( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஆழமாக சிந்தித்து பாருங்கள்

    லகத்தில் நடைபெறுகின்ற எல்லா காரியங்களும் கடவுளால் தான் நடக்கிறதுயென்றால் மனிதன் ஏன் செயல்புரிய வேண்டும்? சும்மா இருப்பதே சுகமல்லவா? என்று பலர் நினைப்பது உண்டு

நமது இந்துமதம் எல்லாவற்றிற்க்கும் மூலம் கடவுள் தான் என்கிறது.

 கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடைபெற முடியாதுயென நமது வேதங்கள் சொல்கின்றன. 

அதே நேரம் மனிதன் ஒரு சிறிது நேரம் கூட ஓய்வாக இருக்க கூடாது என பரம்பொருளான கண்ணபெருமான் பகவத் கீதையில் சொல்கிறார். 

இந்த இடத்தில் ஒரு குழப்பம் வரும்.

எல்லாவற்றையும் கடவுள் செய்கிறார் என்றால் மனிதன் ஏன் செயல்பட வேண்டும்.  ஆழமாக சிந்தித்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படும்.

கடவுளின் அளவற்ற சக்தியின் ஒரு சிறிய பகுதி மனிதனுக்குள் புதைந்து கிடக்கிறது.

  அந்த சக்தியை பயன்படுத்தி தன்னை உணர்ந்து தன்னிடமே மனிதன் வந்து சேர வேண்டுமென கடவுள் எதிர் பார்க்கிறார். 

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடவுளின் செயலும் மனிதனின் முயற்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும்.

அதனால் தான் பகவத் கீதை உன்னை மேலோனாக்குவதும், கீழ்மைபடுத்துவதும் நீ தான்.  உனக்கு நீயே நண்பன்.

உனக்கு நீயே எதிரி.  உனக்கு நீயே நோய்.  உனக்கு நீயே மருந்து, என்று சொல்கிறது.

கடவுளிடம் இருக்கும் ஒரே ஒரு சக்தி மனிதனிடம் இல்லை. 

அது புதியதாக எதையும் படைக்கும் ஆற்றலாகும். 

நல்லது, தீயதை அறிந்து கொள்ளும் தன்மை மனிதனிடம் நிறைவாகவேயிருக்கிறது.

எனவே இறைவனின் செயல் என்பது மனிதனின் மூலமாகவே பலநேரம் வெளிப்படுகிறது. 

மனிதனின் செயலும் மனிதன் மூலமாகவே சில நேரம் வெளிப்படுகிறது.

மனித செயலில் துக்கமிருக்கிறது.  கடவுளின் செயலில் அது இல்லை.
+ comments + 7 comments

அருமை குருஜி.

அற்புதம்

11:29

அற்புதமான கருத்துகள் குருஜி. ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய கருத்துகள் இவை. மிகவும் நன்றி.

Anonymous
21:16

@குருஜி
குருஜி ரஷ்யாவில் இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையை தீவிரவாத இலக்கியம் என்று கூறி பகவத் கீதையை தடை செய்ய வேண்டும் என்று இந்து மதத்தின் விரோதிகள் அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு போட்டிருக்கிறார்கள்.. இதற்கான தீர்ப்பு திங்கட்கிழமை அன்று வெளியாக இருக்கிறது...பகவத் கீதையை தடை செய்வதை தடுக்கவும் அங்குள்ள இந்துக்களின் வழிபாட்டுரிமையை நிலை நாட்டவும் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர தாங்கள் விசேஷ பூஜை மற்றும் பிராத்தனையை செய்யுமாறு உங்களை பணிவுடன் வேண்டி கேட்டு கொள்கிறேன் குருஜி...

இதை படிக்கும் இந்துக்களும் நமது புனித நூலான பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை விதிப்பதை தடுக்க கடவுளிடம் பிராத்தனை செய்யும்படி பணிவுடன் கேட்டு கொள்கிரேன்..நன்றி

23:55

ம்....இருக்கட்டும்

M.Natrayan
22:10

இந்து மதம் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானதாகும். உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. நமது நாட்டு ரிசிகளும் ஞானிகளும் பல்லாயிரக்கனக்காண ஆண்டுகளாக ஆய்வுசெய்து உருவாக்கப்பட்டதுதான் இந்துமதம். இது ஒரு மதம் மட்டுமல்ல வாழ்க்கை நெறிமுறையாகும். மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை போதிக்கிறது. அதுமட்டுமல்லாது ஏன் அப்படிவாழ வேண்டும் என்பதற்கும் விளக்கம் கொடுக்கிறது. தனிமனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்கள் எல்லாம் இன்று உலகில் எப்படி சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. உலகம் அமைதிபெற இந்துமதத்தை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும். உலகில் எங்கு பார்த்தாலும் பயங்கரவாத்தை ஊக்குவித்து அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் முஸ்லீம் மதத்தை விட்டுவிட்டு பகவத் கீதையை தடை செய்யச்சொல்லுவது மக்களை முட்டாளாக்கும் செயலாகும். ரஷிய மக்கள் கீதையை நன்கு படித்து அதன் கருத்துக்களை அறிந்து நடந்தால் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.

Next Post Next Post Home
 
Back to Top