( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நமக்கென்ன யோக்கியதை இருக்கிறது...?


  டவுள் நினைத்தால் எல்லாம் ஒரு நிமிடத்தில் தலைகீழாக மாறிவிடும் குப்பைமேடு கோபுரமாகும் கோபுரம் சீட்டுக்கட்டு மாளிகையாக சரிந்து விழுந்து குப்பையாகும் இந்த உண்மையை மீண்டும் ஒரு முறை நம் கண்ணெதிரே காட்டியிருப்பது தான் தானே புயலின் கோரத்தாண்டவம் 

கடவுள் எதற்க்காக இப்படி பட்ட அழிவுகளை தருகிறான் அவனுக்கு ஏன் மனிதர்களின் மீது தீடிரென அளவு கடந்த கோபம் ஏற்படுகிறது என்பவைகள் நமக்கு புரிவதில்லை அதை தெரிந்து கொண்டால் ஒரு வேளை மனிதனும் கடவுள் அளவு உயர்ந்து விடுவான் என்று எண்ணத்தோன்றுகிறது 

கடவுளின் திருவிளையாடல் ஒருபுறம் இருக்கட்டும் மனிதர்கள் சக மனிதர்கள் மீது காட்டுகின்ற அன்பையும் அக்கறையையும் ஒரு கணம் நினைத்து பார்த்தால் நெஞ்சமே வெடித்து விடும் போலிருக்கிறது மிருகங்கள் கூட அபாய காலங்களில் தப்பித்து செல்ல போட்டி போடுமே அல்லாது அபாயத்தை பயன்படுத்தி சகோதர மிருகங்களை சுரண்டி வாழ நினைக்காது ஆனால் மிருகங்களை விட பல மடங்கு அறிவால் வளர்ந்து விட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மனிதன் கால நேரம் பாராமல் எரிகிற வீட்டில் பிடுங்கும் வரை லாபம் என்று நடந்து கொள்கிறான் 


அப்படி மனிதன் ஆடும் சுரண்டல் தாண்டவத்தின் ஒரு கோரகாட்சியை புயலால் பாதிக்கப்பட்ட பாண்டிச்சேரி கடலூர் போன்ற பகுதிகளில் நம்மால் பார்க்க முடிந்தது எல்லாம் உள்ளவனாக இரவில் உறங்க போனவன் காலையில் சூரியன் உதயமாவதற்கு முன்பே எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் திக்கற்றவனாக நிற்கும் காட்சி அந்த பகுதிகளில் காண முடிந்தது 

பல நூறு வீடுகள் அடிக்கும் காற்றில் காணமல் போய்விட்டன சுவறுகள் இடிந்து விழுந்து எத்தனையோ வீடுகள் மண் மேடுகளாகி விட்டன அறுவடை முடிந்து வீட்டுக்கு வரவேண்டிய நெற்பயிர்கள் வயலோடு சாய்ந்து போய்விட்டன வாழைமரங்கள் கரும்புகள் அனைத்தும் மண்மீது நீண்டு படுத்துவிட்டன ஆடு மாடுகள் கோழிகள் என்று லட்ச கணக்கான கால்நடைகள் காற்றோடு கரைந்து விட்டன முப்பத்தைந்துக்கும் அதிகமான மனித உயிர்கள் சில மணி நேரங்களில் பறிபோய்விட்டன 

அடுத்த வேளை சோற்றுக்கு வழி இல்லை பசியால் அழுகின்ற குழந்தைகளை வயிற்றில் ஈரம் காண செய்ய பாலில்லை மழையில் நனைந்து போன ஆடையை மாற்றி கட்ட துணி இல்லை அவ்வளவு ஏன் தாகம் எடுத்தால் கூட தொண்டையை நனைக்க துளி கூட குடி தண்ணீர் இல்லை வாழ்வதா சாவதா என்று வகை தெரியாமல் ஆயிரம் ஆயிரம் மனித மனங்கள் பரிதவித்து கொண்டு தெருவில் திரிகின்றன 


அந்த வேளையில் பிணங்கள் வீழாதா கொத்தி தின்ன மாமிசம் கிடைக்காதா என்று கழுகுகளும் கோட்டான்களும் வட்டமிடுவது இயற்க்கை ஆனால் அங்கே அப்படி எதுவும் மாமிச பட்சினிகள் பறக்கவில்லை மாறாக மனிதர்கள் என்று சொல்லிக்கொண்ட அரக்கர் கூட்டம் அலைஅலையாக அலைந்தன ஆம்! புயலால் பாதிப்படைந்த அந்த பகுதியில் ஒரு லிட்டர் பால் 120 ரூபாய் ஒரு கிலோ அரிசி இருநூறு ரூபாய்க்கு மேல் இரைவில் விளக்கேற்ற வேண்டுமென்றால் மண்ணெண்ணெய் லிட்டர் முந்நூறை தாண்டி விட்டது பணம் இருப்பவன் வாழலாம் இல்லாதவன் சாகவேண்டும் இது தான் அங்கு அன்றைய நிலை 

