( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தபால் தீட்சை கொடுக்கபடுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அச்சம் என்பதே மரணமாகும் !    ன்பு மிகுந்த குருஜி அவர்களுக்கு வணக்கம் என் சொந்த ஊர் மதுரை இப்போது நான் வேலை காரணமாக சேலத்தில் வசிக்கிறேன் எனக்கு திருமணமாகி மூன்று வருடத்திலேயே கணவர் இறந்துவிட்டார் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரு மகனை தவிர வேறு யாரும் கிடையாது. என் மகனோ இப்போது தான் பத்தாம் வகுப்பு போகிறான் தன்னை சுயமாக காப்பாற்றிகொள்ளும் வயது அவனுக்கு இன்னும் வரவில்லை ஆனால் அவன் படிப்பிலும் குணத்திலும் மிக சிறந்தவன்

நான் ஆசிரியரையாக வேலை செய்கிறேன் வாங்கும் சம்பளம் எனக்கும் என் பிள்ளைக்கும் போதுமானது அதை வைத்து அவனை நிறை மனிதனாக வளர்த்துவிட என்னால் முடியும் ஆயினும் கடவுள் என்னை சோதிப்பதை விடவில்லை என்று நினைக்கிறேன் ஒரு வருடமாகவே என் உடல்நிலை சரியில்லை உதிரபெருக்கு நிறைய இருக்கிறது. மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்தால் எதாவது கொடிய நோய் உனக்கு இருக்கிறது என்று சொல்லிவிடுவார்களோ என்று பயப்படுகிறேன் சாவை பற்றி நான் கவலை படவில்லை நான் செத்து விட்டால் என் மகனை காப்பாற்ற யாருமில்லையே என்று தான் வருத்தபடுகிறேன்.

ஐயா இத்தோடு என் மகன் ஜாதகத்தையும் என் ஜாதகத்தையும் இணைத்துள்ளேன் இவற்றை நன்றாக ஆய்வு செய்து எனக்கு வந்திருப்பது என்ன நோயாக இருக்கும் என்றும் என் வாழ்நாள் இன்னும் எவ்வளவு நாள் உள்ளது என்றும் தெளிவு படுத்த வேண்டுகிறேன் நீங்கள் சொல்லும் பதிலிலிருந்து நான் சில முடிவுகளை தெளிவாக எடுக்க இயலும் என்று நினைக்கிறேன் எனவே எதுவாக இருந்தாலும் மறைக்காமல் தெளிவு படுத்தி உதவி செய்யும் படி வேண்டுகிறேன்.
மைதிலி சிவராமன்,சேலம் 

    திருமதி மைதிலி சிவராமன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும் கணவனை இழந்த பிறகு வாழ்க்கையே முடிந்து விட்டது என்று பல பெண்கள் மூலையில் உட்கார்ந்து விடுவார்கள் நீங்கள் அவர்களை போன்று இல்லாமல் துணிச்சலோடு தனி ஒரு பெண்ணாக நின்று மகனை வளர்த்து ஆளாக்க பாடுபடுகிறீர்களே அதற்காகவே இறைவன் உங்களை தனிப்பட்ட பாசத்தோடு அருள் செய்வான்

வாழ்க்கை சோதனைகளை தைரியத்தோடு எதிர்கொண்டு போராடி வெற்றி பெற முயற்சிக்கும் நீங்கள் நோயை கண்டு பயந்து கிடப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒன்றை இறைவன் நமக்கு கொடுக்க நினைத்து விட்டால் கொடுத்தே தீருவான் அதை வாங்க மாட்டேன் என்று மறுக்கும் உரிமை அல்லது தகுதி மனிதனுக்கு இதுவரை இல்லை இனியும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

அந்த கொடிய நோய் வந்துவிடுமோ என்று பயப்படும் நீங்கள் வந்தால்தான் என்ன செய்யமுடியும் தப்பித்து ஓடுவதற்கு நம் சரிரீரம் என்ன அந்நிய பொருளா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எப்போதுமே ஒரு நோய் மனிதனை கொல்வதை விட அந்த நோயை பற்றிய பயம் அதிகமாக கொல்லும் என்பது தான் எதார்த்த நிலை.

