( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஒரு இனிய உதயம்...!     டகரை தாழனூர் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமம் மிக அருகாமையில் உள்ள திருமளைபட்டு என்ற குக்கிராமத்தையும் இணைத்து ஒரே பஞ்சாயத்தாக செயல்பட்டு வருகிறது இருந்தாலும் இரண்டு கிராமத்தையும் சேர்த்தால் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுவது மிக கடினம்.

கிராம மக்களின் ஜீவாதார தொழில் விவசாயமும் அதை சார்ந்த கூலி வேலையும் தான் திருமலைபட்டில் மட்டும் அதிகப்படியாக பசு வளர்த்தலும் பால் வியாபாரமும் நடைபெறுகிறது பொதுவாக அனைத்து இந்திய கிராமங்களை  போலவே இங்கும் வறுமையும் வேலையின்மையும் தான் முக்கிய பிரச்சனை இருந்தாலும் மக்கள் பொதுவாக சந்தோசமாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள் மற்ற கிராமங்களை ஒப்பிடும் போது இங்கு சண்டை சச்சரவுகள் மிக குறைவு பலதரபட்ட ஜாதியை சேர்ந்த மக்கள் வாழ்ந்தாலும் எல்லோரும் அமைதியோடும் இணக்கத்தோடும் வாழ்கிறார்கள்.


நமது ஸ்ரீ குரு மிஷன் துவக்கப்பட்டு முதல் சேவை பணியை இந்த கிராமத்தில் துவங்க வேண்டுமென்று தீர்மானித்ததற்கு அந்த மக்களின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் காரணம் என்றாலும் அந்த கிராமத்தை சேர்ந்த நேரு என்ற இளைஞர் நம்மிடம் எங்கள் ஊரில் மிகவும் வறுமையில் வாடும் பலர் இருக்கிறார்கள் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் என்று பல முறை கேட்டு கொண்டதே மிக முக்கிய காரணமாகும்.

இளைஞர் நேரு இத்தகைய வேண்டுகோளை நம்மிடம் வைப்பதற்கும் கோவையை சேர்ந்த நண்பர் ராமநாராயணன் தனது தாயாரின் உடல்நல முன்னேற்றத்திற்க்காக தானம் வழங்க வேண்டும் என்று சொல்வதற்கும் நேரம் சரியாக இருந்தது. உடனடியாக இப்படி வறிய தம்பதினருக்கு வஸ்திர தானம் வழங்கலாமா? அதற்க்கான செலவை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்று நாராயணனிடம் கேட்டோம் மறுபேச்சே அவர் பேசவில்லை உடனே ஒத்துக்கொண்டார் பெற்றவர்களை பாரமாக கருதும் இந்த காலத்தில் பெற்ற தாய்க்காக தானதர்மம் செய்யும் ராமநாரயணனின் மனப்பான்மையை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது இத்தகைய சத்புத்திரனை பெற்ற அவரது தாயார் ஸ்ரீ மதி ராஜம் வெங்கட்ரமணன் நிச்சயம் கொடுத்து வைத்தவர் அவருடைய உடல் நலம் வெகு விரைவில் முன்னேற்றம் அடைய பூரண குணமாக திருமகளின் நாயகனான ஸ்ரீமன் நாராயணனை மனதார பிரத்தனை செய்கிறோம்.


வஸ்த்ர தானம் வழங்கும் விழாவும் இந்து சமய விழிப்புணர்வு விழாவும் ஒரே நேரத்தில் வடகரை தாழனுரில் 15/04/2012 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு ஊர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் துவங்கியது தெருமுழுவதும் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு வெளிச்சமாக இருந்தது சாமியானா பந்தல் போட்டு எளிய முறையில் விழா மேடை அமைக்கபட்டிருந்தது. அதிசயத்திலும் அதிசயமாக விழா முடியும் வரை மின்சாரம் இருந்தது.முதலில் மாரியம்மன் கோவிலில் விஷேச பூஜை செய்யப்பட்டு சுவாமிக்கு அபிசேக ஆதரனைகள் நடைபெற்றன.

விழாவிற்கு வருகைதந்த ஊர் பெரியவர்களையும் பொதுமக்களையும் வரவேற்றார் நமது ஸ்ரீ குரு மிஷனின் விழா ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ மா.முருகன் ஊர் நாட்டாண்மை காரர்களான எம்.பரமட்சி, கே.சண்முகம், ல.காசிநாதன், வி.தர்மலிங்கம், போன்றோர்கள் விழாவிற்கு முன்னிலை வகித்தார்கள் விழாவின் நோக்கத்தை மிக விரிவாக விவரித்து பேசினார் அருணை பொறியல் கல்லூரியின் பேராசிரியர் ஆர்.வி.வெங்கட்ரமணன் விழாவிற்கு தலைமை ஏற்று சிறப்பித்தார் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீ மதி சரசு ரங்கநாதன் அவர்கள்.


கே.நேரு,கே கணேசன், நா. சுபாஸ் போன்றோர்கள் வாழ்த்தி பேசினார்கள் திருக்கோவிலூர் தமிழ்சங்கத்தை சேர்ந்த புலவர் பெண்ணை வளவனும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க மாநில துணைத்தலைவர் கவிமாமணி சி.உதியனும் சிறப்புரையாற்றினார்கள். விழாவின் மகுடம் போல ஏழை எளிய மக்களுக்கு வஸ்திர தானம் வழங்கி ஆசி உரை வழங்கினார் நமது குருஜி.

