( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தலைவர்கள் திருந்த வரம் தா...!
ருடம் தோறும் வாசல் திறந்து 
வரவேற்கும் மாலே மணிவண்ணா உந்தன் 
பாதம் பணிந்து பாமாலை தொடுத்து 
சாதம் கேட்கும் சவலை குழந்தையாக 
வரம்சில கேட்கிறேன் வழங்கி அருள்செய் 
கரங்கள் கறைபட்ட கண்ணில்லா தலைவர்கள் 
மனங்கள் திருந்தி வாழ வேண்டும் 
இனங்கள் மொழிகள் இன்னும்பல சண்டைகள் 
இப்போதே ஒயவேண்டும் இந்நாடு உயரவேண்டும் 
அப்பாவை அம்மாவை அநாதை ஆக்கும் 
பிள்ளைகள் வேண்டாம் பிறக்கும் எல்லோரும் 
உன்னை நினைக்கும் உத்தம மணியாக 
என்னாளும் வாழ இனிய வரம் தா...! 
+ comments + 3 comments

arumaiyana kavithai. Eraivanin ninaivu, avan paal naam kollum anbai vida siranthathu veru ethuvum unda ulagaththil?

நமது நாட்டை வழிநடத்திச்செல்ல நல்ல தலைவர்கள் இல்லை என்பது வருத்தம்தரும் விஷயம். தலைவர் என்று கூறப்படுபவர்கள் எல்லாம் லஞ்ச ஊழலில் திளைத்து உள்ளார்கள். தொண்டர்களை மூளை சலவைசெய்து தங்களுக்கு ஆதரவாக திசை திருப்பி உள்ளார்கள். மக்களும் இவர்களை நம்பி மோசம் போகிறார்கள். நல்ல ஆன்மிக தலைவர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் நமது நாடும் மக்களும் நலமடைவார்கள். வெளிநாட்டில் இருந்து பணத்தை முதலீடு செய்து மக்களை மதமாற்றம் செய்து வருகிறார்கள். இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

குழந்தாய் உன் குரல் நானும் கேட்டேண்
உள் மனதில் நகைத்து கொண்டேன்
விருட்சம் என்பதே விஷம் எனில்
கனிகள் மட்டும் அமுது ஆகுமோ
கறைகள் பட்ட தலைவர்களும்
உன் சொல்லின் படி பெற்றவர்கள்தான்
பெற்றவர்களின் வினை இப்படி இருக்க
தவ புதல்வனை நானும் எப்படி கொடுக்க
உலகம் என்பதே என்னுள் இருக்க
உன் நாடு மட்டுமே உயர வேண்டுமோ
என்னை காண கடும் தவம் வேண்டாம்
மந்திர தந்திர ஞானமும் வேண்டாம்
உத்தமனாக யார் இருப்பினும்
அவன் மனதில் நித்தமும் நான் இருப்பேனே
அரிது ,அரிது என்னை காண்பதெனின்
அரிது ,அரிது மனிதனை காண்பது
அவனுக்கு அரிதல்ல அரிதனை அடைவது
குருவருள் இருப்பின், திருவருள் உண்டு
திருவருள் இருப்பின், நிறைவது உண்டு
நிறைவது இருப்பின், வரமது வேண்டுமோ


Next Post Next Post Home
 
Back to Top