( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

என்றோ செத்துபோனவன் நீ !


  ம்ம ஆசாமி ஒருத்தன் செத்து போய்ட்டான் வாழ்ந்த போது வசதியா வாழ்ந்தவன் அவன் உசுரு கூட நச்சத்திர அந்தஸ்து பெற்ற ஆஸ்பத்திரியில் வைத்து தான் போச்சி சொகமா வாழ்ந்து பழக்கப்பட்டவன் மேலோகத்திலும் அதே சுகம் கிடைக்குமுன்னு எதிர்பார்த்து காத்திருந்தான் 

நம்ம ஊரு அரசாங்க ஆபிசா இருந்தா தள்ள வேண்டியத தள்ளி வாங்க வேண்டியத வாங்கிடலாம் எமலோகத்தில் அது நடக்குமா ஆசாமி கிங்கிதர்களிடம் தங்குறதுக்கு சின்ன ரூமா இருந்தா போதும் கண்டிப்பா ஏசி மாட்டுங்க ஒரு டிவி இருந்தா பொழுது போக்கா இருக்கும் சாப்பிட வேளைக்கு ஒன்னா விதவிதமா தாருங்க எல்லாத்துக்கும் பணத்த செட்டில்மென்ட் செய்யிறேன் என்று சொல்லி பார்த்தான் அவன் பேச்ச காதில் வாங்க அங்கு யாருமில்ல 

வரவே மாட்டேன் என்று அடம்பிடிச்சவனை இழுத்துக்கொண்டு எமதர்மன் முன்பு விட்டாங்க ஆசாமிக்கு எமனை பார்த்தவுடன் நடுக்கம் வந்திருச்சு ஐயா எசமானரே நான் தெரியா தனமா தப்புதண்டா பண்ணியிருக்கலாம் ஆனா கொடுமையான தப்பு ஏதும் நான் பண்ணவே இல்ல ஏன்னா நான் அமைச்சரோ அதிகாரியோ இல்ல ஒரு ரூபா பொருள இரண்டு ரூபாவுக்கு வித்த சாதரண வியாபாரி என்று சொல்லி அழுதே விட்டான் 


எமனுக்கு அவனை பார்த்ததும் பாவமா இருந்திச்சி ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடேசியில் மனுசனையே கடிச்ச எத்தனையோ பயல்கள் நான் செஞ்சது தப்பே இல்ல அத்தனையும் தர்மம்னு வாதாடுறான் இவன் பாவம் செய்த தப்ப ஒத்துகிட்டான் அதுக்காக இவனுக்கு எதாவது ஒரு சலுகை காட்டலாம் என்று சிந்திச்சான் 

சிந்தனை செஞ்சி கடேசியா ஒரு முடிவுக்கு வந்த எமன் எண்டா மனுஷ பயலே எதோ தெரியாத்தனமா உண்மைய பேசிபுட்டே அதனால தண்டனையா குறைக்க ஒரு வாய்ப்பு தாரேன் என்று சொன்னான் நம்மாளுக்கு ரொம்ப சந்தோசமா போச்சு அப்பாடா இந்த எமன் பாக்கத்தான் கொஞ்சம் கரடு முரடா தெரிறான் உண்மையிலே இவனுக்கு நிறைய இறக்க சுபாவம் இருக்கு அப்படின்னு மனசுல ஒரு கணக்கு போட்டு இன்னும் கொஞ்சம் செண்டிமெண்டா பேசி எமனோட மனசுல இடம்பிடிச்சிடலாம் என்று ஆசைப்பட்டு நீங்க நல்லா இருக்கணும் எசமானே என்றான் 

