( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?


சொர்க்கம் என்பது யாருக்கு கிடைக்கும் இது கேள்வி

கடவுள் நம்பிக்கை உடையவன் எவனோ அவனே சொர்கத்திற்கு அனுமதிக்கப்படுவான் இது பதில்

கடவுள் நம்பிக்கை உடையவனுக்கு மட்டும் எதற்காக சொர்க்கம் வழங்க வேண்டும் முதல் கேள்விக்கு விடையாக வந்த கருத்தை ஆராய்ந்த பிறகு பிறந்த இரண்டாவது கேள்வி இது

கடவுளை நம்புபவன் நியாயத்திற்கு பயப்படுவான் தவறுகள் செய்ய அச்சப்படுவான் தன்னை தனது செயலை கடவுள் கேள்வி கேட்பார் அப்போது பதில் சொல்ல முடியாமல் தத்தளிக்க வேண்டிவரும் அதனால் பாவம் செய்ய கூடாது என்று நினைப்பான் அதனாலேயே அவன் சொர்க்கத்தை அடையும் தகுதியை பெற்று விடுகிறான் இது இரண்டாவது கேள்விக்கு வந்த இரண்டாவது பதில்

இந்த பதில் சரியா? கடவுள் நம்பிக்கை உடையவருக்கு மட்டும் தான் சொர்க்கம் கிடைக்குமா? மற்றவர்களுக்கு சொர்க்கமில்லையா? இது பொதுவாக அனைவரின் மனதிலும் எழுந்து நின்று ஆற்பரிக்கும் கேள்வியாகும் இதற்கு மதங்கள் என்ன பதில் சொல்கிறது 


 இந்து மதத்தில் கருடபுராணத்தில் சொர்க்கம் நகரம் என்று ஏராளமான விஷயங்கள் விரிவாக பேசப்படுகிறது ஒரு மனிதன் என்னென்ன தவறுகள் செய்தால் என்னென்ன நகரம் கிடைக்கும் என்னென்ன நன்மைகள் செய்தால் எந்தெந்த சொர்க்கம் கிடைக்கும் என்றெல்லாம் விபரங்கள் விரிந்து கொண்டே போகின்றது மற்ற புராணங்களும் இதிகாசங்களும் பலவித சொர்க்கங்கள் இருப்பதாக தகவல்களை தருகின்றன அவைகளில் சொல்லப்பட்டிருக்கின்ற அனைத்து விதமான கருத்துக்களையும் ஒன்று திரட்டி பார்த்தோமானால் நல்லவனுக்கும் நன்மைகள் செய்தவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்ற பொருள் வருகிறது

நல்லவனுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும் அதை நாம் தடைசெய்ய போவதில்லை இங்கே ஒரு கேள்வி வருகிறது அதாவது நல்லவன் என்பவன் யார் என்பதே அந்த கேள்வி இந்து மதம் அதற்கு பல பதில்களை தருகிறது அவற்றில் முக்கியமானது பக்தியுடையவன் நல்லவன் என்பதே ஆகும் ஆக இங்கேயும் கிடைக்கும் பதில் ஏறக்குறைய கடவுள் நம்பிக்கை உடையவனே சொர்க்கத்தை அடைவான் என்பது தான்

இந்து மதத்தை விட சொர்க்கத்தை பற்றி அதிகமாக பேசுவது இஸ்லாம் மதமும் கிறிஸ்துவ மதமும் ஆகும் இந்து மதம் ஏன் சொர்க்கத்தை பற்றி அதிகமாக கவலைப்படவில்லை என்றால் அது ஒரு ஜீவனின் வாழ்க்கையை சொர்க்க நகரத்தோடு முடிந்து போவதாக சொல்லவில்லை அதையும் தாண்டி ஜீவனின் பயணம் இருக்கிறது என்பதே இந்து மதத்தின் வழிகாட்டுதலாகும்


 இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் சொர்க்கம் என்பது பொன்விலங்கு நரகம் என்பது இரும்பு விலங்கு தங்கம் இரும்பு என்று தரம் வேறுபட்டாலும் சொர்க்கம் நரகமாகிய இரண்டுமே விடுதலையை கெடுக்கும் விலங்குகள் தான் எதுவால் செய்யபட்டால் என்ன விலங்கு விலங்கு தானே எனவே மனிதனது செயல் சொர்க்கத்தை நோக்கியோ நரகத்தை நோக்கியோ இல்லாமல் முத்தியை நோக்கி இருக்கவேண்டும் என்பதே இந்து மதத்தின் ஆதர சுருதி என்பதனால் அது சொர்க்கத்தை பற்றி அதிகம் கவலைப்படவில்லை

ஆனால் மற்ற இரண்டு மதங்கள் இறை ஐக்கியத்தை விட இறுதி தீர்ப்பு நாளில் உயிர்கள் பெரும் தண்டனையும் சன்மானத்தையும் பற்றியே அதிகமாக பேசுகிறது மிக தெளிவாக சொல்வதென்றால் உயிர்களின் இறுதி நோக்கம் கடவுளிடம் சொர்க்கத்தை பெறுவதே என்பதாகும் அதனால் யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று அவர்களிடம் கேட்டால் தான் தெளிவான பதில் கிடைக்கும்

இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கின்றவர்களை நாம் விரைவில் சொர்க்கத்தில் நுழைய செய்வோம் என்கிறது இஸ்லாமிய திருமறை அந்த மறையிலேயே இன்னொரு இடத்தில் அல்லாவுக்கும் அவரது தூதருக்கும் ஒருவர் கட்டுபட்டால் அவரை சொர்க்கத்தில் நுழைய செய்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது வேறு பல கருத்துக்கள் சொல்லபட்டாலும் கூட இஸ்லாம் மதத்தில் மிக தெளிவாக வெளிப்படையாக ஆணித்தரமாக சொல்லும் கருத்து ஈமான் கொண்டவருக்கே அதாவது இறை நம்பிக்கை உடையவருக்கே சொர்க்கம் என்பதாகும்


 இஸ்லாத்தை அடுத்து கிறிஸ்தவத்தின் பைபிள் கருத்துக்களை கருத்து கொண்டு பார்த்ததால் அங்கேயும் தேவனை நம்புகிறவன் எவனோ கர்த்தரிடத்தில் விசுவாசம் காட்டுபவன் எவனோ தேவகுமரான ஏசுவை தனது ரச்சகனாக ஏற்றுக்கொண்டவன் எவனோ அவனுக்கே பரோலோகம் ராஜ்யம் கிடைக்கும் மற்றவர்கள் நரகத்தின் அக்னி மலையில் தள்ளப்படுவார்கள் என்றே சொல்லபட்டிருக்கிறது

இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களிலும் ஒரு மதத்தில் குறைவாகவும் மற்ற இரு மதங்களில் மிக அதிகமாகவும் சொல்லபட்டிருக்கும் கருத்து ஏறக்குறைய ஒன்று தான் அதாவது கடவுளை நம்புவனுக்கு சொர்க்கம் உண்டு என்பது தான் அது அப்படியென்றால் கடவுளை நம்பாதவர்கள் சொர்க்கத்திற்கு போக முடியாதா? போக கூடாதா என்பது நமது கேள்வி நல்லவனாக கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்பது எந்தவகையில் நியாயம்

ஒரு நல்லவர் நாட்டுக்காக உழைப்பவர் நாட்டு மக்களின் நலத்தை தவிர வேறெதையும் சிந்திக்காதவர் கனவில் கூட மற்றவர்களுக்கு துரோகம் செய்யாதவர் ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் இவருக்கு சொர்க்கம் கிடையாதா? கடவுள் நம்பிக்கை இல்லை என்ற ஒரே காரணத்திற்க்காக சொர்க்கத்தை கடவுள் கொடுக்க மறுத்தால் நல்லவனாக வாழ்வதில் அர்த்தமென்ன இருக்கிறது

வேலை தவறாமல் இறைவனை வணங்குவான் மத சடங்குகள் அனைத்தையும் அணு அளவு பிசகாமல் கடைபிடிப்பான் ஆனால் கள்ள சந்தையில் பணம் சம்பாதிப்பான் பெண்களின் மானத்தை கெடுத்து மகிழ்வான் கொலை செய்வதிலும் கொள்ளை அடிப்பதிலும் ஆர்வத்தோ ஈடுபடுவான் இவனுக்கு கடவுள் நம்பிக்கை உடையவன் என்ற இரே காரணத்திற்காக சொர்க்கத்தை கொடுப்பது எந்த வகையில் தர்மம்

புத்தருக்கும் மாகவீரருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது அதற்காக அவர்களுக்கு நரகம் கொடுக்கப்படுமா?ஹிட்லர்க்கும் ஒசாமா பில்லேடனுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு அதற்காக அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கலாமா?

எனவே சொர்க்கம் கிடைபபது கடவுள் நம்புவதில் மட்டுமில்லை நல்லவனாக வாழ்வது மட்டும் சொர்க்கத்திற்கான தகுதி இல்லை ஏனென்றால் நல்லவர்கள் அனைவருமே நன்மையை மட்டும் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது அதனால் தான் கடோபநிஷத் நன்மை செய்தவனுக்கே சொர்க்கம் என்கிறது அதாவது நீ கடவுளை நம்பு நம்பாமல் போ அதை பற்றி கவலை இல்லை நீ நல்லவனாக இரு இல்லாமல் போ அதை பற்றி அக்கறை இல்லை ஆனால் உன் செயல் அனைத்தும் நன்மையாக இருக்கட்டும் அதுமட்டுமே உனக்கு சொர்க்கத்தில் நுழையும் ஒரே தகுதியாகும் ஆம் அது தான் தகுதி.


