( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

காதுகளில் பேசும் அமானுஷ்யம் !


   யா நான் சில வருடங்களுக்கு முன்பு மதுரைக்கு பக்கமுள்ள மேலூர் என்ற ஊரில் ஒரு ஜோதிடரை பார்க்க சென்றேன் அவரிடம் நான் எந்த கேள்வியும் கேட்க வில்லை ஆனால் நான் எதற்க்காக அவரை பார்க்க போனேன் என்னென்ன கேள்விகள் அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்பதை மிக துல்லியமாக நான் எதுவும் சொல்லாமலே அவர் முன்னால் உட்கார்ந்த மாத்திரத்திலேயே கடகடவென சொல்லிவிட்டார் எனக்கு மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது ஜோதிடத்தில் இப்படி கூட சொல்ல முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது 

இந்த இடத்தில் நான் கேட்க விரும்புவது கேள்விகள் கேட்காமலே பதில் சொல்ல ஜோதிட அறிவு மட்டும் இருந்தால் போதுமா அல்லது அதற்க்கான மந்திர பயிற்சிகள் எதாவது உள்ளதா எச்சினிகளை வசியம் செய்து வைத்துக்கொண்டு இப்படி பட்ட வித்தைகளை சிலர் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே அதில் உண்மை இருக்கிறதா அது சாத்தியம் தானா? 

செல்லத்துரை,இராமேஸ்வரம்    நானிருக்கும் அரகண்டநல்லூர் பக்கத்தில் கண்டாச்சிபுரம் என்ற ஒரு சிற்றூர் உள்ளது அங்கே பத்து பதினைந்து வருடத்துக்கு முன்பு ஒருவர் இருந்தார் அவரிடம் யார் சென்றாலும் வெறுங்கையில் சிறிய சிலைகள் சந்தனம் விபூதி குங்குமம் இனிப்பு வகைகள் போன்றவைகளை வரவழைத்து கொடுப்பார் 

அவர் கையில் எதுவும் இருக்காது நிமிட நேரத்தில் எங்கிருந்தோ மாயமாக வந்து அவர் உள்ளங்கையில் இந்த பொருட்கள் உட்கார்வதை நான் என் கண்களாலேயே பார்த்திருக்கிறேன் அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களில் அவர் மிகவும் பிரபலமானவர் அவரின் அமானுஷ்ய சக்தியை பற்றி கேள்வி பட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே நேரில் வந்து அவரை பார்த்திருக்கிறார் அது மட்டும் அல்ல அவருக்காக அந்த ஊரில் சிவாஜி கணேசன் தன சொந்த செலவில் முருகன் கோவில் ஒன்றையும் கட்டிக்கொடுத்திருக்கிறார் 

இப்படி ஏராளமான வித்தைகாரர்கள் நம் நாட்டில் உண்டு அவர்கள் அனைவரும் மலையாள மாந்திரிகத்தில் கூறப்படும் எச்சினி வசியம் என்ற மந்திர கலையில் நல்ல தேர்ச்சியும் அனுபவமும் பெற்றவர்களே ஆவார்கள் அவர்களில் ஒன்றிரண்டு ஏமாற்று பேர்வழிகள் உண்டு என்பதை இந்த இடத்தில் கண்டிப்பாக சொல்ல வேண்டும் எது எப்படி இருந்தாலும் எச்சினி வசியம் பல அமானுஷ்ய வித்தைகளுக்கு மூலமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை 

இந்த எச்சினி வசியத்தில் ஒன்று கர்ண எச்சினி வசியமாகும் இந்த கர்ண எச்சினி யாரிடம் வசியபட்டு இருக்கிறதோ அவருக்கு அது கேட்கும் தகவல்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிடும் உதாரணமாக அத்தகைய நபரிடம் நாம் சென்றவுடன் நம்மை பற்றிய எல்லா தகவல்களையும் அந்த எச்சினி அவர் காதில் சொல்லிவிடும் அதை அவர் நம்பிடம் சொல்லி நம்மை அதிசயப்பட வைப்பார் அந்த எச்சினி சொல்லும் கடந்த கால பலன்கள் அனைத்தும் துல்லியமாக இருப்பது போல் எதிர்கால பலன்களும் இருக்கும் என்று சொல்ல முடியாது 

