( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சிவப்பு நிறத்தில் ஓர் துப்பாக்கி !


   ன்று ஞாயிற்று கிழமை குருஜியை காண சிலபேர் அதிகமாக வந்திருந்தார்கள். அன்று அவர் மதிய உணவுக்கு அமர்ந்ததே மாலை நாலு மணிக்கு தான் இது அவருக்கு புதிதான சம்பவம் அல்ல அடிக்கடி நிகழகூடியதே சில நேரங்களில் பகல் நேர உணவு இரவு நேர உணவாக மாரிபோவதும் உண்டு. அனால் எவ்வளவு நேரமானாலும் அவரோடு உணவருந்த நாங்கள் அனைவரும் பச்சை தண்ணீரை குடித்து கொண்டாவது. காத்திருப்போம். காரணம் உணவை அமைதியாக யாரோடும் பேசாமல் உண்ணவேண்டும் என்ற உண்மை குருஜிக்கு தெரிந்தாலும் அதை சிறிய வயது முதற்கொண்டே அவரால் காப்பாற்ற முடியவில்லை இன்றுவரையிலும் கூட நிலமை அப்படி தான் சாப்பிடும் நேரத்தில் உணவோடு கலை இலக்கியம் அறிவியல் அரசியல் என்று பல உலக விஷயங்களை தெளிவாகவும் விரிவாகவும் அவர் கூறுவார். அப்படி தான் அன்று எங்கள் உரையாடல் ஆரம்பமானது.

சட்டிஷ்கர் மாநிலத்தில் உள்ள பொதுவுடைமை தீவிரவாதிகள் அலேச்ஸ் பால் மேனன் என்ற இந்தய ஆட்சி பணி அதிகாரியை கடத்தி சென்றதை பற்றியும் பின்னர் விடுவித்ததை பற்றியும் எங்களுக்குள் உரையாடல் நடந்தது. அமைதியாக உரையாடலை கேட்டுகொண்டிருந்த குருஜி நீங்கள் அனைவரும் பேசுவதை பார்த்தால் இந்தியாவில் பொதுவுடைமை தீவிரவாதம் என்பது திரு அலேச்ஸ் பால் மேனனை கடத்தியதில் துவங்கி அவரை விடுவித்ததோடு முடிந்து விட்டது என்று கருதிகிறீர்கள் போலிருக்கிறது என்றார். அதற்கு நான் அப்படி கருத நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல பொதுவுடைமை தீவிரவாதம் என்பது விடுதலை போராட்ட காலத்திலும் விடுதலைக்கு பிறகும் இன்றுவரை இந்தியாவில் நடந்து வரும் ஒரு உள்நாட்டு யுத்தம் என்று எங்களுக்கு தெரியும் என்றேன் குருஜி சிரித்தார். 


 அவர் சிரிப்பில் இருந்து எனது கருத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை புரிந்து கொண்டேன். உடனடியாக நக்சல்பாரிகள் எதற்காக தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் குறிப்பாக வனவாசிகளை அண்டி இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டேன். நமது நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவர்களால் நேரு இருக்கிறாரே அவரை ஒரு விசித்திரமான பிறவி என்றே சொல்லலாம். அவருக்கு மேல்நாட்டின் ஆடம்பரத்தின் மீதும் தீராத காதல் உண்டு அதே அளவு சோசலீச கொள்கைகளில் மீதும் காதல் உண்டு. இந்தியாவின் பிரதமராக இந்திய விடுதலைக்கு போராடிய முன்னணி வீரராக அவர் இருந்தாலும் இந்திய பண்பாட்டை அவர் எப்போதுமே நேசித்தது கிடையாது. பிற்போக்கு தனமானது மூட நம்பிக்கைகள் நிறைந்தது என்பதே நேரு இந்திய பண்பாட்டின் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை என்று தனது விளக்கத்தை சொல்ல துவங்கினார்.

