( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சிவலிங்கம் காட்டுவது என்ன...?


    டவுள் உண்டா இல்லையா என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா? என்பது மூல பரம்பொருள் என்று அழைக்கப்படும் ஆதி மூல வஸ்துக்கு உருவம் தேவையில்லை அது இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதார இயக்கு சக்தியாக இருப்பதனால் உருவம் என்பது இல்லாமலேயே அதுவால் இயங்க முடியுமென்று இயக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்

இல்லாத ஒன்று இயங்க இயலாது இயங்கும் அனைத்துக்கும் உருவம் வேண்டும் உருவம் இல்லை என்றால் இயக்கத்தை அறிந்துகொள்ள முடியாது அனுபவிக்கவும் முடியாது எனவே அனைத்தையும் இயங்க வைக்கும் ஆதி சக்தியான கடவுள் உருவத்துடனே இருக்கிறார் அவரை உருவாகவே தரிசிக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்


இறைவன் எல்லாம் வல்லவன் அவரால் ஆகாதது என்று உலகில் எதுவும் இல்லை  அப்படி சர்வசக்தி வாய்ந்த கடவுள் உருவம் இல்லாமலும் இருக்கலாம் உருவத்தோடும் இருக்கலாம் அருவுருவாக இருக்கும் பரம்பொருளை தியானிக்க வேண்டியதே ஜீவர்களின் லட்சியம் என்று சிலர் சொல்கிறார்கள் இந்த மூன்று கருத்துக்களும் முடிவே இல்லாமல் உலக முழுவதும் இன்றுவரை விவாதிக்கப்பட்டு வருகிறது

கடவுள் விஷயத்திலும் சரி மற்ற எந்த விஷயத்திலும் சரி அநுபூதி ஒன்றே இறுதி முடிவு என்பது இந்துமதத்தின் மைய கருத்து அதாவது அனுபவத்தால் பெறுகின்ற விடையே இறுதியானது உண்மையானது என்பது இதன் பொருளாகும் அதனாலேயே இறைவனை பற்றி பேசும்போது இந்துமதம் சகுன நிர்குண பிரம்மம் என்று வலியுறுத்தி பேசுகிறது அதாவது அருவுருவான பரம்பொருள் என்பது இதன் ஆதார சுருதியாகும்

அருவுருவான அதாவது உருவம் உடைய உருவம் இல்லாத கடவுளை மனித சிந்தனைய்க்கு எப்படி அடையாள படுத்தி காட்ட முடியுமென்று சிந்தித்த நமது ஞான புருசர்கள் இறைவனின் அருவுரு தன்மையை சிவலிங்கம் மூலம் கண்டறிந்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள் லிங்கம் என்பது அநாதி காலம் தொட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருவதற்கு இந்த அருவுருவ தத்துவமே மூலம் எனலாம்.

அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூல பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும் நிற்குனமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது லிங்கத்தின் பாணபகுதி என்று அழைக்கப்படும் உச்சிபகுதி சிவபாகம் ஆகும் இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும் நடுப்பகுதியான ஆவுடையார் மூலபரம்பொருள் காக்கும் சக்தியாக திகழும் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாகும் கடேசியாக உள்ள அடிப்புறபகுதி சிருஷ்டி என்பது உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம்

நாம் சிவலிங்கத்தை லிங்கம் என்ற ஒரே பெயரால் அழைத்தாலும் அதற்கு பல பெயர்கள் இருக்கிறது அதாவது இறைவன் உயிர்களுக்கு சாநித்தியராய் நின்று அருள்செயும் லிங்கத்தை பரார்த்த லிங்கம் என்றும் தானாக தோன்றியதை சுயம்பு லிங்கம் என்றும் தேவர்கள் உருவாக்கியதை கண லிங்கம் என்றும் பிரம்மன் மற்றும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டதை தைவீக லிங்கம் என்றும் முனிவர்கள் அசுரர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதை ஆரிட லிங்கம் என்றும் மனிதர்கள் செய்ததை மானுட லிங்கம் என்றும் மண் அரிசி வெண்ணை சந்தனம் புஷ்பம் சக்கரை மாவு ஆகியவற்றால் உருவானதை சணிக லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்


