( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம்


  •       ரசமரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா? கணபதியின் திருநாமங்கள் எத்தனை?
                                                                                வேங்கடவரதன் காணிப்பாடி


     ரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான்.  பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு.  சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.  இருக்கும் நோய் கூட வீரியம் குறையும்.    அரசமர காற்றிலிருக்கும் ஒரு வித மருத்துவ தன்மை கருப்பையில் கருதங்காது இருக்கும் நிலையை மாற்றுகிறது.  கண்ணை மூடி தியானம் செய்தால் மனம் குவியவில்லை எங்கெங்கோ அலைபாயுகிறது என கஷ்டப்படுபவர்கள் அரச மரத்தடியில் தியானம் செய்ய பழகுவார்களானால் சீக்கிரம் மனம் குவிந்து விடுவதை உணருவார்கள்.  

    புத்தனுக்கு ஞானம் தந்த போதிமரம் அரச மரம் தான் என்பதை நினைவில் கொண்டால் அதன் மகத்துவம் என்னவென்று எளிதாக தெரியும்.  மரத்திற்கே இத்தகைய சக்தி என்றால் அதன் அடியில் இருக்கும் மூர்த்தியின் சக்தியை பற்றி சொல்லவே வேண்டாம்.  பிரபஞ்சத்தில் இருக்கும் பிரனவ சக்தியானது மிக சுலபமாக அரசமரத்தடி விநாயகரால் ஈர்த்து பக்தர்களுக்கு வழங்க முடியும். அதனால் தினசரி அரச மரத்தடி தொப்பை கணபதிக்கு தோப்புகரணம் போட்டு உடலை ஆரோக்கிய படுத்தி கொள்ளுங்கள்  


     எல்லா தெய்வங்களுக்கும் பக்தர்கள் தங்களது விருப்படி ஆயிரமாயிரம் பெயர்களை சூட்டி மகிழ்வது இயற்கை.  அதனால் தான் ஓர் நாமம், ஓர் உருவம், இல்லாதவர்க்கு ஆயிரம் திருநாமம், ஆயிரம் உருவம் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். 

   எத்தனை பெயர் சூட்டினாலும் சிறப்பித்து சொல்லப்படுவது சிலப்பெயர்களை மட்டும் தான்.  அதே போல பிள்ளையாருக்கு    ஏகதந்தர் ,சுமூகர், கஜகர்னர், கபிலர், லம்போதரர், விகடர், விநாயகர், விக்கன ராஜர், தூமகேது, கணத்தச்சர், கஜானனர், பால சந்திரர் என்று பன்னிரெண்டு திருநாமங்கள் சிறப்பாக சொல்லப்படுகிறது.
 
+ comments + 6 comments

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

நமது முன்னோர்கள் வகுத்த விஷயங்கள் எல்லாம் தனி மனிதனின் ஒழுக்கத்திற்கும், ஆரோக்யதிர்க்கும் ஏதுவாக அமைந்துள்ளது. உதாரணமாக அரச மரத்தடி பிள்ளையாருக்கு தோப்பு கரணம் போடுதல். அப்படி போட்டால் முட்டு வலி வராது.கோவிலில் விழுந்து சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல் ஒரு வித யோகா பயிற்சியாகும். கோவிலை மூன்று முறை சுற்றுதல் வாக்கிங் exercise ஆகும்.இதை போல சொல்லிக்கொண்டே போகலாம். தெய்வத்தின்பெயரால் நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியினர் ஒழுக்கமாகவும், ஆரோக்கீயமாகவும் விதி முறைகளை வகுத்து வைத்தனர் என்பது எனது தாழ்மையான கருத்து.

முழுமுதற்க் கடவுள்! நன்றி ஐயா!

Anonymous
17:59

arasa marathininai patri veru oru vignana sirappum unndu, matra marangal ellam oxygen izhuthu karbandai oxide velividum, anal arasa maram mattumay karanbandyoxide izhuthu oxygenai velividum, idanal arasa marathadiyil ukkarnthal athiga oxygen kidaikkum.
subramani, chennai-27, 9841636886

Anonymous
19:15

பிற மதங்களை அசிங்கமாக பேசாமல் அனைத்து மதங்களையும் மதிக்கும் கிருஸ்துவ நண்பர்களுக்கு மட்டும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்....


Next Post Next Post Home
 
Back to Top