Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஈழம் பெற இந்தியா உதவுமா...?


இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று நினைக்கிறீர்களா?

  ந்திய அரசு இதுவரை தெரிவித்துவரும் சிற்சில கருத்துக்களை வைத்து பார்க்கும் போது இலங்கை தமிழருக்கு ஆதரவாக இந்தியா செயல்பட போவதாக சிறிய அடையாளம் கூட தென்படவில்லை சோனியா காந்தியின் பினாமி அரசாங்கம் இலங்கைக்கு ஆதரவாக நடந்துகொண்டால் காங்கிரஸ் கட்சியின் மீது சிலர் வைத்திருக்கும் அபிமானம் முற்றிலுமாக ஆட்டம்காண ஆரம்பித்துவிடும் இந்த அரசு தனிப்பட்ட விரோதத்தை தூக்கிபிடிக்கும் அரசாக இருக்கிறதே தவிர பொதுநோக்கு கொண்ட அரசாக இல்லை



இலங்கை தமிழர் பிரச்சனையை என்பது அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சனை அதில் இந்தியா தலையிட வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கருதுகிறார்களே?

இலங்கை நாட்டில் ஒரு சிறு குழுக்களிடம் மோதல் நடந்தால் அது உள்நாட்டு பிரச்சனை அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை ஆனால் இலங்கையில் நடந்தது நடப்பது குழு மோதல் அல்ல திட்டமிட்டே அரசாங்கம் ஒரு இனத்திற்கு எதிரான பயங்கரவாத செயலை செய்துவருகிறது இது உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும் இதை கைகட்டி வேடிக்கை பார்ப்பது சர்வேதேச சமுகத்திற்கு தர்மமாக இராது

இலங்கை நாட்டில் தாக்கப்பட்ட மக்கள் இந்தியாவிலும் பல உலக நாடுகளிலும் அகதிகளாக அல்லல்பட்டு வருகிறார்கள் இவர்களது துயரத்தை தீர்க்க சர்வேதேச சமுகத்திற்கு நிச்சயம் கடமை உண்டு தன்நாட்டு மக்களை அகதிகளாக துரத்திவிட்டு இது எங்கள் நாட்டு பிரச்சனை இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று இலங்கை சொல்லி தப்பித்து கொள்ள முடியாது

மேலும் மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கு இலங்கை மக்கள் விஷயத்தில் அதிக அக்கரை வரலாற்று ரீதியாகவே உண்டு ஈழ மக்கள் இலங்கையின் பூர்விக குடிகள் என்றாலும் அவர்கள் இந்தியாவோடு பல நூற்றாண்டுகளாக மொழிவழியிலும் சமய வழியிலும் உறவுமுறை வழியிலும் தொப்புள்கொடி உறவாகவே இருந்துவருகிறார்கள் அவர்களுக்கு ஏற்படும் துயரம் ஒருவகையில் இந்திய மக்களுக்கு ஏற்படும் துயரமாகவே பாரத அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்

மேலும் இந்தியா அயல்நாட்டு விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடாது என்று மத்தியில் ஆளும் மனிதர்கள் சொல்வது எல்லாம் உண்மைக்கு புறம்பான சந்தர்ப்பவாத பேச்சுகளே ஆகும் இலங்கை விவகாரம் தேவையற்ற சில்லறை விவகாரம் அல்ல அது இந்திய பொருளாதாரத்தோடு எல்லை பாதுகாப்போடு சம்மந்தப்பட்ட விவகாரமாகும் இதில் தலையிடவில்லை என்றால் இந்தியாவின் தென்பகுதியின் வருங்காலம் அமைதியாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்

ஒருநாட்டின் உள்விவகாரம் என்பது வேறு அந்த நாட்டிற்குள் நடக்கும் சர்வதேச கவன ஈர்ப்பு விவகாரம் என்பது வேறு 1960 ஆம் வருடம் தென்னாப்பிரிக்க நாட்டில் ஜோகனஸ் பர்க் நகரத்தில் நுப்பது கறுப்பினத்தவர் வெள்ளைக்காரர்களால் சுட்டு கொல்ல பட்டார்கள் சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தான் உலகத்திற்கே அந்த விஷயம் தெரியவந்தது அப்போது இந்திய பிரதமராக இருந்த நேரு இது தென்னாப்பிரிக்கா சம்மந்தப்பட்ட உள்விவகாரம் அதில் நாம் தலையிட கூடாது என்று அமைதியாக இல்லை பிரதமர என்ற வகையில் தனது தனிப்பட்ட கண்டனத்தையும் மக்களவையை கூட்டி நாட்டினுடைய ஒட்டுமொத்த கண்டனத்தையும் தென்னாபிரிக்கா அரசுக்கு தெரிவித்தார்

