Store
  Store
  Store
  Store
  Store
  Store

சூரியனுக்கு வெளிச்சம் தந்த சங்கரர்

இந்து மத வரலாற்று தொடர் 31


     கவத் கீதையில் கண்ணபெருமான் சொல்லுவான் தர்மம் எப்போதெல்லாம் தவித்து நிற்கிறதோ அப்போது அதை காப்பாற்ற நான் மீண்டும் மீண்டும் வருவேன் என்று கண்ணன் இதை ஆறுதலுக்கு சொல்லவில்லை தர்மத்திற்கும் தர்ம வழிபட்ட வாழ்க்கைக்கும் சோதனைகள் வருகின்ற போது பல்வேறு வடிவங்களில் அவன் தோன்றியுள்ளான். இன்றும் கூட தர்மத்தை ரச்சிக்கும் அவனது அவதாரம் உலகமுழுவதும் சிறிதாகவும் பெரிதாகவும் நடந்துகொண்டே வருகிறது. நமது பாரத நாடும் பாரத நாட்டின் ஆத்மாவான இந்துதர்மமும் வேத கால முடிந்து அதன் பிறகு வந்த சரித்திர காலத்தில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற மனித மனங்கள் அதிகரித்து விட்டதனால் ஆட்டம் கண்டு தவறான பாதையில் நாட்டம் கொண்டு சென்று கொண்டிருந்தது அப்போது நம்மையும் நம் தர்மத்தையும் காப்பாற்ற பகவான் ஒரு அவதாரம் எடுத்தான் அந்த அவதாரத்தின் பெயர் ஆதிசங்கரர்.

ஆதிசங்கர அவதாரம் இந்தியாவில் கேரளாவில் காலடி என்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் உஞ்சவிருத்தி எடுத்து வாழும் ஒரு ஏழை அந்தணனின் குடும்பத்தில் நிகழ்ந்தது மூப்பத்திரெண்டு ஆண்டுகள் மட்டுமே பூமியில் நடமாடிய அந்த அவதார திருவுருவம் இந்துமதத்திற்கும் இந்து மக்களுக்கும் செய்த தொண்டுகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது காற்று வேகத்தை விட கடுமையான வேகம் என்று மனோ வேகத்தை சொல்வார்களே அந்த மனோ வேகத்தால் கூட ஆதிசங்கரரின் சமய தொண்டின் சிகரத்தை அறிவின் உயரத்தை தொட்டு விட முடியாது.


பாரத திருநாடு எங்கும் பாத யாத்திரை செய்து காஞ்சிமாநகருக்கு வந்திருந்த சங்கரர் ஒரு காரியம் செய்தார். அக்னி, குபேரன், பிரம்மன், மன்மதன், எமன், வருணன்,வாயு போன்ற தேவர்கள் உள்ளிட்ட பலநூறு தேவர்களை கொண்டாடும் எழுபத்தி இரண்டு மத பிரிவுகளாக நமது மதம் பிரிந்து கிடப்பதை கண்டார். அந்த மதங்களில் பல சனாதன தர்மத்தின் ஆத்மாவான வேதநெறிக்கு புறம்பானதாகவும் விரோதமாகவும் இருந்தன. அவைகளில் உள்ள விஷ தன்மையை போக்கி அவைகளை சைவம், சாக்தம், வைஷ்ணவம், கெளமாரம், காணபத்யம், செளரம் என்ற ஆறு பிரிவுகளுக்குள் எழுபத்தி இரண்டு பிரிவுகளை அடக்கினார். அந்த பிரிவுகளில் உள்ள எல்லா தெய்வங்களும் சிவன், விஷ்ணு, பராசக்தி, முருகன், கணபதி, சூரியன் ஆகிய தெய்வ மூர்திகளுக்குள் அடங்கி விடுவதை தத்துவ பூர்வமாக எடுத்து காட்டினார்.