நாங்கள் ஆர்வத்தோடு அவர் சொல்வதை காதுகொடுத்து கேட்க துவங்கினோம். எல்லோரும் எல்லாமே பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். வல்லான் பொருள் குவிக்கும். தனிவுடமை தீர்ந்து வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை என்பது கவிஞர்களின் அழகான கற்பனை வரிகள். உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சமமாக வாழவேண்டும் என்று விரும்பாத மனிதர்கள் யாருமே இல்லை. நேருவும் அப்படி தான் எல்லோரை போலவும் விரும்பினார். ஆனாலும் தான்மட்டும் வெள்ளைகார சீமான்களின் வாழ்க்கையை கைவிட்டு விட கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார். ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைப்பதில் நேருவுக்கு நிகர் நேரு தான். டாட்டா பிர்லா போன்ற தொழிலதிபர்களையும் அவரால் விட்டு விட முடியவில்லை சோசலிசம் பேசுவதையும் கைவிட முடியவில்லை இதனாலையே ஜனநயாக சோசலிசம் என்ற பெயரில் ஒரு குழப்பமான அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வளர வேண்டிய இந்தியாவை வளர முடியாமல் ஒரு மயக்கத்தில் வைத்தார்.


 உலகத்தில் ஒரு தேசத்தின் வளர்ச்சியை ஐந்து ஐந்து ஆண்டுகளாக பிரித்து கணக்கு போட்டு திட்டங்களை வகுத்தது முதல் முதலில் சோவியத் யூனியனின் அதிபர் ஸ்டாலின் மட்டுமே. ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கையின் பால் நேருவுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு அதனால் இந்தியாவின் வளர்ச்சியையும் சில ஐந்தாண்டுகள் திட்டம் போட்டு முன்னோக்கி நகர்த்திவிடலாம் என்று கனவு கண்டார். அதனால் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை பிற்போக்கு தனமானது என்று புறம் தள்ளிவிட்டு சிறிய மற்றும் பெரிய தொழில்சாலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்த விரும்பினார். ஜன சமூத்திர நெருக்கடி நிலபரப்பில் அதிகமாக இருப்பதனால். வனபரப்பை அழித்து விட்டு அங்கே தொழிற்சாலைகளை உருவாக்கினால் நன்மை என்று நேரு கருதினார். அந்த நேரம் நேருவின் நண்பராக இருந்த வேரியர் எல்வின் என்ற வெள்ளைகார பாதிரியார் காடுகளை அழித்து தொழில் வளத்தை பெருக்கினால் காடுகளில் வாழுகின்ற மக்களும் பொருள் உடமை சார்ந்த முன்னேற்றத்தை நிச்சயம் பெற முடியுமென்று நேருவுக்கு அறிவுரை சொன்னார்.

பிறகென்ன காடுகளை அழிக்க ஆசிய ஜோதி நேரு பெரும் நெருப்பாக மாறிவிட்டார். பல்லாயிர கணக்கான ஆண்டுகள் காடுகளையே தங்களது வாழ்விடமாக கொண்ட அப்பாவி வனவாசிகள் என்ன செய்வார்கள் அவர்களின் அழுகுரலை கேட்பதற்கு யாரு இருக்கிறார்கள். வண்டுகளும் பூச்சிகளும் கொடிய மிருகங்களும் நிறைந்த காட்டை விட்டு விட்டு ஊருக்குள் வந்து ஒய்யாரமாக வாழ்க்கை நடத்து என்று இந்த காட்டு மிராண்டிகளுக்கு சொன்னால் கசக்கவா செய்கிறது. பேசமால் வந்து நகரத்து சுகங்களை அனுபவிக்க வேண்டியது தானே என்று நம்மை போன்ற நாகரீக கிருக்கர்களும் நேருவின் செயல்களுக்கு சாமரம் வீசினார்களே தவிர அடிப்படையை புரிந்து கொள்ளவில்லை.


 நேற்றுவரை கணிபொறியின் முன்பு மட்டுமே உட்கார்ந்து வேலை பார்த்த ஒருவனை திடிரென பிடித்து மாட்டுவண்டியை ஒட்டு சாலைபோட ஜல்லியை வாரி கொட்டு என்று சொன்னால் அவனால் செய்ய முடியுமா? நிச்சயம் முடியாது. காரணம் அவன் அந்த தொழிலில் பழக்க படுத்த படவில்லை அதனால் அவற்றை அவனால் செய்ய முடியாது. சில நாள் பழகிய தொழிலை விட்டு விட்டே நம்மால் மாற முடியாத போது வனவாசிகளால் காலகாலமாக செய்த தொழிலை விட்டு எப்படி வெளிவர முடியும். அவர்கள் வாழ்க்கை முறை வேறு நமது வாழ்க்கை முறை வேறு இரண்டும் ஒத்துவருவது மிகவும் கடினம். மனிதர்கள் எல்லோரும் சமம் என்றாலும் அவர்களுக்குள் இத்தகைய வாழும் முறை வேறுபாடுகள் அழிக்க முடியாத வண்ணம் நிலைத்து வருகிறது.

