( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மாதா,பிதா,குரு தெய்வம்! எப்படி...?


   கைகளை கூப்பி வணக்கம் வைப்பது தீண்டாமையின் இன்னொறு வடிவம் என சில அறிஞர்கள் குறிப்பிடுவதை சுட்டிக் காட்டி அது தவறுதலான கருத்து என்று நாம் விளக்கி இருந்தோம்

 அதை படித்த பலர் பாராட்டுக்களை தெரிவித்தனர் அந்தப் பாராட்டு மொழிகளுக்கு நடுவில் தாய் தந்தை மற்றும் குருமாரை வணங்குவது கூட ஒருவித அடிமையுணர்ச்சி அது ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுப்படுகிறது அது உண்மையா இல்லையென்றால் அதன் நிஜப் பொருளென்ன? என்றெல்லாம் சிலர் கேட்டிருந்தனர் அவர்களுக்காக இந்தப்பதிவு

   அம்மா நம்மை கருவில் சுமப்பதாக சொல்கிறார்கள்.  இந்த கரு சுமையை எல்லா பெண்களும் பெருமையாக பேசி கொள்கிறார்கள்.

    பிள்ளையை சுமப்பதில் உள்ள சிரமத்தால் அன்னை புனிதமானவள் என்று கருதப்படுகிறாள்.

   உண்மையில் நம் பிறப்பிற்கு அம்மா மட்டுமா காரணம்? 

    அப்பாவுக்கு அதில் பங்கே இல்லையா?

   அப்படி சொல்லி விட முடியாது.

   கருவறைக்கு வருவதற்கு முன்னால் அப்பாவின் அடிவயிற்றில் தான் நாம் இருந்தோம்.  அவர் மட்டும் வீரியமிக்கதாக நம்மை வைத்து கொள்ளவில்லையென்றால் எத்தனையோ கோடி அனுக்களில் ஒன்றாக செத்து மடிந்து இருப்போம்.

  ஆகவே நமது பிறப்பில் அப்பாவும், அம்மாவும் முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள். 

 உடலை தந்து அது வளர உயிரை தந்து, அளப்பெரிய ஆற்றலை தந்து வளர்க்கும் அவர்கள் கண்ணுக்கு தெரியும் கடவுள் என்றால் மிகையில்லை.

 ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு உடம்பு எந்த அளவு முக்கியமோ  அதே அளவு முக்கியம் அறிவும் ஞானமும் ஆகும்.

  நாம் யார்?  நாம் எங்கிருந்து வந்தோம்?  எங்கே போகிறோம்?  எதுவாக ஆவோம்?  என்ற கேள்விகளுக்கு எல்லாம் தெளிவை தந்து வாழ்க்கையை வளப்படுத்துவர் குரு. 

  எனவே அவரும் பார்க்கப்படும் பகவான் ஆகிறார். 

  இவர்களை வணங்குவதும் கடவுளை வணங்குவதும் ஒன்று தான் என நமது இந்து மதம் மட்டுமல்ல.  உலகத்தில் உள்ள எல்லா மதமும் சொல்கிறது.
    


22
Shar
+ comments + 6 comments

09:13

மிக உயரிய கருத்து மிக்க நன்றி குருஜி ..

குருஜி தங்கள் பதிவுகளை ஒரு வாரமாக தான் பார்க்கிறேன். இவ்வளவு நாள் இணைய உலகில் இருந்தும் உஜிலாதேவி தளத்தை காணாமல் இருந்தது வருத்தமடைய செய்தாலும் தற்போது காண்பதில் மகிழ்வு அடைந்தேன்.
தங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்துவிட்டு தங்களை தொடர்பு கொள்வேன்.
நன்றி குருஜி
நாகராஜன்
திருப்பூர்

krishna
12:50

mega arumai

Super explanation Guruji.

கைகளை கூப்பி வணக்கம் வைப்பது தீண்டாமையின் இன்னொறு வடிவம் !

இப்படி சொல்வது ஆணவத்தின் இன்னொரு வடிவம். பெற்ற தாய் தந்தையை வணங்குவதும் குருவை வணங்குவதும் தவறு என்பவன் மனிதனாகவே இருக்க மாட்டான்.

மரியாதையுடன் ஒருவரை வணங்குவதும், வணக்கம் சொல்வதும், இறைவனுக்கு இணை வைப்பது என்பது முட்டாள்தனமான பேச்சாகும்.

மாற்று மதத்தவர் இப்படி பட்ட கொள்கையை புதிதாக உண்டாகியிருக்கிரார்கள். இதை பற்றி அதே மதத்தை சேர்ந்த ஒருவரிடம் விசாரிக்கும் போது, அவர் இதை வன்மையாக மறுத்தார்.

இறைவனுக்கு இணை இல்லைதான்.. அனால் அதே நேரத்தில் வயதில் பெரியவர்களை,ஆன்மிக பெரியவர்களை,பெற்றோர்களை மரியாதையுடன் வணங்குவதும், அல்லது வணக்கம் சொல்வதும்,இறைவனுக்கு இணை வைப்பது என்று அர்த்தமாகாது என்று பதில் சொன்னார்.

அவரை போல மிதவாதிகள்தான் நமக்கு தேவை.அவர்கள்தான் தன் சக மதத்தவர்களுக்கு அறிவுரை கூறி, அவர்களை மத வெறியிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும்.


பாரத தேசத்தில் காலம் காலாமாக பின்பற்றப்படும் பண்பாடை , திடீரென்று,மதத்தின் பெயரில் மறுப்பது மிகவும் மூடத்தனமாகும்.


இந்த பிரச்சனை பற்றி, என் முகநூல் நாத்திக நண்பரிடம் விசாரிக்க போது, இது அவர்களின் மத உரிமை, இதில் கேள்வி கேட்க கூடாது என்று சொல்கிறார்.

இந்த திராவிட நாத்திக அயோக்கியர்கள் பண்பாடு காக்கும் லட்சணம் இதுதான். ஹிந்துக்கள பற்றி மட்டும் கேவலாமாக பேசுவார்கள்,எழுதுவார்கள், ஹிந்து தர்மத்தை மட்டும் நாகரிகமின்றி விமர்சனம் செய்வார்கள். ஹிந்துக்களின் நம்பிக்கைகளில் மட்டும் தேவையின்றி மூக்கை நுழைப்பார்கள்.

அனால்,மாற்று மதத்தவர் செய்யும் அநியாயங்கள்,அவர்களின் வெறிபிடித்த கொள்கைகள், அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள், இவைகளை பற்றி மூச்சே விட மாட்டார்கள்

இதுதான்.... திராவிட கம்யுனிஸ்ட் வெறியர்களின் மத சார்பின்மை கோட்பாடு!

ஹிந்துக்கள் இதை புரிந்து கொண்டு, ஒன்று பட வேண்டும். இந்த அயோக்கியர்களை தூக்கி குப்பையில் வீச வேண்டும்.


ஐயா அவர்களுக்கு எம்முடைய வணக்கம். நன்றி!

Annayum pithavum munnari deivam


Next Post Next Post Home
 
Back to Top