( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கல்யாணம் செய்து பார்...
   யா நான் சிறிய வயது முதற்கொண்டே மிகவும் ஒல்லியான உடம்பு உடையவன் கன்னங்கள் ஒட்டி கண்கள் குழிவிழுந்து பார்ப்பதற்கு அழகாக இருக்க மாட்டேன் என்னை பார்த்தவர்கள் சட்டேன்று நீ போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானவனா? என்று கேட்கும் அளவிற்கு என் தோற்றம் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணை விரும்பினேன் அவளும் என் முகலட்சனத்தை காரணம் காட்டி என் காதலை ஏற்க்க மறுத்துவிட்டாள் மனமிட்டு பழக கூட நல்ல நண்பர்கள் கிடையாது நானாக வலிய சென்று நட்பை ஏற்படுத்தி கொள்ள முயற்சித்தாலும் அனைவரும் என்னை விட்டு விலகியே போவார்கள் 

இத்தனைக்கும் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. மது புகையிலை என்பதை நான் இதுவரை தொட்டு கூட பார்த்தது இல்லை படித்து முடித்து வேலைக்கு போன பிறகும் கூட வேலை செய்யும் மற்றவர்களின் புறக்கணிப்பை இன்னும் நான் சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன். அலுவலகத்தில் மட்டுமல்ல வீட்டிலும் கூட நான் தனிமையாக இருப்பது போல உணர்கிறேன். இப்படியே சென்றால் என் வாழ்க்கை என்னாகும் என்று எனக்கு பயமாக இருக்கிறது. அழகாக பிறக்காதது என் தவறா? அழகு இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நண்பர்களும் பெறோர்களும் என்னை வெறுத்து ஒதுக்குவது முறையா? சில நேரம் தற்கொலை செய்து கொள்ளலாமா? என்று தோன்றுகிறது நான் எதிர்காலத்தில் என்ன ஆவேன் எப்படி இருப்பேன் என்பதை தயவு செய்து விளக்கவும் மன ஆறுதலுக்காக மட்டும் பதில் சொல்லாமல் இது இப்படி தான் என்று அழுத்தம் திருத்தமாக பதிலை தாருங்கள் காரணம் உங்களிடமிருந்து நான் எதிர்பார்ப்பது வார்த்தைகளால் ஆன பதிலை அல்ல உண்மைகளால் ஆன வாழ்க்கையை தயவு செய்து அதை தரவும்.
பிரகதீஸ்வரன், பாண்டிச்சேரி 


      ம்பி அழகாக பிறக்கவில்லை என்பது குற்றமான செயல் அல்ல நான் அழகு இல்லாதவன் அதனால் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். ஒதுக்குகிறார்கள் என்று நீ நினைக்கிறாய் பாரு அது தான் குற்றம் பொதுவாக இந்த உலகத்தில் நிறைய பேர் அழகை பார்த்து பழகுவதில்லை இன்னும் சொல்ல போனால் அழகை ஒரு பொருட்டாக கருதுவதும் இல்லை.

தாயில்லாத குழந்தைகளை அனுதாபத்தோடு பார்ப்பது தான் உலகத்தின் நடைமுறை அனால் அதே குழந்தைகள் தவறுகள் செய்யும் போது மற்ற குழந்தைகளை கண்டிப்பது போலவே இவைகளையும் கண்டிப்போம் ஆனால் அந்த குழந்தைகள் என்ன நினைத்து கொள்ளும் தெரியுமா? எனக்கு அம்மா இல்லை என்னை பாதுகாக்க யாருமில்லை அதனால் தான் இவர்கள் என்னை கடிந்து பேசுகிறார்கள் என்று நினைக்கும் இதுமட்டுமல்ல தங்களது வாழ்க்கையில் பல்வேறு பட்ட பிரச்சனைகள் எழும்போதெல்லாம் அம்மா இல்லாததனால் தான் குறைகள் வருகிறது என்று பேசுவார்கள் அதே போல் தான் இருக்கிறது. உன் கதையும்.

நீ காதலித்த பெண் உன்னை காதலிக்க வில்லை என்பதை மட்டும் உன் அழகு தடையாக இருந்தது என்று ஏற்றுக்கொள்ளலாம் மற்றப்படி நண்பர்கள் நட்பை காட்டவில்லை சக பணியாளர்கள் கேலி பேசுகிறார்கள் என்று நீ சொல்வதில் முழு உண்மை இருப்பதாக நான் ஏற்க்க முடியாது. நான் மட்டுமென்ன யாருமே ஏற்றுகொள்ள மாட்டார்கள் இதை எதை வைத்து சொல்கிறேன் என்றால் பெற்றோர்களும் உன்னை நேசிக்கவில்லை என்று சொல்கிறாயே அதை வைத்தே சொல்கிறேன்.

காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்வார்கள் அழகாக இல்லாத குழந்தைகள் எல்லாம் பெற்றோர்களால் ஒதுக்கப்படும் என்றால் ஊர் முழுவதும் அனாதைகளின் உடல்கள் தான் நிறைந்து கிடக்கும் எந்த தாயும் தகப்பனும் பெற்ற பிள்ளையை ஒதுக்க மாட்டார்கள் தனது குழந்தை நொண்டியாக, முடமாக, குருடாக, ஏன் கொலைகாரனாக இருந்தால் கூட அவனை ஒதுக்க பெற்ற மனம் இடம் தராது. ஆனால் நீ அவர்களும் ஒதுக்குவதாக சொல்வது நீ அவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதை காட்டுகிறதே தவிர வேறொன்றும் இல்லை.

