Store
  Store
  Store
  Store
  Store
  Store

முதியோர் இல்லம் போகாத ஜாதகம்


   யா எனக்கு அறுபது வயது பூர்த்தியாகிறது இதுவரை என் வாழ்வில் பெரும்பகுதி துன்ப துயரங்களிலேயே கழிந்துவிட்டது நான் அடைந்த சந்தோசங்கள் என்று சொன்னால் என் திருமணம் எனக்கு பிறந்த குழந்தைகள் ஆகியவைகள் மட்டுமே கடவுள் எனக்கு நல்ல வாழ்க்கை துணையை குழந்தைகளை கொடுத்தாலும் நான் ஒரு கணவனாக ஒரு தகப்பனாக எந்த கடமையையும் அவர்களுக்கு செய்ய முடியவில்லை 

எனது வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வீட்டு செலவு மட்டுமே நடத்த முடியும் அவ்வபோது என் தமையனாரும் மாமனாரும் கொடுத்த பணத்தாலேயே குழந்தைகளை ஓரளவு படிக்க வைத்து கரைசெர்த்தேன் போதுமடா போராட்டம் என்று ஓய்வாக தலைசாய்க்கும் நேரத்தில் உடம்பை பற்றிக்கொண்டது சர்க்கரை ரத்த அழுத்தம் நரம்பு தளர்ச்சி போன்ற நோய்கள் குழந்தைகள் கொடுப்பதை வைத்து நிம்மதியாக வாழலாம் என்றால் அதுவும் முடியவில்லை எல்லாமே மருத்துவ செலவுக்கு சரியாகிவிடுகிறது 

ஐயா நான் அதிகம் ஆசைப்படவில்லை ஓரளவாவது உடம்பு தேறி கடேசி காலத்தை நிம்மதியுடன் கழிக்கவிரும்புகிறேன் அது நடக்குமா அல்லது பணத்திற்காக போராடியது போலவே ஆரோக்கியத்திற்காகவும் போராடி வாழ்நாள் எல்லாம் துயரத்தில் தான் நகர்த்த வேண்டுமா என்று பயமாக இருக்கிறது தயவு செய்து என் துயரம் தீர வழி சொல்லுங்கள் அல்லது இவ்வளவு தான் உன் தலையெழுத்து என்று பொட்டில் அறைந்தால் போல சொல்லி விடுங்கள் சரி அவ்வளவு தான் விதி என்று நிம்மதியை வரவழைத்து கொண்டு வாழ முயற்சி செய்கிறேன் 
முனுசாமி கவுண்டர்.கோபி செட்டிபாளையம் 



    ங்கள் வாழ்வின் நீண்ட பயணம் முழுவதும் நீங்கள் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வருகிறீர்கள் என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் காரணம் பணம் இல்லாதது மட்டும் தான் பெரிய குறை என்று நீங்கள் கருதுவது முற்றிலும் சரி அல்ல பணம் என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று என்பது எனக்கு தெரியும் ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்பதை ஏற்க இயலாது 

உங்கள் இயற்க்கை சுபாவமே பயமும் குழப்பமும் பதட்டமும் நிறைந்தது இந்த சுபாவத்தால் பல வாய்ப்புகள் உங்கள் வாசலை தட்டிய போதும் அச்சத்தால் அவைகளுக்கு கதவை திறந்து விட தயங்கி இருக்கிறீர்கள் அதாவது வாழ்வில் ஏற்படும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்த்து போராட துணிச்சல் இல்லாமல் பல முயற்சிகளை செய்து பார்க்கவே தயங்கி விட்டு விட்டீர்கள் இதுதான் நீங்கள் சந்தித்த தோல்விகளுக்கு மூல காரணம் 

