( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தோள் கொடுக்க வாருங்கள்...!     ன்புள்ள உஜிலாதேவி வாசகர்கள் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் உங்களோடு தனிப்பட்ட ரீதியில் பேசி வெகுநாட்களாகிவிட்டது அதற்கு காரணம் இல்லாமல் இல்லை நமது உஜிலாதேவி இணையதளம் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் நமது வாசகர்கள் தொடர்ந்து கொடுத்துவரும் ஆதரவும் அவர்களில் பலர் எனது பொதுசேவையில் பங்குபெறுவதற்கு ஆர்வம் காட்டிவருவதும் எனக்குள் ஒரு புது சிந்தனையை உதிக்க செய்தது அதன் விளைவாகவே சிறிதுகாலம் அவகாசம் எடுத்துக்கொண்டு உங்கள் முன்னால் இந்த சித்திரை திருநாளில் நல்ல சங்கதி ஒன்று சொல்ல வந்திருக்கிறேன்.

எல்லா மனிதர்களும் பிறக்கிறார்கள் வாழ்கிறார்கள் பிள்ளைகுட்டிகளை சமுதாயத்திற்கு கொடுத்துவிட்டு ஒருநாள் மறைந்து போகிறார்கள் அதிகபட்சமாக தாங்கள் வாழ்ந்தோம் என்பதற்கு அவர்கள் வைத்துவிட்டு போகும் அடையாளம் சில குழந்தைகளே இப்படிப்பட்ட வாழ்க்கை மனிதனால் மட்டும்தான் வாழப்படுகிறதா மற்ற மிருகங்களும் பறவைகளும் கூட இப்படிதானே வாழ்கிறது மனிதன் என்பவன் இறைவன் படைப்பில் மகத்தான ஒரு சிருஷ்டி படைக்கப்பட்ட உயிர்களில் அவனே மேன்மையானவன் என்றால் இத்தகைய சாதாரண வாழ்க்கையை வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது

நாம் மறைந்த பிறகும் நமது உடல் மண்ணோடு மண்ணாக மக்கி சாம்பலான பிறகும் இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் அவனை போன்ற வாழ்வை பெறுவது அபூர்வத்திலும் அபூர்வம் என்று தலைமுறைகள் சொல்லவேண்டும் சரித்திரத்தில் ஒரு சிறிய மூலையிலாவது நமது செயல் குறிப்பிடபட்டிருக்க வேண்டும் அப்படி வாழ்வது தான் சரியான வாழ்வு அந்த வாழ்வை வாழ்ந்து பார்க்கவே பிறந்திருக்கிறேன் எதாவது சமூகத்திற்கு என்னால் ஆன நற்காரியங்களை செய்யவேண்டும் என்று என்னிடம் நிறையப்பேர் கேட்டார்கள்

இந்த உலகம் பொருள் மயமாகிவிட்டது பணம் இருப்பவன் மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது தான தர்மம் செய்து புண்ணியத்தை தேடவேண்டும் என்றால் கூட பணமில்லாமல் ஆகவே ஆகாது இரவு பகலாக உழைத்து அடிப்படை தேவைகளை தான் பூர்த்தி செய்யமுடிகிறதே தவிர சமூக தொண்டாற்ற கனவில் கூட நினைக்க முடியவில்லை என்று சொல்லி மனம் நொந்து கொண்டவர்களும் நிறைய பேர் உண்டு

இந்த இரு சிந்தனைகளையும் அறிந்த பிறகு அதாவது சமூகத்திற்கு தொண்டும் செய்யவேண்டும் அதே நேரம் நம்மால் முடிந்ததாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லவர்கள் மத்தியில் அதிகமாக இருப்பதை அறிந்த பிறகு ஒரு புதிய வழி தோன்றியது அதை புதிய வழி என்று சொல்வதைவிட நிறையப்பேர் கடைப்பிடித்து பல வெற்றிகளை கண்ட வழி என்றே சொல்லலாம் ஒருசமயம் நான் ஊர்கூடி தேர் இழுப்போம் என்ற பதிவின் வெளியிட்டிருந்த ஆசையின் செயல்வடிவமே இந்த வழி என்றும் சொல்லலாம்

நிறைய மனிதர்கள் மனதில் மற்றவர்களுக்கு அதாவது முடியாதவர்களுக்கு எதாவது தொண்டு செய்யவேண்டும் உதவி புரிய வேண்டும் என்று ஆவல் இருக்கிறது ஆனால் அதை நம்மால் செய்ய முடியுமா? செய்தால் தொடர முடியுமா? என்ற தயக்கமும் இருக்கிறது. அந்த தயக்கத்தை மாற்ற நான் விரும்பினேன் ஒரு புதிய அறக்கட்டளையை துவங்கி அதில் இத்தகைய ஆர்வம் உடைய அனைவரையும் ஒருகிணைத்து கிராம புறங்களில் சிறிய அளவில் தொடர்ந்து சேவை ஆற்றுவது தான் இந்த அறக்கட்டளையின் மிக முக்கிய நோக்கம்

