Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆடுகளும் ஆத்மாக்களும்



மேஷ ராசிக்கு ஆட்டின் தலை உருவமாக கொடுக்கப்பட்டுள்ளதே அதற்கு விஷேச காரணங்கள் எதாவது இருக்கிறதா?

ராசி சக்கரத்தில் முதலாவதாக இருப்பது மேஷம் நாடி ஜோதிடத்தில் காலபுருஷ தத்துவமென்று ஒன்று உண்டு அதனடிப்படையில் ஒருவன் எந்த லக்கினத்தில் பிறந்திருந்தாலும் அவன் பிறந்த அந்த தேதியில் கிரகங்களின் சஞ்சாரத்தை கொண்டு மேஷ ராசியையே லக்கினமாக கணித்து பலன் சொல்வார்கள். உதாரணமாக ஒருவன் மீன லக்கினத்தில் பிறந்திருந்தால் அவனுக்கு பத்தாமிடத்தில் குரு இருந்தாலும் குருவின் பலனை கணிக்கும் போது நாடி ஜோதிட காலபுருஷ தத்துவப்படி குரு ஒன்பதாமிடத்திலேயே இருப்பதாக கணக்கிட வேண்டும். அதாவது எல்லா மனிதர்களின் பொதுவான லக்கினம் மேஷமே ஆகும்.

லக்கினம் என்றால் என்னவென்று நம்மில் பலருக்கு ஜோதிட சாஸ்திரம் தெரியாததால் முழுமையாக தெரியாது. ஒரு மனிதனுக்கு உயிர் எந்த அளவு அவசியமோ அதே அவசியம் ஜாதகப்படி லக்கினம். லக்கினம் ஒரு குழந்தை தாயின் கர்ப்ப பையில் இருந்து வெளியில் தலைகாட்டும் நேரத்தில் கிழக்கு வானில் உதயமாகும் ராசியே ஆகும். அதனால் தான் லக்கினம் ஒரு ஜாதகத்தின் தலை என்று கருதப்படுகிறது. தலை இல்லாவிட்டால் மற்ற எந்த உறுப்புகளும் இருந்து பயனில்லை. அதே போலதான் லக்கினம் இல்லாவிட்டால் எந்த ராசியும் பயன்தராது. 


 ஒரு குழந்தை பிறக்கும் போது தலை வெளிவரும் நேரமே லக்னமாக கணிக்கபடுகிறது. அதனால் தான் லக்னமும் சிரசு அல்லது தலை என்று சொல்லபடுகிறது. இப்படி தலையாக இருக்கும் முதல் ராசியான மேஷத்திற்கு ஆட்டு தலையை குறியீடாக கொடுக்க வேண்டிய அவசியமென்ன? மனித தலையை கொடுத்திருந்தாலும் உயிரினங்களின் தலைவன் மனிதன் அதே போல ராசியின் தலைமைக்கும் மனித தலையை கொடுத்திருக்கிறார்கள். என்று சொல்லலாமே என்று பலர் நினைக்கலாம். ஆனால் ஆட்டின் தலையை இந்த ராசிக்கு குறியீடாக கொடுத்ததற்கு நிறைய காரணமிருக்கிறது.

வேதங்களில் ஆடு என்பது பல இடங்களில் மனித ஆத்மாவோடு ஒப்பிட்டு பேசப்படுகிறது. சில இடங்களில் ஆடு மனித மனமாகவும் காட்டபடுகிறது. ஒரு மனித வாழ்வு ஆத்மாவோடும் மனதோடும் இணைக்கபட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம் கிருஸ்தவ மதத்தில் கூட ஆத்மாவை ஆடுகள் என்று அழைக்கும் பழக்கம் உண்டு இதை காட்டவே தான் ஏசு நாதர் ஆட்டு குட்டியோடு இருக்கும் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

ஒருவன் சிறந்த மனிதனாக இருக்க வேண்டுமென்றால் அவன் ஆத்மா சிறந்ததாக இருக்க வேண்டும். ஒருவனுடைய வாழ்வு உயர்ந்த நிலையில் அமையவேண்டும் என்றால் அவன் மனது சிறந்ததாக இருக்க வேண்டும். இங்கே ஆத்மா என்பது இயற்கை சுபாவத்தையும் மனம் என்பது சுற்று புற தாக்கத்தால் உருவாகும் சுபாவத்தையும் குறிக்கும் எனவே ஆடு என்ற குறியீட்டில் மனித வாழ்வு என்ற தத்துவம் பேசப்படுகிறது. 


 முழுமுதலான இறைவனை ஓசை ஒலியெல்லாம் ஆனவனே என்று ஆன்றோர்கள் அழைக்கிறார்கள். நாத விந்து என்றும் இறைவன் கருதபடுகிறான். அதாவது இந்த பிரபஞ்சமே ஓம் என்ற பிரணவத்தின் ஒலியிலிருந்து தான் உற்பத்தி ஆனது அந்த ஓம் என்ற ஒலியே இறைவனின் வடிவமாகவும் இருக்கிறது. என்பது இந்து மத அறிவியல். நாம் அறிந்தவரை ஜீவராசிகளில் ஓம் என்ற சத்தத்தை குரலாக கொண்டது ஆடு மட்டுமே அதாவது ஆட்டின் மே என்ற சத்தம் ஓம் என்ற ஒலி வடிவமாக தெரிகிறது.

குழந்தைகளை குட்டிகள் என்று அழைப்பது வழக்கம் மலையாள மொழியில் குட்டிகள் என்றாலே குழந்தைகளை தான் குறிக்கும். குழந்தைகள் மனித சமூகத்தை அடுத்த காலகட்டத்திற்கு அழைத்து செல்லும் தலைமுறைகளாக கருதபடுகிறார்கள். ஆடுகளையும் குட்டி என்று அழைப்பார்கள் குழந்தைகள் எப்படி சமூகத்தை வளர்க்கிறார்களோ அதே போலவே ஆட்டு தலையை உருவமாக கொண்ட மேஷ ராசியும் அடுத்தடுத்த ராசிகளின் சக்திகளை வளர்க்கிறது. இதை மனதில் வைத்து தான் வணக்கத்திற்குரிய நமது பெரியவர்கள் ஆட்டு தலையை முதல் ராசியின் சின்னமாக வைத்தார்கள்.


மேலும் ராசிகளின் விளக்கம் படிக்க--->

Contact Form

Name

Email *

Message *