சகலாதிகரம்,காசியப சிற்ப சாஸ்திரம் ,கந்தபுராணம், தென் குடி திட்டை புராணம்,சிவபரக்ரமம் ஆகிய பழம்பெரும் நூல்கள் சிவலிங்கத்தின் நான்கு வகைகளை பற்றி பேசுகிறது தாளக்குடை போன்ற வடிவுடைய சத்ரகாரம் கோழிமுட்டை வடிவுடைய குக்குண்டாகாரம் வெள்ளரி பழம் வடிவுடைய திருபுடாகாரம் பாதிநிலா வடிவுடைய அர்த்த சந்திராகாரம் என்று லிங்கத்தின் நான்கு வித வடிவங்களுக்கு பெயர் சூட்டி நமக்கு தெரியபடுத்துகின்றது

இதுதவிர ஆயிரம் முகம் கொண்ட பாணலிங்கம் முதல் ஐந்து முகம் கொண்ட பாணலிங்கம் வரை இருக்கிறது முத்து பவளம் வைடூர்யம் படிகம் மரகதம் நீலம் மாணிக்கம் வைரம் கோமேதகம் ஆகிய ரத்தினங்களிலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் என்று பல சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன சிவலிங்கம் செய்ய பயன்படும் ரத்தினங்கள் குற்றமற்றவைகலாக இருக்க வேண்டும் அதன் அளவு இரண்டு அங்கலம் முதல்கொண்டு ஆறு அங்குலம் வரை இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன

ஆலயங்களில் உள்ள லிங்கங்களை தவிர மேற்சொன்ன பொருட்களில் லிங்க வடிவங்களை செய்து வீட்டில் வைத்து வழிபட்டால் அரச உறவு தீர்க்க ஆயுள் ஆரோக்கிய உடம்பு செல்வ வளர்ச்சி பகைவர் வீழ்ச்சி நன்மக்கள் பேறு சர்வ வசியம் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்

இந்துமத வழிபாடுகள் எனபது தத்துவங்களையும் விஞ்ஞான ரகசியங்களையும் மட்டும் கொண்டது அல்ல சாதாரண மனிதனின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதற்கு கூட இந்து மத வழிபாட்டு முறைகள் தவறுவது இல்லை அதனால் தான் ஆயிரம் வருடங்கள் அந்நிய காட்டுமிராண்டி மதத்தவர்கள் கண்மூடி தனமான தாக்குதல் நடத்தினாலும் இன்றும் புத்திளமையோடு திகழ்கிறது நாளையும் திகழும்

+ comments + 13 comments

ஐயா வணக்கம்,

முஸ்லீம் நண்பர் சிவ லிங்கம் பற்றி ஒரு தகவல் கொடுத்தார், அது சிவ லிங்கத்திஇன் மேற்பகுதி ஆண் குறி என்றும் அடி பகுதி பெண் குறி என்றும் நண்பர் சொன்னார். உங்கள் கருத்து சொல்லவும்.

நன்றி,

Anonymous
12:46

iyya avar ungal manathai kulappa asu than sivan enrum solvargal

Anonymous
18:36

the whole world is revolving around zero and one. zero we call as pujyam,,respectable one is unity. both should be there for all modern technological advances communication etc etc.they may be called vibration and static. we may see that these are nothing but shiva as one and parvathi sakthi as the base, and both of them are in constant dance or vibration.it is said by saint nammaalvar that the world was a very big void..he sued the word pazh,,then the vibation started with a u and m that is om. even bible says in the beginning there was the word.

Information about Sivalingam and the ideology behind it, is exhaustive and inspiring! It is true that Hindu Religion survives even after brutal attack of invaders and foreign religions.

ஐயா வணக்கம்,
இந்துகளில் பலர் கூட இவ்வாறு தவறாக கூறி வருகின்றனர்.மனநல மருத்துவர்(ஷாலினி என நினைக்கிறேன்) ஒருவர் கூட ஒரு மாத இதழில் சிவலிங்கம் ஆண் குறியைப் போன்ற அமைப்பு - இது ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் அமைக்கப் பட்டது என குறிப்பிட்டு இருந்தார்.