+ comments + 8 comments

Anonymous
02:31

////தேவகுமரான ஏசுவை தனது ரச்சகனாக ஏற்றுக்கொண்டவன் எவனோ அவனுக்கே பரோலோகம் ராஜ்யம் கிடைக்கும் மற்றவர்கள் நரகத்தின் அக்னி மலையில் தள்ளப்படுவார்கள் என்றே சொல்லபட்டிருக்கிறது//////

ஆகா ஏசுனாதனின் உண்மையான குணத்தை பைபிளிலேயே கூறி விட்டார்கள்.. ஏசுனாதனை ரச்சகனாக ஏற்று கொள்ளாதவர்கள் நரகத்தின் அக்னி மலையில் தள்ளபடுவார்கள் என்றால் ஏசுனாதனின் குணம் ரொம்பவும் கொடூர தன்மையுடையதாக அரக்க குணமாக இருக்கிறது,,கிறுக்கு கிறிஸ்தவர்கள் இதையெல்லாம் மறைத்து ஏசுநாதன் அன்பே வடிவமானவன் என்று ரீல் விடுறானுங்க....

அய்யா இந்த இடம் மிக குழப்பமாக இருக்கிறது

//நல்லவர்கள் அனைவருமே நன்மையை மட்டும் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது//

நன்மையை மட்டுமே செய்பவனை தானே நல்லவன் என்கிறோம்

//உன் செயல் அனைத்தும் நன்மையாக இருக்கட்டும் அதுமட்டுமே உனக்கு சொர்க்கத்தில் நுழையும் ஒரே தகுதியாகும் ஆம் அது தான் தகுதி.//
அப்படியானால் கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ நல்லவனாய் அதாவது எப்போதும் பிறருக்கு நன்மையை செய்தவனாய் இருந்தால் போதும் சொர்க்கத்தில் நுழைய என்றல்லவா புரிந்து கொள்ள முடிகிறது.

அப்புறம் இது என்ன

//நல்லவர்கள் அனைவருமே நன்மையை மட்டும் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது அதனால் தான் கடோபநிஷத் நன்மை செய்தவனுக்கே சொர்க்கம் என்கிறது அதாவது நீ கடவுளை நம்பு நம்பாமல் போ அதை பற்றி கவலை இல்லை நீ நல்லவனாக இரு இல்லாமல் போ அதை பற்றி அக்கறை இல்லை ஆனால் உன் செயல் அனைத்தும் நன்மையாக இருக்கட்டும் அதுமட்டுமே உனக்கு சொர்க்கத்தில் நுழையும் ஒரே தகுதியாகும் ஆம் அது தான் தகுதி.//

ரொம்ப தான் குழம்பிட்டீங்களோ ;)

இஸ்லாத்தில் நீங்கள் சொல்வது போலிருந்தாலும் மேலோட்டமாக பார்த்து விட்டு குறுவது போல் உள்ளது இறை நம்பிக்கை மனிதனுக்கு அவசியம். இஸ்லாத்தில் ஒரு மனிதன் எத்தனை நன்மை செய்திருந்தாலும் மற்றவர்களுக்கு தீங்கு செய்திருந்தால் சொர்க்கம் செல்ல முடியாது அதேபோல் இந்த அகில உலகத்தையும் படைத்த ஒரே இறைவனை நம்பவேண்டும் ,வேறு எதையும் வணங்க கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது, ஒவ்வரு ஆத்மாவும் அது செய்த நன்மை & தீமை களுக்கு குழி வழங்கப்படும் (அது அணு அளவு இருந்தாலும் சரியே )

இஸ்லாத்தில் ஒரு இறைவனை தான் நம்பவேண்டும், நன்மை செய்தவர்கள் நேராக சொர்க்கம் செல்வர்கள், தீமை செய்தவர்கள் தண்டனைக்கு பிறகு சொர்க்கம் செல்லமுடியும், ஒவ்வரு ஆத்மாவும் அதன் செய்த நன்மை தீமை களுக்கு சரியாக அது செய்த நன்மை & தீமை களுக்கு கூலி வழங்கப்படும் (அது அணு அளவு இருந்தாலும் சரியே )

kulandai
18:35

Anonymous Mar 9, 2012 01:01 PM antru www.ujiladevi.blogspot.com il புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா yentra pakkathil, crishthavarkalai athuvum unmaiyin theivamagiya yen yesu natharai patri kuriyirunthathu manavaruththathai alikkirathu.

What is after Death? It is a big question and one has to surrender God to get an answer. God is definitely affectionate to his Devotee and ready to give all kinds of Boons to him including Swarga prapthi. In my opinion he is not bothered about good or bad things. It is only our duty to love God again and again until we realize Him!

Anonymous
23:43

ஹா ஹா ஹா ஹா kulandai உன் கிருஸ்துவ கிறுக்கன்கள் மற்ற மதங்களை பற்றி அசிங்கமாக பேசறப்ப மத்த மதத்துகாரங்களும் இப்படிதானே இருக்கும்....உன் கிருஸ்துவ கிறுக்கனுங்க மற்ற மதங்களை அசிங்கமாக பேசறப்ப சந்தோசம் படும் உனக்கு கிறிஸ்துவன்களை பற்றி சொன்ன மட்டும் உன் மனஸ் நோகுதோ....


Next Post Next Post Home
 
Back to Top