1970 ஆம் வருடம் கிழக்கு பாக்கிஸ்தானில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு முத்திவாகினி படை உருவானபோது அதற்கு தனது தார்மிக ஆதரவையும் இராணுவ ஒத்துழைப்பையும் கொடுத்து வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமாவதற்கே இந்திரா காந்தி காரணமாக இருந்தார் அது பாக்கிஸ்தானின் உள்விவகாரம் என்று அவர் அமைதியாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் எல்லை சண்டைக்கே நாள்முழுவதும் செலவிட வேண்டிய துர்பாக்கிய நிலை இந்திய இராணுவத்திற்கு ஏற்பட்டிற்கும்

1983 ஆம் வருடம் இலங்கை தமிழரின் பிரச்சனையில் வருங்கால தேச நலனை கவனத்தில் வைத்து இந்திரா அம்மையார் தமிழ் அமைப்புகளுக்கு ஆயுத உதவியும் இராணுவ பயிற்சியும் அளித்தார் இலங்கை இனப்பிரச்சனையை உள்நாட்டு பிரச்சனை என்று திருமதி காந்தி ஒருபோதும் கருதியது இல்லை அது இந்தியாவின் தெற்கு பகுதியின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட மிக முக்கிய பிரச்சனை என்றே அவர் கருதினார் இப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இந்திராகாந்தியை விட புத்திசாலி தலைவர்கள் யாரையும் கொண்டதாக இல்லை எனவே அவர்கள் இந்திராவின் வழியை இலங்கை விஷயத்தில் மேற்கொண்டால் மக்கள் புறக்கணிப்பில் இருந்து தப்பிக்கலாம் இல்லை என்றால் பெருமை மிக்க காங்கிரஸ் கட்சியை சவக்குழியில் தள்ளிய பெருமையை சோனியா பெறுவார்


தமிழ்நாட்டு கட்சிகளில் நடவடிக்கை மத்திய அரசாங்கத்தின் தவறான போக்கை மாற்றி அமைக்கும் என்று நினைக்கிறீர்களா?

மத்திய அரசில் இருபவர்களுக்கு தமிழ்நாட்டு கட்சிகளின் யோக்கியதை மிக நன்றாக தெரியும் பதவி இருக்கும்வரை கருணாநிதிக்கு தமிழர் என்ற இனம் உலகத்தில் இருக்கிறது என்ற நினைப்பே இருக்காது பதவி போனபிறகு தாலியை கண்டவுடன் புருஷன் நினைப்பு வருவது போல தமிழ் இனத்தின் நினைப்பு வரும் இது தென்னிந்தியாவில் மட்டுமல்ல வடஇந்தியாவிலும் ஊரறிந்த ரகசியமாகிவிட்டது எனவே திமுக்காவின் நெருக்கடிக்கு மத்தியரசு பணிந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை இன்னும் சொல்லபோனால் இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு மனித உரிமை மீறல்களுக்கு முதலும் மூலமுமான காரணம் கருணாநிதி என்றே சொல்லலாம்

அன்று அவர் தான் தமிழின தலைவர் என்ற எண்ணத்தோடு மத்திய அரசாங்கத்தை இரும்பு பிடிபிடித்து வளைத்திருந்தால் ஈழ விஷயம் இன்று வேறுவிதமாக அமைந்திருக்கும் ஆனால் அவர் அப்போது தனது குழந்தைகளுக்கு கொள்ளையடிக்கும் வாய்ப்புள்ள பதவிகளை பெறுவதில் அக்கரை காட்டினாரே திவிர தன்னை நம்பிய தமிழனின் அழுகுரலை பற்றி கவலைப்படவே இல்லை முதலை கண்ணீர் வடித்ததை போல ஒன்றரை மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து காந்தியின் அகிம்சை ஆயுதத்தை கேவலபடுத்தினார்

ஈழ மக்களுக்காக பேசிவரும் திருமாவளவன் நெடுமாறன் சீமான் ராமதாஸ் போன்றோர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குமில்லை இவர்கள் பேசும் தமிழ் தேசிய வாதத்தை பெருவாரியான தமிழர்கள் நம்புவதுமில்லை ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவை கதாபாத்திரங்களை போல இவர்களை மக்கள் பாக்கிறார்களே தவிர தனிகரிசனத்தோடு பார்ப்பதில்லை இன்னும் ஒருபடி சொல்லபோனால் இவர்களின் தமிழர் விசுவாசத்தை வியாபார நோக்கமாகத்தான் மக்கள் நினைக்கிறார்கள்