காட்டை விட்டு வெளியே போ என்று வனவாசிகளை அராசாங்கம் துரத்த ஆரம்பித்த பிறகு அவர்கள் நிலை என்ன? நீரில் இருந்து நிலத்தில் விழுந்த மீனை போல் துடியாக துடித்தார்கள். அவர்கள் தொழில் செய்த காடுகள் தேசநலன் என்ற போர்வையில் சூறையாடப்பட்ட பிறகு பசிக்கு உணவு கூட இல்லாமல் நோய்க்கு மருந்து இல்லாமல் தவித்தார்கள். அந்த வேளையில் அவரது கண்ணீரை துடைப்பதாற்கு ஒரு கரம் நீண்டது அந்த கரம் நக்சல் பாரிகளின் சிவப்பு கரம். பசிக்கு சோறு போட்ட கையை நல்ல கையா கெட்ட கையா என்று பசித்தவன் பார்ப்பதில்லை வறுமையை பற்றிய ஆக்ரோசமான பேச்சிகளால் மயங்கி போன வனவாசிகள் பொதுவுடைமை தீவிரவாதிகளின் கைப்பாவையாக மாறிவிட்டார்கள். ஆயுத போராட்டத்தின் வாயிலாக இந்திய நாட்டை சீவப்பு சாம்ப்ராஜியமாக மாற்றிவிட வேண்டும் என்பது நக்சல் பாரிகளின் ஆசை அதற்கு கேடையம் வனவாசிகள். இது நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பொதுவுடைமை சித்தாந்தத்தின் ராஜ தந்திரம் அது இன்றைய சூழலில் காலாவதியானது என்பதை பொதுவுடைமை தீவிரவாதிகள் ஏற்றக மறுக்கிறார்கள். இதுதான் நக்சல் தீவிரவாதத்தின் மைய புள்ளி என்று குருஜி சொன்னார்.

அப்படி என்றால் உண்மையாகவே நக்சல் தீவிரவாதிகள் வனவாசிகளின் பாதுகாவலர்களா? அவர்கள் போராட்டம் நியாயமானதா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அறிவியல் ரீதியான புரட்சி என்பது சமூதாயத்தை முடிவில்லாத வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் ஒரு கலங்கரை விளக்கம் என்பதே கம்யூனிஸத்தின் கவர்சிகரமான விளம்பர அழைப்பு இதற்கு மயங்கதவர்கள் மிக குறைவு. ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் எதோ ஒரு காலகட்டத்தில் வல்லான் ஒருவனால் கீழ்மைபடுத்தபடும் சூழல் வரும் அப்போது வலியவனை எதிர்க்க முடியாத எளியவனாக மனிதன் ஆகி போகிறான். அப்போது அவன் நாடு முழுவதையும் பொதுவுடைமை சொத்தாக்கி விட்டால் பிரச்சனைகள் அனைத்துமே தீர்ந்து விடுமென்று நினைக்கிறான். அதற்காக தானும் எதாவது செய்ய வேண்டுமென்று விருபுகிறான். இதனால் தன்னையும் அறியாமல் ஒரு கம்யூனிஸ்டாக மாறுகிறான். இதை நான் விளையாட்டாக ஒரு மனிதன் முப்பது வயது வரையில் கம்யூனிஸ்டாக இல்லை என்றால் அவன் சோம்பேறி அதற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக தொடர்ந்தால் முட்டாள் என்று சொல்வேன். இளம்பருவத்தில் வரும் இனக்கவர்ச்சி போன்றது தான் புரட்சிகர எண்ணம் இதை சில அரசியல் வாதிகள் தங்களுக்கு சாதகமாக ஆக்கி கொள்கிறார்கள். சிலர் தன்னை முழுமையாக நம்பும் தோழர்களை தீவிர வாத பாதையில் நடத்தி செல்கிறார்கள்.


