( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மந்திர வழியில் மன நிம்மதி


பொதுவாக நாம் மந்திரங்களை உச்சரிக்கும் போது ஓம் என்று தொடங்கி நமோ என்றோ நம என்றோ முடிப்போம்

  அது ஏன் அப்படி துவங்கி முடிக்க வேண்டும் என பலமுறை யோசித்திருப்போம்

 அதற்கான விளக்கங்களை நம் சாஸ்திரங்கள் என்னவென்று சொல்கின்றன என்று பார்போம்
  
        நமோ என்ற வார்த்தைக்கு காலில் விழுந்து வணங்குகிறேன் என்பது பொருளாகும். 

   நம்மை விட பெரியவர்கள் கால்களிலும் மகான்கள் கால்களின் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது விஷேசமானது. 

   இவையெல்லாவற்றையும் விட பகவானின் பாதத்தில் விழுவது மகா விஷேசமாகும். 

  பகவானை விட அவனின் நாமத்திற்கு அதிக சக்தி உள்ளது என்பது நமது நம்பிக்கை மட்டுமல்ல அனுபவ உண்மையாகும். 

  கடவுளின் திருப்பெயரை மானசீகமாக விழுந்து வணங்குவதே நமோ என்ற வார்த்தையின் பக்திபூர்வ உண்மையாகும்.

   தன்னை விட உயர்ந்த ஒன்றின் முன்னால் சரணடையும் போது தன்னுடைய திறமை, சக்தி, புத்தி எல்லாவற்றையுமே அந்த உயர்ந்த ஒன்றின் முன்னால் சமர்பித்து நான், எனது என்ற அகங்காரத்தை பஸ்பமாக்க முடிகிறது.

  பகவானை கண்ணெதிரே கண்டு சரணடைவதற்கு சமமானது இதுவாகும். 

   ஓம் என்ற வார்த்தை பிரணவ மந்திரம் என்று எல்லோருக்கும் தெரியும்.

   இந்த மந்திர ஒலி அதிர்வு பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள இறை சக்தியை உச்சரிக்கும் இடத்திற்கு ஆதர்ஷணம் செய்கிறது.

  நாம் எந்த தேவதையை விரும்பி உபாசனை செய்கிறோமோ அந்த தேவதையின் சக்தி ஓம் என்ற மந்திரத்தின் வழியாக நமக்குள் பாய்கிறது.

  உதாரணமாக ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது நாராயணா என்ற சத்தத்திற்கான இறை சக்தி நமக்கு அருகில் வருகிறது. 

  அதை நாம் சரணடையும் போது நமது விருப்பங்கள் நிறைவேறுகின்றன.  அல்லது கிடைப்பதற்கரிய மன நிம்மதி கிடைக்கிறது.+ comments + 10 comments

Anonymous
08:04

ஓம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேவை. பிரணவம் என்றால் என்ன? விளக்கம் தேவை
தயவு கூர்ந்து பதில் போடவும்

ஓம் நமோ நாராயணாய

Vilakkamaana Pathivu.
Nantri.

Anonymous
17:20

குருஜி திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீதர்ப்பணேஸ்வரர் கோவிலில் இருக்கும் சனிபகவான் சன்னிதியின் அறிவியல் ரீதியாக நிருபிக்க பட்ட சிறப்பை பற்றி இணையத்தில் படித்தேன் அதை உங்களுக்கு கீழே அப்படியே தருகிறேன்....