எனக்கு தெரிந்த மருத்துவர்களில் பலர் ஒரு நோயாளி என்னை இந்த வியாதி எதுவும் செய்யாது எப்படியும் அதை வென்று விடுவேன் என்ற நம்பிக்கையோடு சிகிச்சை பெற்றால் பூரண குணமடைகிறான் ஐயோ இனி அவ்வளவு தான் படுக்கையும் மரணமும் மட்டுமே நமக்கு புகலிடம் கதி மோட்சமே கிடையாது. என்று நினைக்க துவங்கி விட்டால் சாதாரன நோய் கூட அவன் உயிரை குடித்துவிடும் என்று சொல்கிறார்கள் ஆகவே எந்த நிலையிலும் மன தைரியத்தை கைவிட்டு விடாதீர்கள் காரணம் அச்சம் என்பதே மரணமாகும்.

உங்கள் ஜாதகத்தை தெளிவாக ஆராய்ந்து பார்த்தேன் அதில் சுக்கிரன் மிகவும் கெட்டு போயிருக்கிறான் அப்படி கெட்டு போன சுக்கிரன் ரோகஸ்தானமான ஆறாவது வீட்டை வேறு பார்க்கிறான் பொதுவாக கெட்டு போன சுக்கிரன் கன்னம், முகம், கருப்பை கருமுட்டை விந்து போன்றவைகளை பாதிப்படைய செய்துவிடுவான். வேறு சில கிரகங்களையும் கணக்கிடும் போது உங்களுக்கு வந்திருக்கும் நோய் நீங்கள் பயப்படும் நோயென்றே உறுதியாக சொல்லலாம்.

இப்படி நான் சொல்லி விட்டதனால் எல்லாமே போய்விட்டது என்று நினைக்காதீர்கள் உங்கள் மகன் ஜாதகப்படி தாயாருக்கு இறுதி காரியம் செய்யும் கிரக நிலை அவனுக்கு இப்போது இல்லை அதனாலும் உங்களது மாறக தசை வருவதற்கு இன்னும் பதினாறு ஆண்டுகள் இருப்பதாலும் உங்களுக்கு மரணம் என்பது இப்போது இல்லை இந்த நோயிலிருந்து மிக சுலபமாக நீங்கள் விடுபெற்று விடலாம் கவலை படாதீர்கள்

மேலும் சுக்கிரனின் பாதிப்பால் கெட்டு போன கற்பபையை ஆகாச கருடன், சீந்தில் கொடி போன்ற மூலிகைகள் மிக விரைவில் குணபடுத்தி விடும் மேலும் உங்களுக்கு வந்திருக்கும் கர்ப்பை நோயை சென்னையில் உள்ள சித்தவைத்தியர் சிவானந்தம் என்பவர் சில மாத சிகிட்சையிலேயே முழுமையாக அறுவை சிகிச்சை எதுவுமில்லாமல் குணபடுத்தி விடுகிறார். காரணம் அவரிடம் சித்த மருத்துவத்தில் நல்ல திறமை இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல சித்தர்களின் நேரடி அருளும் அவருகிருக்கிறது. அவரை ஒருமுறை பாருங்கள் கவலையே வேண்டாம் தீர்க்க ஆயுளோடு வாழ்விர்கள் அவரின் தொலைபேசி எண்   +91-9940619207 இது தான் இதில் தொடர்பு கொண்டு அவர் குறிப்பிடும் நேரத்தில் செல்லுங்கள் நோயை வெல்லுங்கள்

+ comments + 3 comments

Anonymous
17:09

ur realy great guruji..

Guruji,Best homeopathy/acupunture treatment available with me.I am near bangalore.There are somany acupunture/divine healers in Salem also.If Mrs.Mythili intrested ,i can arrange to meet Dr.V.Shanthakumar,acupunturist/divine healer in salem.His cell No 8940872499/9944181569 drbaskar/bangalore 09341966927

Anonymous
20:27

உங்கள் சேவை பாராட்டுக்குரியது. இறை அருளால் இந்த பெண்மணியின் துயரம் நீங்க பிரார்த்திப்போம்.


Next Post Next Post Home
 
Back to Top