 உண்மையில் இவர்களது நோக்கம் பொதுவுடைமை சமூகத்தை உருவாக்குவது அல்ல பொதுவுடைமை சர்வாதிகாரத்தை உருவாக்குவதே ஆகும். நெறிபடுத்தப்பட்ட புரட்சியின் மூலம் ஆளும் வர்க்கமாக தாங்கள் மாறிவிட்டால் தங்களது வேட்கைகளை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். உலகம் முழுவதும் இதுவரை நடந்த பொதுவுடைமை புரட்சிகள் சமத்துவ சமூகத்தை உருவாக்க வில்லை சில தனிநபர்களின் சர்வாதிகாரத்தை தான் தூக்கி பிடித்துள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவில் இது தான் நடந்தது. உண்மையில் பொதுவுடைமை தீவிரவாதிகள் விரும்புவது சமத்துவ சமூகம் என்றால் அதற்காக ஆயுதம் தூக்க வேண்டிய அவசியமில்லை காரணம் வராலாற்று ஏடுகளில் ஆயுத புரட்சிகள் தோற்று போனதாகவே தெளிவாக தெரிகிறது.

லெனினும் ஸ்டாலினும் தங்களது சித்தாந்த விரோதிகளை புரட்சி என்ற பெயரில் படுகொலை செய்தார்கள். அப்படி ரஷ்யாவில் கொல்லபட்ட மனித உயிர்கள் ஹிட்லரால் கொலை செய்யபட்ட யூதர்களை விட மிக அதிகம். ஸ்டாலின் மற்றும் லெனினை போலவே மாசேதுங்கும் தனது அரசியல் பாதையை வகுத்து கொண்டவர் ஆவார். மாவோ தன வாழ்நாளில் கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அணுகுண்டால் இறந்தவர்களை விட மிக அதிகம் மாவோ வழியில் நடப்பவர்கள் தான் இந்திய நக்சல் பாரிகள். இவர்களால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 2654 மனித உயிர்கள் காவு கொள்ள பட்டிருக்கிறது. அதற்கு முன்பு இவர்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் பணக்காரர்களுக்கு எதிராக போராடுகிறோம் என்று வாய்கிழிய பேசும் மாவோ தோழர்கள் சில பணக்காரர்களின் கைக்கூலியாக செயல்பட்ட விதத்தை ஆந்திர மாநிலத்தில் நாம் பலமுறை பாத்திருக்கிறோம். எனவே பொதுவுடைமை தீவிர வாதிகள் ஏழைகள் நலத்திற்கு போராட வில்லை ஆயுத பலத்தால் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு போராடுகிறார்கள்.

இவர்களுக்கு எதிரான அரசாங்க நடவடிக்கை என்பது வீரியத்தோடு இல்லை அப்படி செயல்பட்டால் மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுப்பார்கள் என்று அரசாங்கம் பயப்படுவதாக தெரிகிறது. மனித உரிமை என்பது மனிதனாக பிறந்த எல்லோருக்கும் உண்டு ஒரு தீவிரவாதியால் கொல்லப்படும் போலீஸ்காரனும் ராணுவ வீரனும் சராசரி மனிதர்களே அவர்களுக்கும் குடும்பம் உண்டு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு ஆசாபாசம் உண்டு அவர்கள் உயிர் போவதை தட்டி கேட்காத மனித உரிமை அமைப்புகள் தீவிர வாதிகளின் உயிரை பறிப்பதை மட்டும் தடுப்பது ஏன்? அப்படி என்றால் மனித உரிமை ஆர்வலர்கள் தீவிரவாதத்தின் ஊதுகுழலாக இருப்பார்களோ என்ற சந்தேகம் நம்மை போன்ற சராசரி மனிதர்களுக்கு வருகிறது. என்று முடித்தார் குருஜி.

உண்மையில் பொதுவுடைமை என்பது மனிதர்களை வாழ்விக்க வந்த அருமருந்து என்று இதுவரை நான் நினைத்திருந்தேன். சிவப்பு சித்தந்தத்திற்குள் எத்தனை பெரிய அபாய குகை இருக்கிறதா என்ற பயம் அல்லது அதிர்ச்சி எனக்கு வந்தது எனவே கம்யூனிஸ்ச தத்துவத்தை முழுமையாக தெரிந்துகொள்ள நான் விரும்பினேன். அதற்கு விளக்கம் தருமாறு குருஜியிடம் கேட்டன் அடுத்தவாரம் பார்க்கலாம் என்று பதில் தந்தார் அவர் அடுத்தவாரம் என்ன சொல்கிறார் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன்.

பேட்டி                        
ஆர்.வி. வெங்கட்+ comments + 2 comments

mohan
13:24

nalla karuthukkal,

பொதுவுடைமை பற்றிய நல்ல விளக்கம்! அரிய செய்திகளுடன்! பகிர்வுக்கு நன்றி!


Next Post Next Post Home
 
Back to Top