அழகு என்பது உடம்பில் மட்டுமே இருக்கிறது என்று நினைப்பவன் முழு முட்டாள் அழகு அறிவில் இருக்கிறது. கருணையில் இருக்கிறது. திறமையில் இருக்கிறது. இவைகள் தான் அழியாத அழகே தவிர சரீர அழகு என்பது நீர்க்குமிழி போல மறைந்து போகக்கூடியது. அழகுக்கு மட்டுமே அங்கிகாரம் கிடைக்கும் என்றால் உனக்கு எப்படி வேலை கிடைத்திருக்கும். முதலாளி சம்பளம் கொடுப்பான் எனவே இந்த இடத்தில் உன் முக அழகு பார்க்கப்படவில்லை அறிவின் அழகே பார்க்க பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்.

ஒரு பெண் உன்னை காதலிக்காவிட்டால் உலகமா அழிந்து விட போகிறது. நாம் காதலிப்பவர்கள் அனைவரும் நம்மை காதலிக்க வேண்டுமென்றால் அது என்ன நியாயம் அவளுக்கு பிடிக்கவில்லை அதனால் வேண்டாமென்று சொல்லிவிட்டாள் அதில் என்ன தவறு இருக்கிறது. அறியாத பெண் என்பதனால் இந்த மூஞ்சிக்கு காதல் ஒரு கேடா? என்று பேசி இருப்பாள் அதை மனதில் வைத்து கொண்டு காலமுழுவதும் தாழ்வு மனப்பான்மையில் கடத்துகிறாயே? அறிவுடையவன் செய்யும் செயலா இது. 

நல்ல உத்தியோகத்தில் இருக்கிறாய் உனக்கு பெண் தர பல பேர் போட்டி போடுவார்கள் உன் மனதில் இருக்கும் குப்பை மூட்டைகளை அப்புறபடுத்தி விட்டு அம்மாவிடம் போய் கல்யாணம் பண்ணிவை என்று சொல் திருமணத்திற்கு பிறகு உன் வாழக்கையை உற்று பார் அங்கு வரும் கணக்கிட முடியாத பிரச்சனைகளும் இன்பங்களும் இதுவரை உன் மனதில் உள்ள தீர்மானத்தை பார்த்து கேலி பேசுவது நன்றாக புரியும் 

குழந்தைக்கு எல்,கே,ஜியில் அட்மிசன் வாங்குவதற்கும் கரண்ட் பில் கட்டுவதற்கும் சமையல் காஸ் தீர்ந்து விட்டால் மற்ற எரிபொருள்களுக்கு அலைவதற்கும் புது வீடு கட்ட நல்ல மேஸ்திரிகளை தேடுவதற்கும் ஓட வேண்டிய நிர்பந்தம் வரும் போது ஐயோ நான் அழகாக இல்லையே என்ற சிந்தனை வரவே வராது காரணம் இப்போது நீ சோம்பேறியாக இருக்கிறாய் சோம்பேறியின் மூளை சாத்தானின் பட்டறை என்பார்கள் பல வேலைகளை இழுத்து போட்டு செய்யும் போது இத்தகைய அர்த்த மற்ற சிந்தனைகள் தானாக மறைந்து போகும் முட்டாள் தனமாக வாழ்க்கையை வீணடிக்காதே கல்யாணம் செய்து பார்...


+ comments + 5 comments

மிகவும் அழகான தெளிவான பதில் குருஜி, தாங்கள் கூறியது நூற்றுக்குநூறு உண்மை.

நான் கல்லூரியில் படிக்கும் போது என்னை விட அழகாக யாரும் வரமாட்டார்கள், தலை முடி முதல் , கால்களில் இருக்கும் ஷூ வரை பார்த்து பார்த்து போட்டு வருவேன், கல்லூரி முடிந்து ஒரு வேலைக்கு சென்றேன் வருகிற கொஞ்ச சம்பளத்திலும் விட்டிற்கு குடுப்பதை விட என் தேவைக்கு என்று நிறைய வாங்குவேன்.

பிறகு எனது நட்சரிபால் நான் கூறிய படி சொந்த தொழில் வீட்டில் வைத்து கொடுத்தார்கள், தொழில் ஆரம்ப காலத்தில் சந்தோசமாக எப்பவும் போல இருந்தேன். அனால் போக போக சொந்த தொழில் வைத்தால் எப்படி பட்ட பிரச்சனைகள் எல்லாம் சந்திக்க வேண்டும் என்பதெல்லாம் தெரிய ஆரபித்ததும் அன்றோடு எனது விளையாட்டு புத்தி என்னை விட்டு போய்விட்டது, மிகவும் கஷ்ட பட்டேன், லாபமும் நஷ்டமும் எண்ணையை சேரும், நான் கொடுக்கும் காசு மட்டும் தான் விட்டிற்கு வருமானம் என்ற நிலை வந்தது, இந்த ஆண்டோடு நான்கு வருடங்கள் ஆயிட்ட்று, இந்த நான்கு வருடத்தில் முற்றிலுமாக என்னை கவனிக்க நான் மறந்தேன், எனக்கென்று எதுவும் இதுவரை வாங்கினது இல்லை, கூடுதலாக ஒரு பத்து ரூபாய் வந்தாலும் இதையும் சேர்த்து விட்டிற்கு கொடுப்போம் என்று தான் தோன்றுகிறது தவிர நமக்கு இதை வாங்குவோம் அதை வாங்குவோம் என்று தோன்றியது இல்லை.

குருஜியின் பதிவுகள் ஒவ்வொன்றும் அவரவர் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறது.

நல்ல பதிவு அய்யா

மிக நல்ல பதில். திரு.பிரகதீஸ்வரன் இதை சரியாகப் புரிந்து கொண்டால், இனி எல்லாம் நலமே அவர் வாழ்க்கையில்!

ஆமோதிக்கிறேன்.

Anonymous
17:18

Good one.


Next Post Next Post Home
 
Back to Top