( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அரசியல்வாதிகளின் பார்வையில்...?


த்தியம் என்ற வார்த்தை அரசியல்வாதிகளின் பார்வையில் எப்படி படும்?
  • சத்தியம் என்றால் என்ன இது என்ன மொழி இது எந்த மாநிலத்தில் அல்லது எந்த நாட்டில் பேசப்படுகிறது இதுவரையிலும் இப்படி ஒரு வார்த்தையை கேள்வி பட்டதே கிடையாதே புதுசாக இருக்கிறதே ஒருவேளை எதாவது புதிய வாரியத்தின் பெயரா அப்படி என்றால் மேலிடத்தில் சொல்லி அந்த வாரிய தலைவர் பதவியை எனக்கு கிடைக்கும் படி ஏற்பாடு செய்ய முடியுமா என்று அப்பாவி தனமாக கேட்பார்கள் சத்தியம் தர்மம் என்பதெல்லாம் நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு சொந்தமானது அவதார புருஷர்களான அரசியல் வாதிகளுக்கு சொந்தமானது அல்ல ஏனென்றால் அவர்கள் கெட்டவார்த்தையை தெரிந்து கொள்ள மாட்டார்கள் ஞ்சம் என்பது என்ன? 
  • நம் நாட்டின் தேசிய பறவை மயில் தேசிய விளங்கு புலி அசோக சக்கரம் நான்கு சிங்க முகம் என்பவைகள் தேசிய சின்னங்கள் தேசிய கீதம் ஜனகன மன என்பது எல்லோருக்கும் தெரியும் அரசியல்வாதிகளின் தேசிய வருவாய் என்பதற்கு பொது பெயர் என்னவென்று யாருக்காவது தெரியுமா சந்தேகமே வேண்டாம் அந்த தேசிய பெயர் தான் லஞ்சம் தண்ணீர் இல்லை என்றால் மீன் செத்துவிடும் இலை தளைகள் இல்லை என்றால் மான் செத்துவிடும் காற்று இல்லை என்றால் மனிதர்கள் செத்துவிடுவார்கள் லஞ்சம் இல்லை என்றால் அரசியல் வாதிகள் செத்துவிடுவார்கள் இஸ்லாமியர்களின் தெய்வம் அல்லா கிறிஸ்தவர்களின் தெய்வம் கர்த்தர் பெளத்தர்களின் தெய்வம் புத்தர் இந்துக்களின் தெய்வம் மும்மூர்த்தி அரசியல்வாதிகளின் தெய்வம் லஞ்சம் சாதாரண மக்களின் தெய்வங்கள் அனைத்து இடத்திலும் வியாபித்து இருக்கிறதோ இல்லையோ லஞ்சம் என்ற மாகா தெய்வம் உலக முழுவதும் வியாபித்து இருக்கிறது அது இல்லை என்றால் அணுவும் அசையாது அணுகுண்டும் வெடிக்காது 


ஜாதி என்பது எதற்கு?
  • தெருவோர பிச்சைகாரனுக்கு பிச்சை எடுப்பதற்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை என்றால் அநாதை பிணத்தை தெருவில் போட்டு பிச்சை எடுப்பான் அரசியல்வாதிக்கும் அரசியல் நடத்த வேறு வழிகள் கிடைக்கவில்லை என்றால் இரண்டு வழியை தேர்ந்தெடுப்பார்கள் ஒன்று தங்களது தொண்டர்கள் யாரையாவது தீக்குளிக்க வைத்து அந்த சாவில் ஆதாயம் காண முயற்சிப்பார்கள் அடுத்தது அமைதியான பகுதியில் கலவரத்தை உண்டாக்கி குளிர்காய்வார்கள் அப்படி அமைதியை குலைக்க அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அல்லது அதற்காக வளர்க்கும் மிருகம் தான் ஜாதி என்பது பிளாட் பாரத்தில் உட்கார்ந்து துண்டு பீடி அடிப்பவன் மந்திரியாக வேண்டுமென்றால் ஜாதி என்பது மிகவும் அவசியம் ஜாதி இட ஓதிக்கீடை மட்டும் வாங்கி தரும் கருவி அல்ல தேர்தல்களில் தொகுதிகளையும் வெற்றி பெற்றால் பதவிகளையும் வாங்கி தரும் மந்திர கோலாகும்


தம் என்பது எதற்கு பயன்படும்?
  • மதம் சாமி கும்பிடவும் பூஜை புனஷ்காரங்கள் செய்து கொள்ளவும் மட்டும் பயன்பட கூடியது என்று யாராவது நினைத்தால் அவர்கள் ஐயோ பாவம் நான் தான் பெரிய தலைவர் என்னை விட்டால் இந்த நாட்டை காப்பாத்த நாதியே கிடையாது என்று யாரவது கொக்கரிக்கிறார்களா அவர்களை உங்கள் வீட்டு வாசலில் வந்து காத்து கிடக்க செய்ய வேண்டுமா? மிக சுலபமான ஒரு வழி இருக்கிறது ஐயா நான் இந்த மதத்தை சார்ந்தவன் நான் யாருக்கு ஒட்டு போட சொல்கிறேனோ அவர்களுக்கு தான் என் மதத்தவர்கள் ஒட்டு போடுவார்கள் நான் தான் அவர்களின் ஏகபோக பிரதிநிதி என்று மேடையில் ஏறி மைக் பிடித்து சும்மா ஒரு சவடால் பேசுங்கள் தலைவர்கள் எல்லோரும் ஆடி போய்விடுவார்கள் நாளைக்கு காலையில் நீங்கள் கண்விழித்தால் முகம் கழுவ தண்ணீர் கொடுக்க ஒரு தலைவர் பல் தேய்க்க பல் பொடி கொடுக்க ஒரு தலைவர் துடைத்து கொள்ள டவல் கொடுக்க ஒரு தலைவர் என்று போட்டி போட்டு கொண்டு உங்களை தேடி வருவார்கள் அவ்வளவு சக்தி மிகுந்தது மதம் கடவுளுக்கு சக்தி இருக்கிறதோ இல்லையோ மதத்திற்கு கண்டிப்பாக சக்தி இருக்கிறது+ comments + 4 comments

மதம் பிடித்த ? ....இல்லை என்ன்றால் மதத்தை பிடித்துக்கொண்டவர்களுக்கு.?..மதத்தின் பெயர்ரால் கட்சி நடத்துபவர்களுக்கு ?மதங்களை இல்லை என்று எமற்றுகிரவர்களுக்கும்????ஜாதி தலைவர்கள் சண்டாளர்கல்லாகவும்,மதத்தலைவர்கள் மிளேச்சர்களவும் நாம்தான் ஏற்றிவைத்து ஏமாறுகிறோம் ....நம்ம அப்பாவித்தனம் அவர்களுக்கு கொண்டாட்டம் .....

13:24

guruji super

Shekar

Shekar


Next Post Next Post Home
 
Back to Top