( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வேலிருக்க வினையில்லை...!

இந்து மத வரலாற்று தொடர் 28

    னது தகப்பனார் தனது இளமை காலம் முதலே இலங்கையில் வாழ்ந்தவர் கொழும்பு நகரில் தான் அவர் ஆரம்பத்தில் வியாபாரம் செய்தார் இதனால் அவருக்கு ஈழதமிழர்கள் பலர் நண்பர்கள் அந்த தமிழர்களோடு ஏற்பட்ட உறவாலோ அல்லது இயற்கையாகவே அவரிடம் இருந்த தமில்பற்றாலோ சுத்தமான தெளிவான அச்சாரம் பிசகாத வார்த்தைகளையே பயன்படுத்தி பேச வேண்டும் எழுத வேண்டும். என்று வலியுறுத்துவார் நான் எனது ஆரம்ப காலத்தில் மலையாள பகுதியில் வாழ்ந்ததனால் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சரியாக வராது இன்றும் கூட அப்படி தான் என் உச்சரிப்பு இருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஆனாலும் நான் தெளிவாக தமிழில் பேச எனது தந்தையார் சிபாரிசு செய்தது அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழின் முத்தை தரு என்ற பாடலைதான்.

இந்த பாடலை மிக வேகமாக வாய்விட்டு சொல்லும் போது தெளிவான உச்சரிப்பு நமக்கு இயற்கையாக வந்துவிடுகிறது. காரணம் அந்த பாடலில் அருணகிரிநாதர் பயன்படுத்தி இருக்கும் மிக கடினமான வார்த்தைகள் சந்த வேகம் என்று சொல்லலாம் ஆனால் எனக்கு அவைகள் மட்டும் தான் காரணம் என்று தோன்றவில்லை அவற்றையும் தாண்டி முருகனது திருவருள் தமிழ் மொழியின் பால் அதிகமாக உள்ளது குறிப்பாக அருணகிரி நாதரின் திருப்புகழில் முருகனின் அருள்வெள்ளம் மிக அதிகமாகவே பாய்ந்தோடுகிறது. அதனாலேயே அந்த பாடலை சொன்னவுடன் தடித்து போன நாக்குகள் கூட தெளிவான வார்த்தைகளை பேசுகிறது என்பேன் காரணம் திருபுகழ் முருகனை பாடுகிறது. முருகன் தமிழை உலகுக்கு தந்தவன் அதனால் தான்கொடுத்த தமிழை வாழவைக்க பாடலை சொன்னவுடன் தெளிவான உச்சரிப்பை பக்தர்களுக்கு தருகிறான் என்று சொல்வேன்


முருகன் தமிழர்களின் தெய்வம் இதில் ஐயமில்லை அதற்காக முருகன் மட்டுமே ஆதிகால தமிழர்களால் வணங்கப்பட்டான் என்று சொன்னால் அதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. காரணம் தொன்மைக்கால தமிழ்நாட்டில் கண்ணனும் அவன் அண்ணனுமான பனைகுடியோன் என்ற பலராமனும் வணங்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே திருமாலை போலவே முருகனும் தமிழ் கடவுள் என்று கூறினால் அதை ஒத்துகொள்ள யாருக்கும் தயக்கம் வராது. திருமுருகாற்று படையிலும் பரிபாடலிலும் தன்நீகர் இல்லாத பாட்டுடை தலைவனாக பாடப்படும் திருமுருகன் குறுஞ்சி நிலத்து கடவுளாவான். இந்த குறுஞ்சி நில கடவுளான முருகனே அகத்தியருக்கு முதல்முதலில் தமிழ் ஒலியையும் அதன் இலக்கணத்தையும் தெளிவு படுத்தி அகத்தியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலை கொடுத்தான்.

தமிழ் நூலை மட்டும் கொடுத்தவன் அல்ல முருகன் பரம்பொருளான சிவபெருமானுக்கு பிரணவ பொருளை அதாவது ஓம் என்ற பிரணவ நாத வடிவிற்கு தமிழிலேயே உபதேசம் செய்தவன் சுவாமி நாதனான எம்பெருமான். இதனை தான் மிக அழகாக தமது திருப்புகழில் அருணகிரிநாதர் மயக்கும் வார்த்தைகளை போட்டு பாடுகிறார்.
கொற்றைச் சடையார்க்கு ஒற்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழாற் பகர்வோனே

என்று தகப்பன் சுவாமியான கதையை தெளிவுபடுத்துகிறார். மதுரை மாநகரில் முதற்சங்கமிருந்த ஆதி தமிழகத்தில் குமரனே நேரில் வந்து தமிழாய்ந்த அழகை நக்கீரரும் இறையனார் களவியலுரை என்ற நூலில் தெளிவாக குறிப்பிடுகிறார். இதையே எளிமைபடுத்தி குமரகுருபர சுவாமிகள் சங்க தமிழின் தலைமை புலவா என்று ஆறுமுகனை பாராட்டுகிறார்.