எமதர்மனும் தொண்டையை செருமி சரிபடுத்திக்கிட்டு நீ பூமில கொஞ்சமேனும் நிறைவா வாழ்ந்திருந்தால் நான் உனக்கு சலுகை காட்டுவேன் அப்படி நீ வாழ்ந்திய இல்லையா என்பததை தெரிஞ்சுக்க சில கேள்வி கேட்ப்பேன் என்றான் நம்மாளுக்கு பயம் ஜாஸ்தியா ஆயிடிச்சு பள்ளிக்கூடத்துல வாத்தியாருங்க கேள்வி கேட்கிறாங்க என்று அந்த பக்கமே போகாம இருந்த நாம இப்போ வகையா மாட்டிகிட்டோம் என்று திருதிருவென்று விழித்தான் எமனும் கேள்வி கேட்க ஆரம்பித்தான் நீ பூமில யார் மேலையாவது உண்மையான அன்பு வச்சிருந்தியா என்று கேட்டான் நம்ம ஊரு நீதிபதிங்க கேள்வி கேட்டா பொய்சொல்லி தப்பிக்கலாம் எமனிடம் அது நடக்குமா அதனால இவன் இல்லை சாமி அப்படின்னு உண்மைய சொன்னான் 


சரி போனா போகுது உனக்கு நெருங்கிய நட்புன்னு யாரிடமாவது சந்தேகமே படாமல் பழகி இருக்கியா 

மன்னிக்கவும் சுவாமி எங்க ஊருல சந்தேகப்படாம யார்கிட்டேயும் பழக முடியாது மீறி பழகினா தூங்கும் போது தலையில கல்லை தூக்கி போட்டுடுவாங்க 

சரி மனுசங்ககிட்டதான் அன்பு வைக்கல தோழமையா பழகல எதாவது மிறுகங்கள் கிட்டையாவது அன்பு வச்சிருந்தியா 

நாய் பூனகிட்ட பழகினா அலர்ஜி வந்திடும் எசமான் 

ஓ! அப்படியா சங்கதி இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போயிடிச்சே நாளைக்கு முதல் வேலையா எறும மாட்டை வித்துவிடுகிறேன் என்று சொன்ன எமதர்மன் அடுத்த கேள்விக்கு போனான் எதாவது அழகான ஓவியம் இனிமையான பாடல் இப்படி எதாவது ஒன்றையாவது ரசிச்சி இருக்கியா என்று கேட்டான் 

சும்மா பேப்பருல கிருக்குறதும் காட்டு கத்தலா கத்துறதும் எனக்கு சுத்தமா பிடிக்காது என்று இவன் பதில் சொன்னான் 

உங்க பூமியில ஆறு குளம் அறுவி மலை பறவை என்று ஏராளமான அழகுகள் உண்டே அதையாவது பார்த்து ரசிக்கும் பழக்கம் உண்டா 

டிவில காட்டினா பார்ப்பேன் 


அடப்பாவி நீ செத்து எத்தனையோ நாளாகி விட்டதே இப்போதுதான் இங்கு வந்தாயா உனக்கு சலுகை காட்டினால் எமதர்மன் என்ற பெயருக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று கோபமாக எழுந்து போய்விட்டானாம் எமன் 

நாமும் அந்த மனிதனை போலத்தான் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறோம் கண்ணுக்கு எதிரே அழகான ரோஜா தோட்டம் இருந்தாலும் அதை ரசிக்காமல் ரசிக்க புத்தி இல்லாமல் வானத்தில் இருந்து ஒரு கந்தர்வ தோட்டம் குதிக்க போவதாக கற்பனையில் ஆழ்ந்து எதிர்பார்த்து அழுது கொண்டிருக்கிறோம் 

வாழ்க்கை அன்பில் இருக்கிறது 

வாழ்க்கை தோழமையில் இருக்கிறது 

வாழ்க்கை இறக்கத்தில் இருக்கிறது 

வாழ்க்கை ரசிப்பில் இருக்கிறது 

வாழ்க்கை நம்பிக்கையில் இருக்கிறது 

ஆனால் இது நம்மில் எத்தனை பேருக்கு தெரிகிறது.+ comments + 18 comments

ஆமாம், இப்படித்தான் வாழ்ந்துகிட்டிருக்கோம். எப்படி மாத்திக்கிறது?

என்றுமே செத்துப் போகாத எழுத்துக்கள்.....
--உதயசூரியன்.

Anonymous
10:07

ஐயா இன்றைய தலை முறையினர் ஏகாதசி விரதம் எப்படி இருபது என்பதை தஅயு செய்து கூறுங்கள்.நான் எவ்வாறு இருபது என்பது தெரியாமலேயே இருந்து இருக்கிறேன் தங்கள் கூறினால் எனது சந்தேகம் தெளிவுறும். நீங்கள் கூறவும்.நன்றி!

