( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஆடிடும் மானிட பதரே...!


ங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து 
         இரண்டு உயிர்கள் இணைந்து,
சங்கமம் ஆன சடுதியில் இந்த
         சரீரம் வந்து விழுந்தது!
அங்கம் தூளியில் ஆடி களித்து
         ஆயிரம் முத்தம் பெற்று,
சிங்கம் என்றும் சிறுமலர் என்றும்
         சீர்மிகு கொஞ்சல் வாங்கி,

பாதம் மண்ணில் பதிந்து நடக்க
        பாசம் நிலவை காட்ட,
சாதம் பிசைந்து அம்மா ஊட்ட
        சரித்திரம் ஐயா சொல்ல,
மாதம் வருடம் உருண்டு செல்ல
        மலரும் வாலிப பருவம்!
காதல் பெண்ணை தேடி நெஞ்சம்
       கனலாய் நின்று எரியும்!

திருமணம் முடிய குழந்தை பிறக்க
       தினமொரு ஆசை பெருக,
கருணை அன்பு கனிவு பாசம்
       கானல் நீராய் மறைய,
வறுமை நோய்கள் வாட்டி வதைக்க
       மகிழ்ச்சி மறைந்து போக,
தருணம் பார்த்து காலன் அழைப்பான்
       தவிர்க்க நினைத்து தவிப்போம்!


மாடி வீடு கோடி இன்பம்
      மரணம் வந்தால் போகும்!
தேடி தேடி சேர்த்த செல்வம்
      தேவன் முன்னால் ஓடும்! 
ஆடி ஆடி சிலிர்த்த மேனி
      அள்ளும் சாம்பல் ஆகும்!
மூடி வைத்த பாவ புண்யம்
      முடிந்த பின்னே தொடரும்!

சேர்த்த சொந்த பந்தம் எல்லாம்
      செத்த பின்னே வருமா?
வேர்த்து உழைத்த செல்வம் கூட
     சொர்க்க போகம் தருமா?
ஆர்த்த கோபம் அனலாய் எரிய
     ஆடிடும் மானிட பதரே!
நீர்த்த மேனி தீர்ந்த பின்பு
      நின்று நிலைப்பது எதுவோ?


http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG


+ comments + 1 comments

இறைவனே வந்து பிறந்த போதிலும்
மேன்மை மக்கள் இருந்த போதிலும்
சேராத இடம் போய் சேர்ந்துவிட்டால்
தோல்வி நிச்சயம் என அறிந்தபோதிலும்
குருசேதிரம் கண்டது மகா பாரதம்
அந்த அருஜுனனின் நிலையை நானும் கொண்டேன்
சொந்தங்களை எதிர்க்க துணிவற்று நின்றேன்
அஸ்திரம் எதுவும் எடுக்கவில்லை
தோல்விகள் எதுவும் எனுக்கு இல்லை
சாரதியாக என் குரு நிற்க
என்னை நோக்கி உபதேசம் உரைக்க
இப்படியானது எனக்குள் பாரதம்
கணக்குகள் எல்லாம் கணக்கிடபடும்
வஞ்சனைகள் அனைத்தும் நீக்கபடும்
என் பாதம் மட்டும் பற்றிக்கொள்
குருவை மட்டும் நினைவில் கொள்

அஸ்திரம் எதுவும் எய்யாதே
என் வாக்குகள் என்றும் பொய்க்காதே
சொந்தங்கள் என்பது மானுட பந்தம்
அது மாயை என்பதின் பிம்பம்
என்றும் கலங்காதே என் இனியவனே
உன்னுள் என்றும் நான் நிறைந்தவனே

இப்படியாக என் குரு உரைக்க
கையில் கடமையுடன்
குரு முன் நான் நிற்க

வாழ்கை தொடரும்.


இப்படிக்கு
ராதா கிருஷ்ணன்
கோயம்புத்தூர்


Next Post Next Post Home
 
Back to Top