சரவண பொய்கையில் பிறந்த சண்முகனை நாம் சிவகுமாரனாக அறிவோம். சக்தி மைந்தனாகவும் வணங்குவோம். வள்ளி தேவயானையின் நாயகனாகவும் போற்றுவோம் சூரபத்மனின் உடல்கிழித்த வீரனாகவும் பாதம் பணிவோம். ஆனால் இவைகளாக மட்டும் முருகன் தமிழ் புலவர்களுக்கு தெரியவில்லை கையில் வேலும் மயிலும் கொண்ட அந்த நாயகன் தமிழாகவே தெரிந்தான் ஆம் தமிழில் ஒவ்வொரு உறுப்பும் திருமுருகனின் திவ்விய தேகமாகவே தமிழ் கவிஞர்களுக்கு தெரிந்தது. புலவர் புராணம் என்ற அறிய நூலை தமிழுக்கு தந்த தண்டபாணி அடிகள் முருகனை
கண்நிகர் மெய்யும் சென்னிக்
கணம்உறழ் இனத்தின் கூறும்
திண்ணிய புயங்க ளேபோல்
திகழ்தரும் உயிரும் வேறொன்
றேண்ணிடற் கரிய தாகும்
எஃகமும் இயலில் காட்டும்
புண்ணிய முருகன் செய்ய
பொற்பதம் போற்றி வாழ்வோம்

என்று பாடுகிறார். இந்த பாடலை மேலோட்டமாக பார்க்கும் போது தண்டபாணி அடிகள் என்ன சொல்கிறார் என்று நமக்கு அவ்வளவு விரைவில் விளங்காது சற்றேனும் தமிழ் இலக்கண அறிவு நமக்கிருந்தால் அதை கொண்டு இந்த பாடலின் பொருளை அறிய முயற்சி செய்தால் அடிகளாரின் தமிழ் புலமை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும் அவர் தமிழ் மொழியில் வல்லினம் மெல்லினம் இடையினம் என்று வழங்கபடுகிற மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் முருகனின் அருள் விழிகளாகவும். அகரமுதலிய உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் அவனது அழகிய பன்னிரு புஜங்களாகவும் தனிநிலை எனப்படும் ஒரே ஒரு ஆயுத எழுத்து முருக பெருமானின் திருக்கரத்தில் இருக்கின்ற ஞான வேலாகவும் இருக்கிறது என்று சொல்கிறார். எனவே தமிழ் என்றால் முருகன் முருகன் என்றால் தமிழ் என்பது நம்மை போன்ற சாதாரண ஜீவன்களுக்கு கூட எளிதில் விளங்கி விடுகிறது.ஒரு சிறிய குழந்தை முருகனை கூவி அழைத்தால் அவன் பாலமுருகனாக பாலசுப்பிரமணியனாக வருவான் இளைஞன் ஒருவன் அவனை அழைத்தால் சுப்ரமணினாக வருவான் சதா சர்வகாலமும் கலைகளையே தனது உயிர் மூச்சாக கொண்டு வாழும் கலைஞர்கள் தங்கள் துயரம் போக்க முருகனை அழைத்தால் அவன் ஆறுமுகனாக வருவான் நாட்டை காக்க எல்லையில் கண்ணிமிக்காமல் காவல் நிக்கிறானே ராணுவ வீரன் அவன் கூட முருக பெருமானை வரவேண்டி அழைத்தால் தேவ சேனாதிபதியாக அவன் வந்து நிற்பான் மந்திரம் வேண்டும் மந்திரத்தால் தனது மதி மயக்கம் தீர வேண்டும் என்று ஆசைபடும் உபாசகன் அழைத்தால் சுவாமிநாதனாகவும் வருவான் இல்லறம் வேண்டாம் துறவறமே தூய வாழ்வு என்று கடுதவம் செய்யும் ஞானிகள் அழைத்தால் அவன் தண்டாயுதபாணியாக வருவான். பக்தி பரவசத்தால் யார் எப்படி அழைத்தாலும் அழைத்தவர் குரலுக்கு வந்து காவல் செய்வதே சிவ குமாரனின் கருணை நிலையாகும்.

