( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கோடிஸ்வரனை ஆண்டி ஆக்கும் யோகம்

    யோகங்கள் என்றவுடன் அதிர்ஷ்டமான  அமைப்பு என்று கருதினால் அது தவறாகும். ஜோதிட பரிபாஷையில் யோகங்கள் என்ற வார்த்தை ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் தொடர்பை குறிக்கும் குறியிட்டு வார்த்தை தான். இந்த வார்த்தை தனித்தனி கிரகங்களோடு சம்பந்தப்படும் போது பலவித அர்த்தங்களைத் தருகிறது. அப்படி அர்த்தங்களைத் தரும் ஜாதக யோகங்கள் 300க்கும் மேல் இருக்கிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.சந்திரன் சம்பந்தப்பட்ட யோகங்கள்:

      முதலில் சந்திரனோடு மற்ற கிரகங்கள் சம்பந்தப்படும் போது ஏற்படும் யோகங்களைக் கவனிப்போம்.  ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது துருதரா யோகம் எனப்படும்.  இந்த யோகம் ஜாதகனுக்கு நல்ல உறவையும் நல்ல குணத்தையும் வாகன சுகத்தையும் கொடுக்கும்.

  அதேபோல சந்தினுக்கு 12வது இடத்தில் ராகு கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அநபா யோகம் எனப்படும்.  இந்த யோகம் ஆரோக்கியத்தையும், பெயர் புகழையும் தரும்.

  சந்திரனுக்கு 2ம் இடத்தில் சூரியன், ராகு, கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது சுநபா யோகம் எனப்படும்.  இந்த யோகம் சாதாரண மனிதனை உழைப்பின் மூலமாக உயர்த்தி அரசனுக்குச் சமமாக ஆக்கிவிடும்.


   சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் எதுவும் இல்லாது அது கேமத்துருமம் என்னும் யோகமாகும்.  இந்த யோகம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவன் கோடீஸ்வரனாகப் பிறந்தாலும் சாவதற்குள் அவனைப் பிச்சைக்காரனாக நடுவீதியில் நிறுத்திவிடும்.

  சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் குரு இருந்தால் அது கஜகேச யோகமாகும்.  இந்த யோகம் தீர்க்காயுளையும், புகழையும், பண வருவாயையும், வாகன சுகத்தையும் கொடுக்கும்.

 ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அது சந்திர மங்கள யோகமாகும்.  இந்த யோகம் அசையாத சொத்துக்களை அதிகமாகத் தரும்.  அதேநேரம் இக்கிரகங்களை அசுப கிரகம் ஏதாவது ஒன்று பார்த்தால் ஜாதகனுக்குச் சொத்துக்களைக் கொடுத்து மூளைக் கோளாறைத் தரும்.

 சந்திரனுக்கு 8, (அ) 12ல் குரு இருந்தால் அது சகடயோகமாகும்.  இந்த யோகத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை நிலையில்லாமல் சக்கரம் போல் மேலும் கீழும் சுற்றிக் கொண்டே இருக்கும்.


 சூரியன் சம்பந்தப்பட்ட யோகங்கள்:

  சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு, கேது, தவிர, வேறு கிரகங்கள் இருந்தால் அது வேசி யோகம் எனப்படும்.  இந்த யோகத்தோடு பிறந்த ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் சுய கௌரவத்தை இழந்து பணம் மற்றும் சொத்துக்களைப் பெறுவார்கள்.

  சூரியனுக்கு 12ல் ராகு, கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அது வாசியோகமாகும்.  இந்த யோகம் பெரும் புகழை ஜாதகன் பெறும்படிச் செய்யும்.  சூரியன் இருக்கும் ராசிக்கு இரு பக்கங்களிலும் எந்தக் கிரகம் இருந்தாலும் அது சுய உபயசாரி யோகம் எனப்படும்.  இது நல்ல வருவாயையும புகழையும் ஈட்டித்தரும்.

  ஜோதிடப்படி மிகச்சிறந்த யோகம் கஜகேசரி யோகமாகும் குரு உச்சம் பெற்ற ஜாதகருக்கு மட்டுமே அமையும்

  இவைகள் தவிர பத்ரயோகம், ரூசக யோகம், கசயோகம், ஹம்ச யோகம், மாலவ்ய யோகம் என்று பஞ்சமகா புருஷ யோகங்கள்  உள்ளன இந்த யோகங்கள் எல்லாமே ஜாதகத்தில் கிரக நிலைகள்  நல்லபடி அமைந்திருந்தால் மட்டுமே முழுமையான பலன்களைத் தரும்.  இப்படி அமையாவிட்டால் அரைப்பாகம், கால்பாகம் என்று தான் பலன்களைத் தரும்.+ comments + 5 comments

கால சர்ப யோகம் / தோஷம் பற்றி விளக்க முடியுமா? நன்றி.

தெரியாத பல தகவல்கள்! நன்றி ஐயா!
தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

M.Natrayan
20:59

ஜோதிடத்தில் ஒன்று சரியாக விளக்கப்படவில்லை. ஒரு பஸ் அல்லது ரயில் விபத்து நடக்கிறது. அதில் பலர் மாண்டுவிடுகிரார்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரே ஜாதகமாக இருக்குமா ? அது எப்படி? சுனாமியால் பலர் இறந்தனர். ஜாதகப்படி இவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் மரணம் நிகழ்வது சாத்தியமா? இதற்க்கு வேறு விளக்கங்கள் உள்ளதெனில் அதனை விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்!

RAMESH MADURAI
22:15

அய்யா துலா லக்னத்திற்கு குரு பாதகாதிபதியாதலால் ,அந்த லக்னத்திற்கு குரு 10 ல் உச்சம் பெற்று கஜ கேசரி யோகம் அமைந்து இருந்தால் அந்த யோகம் ஜாதகர்க்கு பலன் தருமா , அருள் கூர்ந்து விளக்கவும் ,நன்றி.

//ஜோதிடப்படி மிகச்சிறந்த யோகம் கஜகேசரி யோகமாகும் குரு உச்சம் பெற்ற ஜாதகருக்கு மட்டுமே அமையும்// புரியவில்லை. குரு உச்சம் பெறாமல் சந்திரனுக்கு 1,4,7,10ல் குரு இருந்தாலும் கஜகேசரி யோகம் தானே? அல்லது குரு உச்சத்தில் இருந்து (கடகத்தில்) சந்திரன் மேஷத்தில் இருந்தால் மட்டும் கஜ கேசரி யோகமா?


Next Post Next Post Home
 
Back to Top