Store
  Store
  Store
  Store
  Store
  Store

தப்பிக்க மரணமே சிறந்த வழி...?


  • ற்கொலை செய்துகொள்ளும் முடிவிற்கு ஒரு மனிதன் எப்போது வருகிறான்? 

தற்கொலையை பற்றி பேசுவதற்கு மற்றவர்களுக்கு உள்ள தகுதியை விட எனக்கு அதிகமான தகுதி இருப்பதாக நினைக்கிறேன் காரணம் நானும் ஒரு காலத்தில் வாழ்க்கையை முற்றிலுமாக வெறுத்து இனி வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று கருதி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டவன் ஆண்டவன் அருளால் காப்பற்றப்பட்ட பிறகு வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய பொக்கிஷம் அதை அற்ப காரணங்களுக்கு தொலைத்து விட முற்பட்டோமே என்ற ஞானம் பிறந்தாலும் தற்கொலை செய்து கொள்ள துணிகின்ற போது கண்ணுக்கு முன்னால் எந்த நியாயமும் தெரிவதில்லை 

எனக்கு வந்திருக்கும் பிரச்சனையை தான் உலகத்திலேயே மிகப்பெரியது இது யாருக்கும் வராது இப்படி கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் யாருமே இல்லை நான் ஒருவன் மட்டுமே இத்தகைய இடர்பாடுகளை எதிர்கொள்கிறேன் என்ற சிந்தனை தான் மேலோங்கி நிற்குமே தவிர ஏற்ற தாழ்வு சகஜம் என்ற உண்மை புலப்படாது 


தனக்கு வந்த துயரத்தை தீர்ப்பதற்கு வழி தெரியாத போது அல்லது அந்த துயரத்தில் இருந்து வெளிவருவோம் என்ற நம்பிக்கை இல்லாத போது மரணம் மட்டுமே இதற்கு தீர்வு என்ற உறுதியான எண்ணம் உருவாகி விடுகிறது அந்த எண்ணத்தை எந்த சமாதானங்களும் அவ்வளவு சுலபமாக விலக்கிவிட முடியாது 

தற்கொலை என்பது ஒரு ஷனநேர முடிவு அதில் தடையோ தாமதமோ ஏற்பட்டால் எண்ணம் மாறிவிடும் என்று சிலர் கருதுகிறார்கள் இது உண்மையாகவும் இருக்கலாம் ஆனால் பல நேரங்களில் தற்கொலை செய்து கொள்ள மாத கணக்கில் மன போராட்டம் நடத்துகின்ற மனிதரும் உண்டு தக்க தருணம் வருமென்று சாவதற்காக காத்திருப்பவர்களும் உண்டு எனவே தற்கொலை எண்ணம் தீடிரென தோன்றி தீடிரென மறைந்து விடுவதில்லை 

அதே நேரம் தற்கொலைக்கு ஒரு நேரம் முயற்சிப்பவர்கள் தங்களது முயற்சியை ஒரு முறையோடு நிறுத்திக்கொள்வதும் பல நரங்களில் இல்லை மீண்டும் மீண்டும் அதே ஈடுபாட்டுடன் முயற்சிப்பவர்கள் அதிகம் தனது சுமை மட்டுமே பெரிதென்று நினைக்கும் வரை தற்கொலை எண்ணம் அவனை விட்டு போகாது 


  • ற்கொலை செய்துக்கொள்ளும் சூழல்கள் எவற்றால் ஏற்படுகிறது?

பொதுவாக தற்கொலையை பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள் தேர்வில் தோல்வி பெற்றோர் கண்டிப்பு அனாதையாக விடப்படும் நிலை காதல் தோல்வி வாழ்க்கை விரத்தி வாழ்க்கை துணையை பறிகொடுத்தல் மற்றும் அவர்களால் எதிர்கொள்ளும் துரோகம் குடும்ப சிக்கல் அலுவலக பிரச்சனை பொருளாதார நெருக்கடி நோய்வாய்படுதல் போதை மருந்துக்கு அடிமையாகுதல் மன சிதைவு போன்றவைகளே தற்கொலைக்கு மூல காரணக்களாக இருக்கின்றது என்று சொல்கிறார்கள் 

இதை நாம் ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இவைகள் மட்டுமே காரணம் என்று முடிவு செய்து விட முடியாது ஒரு சின்ன வார்த்தை கூட மனித மனதை காயபடுத்தி விடும் அதுவே தற்கொலைக்கு தூண்டியும் விடும் சாதரணமாக பேசப்படுகிற வார்த்தைகள் கூட சம்பந்த பட்டவர்களின் பலகீனங்களை சுட்டிக்காட்டும் போது அசாதாரனமான வார்த்தைகளாகி விடுகிறது 