வாழ்வில் இன்னொரு பக்கத்தில் இறைவன் உங்களுக்கு கொடுத்துள்ள மிக சிறந்த வரங்களை நீங்கள் கவனிக்கவே இல்லை தம்பி தடுமாறும் போது ஊன்று கோலாக நின்று உறுதுணை செய்ய எத்தனை தமையன் இந்த காலத்தில் தயராக இருக்கிறார்கள் ஆனால் உங்களுக்கு அதிசியத்திலும் அதிசயமாக அற்புதமான அண்ணன் அமைந்திருந்தார் அவர் நீங்கள் தவறி விழுந்துவிடாத படி தாக்கி பிடித்தே உங்களை காப்பாற்றினார் 

பெண்ணை கட்டி கொடுத்தேனா நல்லது கெட்டதுகளை நீயேதான் பார்க்க வேண்டும் என்று தட்டிக்கழித்து போகும் மாமனார்கள் தான் உலகத்தில் அதிகம் ஆனால் உங்கள் மாமனார் அப்படி அல்ல பெண்ணையும் கொடுத்து தன்னையும் தன் உழைப்பையும் உங்களுக்காக கொடுத்துள்ளார் அப்படி பட்ட மாமனார் கிடைக்க தவம் செய்திருக்க வேண்டும் 

அனால் இவைகளை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவும் இல்லை சரியாக பயன்படுத்தவும் இல்லை சரி போனது போகட்டும் இனி நடப்பதையாவது நல்லவைகளாக ஆக்கி கொள்ள பாடு படுங்கள் உங்களுக்கு வந்திருக்கின்ற நோய்களுக்கு மூல காரணமே நீங்கள் தான் சரியான உணவு சரியான உறக்கம் சரியான உழைப்பு இவைகள் எதுவுமே உங்களிடம் கிடையாது எதை எடுத்தாலும் இப்படி ஆகிவிடுமோ அப்படி ஆகிவிடுமோ என்ற விபரீத கற்பனைகள் தான் உங்களுக்குள் மலிந்து கிடைக்கின்றது அதன் விளைவு தான் இந்த நோய்கள் 

இந்த குணாதிசயங்களை உங்கள் அறுகிலிருந்து நான் பார்க்க வில்லை உங்கள் ஜாதகம் அப்படி சொல்கிறது அதை தான் சொல்கிறேனே தவிர உங்கள் மனதை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் சொல்லவில்லை எனவே மாற்ற வேண்டியது உங்கள் மனதை அதை மாற்றுங்கள் பல மாற்றங்கள் உங்களுக்கு வரும் 

இந்த சனி பெயர்சியோடு உங்களது ஜென்ம சனி முடிவடைகிறது இதனால் உடல் உபாதைகள் பெருமளவு குறையும் உடல் பலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் உங்கள் ஜாதகம் உங்களுக்கு தீர்க்க ஆயுள் என்று சொல்வதனால் இன்னும் பதினைந்து வருடங்களுக்கு ஆரோக்கியத்தில் பெரிய குறைகள் எதுவம் வராது 

உங்கள் மனம் நல்ல மாற்றத்தை நல்ல உறுதியை நல்ல தெளிவை பெறுவதற்கு சனிக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் சிவன் கோவிலில் ஈசான்ய மூலையில் இருக்கும் பைரவர் சன்னிதியில் மூன்று மண் அகல் விளக்குகளில் தாமரை திரி போட்டு நெய் விளக்கு ஏற்றுங்கள் இதை தொடர்ந்து பதினேழு வாரங்கள் செய்து வாருங்கள் மனநிலையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம் 

இனி கவலை படாதிர்கள் உங்கள் குழந்தைகள் நல்லவர்கள் அவர்கள் உங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப மாட்டார்கள் கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பார்கள் அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு குழந்தைகளை ஆசிர்வதியுங்கள் வாழ்க்கையை ரசனை கண்ணோடு பார்க்க துவங்குங்கள் கண்ணில் படுவதெல்லாம் ரோஜா மலர்களாக மட்டுமே இருக்கும்.

Contact Form

Name

Email *

Message *