இப்படி அழைத்தவர் குரலுக்கு பல வடிவங்களை தாங்கி வரும் முருகன் எப்படியெல்லாம் திருவுருவம் கொண்டுள்ளான் என்பதை குமார தந்திரம் தணிகை புராணம் போன்ற புனித நூல்கள் தெளிவாக விவரிக்கின்றன. ஞான சக்திதரன், கந்தசாமி, தேவசேனாதிபதி, சுப்பிரமணியன், களிற்றூர்திப்பெருமான், சரவணபவன், கார்த்திகேயன், குமரன், ஆறுமுகன், தாரகாந்தர், சேனாதிபதி, பிரம்மசாந்தன், வள்ளிகல்யாண சுந்திரன், பாலசுப்ரமணியன், கிரவுஞ்ச பேதனர், சிகிவாகனர், என்று பதினாறு திருநாமங்களை சொல்லி பதினாறு வடிவங்களையும் நமக்கு அந்த நூல்கள் காட்டுகிறது.


முருகன் தமிழ்வடிவம் மட்டுமல்ல அவன் ஞான வடிவம், அறிவு வடிவம், அன்பு வடிவம் அத்தகைய முருகனின் திருவுருவத்தில் இருக்கும் ஒவ்வொரு கருவிக்கும் கூட தனிதனி தத்துவங்களுண்டு வேல்பிடித்த முருகனை வேலன் என்று நாம் வழிபடுகிறோம் முருகனை முருகனாக உருவகபடுத்தி வணக்குவதற்கு முன்பு ஆதிகால தமிழ் மக்கள் வேலை மட்டுமே குறியீடாக கொண்டு வழிபாடு செய்திருக்கிறார்கள். வேல் என்பது வெற்றியின் அடையாளம் இன்று கூட திருப்பரங்குன்றத்தில் அபிசேக ஆதாரனை வேலுக்கு மட்டுமே செய்யபடுகிறது. திருமுருகனின் திருநாமங்கள் பலவாக இருந்தாலும் கதிர்வேல், வடிவேல், ஞானவேல், வஜ்ரவேல், சிங்காரவேல், குழந்தைவேல், வீரவேல், வெற்றிவேல் என்ற வேல்தாங்கிய பெயர்களே பெருமிதமாக தமிழ்மக்களால் துதிக்கபடுகிறது. அதற்கு சரியான காரணமும் உண்டு

வேல் பார்பதற்கு எப்படி இருக்கும் கீழ்பகுதி விரிந்தும் மேல் பகுதி கூர்மையாகவும் இருக்கும். விரிந்த கீழ்பகுதி மனிதனுக்கு இருக்க வேண்டிய பரந்த அறிவை காட்டுகிறது. ஒரு மனிதன் பல துறையிலும் அறிவு பெறவேண்டும். தெளிவு பெறவேண்டும், நுணுக்கம் பெறவேண்டும், நிபுணத்துவம் பெறவேண்டும் இத்தனையும் பெற்ற பிறகு அனுபவம் என்பது கனிந்து கனிந்து கூர்மையான ஞானம் பிறக்கிறது. அந்த ஞானமே வேலின் மேல் பகுதியே நமக்கு காட்டுகிறது. ஞானமானது கூர்மையாக இருந்தால் அது மன மாசுகளை கழைந்து இறைவனின் பாதார விந்தங்களில் மனித ஆத்மாக்களை சரணாகதி அடைய வைக்கிறது.


+ comments + 3 comments

தமில்பற்றாலோ சுத்தமான தெளிவான அச்சாரம் பிசகாத வார்த்தைகளையே பயன்படுத்தி பேச வேண்டும் எழுத வேண்டும்.

உழவன்
20:53

ஒரு சிறிய குழந்தை முருகனை கூவி அழைத்தால் அவன் பாலமுருகனாக பாலசுப்பிரமணியனாக வருவான் இளைஞன் ஒருவன் அவனை அழைத்தால் சுப்ரமணினாக வருவான் சதா சர்வகாலமும் கலைகளையே தனது உயிர் மூச்சாக கொண்டு வாழும் கலைஞர்கள் தங்கள் துயரம் போக்க முருகனை அழைத்தால் அவன் ஆறுமுகனாக வருவான் நாட்டை காக்க எல்லையில் கண்ணிமிக்காமல் காவல் நிக்கிறானே ராணுவ வீரன் அவன் கூட முருக பெருமானை வரவேண்டி அழைத்தால் தேவ சேனாதிபதியாக அவன் வந்து நிற்பான்

இப்படி பட்ட முருகன், தமிழீலத்தில் 40,000 தமிழ் மக்களை குண்டு போட்டு கொல்லும்போது வரவில்லையே ஏன்?

Anonymous
08:46

மனிதர்களின் ஐம்புலன்கள்தான் காரணம்.இதுதான் மாயை. இதை வைத்துத்தான் ஆண்டவன் உலகத்தை இயக்குகிறான்.மக்களுக்கு அறிவைக்கொடுத்து ஆடவிட்டு சிரித்துக்கொண்டே இருக்கிறான். ஐம்புலன்களை அடக்கிப்பாருங்கள் உண்மையை உணர்வீர்கள். தயவுசெய்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இந்த தகவல் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


Next Post Next Post Home
 
Back to Top