என்னை பார்த்து என் தாயார் நீ எதற்கும் உதவமாட்டாய் என்று சொன்னால் அது எனக்கு வருத்தமாக இருக்காது அதே வார்த்தையை என் மனைவி கேட்டால் அவமானத்தால் குன்றிவிடுவேன் இப்படி பட்ட சூழல் மனிதனுக்கு வரும்போதும் அவன் நிவாரணமாக தற்கொலையை நாடுகிறான் 

  • ற்கொலையை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

தற்கொலை செய்து கொள்வதில் உலக அளவில் முன்னணியில் இருப்பவர்கள் லித்துவேனியர்கள் இரண்டாவது இடம் ரஷ்யர்கள் பெறுகிறார்கள் மூன்றாவது கொரிய மக்கள் நமது இந்தியர்கள் நல்லவேளை இதிலும் பின்தங்கியே இருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விஷயமாகும் உலக அளவில் கணக்கு போட்டால் பத்து விழுக்காடு மக்கள் தான் இந்தியாவில் தற்கொலையை நாடுகிறார்கள் 

அதற்கு காரணாம் நம்மிடம் உள்ள வலுவான பண்பாட்டு பின்னணியாகும் எனக்கொரு துயரம் வந்தால் அதை பகிர்ந்து கொள்ள நல்ல உறவுகள் இன்றும் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன் கூட்டு குடும்பம் என்பது நம் நாட்டில் மறைந்து விட்டாலும் தாய்தந்தை அண்ணன் தம்பி கணவன் மனைவி மாமன் மச்சான் உறவுகள் இன்றும் பரவலாக உருதியோடே இருக்கிறது அளவுக்கதிகமான ஆங்கில மயபடுத்தப்பட்ட கல்வியும் பொருளாதார வீக்கமும் சில மனிதர்களை தனிமை படுத்தி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் அத்தகைய மனிதர்களே இன்று அதிகமாக தற்கொலை எண்ணம் உடையவர்களாக இருக்கிறார்கள் 

மேலும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு குழந்தை பருவத்திலேயே வந்துவிடுகிறது விருப்பப்படுகிற பொம்மை கிடைக்க வில்லை என்றால் செத்து போய்விடுவேன் என்று அழுகிற குழந்தை நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன் குழந்தைகளுக்கு அத்தகைய விபரீத எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமே பெற்றோர்கள் தான் கணவன் மனைவி தகராறில் நான் சாகப்போகிறேன் என்று குழந்தை முன்னால் இருவரில் ஒருவர் பேசும்போது அதை கேட்கும் குழந்தையும் பிரச்சனையில் இருந்து தப்பிக்க மரணமே சிறந்த வழி என்று நினைக்கிறது 


தாய்பால் சரிவர அருந்தாதவர்களே நிறைய சிகரட் பிடிப்பவர்கள் என்று சிக்மன் பிராய்டு சொல்வார் தற்கொலை எண்ணமும் அப்படி தான் குழந்தை பருவத்தில் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்களே தற்கொலையை விரும்புகிறார்கள் வாழ்க்கை என்பது இன்ப துன்பம் கலந்தது தான் ஏற்றமும் தாழ்வும் இயற்கையானது தான் துன்பபடுபவன் துன்பத்திலேயே இருக்கப்போவதும் இல்லை சந்தோசமடைகிறவன் நிரந்தரமாக அதை அனுபவிப்பது இல்லை என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் வரவேண்டும் 

கவலை இல்லாத மனிதன் என்று உலகத்தில் யாருமே இல்லை அவனவனுக்கு தரத்துக்கு ஏற்ற கவலை உண்டு என்பதை பேசினால் மட்டும் போதாது ஆதம் பூரவமாக உணரவும் வேண்டும் நம்பவும் வேண்டும் வாழ்க்கை போராட்டத்தை கடேசி நிமிடம் வரை போராடியே தீர்ப்பேன் என்ற உறுதி வேண்டும் இவைகள் இருந்தால் தற்கொலை எண்ணம் என்பதே தலைகாட்டாது இன்றைய தலைமுறையை பிடித்திருப்பது பிராந்தி விஸ்கி பேய்கள் மட்டும் அல்ல தற்கொலை பேயும் தான் அதை விரட்ட ஒரே வழி இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் போராட கற்று கொடுப்பது தான் 

சினிமா பார்ப்பதை இன்டர்நெட் வாசிப்பதை எப்படி ஆர்வத்தோடு ஈடுபாட்டோடு செய்கிறோமோ அதே போலவே வாழ்க்கை போராட்டத்தை ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் எப்படியும் ஜெயித்து காட்டுவேன் என்ற வேகத்தோடும் தொடர்ந்தோம் என்றால் காலா என் காலறுகே வாடா உன்னை காலால் மிதிக்கிறேன் என்று பாராதி சொன்னது போல் நாமும் சொல்லலாம் .

கேள்விகள் வெங்கட் 



Contact Form

Name

Email *

Message *