இந்த எண்ணத்தை பலரிடம் வெளியிட்டேன் அனைவருமே வரவேற்றார்கள் தங்களால் இயன்ற உதவி ஒத்தாசைகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்கள் எனக்கு ஒரு புதிய உற்சாகம் பிறந்துவிட்டது என்றே சொல்லவேண்டும் நமது வாசகர் ஆடிட்டர் கிருபாகரன் சென்னை அவர்களிடம் அறக்கட்டளைக்கான வரையறைகளை தயாரித்து தரும்படியும் கேட்டுக்கொண்டேன் அவர் ஒரே வாரத்தில் மிக நேர்த்தியான பைலாவை தயாரித்து கொடுத்தும் விட்டார் அறக்கட்டளைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் நினைவாக ஸ்ரீ குரு மிஷன் என்ற அழகான பெயரும் இடப்பட்டு அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதிவும் செய்யப்பட்டு விட்டது

வாய் மூலமாகவே தகவலை அறிந்த பலர் இதில் உறுப்பினராக சேர ஆர்வம் தெரிவித்தார்கள் அதே நேரம் அறக்கட்டளையின் சேவை பணிகளுக்கு ஒரு நிரந்தர நிதியை ஏற்படுத்த நல்ல ஆலோசனை ஒன்றையும் வழங்கினார்கள் அதாவது இதில் உறுப்பினர்களாக சேர்பவர்கள் வருடத்திற்கு 1000 ரூபாய் சந்தா செலுத்தவேண்டும் என்றும் விருப்ப பட்டவர்கள் மாதாமாதம் தங்களால் இயன்ற தொகையை நன்கொடையாக கொடுக்கலாம் என்றும் சொன்னார்கள் எனக்கும் அது சரியாகப்பட்டது

உதவி செய்யவேண்டும் என்று நினைப்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது சேவை புரிய பணம் வேண்டும் என்றால் அதை பத்து பேரிடம் பகிர்ந்து கேட்டு சேவை செய்வது தான் சரியான சேவை என்றும் தோன்றியது இந்த காலத்தில் வருடம் ஆயிரம் ரூபாய் ஒரு நல்ல காரியத்துக்காக கொடுப்பது சிரமம் அல்ல என்பது எல்லோரும் அறிந்ததாகும் இந்த உறுப்பினர்கள் தருகின்ற சந்தா தொகையை வைத்து கல்வி மருத்துவம் தொழில் உதவி மற்றும் பலவிதமான சேவைகளை மக்களுக்கு நிறைவாகவே செய்யலாம் என்ற எதார்த்தத்தை உணர்ந்து அவர்களின் ஆலோசனையை உடனடியாக ஏற்றுக்கொண்டேன் அதை சில அன்பர்களிடமும் தெரிவித்தேன்

அதற்கு நல்ல பலன் கிடைத்தது என்றே சொல்லவேண்டும் நமது உஜிலாதேவி இணையதளத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அறக்கட்டளையின் கெளரவ உறுப்பினர்களாக 19 பேர் சேர்ந்துவிட்டார்கள் அதுமட்டுமல்ல கோவையை சேர்ந்த இராமநாராயணன் என்ற அன்பர் தனது தாயாரின் பிறந்த தின விழாவில் 108 தம்பதியனருக்கு ஆடை தானம் வழங்குங்கள் என்று ரூபாய் 20,000 நன்கொடையாக கொடுத்தும் விட்டார் அந்த விழா 15/4/2012 அன்று விழுப்புரம் மாவட்டம் வடகரைதாழனூர் என்ற கிராமத்தில் நடைபெற இருக்கிறது

நமது வாசகர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத நினைவு கூறத்தக்க கொண்டாட வேண்டிய எத்தனையோ நிகழ்வுகள் இருக்கும் அந்த ஒவ்வொரு நிகழ்வு நேரத்திலும் யாருக்காவது தக்க உதவி செய்தால் ஆத்ம திருப்தி ஏற்படும் என்று அவர்கள் நினைக்கலாம் ஆனால் அந்த நினைவை செயல்படுத்த வழிவகை தெரியாமல் இருக்கலாம் அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது நமது குரு மிஷன் அறக்கட்டளையின் சமூக பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடையை தந்தார்கள் என்றால் அவர்கள் பெயரிலேயே அந்த சேவையை நாம் வழங்கலாம் ஒரு வேளை கையில் பணமில்லை சில பொருள் இருக்கிறது அந்த பொருளை இல்லாதவர்களுக்கு கொடுத்து ஒத்தாசை செய்யலாம் என்று சிலர் விரும்பலாம் அவர்கள் கூட அறக்கட்டளைக்கு அப்பொருட்களை கொடுத்தால் தக்கவர்களுக்கு கொடுத்து பலர் பயன்படும் படி செய்யலாம்

இதுதவிர இலவச கல்வி வகுப்புகள் தொழில் பயிற்சிகள் நடத்துவதற்கும் மரபு சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதற்கும் இயற்க்கை வளத்தை பாதுகாப்பதற்கும் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு புகலிட இல்லம் நடத்துவதற்கும் நமது அறக்கட்டளை விரும்புகிறது அதற்க்கான வசதி வாய்ப்புகள் நமக்கு ஏற்படும் போது இறைவன் அருளால் உங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்போடும் அது நடைபெறும் என்று நான் நம்புகிறேன் இன்று நாம் விதைத்திருப்பது சிறிய விதை தான் நாளை இது மிகப்பெரிய மரமாக விழுதுகள் விட்டு வளரும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு

