Store
  Store
  Store
  Store
  Store
  Store

எந்த தவறும் இறைவனுக்கு தெரியும் !


  • லயங்களில் சென்று கடவுளை வழிபடும் போது சிலர் கன்னத்தில் போட்டுக்கொள்வதன் அர்த்தம் என்ன?

சிவகாமி,கேரளா

     நாம் மனிதர்கள் ஆசாபாசம் என்பது நம்முடன் பிறந்தவைகள் பற்றுகள் நிறைந்த மனிதன் தவறுகள் செய்வது இயற்கையாகும் அத்தகைய தவறுகள் மனத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாம் உடம்பால் செய்யப்பட்டதாக இருக்கலாம் வார்த்தைகளால் செய்யப்பட்டதாக இருக்கலாம் எதுவால் செய்யபட்டாலும் தவறு தவறுதான் சில நேரம் இது தவறு என்று உணர்ச்சி இல்லாமலே அல்லது அதை பற்றிய விவரம் தெரியாமலே செய்து விடுவது வாடிக்கையாகும்

இப்படி தெரிந்தும் தெரியாமலும் செய்கின்ற தவறை இறைவன் மட்டுமே முழுமையாக அறிவான் காரணம் அவன் அறியாதது அவனால் அறியமுடியாதது என்று எதுவுமே இல்லை பானையில் அம்மா பண்டத்தை மறைத்து வைத்திருந்ததை அவளுக்கு தெரியாமல் திருடி சாப்பிடும் போது அம்மா பார்த்து விட்டால் தோப்புகரணம் போட்டு தவறை ஒத்துக்கொள்ள வேண்டியது பிள்ளையின் கடமையல்லவா இறைவனும் நமக்கு தாயானவன் அவன் முன்னால் நமது தவறுகளுக்காக தோப்புகரணம் போடுவதும் கன்னத்தில் போட்டுக்கொள்வதும் இயற்கையான வழிபாடாகும்.

Contact Form

Name

Email *

Message *