Store
  Store
  Store
  Store
  Store
  Store

தானத்தில் சிறந்தது எது?


  • தானத்தில் சிறந்தது எது?

மனோகரன்,கும்பகோணம்



    நிறையப்பேர் சொல்வார்கள் அன்னதானம் தான் மிகசிரந்தது என்று காரணம் நீங்கள் ஒருவனுக்கு பொன்னை, பொருளை வாரி கொடுத்தாலும் இன்னும் கொஞ்சமிருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான் மேலோங்கும் போதும் என்ற மனம் வராது ஆனால் சாப்பாடு போடும் போது வயிறு நிறைந்தவுடன் பகாசூரனாக இருந்தால் கூட போதுமென்று எழுந்துவிடுவான். எனவே அன்னதானமே சிறந்தது என்பது அவர்களுடைய வாதம்.

நான் அதை தவறு என்று சொல்லவில்லை பசித்தவனுக்கு தான் உணவின் அருமை தெரியும் அதற்காக ஒருவனுக்கு உணவு மட்டுமே வழங்கி கொண்டிருந்தால் அவன் முழு சோம்பேறியாகி விவரீதமான காரியங்களை செய்ய துவங்கி விடுவான். அதனால் அன்னதானம் சிறந்தது என்றாலும் ஒரு கட்டுக்குள் இருக்கும் வரை தான் சிறந்ததாக இருக்கிறது.

கண்தானம் ரத்த தானம் உடல் உறுப்பு தானம் என்று எத்தனையோ தானங்கள் உண்டு அவைகள் எல்லாமே சிறந்தவைகளே அதில் மாற்று கருத்து என்பது கிடையாது, ஆனாலும் இவைகளை விட சிறந்த தானம் என்னை பொறுத்தவரை கல்வி தானம் என்றே சொல்லுவேன்

ஒரு மனிதன் பெற்றிருக்கும் செல்வங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்து விடலாம் அல்லது எதாவது ஒரு சூழலில் பறிகொடுத்தும் விடலாம் ஆனால் அவனிடமுள்ள அறிவை யாரும் திருடவும் முடியாது. அவனாகவே இழக்கவும் முடியாது. மனிதனுக்கு அறிவை தருவது கல்வி இருட்டை விளக்க வெளிச்சம் ஒன்றே அருமருந்து என்பது போல் அறியாமையை விலக்க கல்வி ஒன்றே பரம ஒளஷதம். அதனாலையே மகாகவி பாரதி கூட அன்னசத்திரம் கட்டுவதை விட ஆலையங்கள் எழுப்புவதை விட ஏழை ஒருவனுக்கு கல்வி அளிப்பதே சிறந்தது என்று சொன்னார்.

உங்களால் முடிந்த அளவு படிப்பவனுக்கு உதவி செய்யுங்கள் பொருளாக உதவ முடியவில்லை என்றாலும் படிப்பவனை கெடுக்காமல் ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகளை சொல்லுங்கள் அவை கூட மிகசிறந்த உதவியாகும். ஒருமுறை நான் பாடசாலை ஒன்றிற்கு மாணவர்களுக்கு பரிசளிக்க சென்றிருந்தேன் அப்போது தோற்று போன மாணவன் ஒருவனை அருகில் அழைத்து கவலைபடாதே உனக்குள் வெற்றி பெறுவதற்கு எல்லா சக்தியும் இருக்கிறது தொடர்ந்து முயற்சி செய் என்றேன். அதன் பிறகு அவனை நான் மறந்தே விட்டேன் பத்து வருடம் கழித்து ஒரு பொதுகூட்டத்தில் என்னை கண்ட அவன் ஓடோடி வந்து இப்போது நான் ஆசிரியர் பயிற்சி முடித்து வேலையில் இருக்கிறேன் நீங்கள் சொன்ன ஆறுதலே எனக்கு சக்தி கொடுத்தது என்றான். அதனால் தான் சொல்கிறேன் தானத்தில் சிறந்தது கல்வி தானம் அதனினும் சிறந்தது ஊக்க தானம் இதை செய்ய காசுபணம் தேவையில்லை மனமிருந்தாலே போதும்.

Contact Form

Name

Email *

Message *