( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அமைச்சராகும் ஜாதகம்...!


   யா வணக்கம் நீங்கள் அரசியலையும் அரசியல்வாதிகளையும் கடுமையாக தாக்கி எழுதினாலும் முழுநேர அரசியல்வாதியான நான் உங்களின் தீவிர வாசகன் எங்களால் பகிரங்கமாக பேசமுடியாத பலவற்றையும் பேசுகிறீர்கள் அதற்கு பாராட்டு தெரிவிக்கும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல என்றாலும் ஒரு பேராசையால் உங்களை பாராட்டுகிறேன் 

தயவு செய்து என் பெயரை வெளியிட வேண்டாம் நான் இப்போதைய சட்டமன்றத்தின் ஆளுகட்சி உறுப்பினர் பலகாலம் இந்த கட்சியில் விசுவாசமாக இருந்ததனால் இந்த பயனை அடைந்திருக்கிறேன் எனக்கு இதற்கு மேலும் உயர்ந்த பதவி கிடைக்குமா? அரசியலில் நல்ல பெயர் நான் பெறுவேனா? என்பதை தயவு செய்து சொல்லவும் மீண்டும் உங்களை வணங்குகிறேன் 
பெயர் சொல்ல விரும்பாத வாசகர்.
   ரு ஜாதகத்தில் ஒன்று மற்றும் பத்தாம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தாலும் லக்கினாதிபதி பத்தாம் அதிபதியுடன் சேர்ந்தாலும் சம்பந்த பட்ட ஜாதகன் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் அரசு அதிகாரம் பெற்ற நபர்களால் கைதூக்கி விடப்படுவான் வெகுமதிகள் அளிக்கப்படுவான் என்று ஜோதிட ஞான தீபிகை என்ற வடமொழி நூல் கூறுகிறது 

இந்த அமைப்புகள் உங்கள் ஜாதகத்தில் மிகவும் பொருந்தி வருகிறது அதை வைத்து கூறுவதாக இருந்தால் வரக்கூடிய இரண்டு வருட காலத்தில் அமைச்சர் பதவி வரை நீங்கள் பெறலாம் 

வானத்தின் மீது பறந்தாலும் புறப்பட்ட இடத்தை மறக்க கூடாது என்று நமது பெரியவர்கள் சொல்வார்கள் உங்கள் ஜாதகத்தை ஆழ்ந்து பார்க்கும் போது உங்களது ஆரம்ப கால வாழ்க்கை எவ்வளவு வறுமையான சூழலில் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் நீங்கள் அன்று இருந்தது போலவே இன்றும் பல மக்கள் துயரத்தால் நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்களை முடிந்தவரை கைதூக்கி விட கிடைத்திருக்கும் பதவியை வைத்து முயற்சி செய்யுங்கள் 

கடவுள் ஆடை அலங்காரம் ஆடம்பரங்களையும் விரும்புபவன் அல்ல அபிஷேக ஆராதனை கூட அவன் வேண்டுவது கிடையாது அவன் வேண்டுவது எல்லாம் தரித்திர நாராயணன்களுக்கு அதாவது அடுத்த வேளை சோற்றுக்கு வக்கற்றவனுக்கு சோறு கிடைக்க எதாவது செய்பவனை தான் எனவே நீங்கள் தெய்வ ஆதரனை செய்வதை விட ஜன ஆதரனை செய்யுங்கள் என்றுமே அழியாத நற்பெயர் உங்களுக்கு அமையும்.


+ comments + 1 comments

//நீங்கள் தெய்வ ஆதரனை செய்வதை விட ஜன ஆதரனை செய்யுங்கள் என்றுமே அழியாத நற்பெயர் உங்களுக்கு அமையும்.//

ஆமாம், உண்மைதான்.


Next Post Next Post Home
 
Back to Top