சங்கரர் இந்த மதங்களை அதாவது இந்து மதத்தில் சன்மதங்கள் என்று அழைக்கிறோமே அந்த ஆறு பிரிவுகளை உருவாக்க வில்லை மாறாக சீர்திருத்தி களைய வேண்டியவைகளை களைந்து புகுத்த வேண்டியவைகளை புகுத்தியும் ஒழுங்கு படுத்தினார். அப்படி ஒழுங்கு படுத்தி விட்டு மற்ற விஷயங்கள் தானாகவே நடந்து கொள்ளுமென்று சும்மா இருக்க அவரால் இயலவில்லை எனவே அந்த மதங்களை நாடு முழுவதும் பரப்புவதற்கும் மக்கள் பின்பற்றுவதற்கும் அறிவு பூர்வமான தனது சீடர்களை அனுப்பி வைத்தார். இதனால் தான் ஆண்டுகள் ஆயிரம் அல்ல அதற்கு மேலும் கடந்து போனாலும் பகவத் பாதாள் ஆதி சங்கரரை ஷண்மத ஸ்தாபகர் என்று உலகம் போற்றி புகழ்கிறது. இத்தகைய அறிய பணியை சங்கரர் என்ற தனி ஒரு அவதாரம் செய்ய வில்லை என்றால் இன்று இந்து மதமும் இல்லை இந்தியாவும் இல்லை.


சங்கரர் ஒரு அத்வைதி அதாவது ஜீவாத்மா வேறு பராமாத்மா வேறு என்று சொல்வதும் நம்புவதும் மாயை பாரமாத்மாவின் தோற்றமே சகல வடிவாகவும் இருக்கிறது. அதாவது பரமாத்மா ஒன்றே எல்லாமாக இருக்கிறது. என்று உபதேசம் செய்தவர் அவர். அப்படி பட்ட சங்கரர் அழகான உருவங்களோடு அருள்பாலிக்கும் இறைவனை சகுன பிரம்மாக வழிபடுவதற்கு வழிவகை செய்வாரா? அதற்காக உருவ வழிபாட்டை ஊக்குவிக்கும் மத பிரிவுகளை ஒன்றினைப்பாரா? என்று சிலர் கேள்விகள் எழுப்புகார்கள். அவர்களே சங்கரர் ஒன்றும் மத பிரிவுகளை இணைக்கவில்லை சங்கரரின் பெயரை பயன்படுத்திக்கொண்டு வேறு யாரோ அந்த காரியங்களை செய்தார்கள் என்றும் பதில் சொல்கிறார்கள். இது மிகவும் தவறுதலான அணுகுமுறையாகும்.

சமயம், கலை, கலாச்சாரம், சாஸ்திரம் போன்ற பெரிய விஷயங்கள் அறிவையும் மனதையும் குழப்ப கூடியது. நடு காட்டிற்குள் அகப்பட்டு கொண்டவனுக்கு எப்படி திசை தெரியாதோ அதே போலவே சாமான்ய மனிதர்களால் இவைகளை புரிந்துகொள்ள இயலாது. எப்போது ஒரு விஷயம் மனித குலத்திற்கு புரியவில்லையோ அப்போதே குழப்பங்களும் கலவரங்களும் வந்துவிடும். அதன் முடிவு விவரீதமாக அழிவு பாதையை நோக்கி போய்விடும். அதை தடுபப்தற்கே மகான்களும் தீர்க்க தரிசிகளும் தோன்றி நல்லது எது கெட்டது எது என்று நம்மை போன்ற சராசரி மனிதர்களுக்கு புரிய வைக்கிறார்கள்.