எச்சினி வசியத்தின் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் இந்த சக்தியை ஜோதிட கணிதத்தின் மூலமும் பெறலாம் மகாகவி காளிதாசனை பற்றி கேள்வி படாதவர்கள் இருக்க முடியாது அவர் சாகுந்தலம் மேகதூதம் போன்ற புகழ்பெற்ற இலக்கிய நூல்களை மட்டும் எழுதவில்லை உத்தரகாலாம்மிருதம் என்ற ஜோதிட நூலையும் எழுதியுள்ளார் அதில் கேள்வி கேட்காமலே பதில்களை கணித்துக் கூறும் ஒரு பிரசன்ன சூத்திர வகையும் அவர் சொல்லியுள்ளார் அதாவது ஜோதிடம் பார்க்க்க வருபவர் வைக்கும் தட்சனையின் எண்ணிக்கையையும் அவர்களால் வைக்கப்படும் தாம்புலத்தின் வெற்றிலையின் எண்ணிக்கையும் கணகிட்டே அவர்கள் கேட்கும் கேள்வியையும் அதற்க்கான் பதிலையும் கணித்து கூறும் வழிவகையை மிக எளிமையாக சொல்லிவுள்ளார் 

பலர் என்னிடம் கேட்கும் ஜோதிட சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது அதற்க்கான ஆதரத்தை ஜாதக அலங்காரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளதை வைத்து சொல்வதை பலர் அறியலாம் அந்த ஜாதக அலங்கார நூலில் ஒரு குழந்தை வீட்டில் பிறக்கிறதா மருத்துவமனையில் பிறக்கிறதா வழியில் பிறக்கிறதா என்பதை கணித்து சொல்லும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன 

ஒருவன் ஜாதகத்தில் லக்ண நிலையை வைத்து அவன் எந்த திசை பார்த்த வாசல் உள்ள வீட்டில் பிறந்தான் என்பதையும் அவன் வீட்டுக்கு அருகில் எந்த தெய்வத்தின் கோவில் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடலாம் அதற்க்கான கணித முறையும் ஜாதக அலங்காரத்தில் இருக்கிறது என் அனுபவத்தை பொறுத்தவரை அவைகள் சரியாய் இருப்பத்காகவே சொல்ல தோன்றுகிறது 

இப்படி எத்தனையோ அதிசயமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர் அவைகளை நாம் தான் பயன்படுத்தாமல் வீணாக விட்டுவைத்து இருக்கிறோம்.


+ comments + 4 comments

Anonymous
08:09

Dear Guruji,
Besides the above, I have also heard about a prashna arudam called JAMAKOL elaborated in old text seenendramalai. Based on this an astrologer can predict the question and the answer for the same from the position where the person sits and asks the question (with respect to the astrologer) or time of his arrival.

Regards

innum.phala.pheirirukkiraarga. evaiyellam saadhyabe

edharki padippu gjaanam not needed
only faith and practiceare needed

Anonymous
19:59

Hi,
There came a army of lakh muslim soldiers, the king was very afraid to invade, hence he fell on the feet of sikh guru, The commander of the army and the sikh guru returned back from assam. after invasion. There was a huge joy in their face. YUP, they are happy because they are alive, all the soldiers turned into rabbits and animals.

MY COUNTRY IS GREAT!!!!!!!!! BHARAT MATA KI JAI

குருஜி

என் பெயர் பாலமுருகன்

சமீப நாட்களாக நான் ஒரு வித அமானுஷ்ய நிகழ்வை எதிர்கொள்கிறேன்.

ஆனால் என்னால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை. அதைப் பற்றி தங்களிடம் தெளிவு பெற நினைக்கின்றேன். தாங்கள் எனக்கு உதவுவீர்கள் என்ற எண்ணத்தில் அதைப் பற்றி கூற விளைகின்றேன். தாங்கள் அனுமதி எதிர்நோக்கி இருக்கின்றேன்.

நன்றி குருஜி

மொபைல்
9150482492


Next Post Next Post Home
 
Back to Top