ஐயா வணக்கம்,
இந்துக்களில் பலர் கூட இவ்வாறு தவறாக நினைக்கின்றனர்.ஒரு மாத இதழில் மனநல மருத்துவர் ஒருவர் - ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களால், ஆண் குறி சிவலிங்கமாக வடிவமைக்கப் ப்ட்டது என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு சரியான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்,இல்லையெனில் இனி வரும் தலைமுறைகளுக்கு சரியான அர்த்தம் தெரியாமல் போய்விடும்.
நன்றி

06:36

இந்து மத தத்துவங்களை அறியாத மூடர்கள் கூறும் விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

Anonymous
12:25

வணக்கம் ஆணை சிவனாகவும் பெண்ணை சக்தி வடிவமாவும் உனக்குள் இருக்கும் இறைவனான நல்ல எண்ணங்களை வெளிபடுத்தும் வண்ணமாகதான் நெஞ்சுக்கு நேராக வணக்கம் சொல்லும் முறையும் அந்த காலத்தில் இறைவனை படைத்தார்கள் ஒவொரு கோவில்களிலும் தியான மண்டபமும் ஒவொரு மனிதனின் பதிவிற்கு ஏற்ப கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது அஷ்ட யோகா நிலையை அடைய இத்தனைசுற்றுகள் சுற்றினால் இந்திந்த பலனை அடையலாம் என்று சொல்லிவிட்டார்கள் வெறுமனே தியானம் செய் என்று சொன்னால் மனம் ஒருமைபடாது என்றும் திருப்புகழில் தெளிவாக உரைத்துள்ளார்கள்.உங்கள் நல்ல கருத்துகளோடு இதையும் சேர்த்து மக்களுக்கு தெளிவான விளக்கிதெளிவு படுத்துவது உங்களை போன்ற ஆன்மிகவாதிகளின் தலையாய கடமைகளில் ஒன்று நன்றி mythili

13:18

The elliptical shape of Shivalingam is the ideal shape for storing the life energy called Prana.
When rishis and yogies does the pradishta ( like Agasthya did all over Tamil nadu) they provide their life energy to Lingam. Usually after 12 years the energy recedes and hence the need for Kumbabhishekam.
Lingam and base is also a representation of dual nature . Male and female or Ida and Pingala or Ying and Yang. This is the basic of life . No need to worry about the sex. Without which you and I will not be here to discuss this basic aspect life in the internet!

Anonymous
14:11

வணக்கம், உங்களின் இந்த பதிவில் வடமொழி பெயர்கள்தான் தெரிகிறது, லிங்க வடிவ விளக்கம் இல்லை, இன்னும் ஆழமான கருத்துக்கள் சிவலிங்கத்திற்கு இருக்கிறது இயன்றால் அதை தேடி பதிவிடவும்....

Anonymous
11:59

மூடநம்பிக்கை நம்மை இன்னும் ஆட்டி படைப்பது வேதனை.

சிவனின் சரி பாதி பார்வதி ஆவாள். அதாவது (அர்த்தநாரீஸ்வரர்).
அவ்வாறு சிவ லிங்கத்திலும் சரி பாதி உமையாள் இருப்பது போல் தோன்றுகிறது.
எவ்வாறு என்றால் சிவ லிங்கத்தில் மேல்(சிரசு) இருந்து கீழ்(பாதம்) வரை சரி பாதியாக பார்த்தால் வலப் பாகம் சிவனாகவும், இடப் பாகம் சக்தியாகவும் தோன்றுகிறது.
அப்படியென்றால் சிவ லிங்கத்தை வணங்கினால் சிவனையும், சக்தியையும் வணங்கியதற்கு ஒப்பாகும். அல்லவா!

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.
தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.
சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து வெளிவர முடியாமல் திண்டாடி கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால் நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல் செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில் நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.


Next Post Next Post Home
 
Back to Top