நமது வைதீக மதம் ஒரு இளம் மூங்கில் போல வளைந்து கொடுக்க கூடியது. எந்த திசையை நோக்கி யார் இழுத்தாலும் இழுத்த இழுப்புக்கு செல்ல கூடியது. அதாவது எல்லாவற்றிகும் ஈடுகொடுக்க கூடியது. இதனால் சகல தரப்பு மக்களும் பல தெய்வங்களை வழிபட்டதுடன் பல மூட பழக்கங்களையும் கைகொண்டவர்கலாக இருந்தார்கள். அப்படி அவர்கள் பின்பற்றுகின்ற நெறிமுறையில் அர்த்தமற்ற அறிவுபூர்வமற்ற சங்கதிகளை விலக்கி அதாவது சக்கையை விலக்கி சாரத்தை கொடுத்து சமய நெறியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய கால கட்டத்தில் சங்கரருக்கு ஆறு மதங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டிய கட்டாய நிலை இருந்தது. இதை அவர் தெளிவாகவும் எளிமையாகவும் தனது அறிவு திறத்தால் செய்தார்.

மேலும் இந்த ஆறு சமையங்களும் தலைமை செயலகம் போன்றது. மற்ற அனைத்துமே இதன் கிளை அலுவலங்கள் தான். சிவ சக்தி உள்ளிட்ட ஆறு தெய்வங்களுக்கு அனுசரணையாக இருப்பது தான் மற்ற தெய்வங்கள். எனவே அவைகளை தனித்தனியாக கொண்டாட வேண்டிய அவசியமில்லை இதுவுமல்லாது ஒரு மனிதனை எடுத்த எடுப்பிலையே காணும் பொருளெல்லாம் கடவுளாக பார் என்று கட்டயபடுத்த முடியாது. அது ஆகாத காரியமும் கூட ஒன்றாம் வகுப்பு துவங்கி தான். முதுகலை படிப்பு வரை செல்ல இயலும். அகரம் முதல் எழுத்துக்களை கற்றவுடனையே கல்லூரி படிப்பில் தேர்ச்சி பெற்று விடு என்றால் குழப்பமும் அறியாமையும் தான் விளையும். இதை கவனத்தில் கொண்டே உருவ வழிபாட்டையும் அது கனிந்த பிறகு ஆத்ம தரிசனத்தையும் பெற வழிவகை செய்தார் சங்கரர் என்று துணிந்து சொல்லலாம்.


இப்படி சங்கரரால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆறு மதங்களில் இது முக்கியமானது அது முக்கியமில்லாதது என்ற வேறு பாடு கிடையவே கிடையாது. ஒரு மனிதன் முழுமனிதனாக நடமாட எல்லா அங்கங்களும் எப்படி அவசியமோ அப்படியே சனாதன தர்மம் நிலைத்து நிற்க ஆறு மத பிரிவுகளும் அவசியமாகும். அத்தகைய வரிசையில் செளரம் என்பது கடேசியில் வருகிறது என்பதற்காக அது குறைந்தது அல்ல குறைபட்டதும் அல்ல. சூரியன் எப்படி உயிர்கள் வாழ அத்யாவசிய தேவையோ அதே போலவே சூரியனை மூல பரம்பொருளாக கொண்டாடும் செளரமும் மற்ற மத பிரிவுகள் வளமையோடும் செழுமையோடும் ஜீவிக்க உதவி செய்கிறது.

சூரியன் இல்லை என்றால் உயிர்கள் இல்லை உயிர்களின் வளர்ச்சியும் இல்லை வாழ்க்கையும் இல்லை அவனுடைய சக்தியால் தான் பயிர்கள் வளர்கிறது. தண்ணீர் ஓடுகிறது காற்று வீசுகிறது. அக்னி கீழிருந்து மேல் நோக்கி தாவுகிறது. ஆகாசம் கூட அவனது சக்தியால் தான் வியாபித்து இருக்கிறது. அந்த சூரியனையே சிவனாகவும் திருமாலாகவும் மக்கள் வழிபட்டாலும் சூரியனை மட்டுமே தனி ஒரு தெய்வமாக உலகை காத்து ரச்சிக்கும் கடவுளாக கொண்டாடுகிறது ஒரு மதம் அதன் பெயர் செளரம் அந்த மதத்தின் உள்ளர்த்தங்களை அடுத்த பதிவுகளில் விரிவாக காண்போம்.



Contact Form

Name

Email *

Message *