இன்றைய காலட்டத்தில் ஒரு நோக்கத்தை சொல்லி நன்கொடை வாங்கிவிட்டு அதை வேறு காரியங்களுக்கு பயன்படுத்துவது சர்வ சாதரணமாக நடைபெறுகிறது இதனாலையே நன்கொடை வழங்க வேண்டும் பொது சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனிதர்கள் பலர் ஒதுங்கி ஓரமாக போய்விடுகிறார்கள் இந்த நிலையை மனதில் வைத்து நமது அறக்கட்டளை எக்காலத்திலும் தனது கணக்கு வழக்குகளை திறந்த புத்தகமாக யார்வேண்டும் என்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் பார்த்து தெரிந்து கொள்ளும் வண்ணம் ஒவ்வொரு நாளின் வரவு செலவு பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிக்கவும் முடிவு செய்திருக்கிறேன் காரணம் ஒரு நிறுவனம் வளர்வதும் தேய்வதும் அது கடைபிடிக்கும் நேர்மையில் இருக்கிறது அதுவும் குறிப்பாக தொண்டு நிறுவனங்களுக்கு நேர்மை என்பது உயிர் மூச்சி என்பது என் கருத்து

நமது குரு மிஷனின் நிரவாகிகள் யார்? உறுப்பினர்கள் யார்? நன்கொடையாளர்கள் யார்? ஒரு நாளில் நன்கொடையாக வந்த பணம் மற்றும் பொருட்கள் எவ்வளவு அறக்கட்டளையின் சார்பில் உதவி பெற்றவர்கள் யார்? என்ன உதவி என்பவைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஸ்ரீ குரு மிஷன் என்ற பெயரில் இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான தொழில்நுட்ப வேலைகள் நடந்துவருகின்றன அதில் எல்லா விபரங்களையும் யார் வேண்டுமானாலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் அது மட்டுமல்ல நன்கொடை வழங்குவதற்கான வங்கி கணக்கு முகவரியும் அங்கே கொடுக்கப்படும் வாசகர்கள் இது சம்மந்தமான தக்க ஆலோசனைகள் எதுவேண்டுமென்றாலும் தெரிவிக்கலாம் உடனடியான உபயோகத்திற்கு ஏற்ற ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள அறக்கட்டளை எப்போதுமே தயாராக இருக்கும்

அன்பார்ந்த வாசர்களை நான் பணிவோடு வேண்டுவது என்னவென்றால் பல்வேறு சமூகபணிகளுக்கான இந்த அறக்கட்டளையின் தொண்டில் உங்களையும் இணைத்து கொள்ளுங்கள் நீங்களும் உறுப்பினராகி உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் உறுப்பினாக்குங்கள் உங்களால் முடிந்த நன்கொடையை அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் தாரளமாக கொடுத்து உதவி செய்யுங்கள்

மிக முக்கியமாக சமூகத்திற்கு ஏற்ற வேறு சேவைகள் எதாவது இருந்தாலும் உங்கள் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் அதை தயங்காமல் சொல்லுங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து அந்த நற்காரியத்தை செய்து முடிப்போம் நம் சேவையால் பயனடைபவர்கள் விழுப்புர மாவட்டத்தை சுற்றிதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் நிச்சயம் கிடையாது உங்கள் ஊரில் உங்கள் பகுதியில் உதவி தேவைப்படும் எத்தனையோ ஏழைகள் இருக்கலாம் அவர்களுக்கும் நம்மால் இயன்ற தக்க உதவிகளை செய்வோம் அதற்கு உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நடக்கும்

இனி அவ்வோபோது நமது ஸ்ரீ குரு மிஷன் பணி நிமித்தமாக உங்களை சந்தித்து பேச வருவேன் உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை உடனுக்குடன் பகிந்து கொள்வோம் உரையாடுவோம் நமது பணிக்கு சர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீமன் நாராயணன் எப்போதுமே துணை செய்வான் துணை நிற்பான் தோளோடு தோள் நின்று ஒத்துளைப்பான் இறை சித்தமின்றி எதுவம் நடக்காது என்பது என் அனுபவம் மட்டுமல்ல உங்கள் அனுபவமும் அப்படிதான் என்பதை நாமறிவோம்.+ comments + 4 comments

நல்லா யோசனை குருஜி மேலும் உங்கள் தொண்டு வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

--

P Kumaresh
13:19

மகத்தான சேவை. இந்த சேவையில் நானும் பங்குகொள்ள விருப்பப்படுகிறேன்

மகத்தான சேவை. இந்த சேவையில் நானும் பங்குகொள்ள விருப்பப்படுகிறேன்

Anonymous
12:19

vanakkam guruji krishnamoorthi tiruvannamalai 9362871300 iam also join in this charity


Next Post Next Post Home
 
Back to Top