சுமார் பத்தாண்டுக்கு முன்பு,அமெரிக்கா அனுப்பிய சில உளவு செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றி வரும்போது,அவை பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது மட்டும் 3 விநாடிகள் வரை ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன.(இயற்பியல் விதிப்படி, வட்டமாகவோ,நீள் வட்டமாகவோ சுற்றும் ஒரு பொருள் திடீரென ஒருபோதும் நிற்காது.அப்படி நின்றால்,அது வெடித்துவிடும்). 3 விநாடிகளுக்குப் பிறகு ,அவை வழக்கம் போல பூமியை சுற்றி வருகின்றன.
இந்த சம்பவத்தினை அறிந்த (உலகின் பல நாடுகளைப் பகைத்துக் கொண்ட) அமெரிக்காவுக்கு பயம் வந்துவிட்டது;யாராவது நம்மை விட லேட்டஸ்ட் டெக்னாலஜி கண்டுபிடித்துவிட்டார்களோ? என்ற எண்ணத்தில்,இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.தனி செயற்கைக் கோளையே ஏவி,ஆராய்ச்சி செய்தது.
அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்கள்,பூமியின் எந்த இடத்தைக் கடக்கும்போது இவ்வாறு 3 விநாடிகள் ஸ்தம்பிக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்தது;அந்த இடம் பூமியில் அறிவாற்றல் மிகுந்த சமுதாயம் வாழும் இந்தியாவில்,உலகின் மூத்த இனமான தமிழினம் வாழும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியான (அட பாண்டிச்சேரியின் தாய் மொழி தமிழ்தானே!)திருநள்ளாறு என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டதோடு,மேலும் சந்தேகப்பட்டது.ஒருவேளை இந்தியா ஏதேனும் ரகசிய ஆராய்ச்சியின் மூலமாக விண்வெளியில் தன்னை மிஞ்சிவிடுமோ? என்றெல்லாம் பயந்து,மேலும் ஆய்வுகளை மேற்கொண்டது.
அந்த ஆய்வுகளின் விளைவாக,சனிக்கிரகத்திலிருந்து விநாடி தோறும் திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீதர்ப்பணேஸ்வரர் கோவிலில் இருக்கும் சனிபகவான் சன்னிதியில் இருக்கும் சனிபகவான் சிலையின் மீது கண்ணுக்குத் தெரியாத கருநீலக்கதிர்கள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போது,இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி பல மடங்கு அதிகரிக்கிறது.சனிப்பெயர்ச்சியை மையமாகக் கொண்ட 45 நாட்களுக்கு இந்த அடர்த்தி அதிகமாக இருக்கிறது என்பதையும் கண்டறிந்தது.இந்த ஆய்வின் முடிவில்,அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா விஞ்ஞானிகள்,பல கருவிகளைக் கொண்டு திருநள்ளாறுக்கு நேரடியாக வருகை தந்து இந்த ஆச்சரியமான அதிசயத்தை உறுதிபடுத்திக்கொண்டனர்.....

ஆன்மிகக்கடல் இணைய தளத்திற்கு நன்றி

Anonymous
07:39

ஆனநுமௌஸ் அவர்களே மண்டுக்ய உபநிடதத்தில் ஓம் -ன் விளக்கம் உள்ளது."ஜெய் காளி "

Anonymous
07:42

ஆனநுமௌஸ் அவர்களே மண்டுக்ய உபநிடதத்தில் ஓம் -ன் விளக்கம் உள்ளது."ஜெய் காளி "

அருமை!
பகிர்விற்கு நன்றி ஐயா!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

M.Natrayan
20:58

இதனால்தானோ என்னவோ அமெரிக்க ஏஜண்டுகளான உதயகுமார் மற்றும் கிருஸ்துவ பாதியார்கள் கூடன்குள அணுமின் நிலையத்தை செயல் பட விடாமல் செய்துவருகிறார்கள். என்னே தேசத்துறோகம் பாருங்கள்!!!! இவர்களை உடனடியாக தேசீய பாதுகாப்புத் சாட்டத்தில் போடவெண்டும்.

Dear Sir,

Thank you for your details. It is marvellous to hear. Some of my friends proof of this incident . Where can i get it? I search long in the internet i cant not get.
Please do the needful. arunantoni@gmail.com


Thanks

Antony

Dear

Where i get the proof of this incident

Thanks

Antomy


Next Post Next Post Home
 
Back to Top