பத்து ரூபாய்க்கு பொருள் வாங்கி பதினைந்து ரூபாய்க்கு விற்பது வியாபாரம் அந்த வியாபாரம் கூட அபாய காலங்களில் லாபத்தை பெரிதாக கருதாமல் மனிதாபிமானத்தை பெரிதாக கருதி நடத்த வேண்டும் என்பதே நாகரிக சமூகத்தின் நிலைபாடாகும் ஆனால் இரண்டு ரூபாய்க்கு பொருள் வாங்கி அதை இருநூறு ரூபாய்க்கு விற்ப்பது சாதாரண காலங்களிலேயே கூட பகல் கொள்ளையாகும் அதையே அபாய காலத்தில் செய்தால் கொலைபாதகத்தை விட கொடியதாகும் 

இந்த கொடுமைகள் தான் கடந்த சில நாட்களாக புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சர்வ சாதரணமாக நடந்து வருகிறது இப்படி செய்வது தவறு இது பெரும் பாவம் என்று சம்பந்த பட்ட யாருமே துளி கூட நினைக்க வில்லை மாறாக தங்களது வியாபாரம் பெருத்த லாபத்தை ஈட்டித்தரும் நேரமாக தங்களது வியாபார அறிவின் வெற்றியாக நினைக்கிறார்கள் இது எதை காட்டுகிறது என்றால் மனிதர்களின் மனதில் ஈவு இறக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது அனைத்துமே லாப நோக்கமாக மாறிவிட்டது தான் வாழ்ந்தால் போதும் மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை என்ற எண்ணம் தலைவிரித்து ஆடுகிறது என்பதையே காட்டுகிறது 


நியாய தர்ம உணர்ச்சி இல்லாத மக்கள் நாடு முழுவதும் பரவி விட்டார்கள் என்பதற்கு இதை விட வேறு உதாரணங்கள் தேவையே இல்லை இப்படி பட்ட மக்களாகிய நாம் மற்றவர்களின் ஒழுக்க கேடுகளை பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்களாக இருக்கிறோம் சோனியா காந்தி நாட்டை கொள்ளை அடிக்கிறாள் ஜெயலலிதா சொத்துக்களை வாங்கி குவிக்கிறாள் கருணாநிதி பல லட்சம் கோடிகளை சுருட்டி விட்டார் என்று மற்றவர்களை பேச என்ன யோக்கியதை நமக்கு இருக்கிறது மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி என்று அந்த காலத்தில் சொல்வார்கள் அது மன்னர் காலத்தில் பொருந்தி இருக்கலாம் இது ஜனநாயக காலம் இப்போது மக்கள் எவ்வழி தலைவர்களும் அவ்வழி என்பதே உண்மையாகும் 

மக்களாகிய நாம் நல்லவர்களாக இல்லை பிணத்தின் வாயில் விழுகின்ற வாக்கரிசியை கூட எடுத்து கள்ளமார்க்கட்டில் விர்ப்பதற்கு தயங்காமல் இருக்கிறோம் கருணை அன்பு பாசம் தர்மம் நீதி நேர்மை என்பதெல்லாம் நம்மிடம் சிறிது கூட இல்லை நான் நல்லா இருக்க என் பிள்ளை நன்றாக இருக்க அடுத்த வீட்டு குழந்தையின் கழுத்தை நெரிக்க கூட தயங்க மாட்டேன் என்பது தான் இப்போதைய நமது எதார்த்த நிலை திருடர்கள் நிறைந்த நாட்டை திருடர்களே ஆள்வார்கள் என்பது உண்மையாகும் 

இன்று நம்மை ஆள்பவர்கள் திருடர்களாகவும் சுயநல காரர்களாகவும் இருப்பதற்கு நாமே முதல் காரணம் நாமே மூல காரணம் ஒழுக்கமற்ற நாம் இறக்க மற்ற நாம் என்று நம்மை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோமோ எப்போது நம் குற்றத்தை நாம் ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள ஆயத்தபடுகிரோமோ அப்பதே இந்த நாடு உருப்படும் அதுவரை கடவுளே வந்து நாட்டை ஆண்டாலும் நாடு உருப்படாது.
+ comments + 7 comments

Anonymous
02:25

நாம என்ன பண்ண முடியும் குருஜி...ஆயிரம் விவேகானந்தர் வந்தாலும் நம்ம நாட்டு அயோக்கியர்களை திருத்த முடியாது....