Anonymous
11:16

excellent Swamy

உண்மை, மிகவும் அருமையான பதிவு.

NAMBIKKAI THAAN VAZHKKAI. iLLAIYA SWAMIJI?

வாழ்க்கை அன்பில் இருக்கிறது

வாழ்க்கை தோழமையில் இருக்கிறது

வாழ்க்கை இறக்கத்தில் இருக்கிறது

வாழ்க்கை ரசிப்பில் இருக்கிறது

வாழ்க்கை நம்பிக்கையில் இருக்கிறது

Super

அருமை!
பகிர்விற்கு நன்றி Sir!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

@R.Radhakrishnan
இந்த லிங்க் விரத முறை பற்றி கூறும் - பாருங்கள்http:

vediceye.blogspot.com/2008/09/blog-post_09.html

Anonymous
20:21

exellent post...

M.Natrayan
22:17

அற்ப்புதமான விளக்கங்கள்! எமன், எமதர்மராஜா என்று பல்வேறு வகையான இனங்களை கொண்டுவந்துள்ளீர்கள். இந்து மதத்தில் மட்டும்தான் இப்படிப்பட்ட அற்புதங்கள் காட்டப்படுகின்றன. மனிதன் இறந்தால் என்ன என்ன நடக்கும் என்று இந்துமதம் தெளிவாக எடுத்து கூறியுள்ளது. இதெல்லாம் கற்பனையா அல்லது உண்மையா என்று யாராலும் கணிக்க முடியாது. தற்போது நாம் இவற்றை நம்பிக்கையாக கொண்டதாலும் இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஒருவேளை நமது அறிவிற்கு எட்டாமல் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இது போன்ற சம்பவங்கள் உண்மையாக இருக்கும் என்று தான் நம்பு கின்றேன்.அண்ட சராசங்களைப் சற்று பாருங்கள். எத்தனை ஆயிரம் கோடி நட்சச்திரங்கள்!! அதாவது அறிவியல் ரீதியாகப்பர்த்தால் சூரியன்கள். அனைத்து சூரியன் களிலும் நமது சூரியனில் உள்ளதுபோல் கிரகங்கள். நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் கற்பனை செய்து கணித்துள்ளார்கள்!!! அற்புதம்!! அற்புதம்!!! சில பகுத்தறிவு பேசும் பகல் கொள்ளையர்கள் இதனை நம்பாமல் கூசாமல் அசிங்கமாக பேசுவது நல்லதற்கில்லை!! ஒரு காலத்தில் இவர்கள் எமனிடம் சிக்கி படாதபாடு படுவார்கள்!! கடந்த டிசம்பர் 6 ஆம் நாள் இந்த பகுத்தறிவு தற்குரிகூட்டம் தொழுகை நடத்த பாபர் மசூதியை கட்ட வேண்டும் என்று கூறியது. இதற்குப் பெயர்தான் "பகுத்தறிவாம்" !!!!

Rajagopal
22:40

Superb Article. Ever-green statements!

Very interesting to read. Excellent story ending with a life's lesson. Such stories could be narrated in elementary schools so the kids grow up as caring human beings.

Very interesting to read. Excellent story ending with a life's lesson. Such stories could be narrated in elementary schools so the kids grow up as caring human beings.

Very interesting to read. Excellent story ending with a life's lesson. Such stories could be narrated in elementary schools so the kids grow up as caring human beings.

Very interesting to read. Excellent story ending with a life's lesson. Such stories could be narrated in elementary schools so the kids grow up as caring human beings.

Very interesting to read. Excellent story ending with a life's lesson. Such stories could be narrated in elementary schools so the kids grow up as caring human beings.

Simply superb. The way we are leading our life is something like a machine. We don't have time to listen, enjoy and submerge in the happiness that are way infront of ours. In this story one thing we should remeber, always telling the truth to a person who is capable of finding things, will always help us in not getting more damaged even if we have done some mistakes.


Next Post Next Post Home
 
Back to Top