முக்கியம்.

 திதி மறந்து விட்டால் தேய்பிறை கால அஷ்டமி, ஏகாதசி, அமாவாஸ்யை போன்ற நேரங்களில் செய்யலாம்.    இல்லையென்றால் கன்னியாராசியில் சூரியன் முளையும் நேரத்தில் தேய்பிறை பொழுதை மகாளயபட்சம் என அழைக்கிறார்கள்.  அன்றும் செய்யலாம்.

 இந்த நாளில் பிதுர் உலக வாசிகள் பூமிக்கு வருவதாக ஐதீகம் உள்ளது.

  முறைப்படியான சிரர்த்தங்களை செய்து வந்தாலும் மகாளயபட்ச சிரர்த்தம் செய்வது மிகவும் சிறப்பாகும்.

 பல கால சூழலால் புரோகிதர்களை வைத்து அந்த பொழுதில் சிரர்த்தம் செய்ய இயலாத நிலை இருந்தால் முன்னோர்களை ஆத்மார்த்தமாக மனதில் பிராத்தனை செய்து நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கு அன்னமோ ஒரு படி பொரியோ அர்ப்பணித்தால் கூட அதை நமது தென்புலத்தாராகிய முன்னோர்கள் மனமகிழ்வோடு ஏற்று கொள்கிறார்கள்.

 ஆனால் செத்தவர்களை நினைத்து என்ன ஆக போகிறது என்று பலர் சிரார்த்தத்தை அசட்டை செய்கிறார்கள்.

 இது நன்றி கெட்டதனம்.  பாட்டன் சொத்து மட்டும் வேணும் அவரின் நினைவு கூட வேண்டாம் என்பது எந்த வகையில் நியாயமாகும்?


 
+ comments + 8 comments

தாங்கள் இன்னும் நூறாண்டு வாழவேண்டும் தங்களின் கருத்துகள் நாடெல்லாம் பரவவேண்டும்

தாங்கள் இன்னும் நூறாண்டு வாழவேண்டும் தங்களின் கருத்துகள் நாடெல்லாம் பரவவேண்டும்

மிகவும் உபயோகரமான தகவல்.நன்றி ஐயா..குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும், குல தெய்வம் எது என அறியாதவர்கள் எவ்வாறு வழிபடலாம் என்பது பற்றியும் ஒரு பதிவு இடுமாறு தங்களை தாழ்மையுடன் ப்ரார்த்திக்கிறேன்.

Anonymous
15:58

very necessary information shared by our beloved Guruji,useful for this generation.
many many thanks ji

Very useful article!

Anonymous
08:52

வணக்கம் குருஜி தாங்கள் "சிரர்த்தம்" பற்றி கொடுத்திருந்த விளக்கம் மிகவும் அருமை.. தங்கள் பணி மென்மேலும் தொடர இறைவனை பிரார்திக்கிறேன்.

குருஜி என் பாட்டி(அம்மாவின் தாயார்) கடந்த மாதம் காலமாகிவிட்டார். அவருக்கு ஆண் வாரிசு இல்லாத படியால் நான் தான் அவருக்கு இறுதி காரியங்கள் செய்தேன்.

எனக்கு தந்தை இருக்கிறார். தந்தை இருக்கையில் கரும காரியங்களில் கலந்துக்கொள்ள கூடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் வேறு வழியின்றி நான் தான் அனைத்தும் செய்தேன்.

இதனால் பாதிப்புகள் ஏதாவது என் தந்தைக்கு வருமா..? அதற்கு ஏதாவது பரிகாரங்கள் இருக்கின்றதா?

நான் தவறு செய்ய வில்லை இருந்தும் சந்தர்ப்பம் அப்படி அமைந்து விட்டது.

தயவு செய்து எனக்கு விளக்கம் தாருங்கள்...

நன்றி

கணேஷ்

20:17

குருஜி மிகச் சிறந்த பதிவு. பல தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி குருஜி. சிவா மலேசியா

பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய மறப்பவர்களுக்கு தங்கள் மூலமாக பித்ருக்கள் கொடுக்கும் சாட்டை அடி என்றே நினைக்கிறேன்.நன்றி குருஜி


Next Post Next Post Home
 
Back to Top