Store
  Store
  Store
  Store
  Store
  Store

காந்தி ஜாதகம் இப்படி இருந்தது...


   லகில் மனிதனாக பிறக்கும் பலர் தாங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை விட்டுவைக்காமல் மறைந்து போகிறார்கள் அதாவது உண்பது உறங்குவது பிள்ளைகள் பெறுவது இவைகள் தான் அவர்களால் நிகழ்த்தப்படும் ஒரே சாதனையாக இருக்கிறது மனிதன் அப்படி வாழ கூடாது மறைய கூடாது என்பது எனது எண்ணம்

என் வாழ்நாளில் எதாவது உருப்படியான காரியங்களை சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் இன்றைய உலகில் பணம் இருந்தால் தான் பொது சேவை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது எனக்கோ கையில் பணமில்லை மனதில் மட்டும் தான் ஆர்வம் இருக்கிறது ஆனாலும் உழைக்கும் தெம்பும் தைரியமும் நிறையவே உண்டு நான் நினைப்பது போல வருங்காலத்தில் பொது சேவை செய்ய என்னால் முடியுமா? அல்லது வெறும் ஆசையோடு தான் வாழ்க்கை முடிந்து போகுமா? எனக்கு விவரமாக சொல்லுங்கள்
ராமதாஸ்,காரைக்குடி


     ம்ம ஜனங்க மத்தியில் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது கையில் காசு இருந்தால் தான் பொது தொண்டு செய்ய வேணும் அல்லது காசு இருப்பவன் தான் செய்யணும் என்கிற எண்ணம் நிறையவே மக்கள் மத்தியில காணமுடிகிறது இது மிகவும் தவறுதலான சிந்தனையாகும் காசு கிடைத்தால் தான் கிடைத்த பிறகு தான் தொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பதும் கடலில் அலை ஓய்ந்தால் தான் குளிக்க வேண்டும் என்று நினைப்பதும் ஒன்று தான்

சரித்திரத்தில் சமூக பணி செய்தவர்கள் பலபேருடைய வாழ்க்கையை எடுத்து பாருங்கள் யாரும் கையில் பணத்தை வைத்து கொண்டு பொது சேவையில் ஈடுபட்டதாக சொல்ல முடியாது நீச்சல் கற்றுக்கொள்பவன் முதலில் குளத்தில் குதித்து விட வேண்டும் அதன் பிறகு கை காலை ஆட்டி அசைத்து எப்படியும் கரை சேர்ந்து விடலாம் அதாவது நல்லதை செய்ய நாள் பார்க்க வேண்டிய அவசியமில்லை செயலில் இறங்குங்கள் அதற்க்கான ஊக்கமும் உச்சாகமும் தானே உங்களை தொடர்ந்து வரும் என்பது தான் எனது அறிவுரையும் அனுபவமும்

இரண்டாயிரம் ஆண்டு துவக்கத்தில் ஒரு மாலை நேரத்தில் நண்பர்களோடு உரையாடி கொண்டிருந்த போது ஒரு சிந்தனை வந்தது முடியாத திக்கற்ற வசதி இல்லாத சில பேருக்கு இலவசமாக எல்லா செலவுகளையும் நாமே செய்து திருமணம் நடத்தி வைத்தால் என்ன என்பது தான் அந்த சிந்தனை உடனடியாக அதை நண்பர்களிடமும் சொன்னேன் அவர்களும் உற்சாகமாக ஒப்புக்கொண்டார்கள்

இந்த சிந்தனை வந்த போது எங்கள் கையில் காலணா கிடையாது ஆனாலும் ஒன்பது ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தோம் அதற்க்கான செலவு தொகை எவ்வளவு ஆகும் என்றும் கணக்கு போட்டோம் அப்போதைய சூழலில் ஒரு லட்ச ரூபாய் இருந்தால் திருமணத்தை ஜாம் ஜாமென நடத்தலாம் என்று முடிவு செய்தோம் நிகழ்ச்சிக்கான தேதி நேரம் குறித்து விட்டு செயலில் இறங்கவும் செய்து விட்டோம்

இறைவன் அருளால் ஒன்பது ஜோடிகளுக்கு யாரும் எண்ணி பார்த்திராத அளவிற்கு வானவேடிக்கை விருந்து உபசாரம் விடியோ பதிவு என்று தடபுடலாக திருமணத்தையும் நடத்தி வைத்தோம் திருமணத்திற்கு மொத்தம் 85 ஆயிர ரூபாய் செலவானது எல்லாமே நன்கொடையாகத்தான் பெற்றோம் கல்யாண செலவு போக மீதம் எங்கள் கையில் இருபதாயிர ரூபாய் வந்தது ஒரு நல்ல விஷயத்தை நடத்த போகிறோம் என்று சொன்னவுடன நிறைய பேர் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு கொண்டு நன்கொடை வழங்கினார்கள்

செய்ய வேண்டும் என்ற சிந்தனை வந்தவுடன் இவ்வளவு பணமாகுமே எப்படி நம்மால் செய்ய முடியும் பணம் கிடைத்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று நாங்கள் எண்ணி இருந்தால் இதுவரை அப்படி ஒரு நிகழ்ச்சியையே எங்களால் நடத்தி இருக்க முடியாது எனவே பணம் என்பது பொது காரியத்திகு இரண்டாம் பட்சம் தான் முதலில் தேவை மனதில் ஆர்வமும் உழைப்பும்

இந்த கேள்வி கேட்டிருக்கும் ராமதாசின் ஜாதகத்தை நன்றாக பார்த்தேன் உங்களிடமுள்ள சிறிய சோம்பேறி தனத்தை மட்டும் விட்டு விட்டால் நாடே போற்றும் பொது நல ஊழியராக வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது இவர் ஜாதகத்தில் குருவிற்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் இருக்கிறார் இப்படி பட்டவர்கள் மனித நேயம் உடையவர்களாகவும் பொது பணத்தை சுயநலத்திற்கு பயன்படுத்தாதவர்கலாகவும் இருப்பார்கள் உதாரணத்திற்கு சொல்வது என்றால் மகாத்மா காந்தியின் ஜாதகத்திலும் குருவிற்கு ஐந்தில் தான் சூரியன் இருக்கிறது எனவே தயங்காமல் பொது சேவை செய்ய தயாராகுங்கள் உலகம் உங்களை வாழ்த்தும்.


Contact Form

Name

Email *

Message *