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜனதாவின் பார்வை சரியான கோணத்தில் இப்போது ஈழ மக்களின் மீது திரும்பி இருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயமாகும் கம்யுனிஸ்டுகள் இன்னும் அதிகமாக மக்கள் மத்தியில் தமிழர் பிரச்சனையை கொண்டு சென்றால் பல நன்மைகள் வருங்காலத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு பாரதிய ஜனதாவிற்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லை என்பது உலகறிந்த ரகசியம் அதே நேரம் தேசிய அளவில் ஈழ பிரச்சனையை கொண்டு செல்ல அவர்களால் மட்டுமே முடியும் அவர்கள் இதை தமிழர் பிரச்சனை என்று பாராமல் உலக இந்துக்களின் பிரச்சனை என்று பார்த்தால் கூட தமிழர்களுக்கு நன்மை ஏற்படும்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உள் ஆத்மா ஈழ மக்களுக்கு சாதகமாக இல்லை என்பது யதார்த்தமான உண்மை அரசியலுக்காக மேடை பேச்சில் கைதட்டல் வாங்குவதற்காக வீர வசனங்களை அள்ளிவீசுவதாகவே அறிவாளிகள் நினைக்கிறார்கள் ஆனால் இன்றைய நிலையில் ஈழ மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய அறிய வாய்ப்பு ஜெயலலிதா அவர்களிடமே இருக்கிறது அவர் தனது பழைய எண்ணங்களை கழைந்துவிட்டு தனது அரசியல் ஆசான் எம்ஜியார் போல செயல்பட்டால் வருங்கால ஈழ வரலாறு அவரை போற்றி புகழும் அதற்கு இது தக்கநேரம் இந்திய அரசாங்கத்திற்கு எந்தெந்த வகையில் நெருக்கடி கொடுக்க முடியுமோ அந்தந்த வகையில் கொடுக்க வேண்டும்

ஒட்டுமொத்த தமிழகத்தின் எண்ணத்தை பிரதிபலிப்பதை போல உண்ணாவிரதம் போன்ற அறப்போரட்டங்களை மத்திய அரசுக்கு எதிராக நடத்தி இதையமற்ற மன்மோகன்சிங் அரசை உலுக்கவேண்டும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் உண்மையாகவே தமிழர்கள் மீது அக்கரை கொண்டவர்கள் என்றால் ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு வெளியேறி வீதிக்கு வரவேண்டும் அப்படி நடந்தால் மட்டுமே ஈழ மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்


இன்றைய நிலையில் ஈழ மக்களைப்பற்றிய தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கிறது?

எதார்த்தமான நிலையை சொல்வது என்றால் விடுதலை புலிகளால் தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தியின் படுகொலை நிகழ்த்தபட்டதன் பிறகு இலங்கை தமிழர்களின்பால் இந்திய தமிழர்களுக்கு பாசம் குறைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும் ராஜீவ் படுகொலைக்கு புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் ஆயிரம் காரணங்களையும் சமாதானங்களையும் சொன்னால் கூட அதை யாரும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை தனிதமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் புலிகளை போற்றி வருவதனால் இன்றைய நிலையில் கூட விடுதலை புலிகளை பயங்கரவாதிகளாக பார்க்கும் தமிழக தமிழர்கள் பலர் இருக்கிறார்கள்

ஆனால் இப்போது சேனல்4 ஒளிபரப்பிய கொடுமையான இனப்படுகொலை காட்சிகளை பார்த்தபிறகு பல தமிழர்களின் மனநிலை ஈழமக்களுக்கு ஆதரவாக திரும்பி இருக்கிறது இது நல்ல அறிகுறி என்றே சொல்லவேண்டும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஈழ அமைப்புகள் தமிழர்கள் மத்தியில் செயல்படுமேயானால் பழைய ஈர்ப்பை மீண்டும் பெறலாம் பொதுவாக தமிழக தமிழர்கள் வன்முறைகளை நாடுபவர்கள் அல்ல அதே நேரம் சுதந்திர போராட்டத்திற்கு எதிரானவர்களும் அல்ல இதை மனதில் வைத்து ஈழ பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் பிரிவினை வாதம் பேசும் மனிதர்கள் மத்தியில் இருந்து ஈழ அமைப்புகள் விலகி வெகுஜன தலைவர்களின் உறவுகளை பலப்படுத்தி காரியம் செய்ய வேண்டும்

ஒன்றுமட்டும் சர்வ நிச்சயம் தனி ஈழம் மட்டும் தான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு சரியான தீர்வு என்பதை இந்திய அரசாங்கம் உணரும் வரை இலங்கையில் நிரந்தர முன்னேற்றம் ஏற்படாது இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஈழம் என்பது சாத்தியமே இல்லை இதை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் எல்லோருக்கும் நன்மை உண்டு காலம் கடந்தாவது ஈழ அமைப்புகள் இதை உணரவேண்டும் .

Contact Form

Name

Email *

Message *