Store
  Store
  Store
  Store
  Store
  Store

என் ஜாதகப்படி மரணம் வருமா...?


    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நான் உங்களது ஜோதிட பதிவுகளை சில மாதங்களாக படித்து வருகிறேன் ஒவ்வொரு பதிவிலும் பயனுடைய விஷயங்களை புதிய கோணத்தில் தெளிவாகவும் விளக்கமாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாகவும் விளக்கங்களை தருகிறீர்கள் அதற்கு உங்களை எப்படி பாராட்டினாலும் தகும் 

குருஜி என் மனத்திற்குள் சில காலமாக ஒரு விஷயம் அழுத்திக்கொண்டு இருக்கிறது அதை வெளிப்படையாக பேசுவதற்கும் விளக்கி சொல்வதற்கும் பயமாகவும் இருக்கிறது ஆனாலும் அதை யாரிடமாவது சொல்லி விளக்கம் பெறவில்லை என்றால் நான் மிகவும் துன்பத்திற்கு ஆளாகி விடுவேன் என்றும் தோன்றுகிறது அதனால் எனக்குள் எரிந்து கொண்டிருக்கும் எரிமலை போன்ற குழப்பத்தை உங்கள் முன்னால் வைப்பது என்று முடிவு செய்து விட்டேன் தயவு செய்து என்னை தவறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் 

குருஜி ஒரு இரண்டு வருட காலமாக நான் விரைவில் இறந்துவிடுவேன் என்று மீண்டும் மீண்டும் தோன்றுகிறது அந்த எண்ணம் எதனால் எனக்கு வந்தது என்று சொல்லத் தெரியவில்லை ஆனாலும் அந்த எண்ணம் என்னை ஒவ்வொரு நிமிடமும் துரத்திக்கொண்டே இருக்கிறது 

இதனாலேயே என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாடுபடுகிறேன் ஆனாலும் மனது அச்சத்திலேயே இருப்பதனால் வேலையில் குற்றம் குறை ஏற்பட்டு மேலதிகாரிகள் கோபிக்கும் வண்ணம் ஏற்பட்டு விடுகிறது 

பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும் என்றாலும் ஆதாரமே இல்லாமல் துரத்துகின்ற மரண பயம் வாழ்வில் ஏற்பட வேண்டிய நல்லது கெட்டதை கூட காலத்தில் செய்ய முடியாமல் ஆக்கிவிடுகிறது இதை பற்றி நிறைய எழுத நினைக்கிறேன் ஆனால் எவ்வளவு எழுதினாலும் அதன் சாராம்சம் என்பது இது தான் 

குருஜி உண்மையில் என் மனதிற்குள் தோன்றுவதை போல் நான் இறந்து விடுவேனா? அல்லது நீண்டநாள் ஆயுளோடு வாழ்வேனா என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் எனக்கு சொல்லவும் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை ஆவலோடு எதிர்பார்க்க்கீறேன் இது சிறுபிள்ளை தனமாக கேள்வி என்று தயவு செய்து தள்ளிவிடாதிர்கள் கண்டிப்பாக பதில் தாருங்கள் 
மணிமாறன், அந்தமான் 


    நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையிலும் உங்களை வருத்திக்கொண்டிருக்கும் அச்சத்தின் சாயல் தெரிகிறது சொல்லவந்ததை கூட முழுமையாக சொல்லமுடியாத நிலையில் உள்ளீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது முதலில் மனதை ஆசுவாசப்படுத்த கற்றுக்கொண்டால் தான் நிம்மதியாக வாழமுடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் எந்த அளவிற்கு உங்கள் கஷ்டங்களை வெளியில் கூற தயங்கி உங்களுக்குள்ளேயே புதைத்து கொள்கிறீர்களோ அந்த அளவு நீங்கள் சுருங்கி போவதை தவிர்க்க முடியாமல் போய்விடும் 

உங்கள் ஜாதகம் நீங்கள் சிறுவனாக இருந்த காலமுதற்கொண்டே யாரோடும் சகஜமாக பேசி பழகவில்லை என்பதை காட்டுகிறது ஒரு மனிதனின் உயர்வுக்கு நண்பர்கள் என்ற உறவு மிகவும் முக்கியமானது நல்ல நண்பனை பெற்ற ஒருவன் நாடாளும் தகுதியை தானாக பெறுகிறான் என்பதை மறவாதீர்கள் வெளி நபர்களிடம் இல்லாவிட்டாலும் கூட குடும்பத்தில் உள்ளவர்களிடமாவது மனமிட்டு பேச பழகுங்கள் இந்த பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்தாலே உங்கள் பிரச்சனையில் பாதி தீர்ந்துவிடும் 

மேலும் ஒருவனின் ஜாதகத்தில் மிதுனம் துவங்கி ஆறு ராசிக்குள் குரு இருந்தாலோ தனசு முதல் ஆறு ராசிக்குள் திரிகோண கேந்திரங்களில் புதனும் சுக்கிரனும் இருந்தாலோ அவன் தீர்க்கமான ஆயுளோடு வாழ்வான் என்று ஜாதக அலங்காரம் எழுதிய வரகவி கீரனூர் நடராசன் சொல்கிறார் உங்கள் ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் அந்த நிலையில் தான் இருக்கிறது அது மட்டும் அல்லாது உங்களுக்கு மாரக திசை புத்தி நடைபெற போகும் காலத்திற்கு இன்னும் வெகுநாள் காத்திருக்க வேண்டும் எனவே நீங்கள் பயப்படுவது போல் இப்போது செத்துவிட மாட்டீர்கள் 

உங்கள் ஜாதகத்தை ஜாதக சாராவளி குமாரசாமியம் போன்ற நூல்களின் அடிப்படையில் ஆராய்ந்த போது இறைவன் அருளால் எழுபது வயதிற்கு மேல் வாழ்வீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது எனவே அனாவசியமான மரண பயத்தை தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையை சந்தோசமாக நடத்த முயற்சி செய்யுங்கள் விரைவில் மரணம் வரும் என்ற பயத்தில் திருமணத்தை தள்ளிப்போடுகீர்கள் என்பது தெரிகிறது முதலில் திருமணத்திற்கான வேலைகளை துவங்குங்கள் வரப்போகும் குருபெயர்ச்சிக்கு முன்னால் நல்லது நடக்கும் 

மரணபயம் போக நமசிவாய என்ற பஞ்சாச்சர மந்திரத்தை ஓம் சிவாய நம என்று உச்சரித்து வாருங்கள் குறைந்தது ஒரு நாளில் ஆயிரத்து எட்டு முறையாவது இந்த மந்திரத்தை சொல்லுங்கள் மனதிற்குள் அடங்கி கிடக்கும் அச்சமும் பயமும் குழப்பமும் நடுக்கமும் தானாக விலகிவிடும் சர்வாங்க ஆசனம் செய்ய பழகுங்கள் உடல் நிலையிலும் மன நிலையிலும் நல்ல மலர்ச்சி ஏற்படும் கவலையே படாதீர்கள் தீர்க்க ஆயுளாக வாழ்வீர்கள் அதற்கு என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு.


Contact Form

Name

Email *

Message *