குருஜி தனது உரையில் தற்காலத்தில் இந்து மதத்திற்கு ஏற்பட்டு வரும் பின்னடைவுகளையும் பிரச்சனைகளையும் பட்டியலிட்டு காண்பித்து அதை நீக்குவதற்கு கிராமப்புற மக்களின் விழிப்புணர்வு மட்டுமே தக்க நிவாரணமாக அமையும் என்று பேசினார் மேலும் அவர் மனிதனாக பிறக்கும் போது வெறும் கையேடு பிறக்கிறோம் வாழ்ந்து முடித்து போகும் போதும் வெறும் கையோடே போகிறோம் இடைப்பட்ட வாழ்க்கையில் நான் என்ற அகந்தையோடு வாழ தெரியாமல் வாழ்ந்து நம்மையும் கெடுத்து மற்றவர்களையும் கெடுத்து வாழ்ந்து முடிகிறோம் இத்தகைய அற்பமான வாழ்க்கை மனித ஆத்மாவை படுகுழியில் தள்ளிவிடும்.

நற்செயல், நற்சொல், நற்சிந்தனை மட்டுமே ஒரு மனிதனை இறைவனிடம் கொண்டு சேர்க்க கூடியது தவம் மனித வாழ்வில் தனிப்பட்ட உயர்வை தருவது போல் தானம் சமூக உயர்வை தரும் எனவே நம்மை நல்வழியில் நடத்தி கொள்ள தானத்தை முக்கிய காரணமாக கொண்டால் நாமும் வாழ்வோம் சமூகமும் வாழும் நம் சனாதன தர்மமும் என்றும் நினைத்து உயர்வடையும் எனறு பேசினார்


சிறிய எளிமையான விழா என்றாலும் கிராம மக்கள் முக்கால்வாசி பேர் மைதானத்தில் கூடி இருந்தார்கள். ஒவ்வொருவர் பேசுவதையும் அவர்கள் அமைதியாக உன்னிப்பாக கவனித்த விதம் மிக சிறப்பாக இருந்தது விழாவிற்கு வந்திருந்தவர்களில் குழந்தைகள் சிறுவர்களை தவிர அனைவருமே அமைதி பாதுகாத்தார்கள். இந்த விழாவில் மிக முக்கியமான ஒரு கோரிக்கை குருஜியிடம் வைக்கப்பட்டது. வஸ்த்ர தானம் பெற்ற 108 பேரில் ஒருவர் எழுமலை என்பவர் இவருக்கு பிறந்தது முதல் கண்பார்வை தெரியாது. ரயிலில் பாட்டு பாடி பிச்சை எடுத்து தான் வாழ்க்கையை ஓட்டுகிறார். தனக்கு தொழில் செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுவதாகவும் குருஜியிடம் முறையிட்டார் குருஜியும் ஆகட்டும் பார்க்கலாம். என்று தனது வழக்கமான பதிலை அவருக்கு சொன்னார்.

அந்த கண் தெரியாத மனிதருக்கு எதாவது சிறிய அளவில் தொழிலை ஏற்படுத்தி கொடுத்தால் அவரும் அவரது வாழ்க்கை துணையும் தனக்கும் சமூகத்திற்கும் பயனளிக்க கூடியவர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை குருஜி அவரிடம் கொடுத்த வாக்குமூலத்தை விரைவில் நிறைவேற்ற ஆசைபடுகிறார். ஆசையை நிறைவேற்றி வைப்பது எல்லாம்வல்ல இறைவன் கையில் தான் இருக்கிறது.

விழா முடிவில் ஸ்ரீ குரு மிஷன் பொருளாளரும் குருஜியின் பிரதம சீடருமான டாக்டர்.வி.வி.சந்தானம் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உஜிலாதேவி இணையதளத்தின் கணி பொறியாளரான ஸ்ரீ சதீஷ் குமார் புருஷோத்தமன் மற்றும் பி.சந்தோஷ் குமார், பாலு போன்றோர்கள் செய்திருந்தார்கள் இறைவன் அருளால் ஸ்ரீ குரு மிஷனின் சேவை பணிகள் இனிதே துவங்கியது.

---இஞ்ஜினியர் கே.கோவிந்தசாமி .செயலாளர் ஸ்ரீ குரு மிஷன்

+ comments + 4 comments

நல்வாழ்த்துகளுடன், நாராயணனின் அசிர்வதாதுடன் , சேவை பணிகள் நன்கு வளரும் ...

இராமநாராயணன்
20:24

அன்புள்ள குருஜி, மற்றும் திரு. சந்தானம் அவர்கள், மற்றும் திரு. சதீஷ் குமார் அவர்களுக்கு,
தங்கள் இன்றைய பதிவை (ஒர் இனிய உதயம்) படித்தேன்.
தங்கள் இந்து சமய விழிப்புணர்வு விழா, வஸ்த்ர தானம் யாவும்
மக்களின் கணிசமான பங்கேற்புடன் த்ருப்தியுடன்
நிறைவுற்றது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
பதிவையும் படங்களையும் என் தாயாருக்கும் காட்டி மகிழ்ந்தேன்.
ஸ்ரீ குரு மிஷன் சேவைகள் தொடரவும், ஓங்கி வளரவும்,
அவற்றில் நாங்கள் தொடர்ந்து பங்கேற்கவும் இறைவனை
வேண்டுகிறேன்.
நன்றி. வணக்கம்.

இப்படிக்கு,
இராமநாராயணன்.

Everybody shall be taught to sing Sivapuranam in Padmasanam daily.Particularly in houses all members of a family should sit together and chant Mahamanthiram

Anonymous
18:53

Andha parvai attra periyavaruku thozhil thodanga naan udhava virumbugiren. Avar thozil matrum mudhaleedu vivarangalai enaku anupa vendugiren. dhayavu koorndhu vibarangalai in min -anjal mugavariku anupum badi ketu kolgiren. ggindia83@yahoo.com


Next Post Next Post Home
 
Back to Top