Anonymous
10:57

2 yrs back full night power went off in US. People are not able to take money in ATM. Indian hotel allowed evey one to have food without money. People had food and paid the cost next day . How much humanity we are having.

இப்போது உண்மையான நிலை அப்படி தான் இருக்கிறது குருஜி,
சில மாதத்திற்கு முன்பு ஒரு செய்திதாளில் ஒரு செய்தி படித்தேன் படத்துடன் விளக்கமாக போட்டு இருந்தான்,

முதல் படம், நமது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு பழ வியாபாரி ஒருவர், தன்னிடம் இருந்த அழுகிய தேவையற்ற பழங்களை குப்பை தொட்டியில் கொட்டுகிறான்.

இரண்டாம் படம், அதே குப்பை தொட்டியில் ஒருவன் சிறுநீர் கழிக்கிறான்.

முன்றாம் படம், மற்றொருவன் அந்த குப்பை தொட்டியில் உள்ள பழங்களை, அனைத்தையும் எடுத்து தான் வைத்திருந்த ஒரு பெரிய கூடையில் போட்டு கொண்டு, சாலையோரத்தில் ஒரு சிறிய தார்பாய் விரித்து அந்த பழங்களை விற்கிறான்.

இதுதான் இபோதைய நிலைமை :(

"பத்து ரூபாய்க்கு பொருள் வாங்கி பதினைந்து ரூபாய்க்கு விற்பது வியாபாரம் அந்த வியாபாரம் கூட அபாய காலங்களில் லாபத்தை பெரிதாக கருதாமல் மனிதாபிமானத்தை பெரிதாக கருதி நடத்த வேண்டும் என்பதே நாகரிக சமூகத்தின் நிலைபாடாகும் ஆனால் இரண்டு ரூபாய்க்கு பொருள் வாங்கி அதை இருநூறு ரூபாய்க்கு விற்ப்பது சாதாரண காலங்களிலேயே கூட பகல் கொள்ளையாகும் அதையே அபாய காலத்தில் செய்தால் கொலைபாதகத்தை விட கொடியதாகும்"

-- மிக அருமையான விளக்கம்.

M.Natrayan
19:39

ஆமாம்! இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது. தமிழன் என்ற உணர்வு வேண்டும் என்று கூறி இலங்கையையும் கேரளத்தையும் சுட்டிக்காட்டும் விழுப்புர கடலூர் மாவட்டத் தமிழர்களின் இந்த நிலை கவலைக்குரியது!!!! இங்குதான் தமிழனுக்காக வாழப்பிறந்த தானைத்தமிழன்
"மரம்வெட்டி" ராமதாஸ் பிறந்த பூமி. இதிலிருந்து அங்குள்ளவர்களை இவர் எப்படியெல்லாம் செய்ய தூண்டியிருக்கிறார் என்பது தெரியும்!!!

Super sir

இயற்கையை நேசிக்காத மனிதனுக்கு இயற்கை படிப்பித்த பாடமது. மனிதன் மனிதத்துவத்தை இழந்து விட்டான். ஏமாற்றியே வாழ்ந்தகூட்டமது. மீனை மீனைப்போட்டே பிடிக்கின்றான்.அப்டி இருக்க அவனிடம் எப்படி எதிர் பார்ப்பது நியாயத்தை குருஜீயின் கருத்து உண்மையானது. இயற்கையை நேசித்து அதன்வழி சென்று உண்மை சத்தியம் நியாயத்துடன் வாழ்தாலே ஒழிய இது போன்ற இயற்கை அனத்தாம் மனிதனை சூறையாட மனிதன் மனிதனை சூறையாடிட்டே இருப்பான். இறைவன் வந்து நான்தான் கடவுன் என்றால் கூட அவர்டமும் இதையே செய்வான். இது கலியுகம் அல்வா ? தருமர் கால்வைக்க இடமில்லாத அந்திரத்தில் நிற்கும் காலமல்வா? இப்படி இருக்க தருமத்துக்கு ஏது இடம். இது காலத்தின் கோலம்தான். நாம் இதில் தப்ப வழிகிடைத்தால் அது பாக்கியம் அவர் அவர் செய்த வினைப்பயனை அவர் அவர் தான் அனுபவிக்க வேண்டும். கவலைப்படலாம் அவளவுதான். கீதாசாரமே பதில்


Next Post Next Post Home
 
Back to Top