( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஒருவனுக்கே சத்தியம் தெரியும்


நினைவுகள் என்பது
முன்னோக்கி ஓடும் குதிரை அல்ல
அது ஒரு விசித்திர ஜந்து
கனமான கால்களை தூக்கி
முன்வைத்து நடந்தாலும்
அது பின்னோக்கியே இழுக்கிறது.

பிரண்டை உடைத்து
ராட்டினம் செய்து
பப்பாளி குழலில்
நாயனம் வாசித்து
சிரட்டை மேளத்தில்
தாளம் போட்டு
அர்த்தம் தெரியாத பாட்டை
ஆயிரம் முறை பாடி
ஓடிய காலங்கள் துரத்தி வருகிறது.

புத்தகத்தின் உள்ளே
மயிலிறகு வைத்து
குட்டி போடுமென்று
காத்து இருந்ததும்
வானத்தில் பறக்கும்
கொக்குகளை பார்த்து
கொக்கே எனக்கொரு பூபோடு என்று
ஆராவாரித்ததும்
ஆற்று மணலில்
வீடுகள் கட்டி
தண்ணீரில் கரைந்ததை
பார்த்து ரசித்ததும்
இப்போது வந்து எதிரே நிற்கிறது.

பூனை ரோமத்தில்
முளைத்த மீசையை
தடவி பார்த்து
முறுக்கி விட்டதும்
பழகிய தோழியை
தொட்டு பார்க்க
கிட்ட நெருங்கியதும்
சுட்ட மண்ணாய் தெறித்து விழுகிறது.

காதல் அகராதியின்
அர்த்தம் புரிந்ததும்
தெரிந்த உறவு
பிரிந்து போனதும்
கண்ணாடியின் மீது பட்ட வடுக்களாய்
இன்னும் தெரிகிறது.

ஆசை ஆசையாய்
பணத்தை சேர்த்து
வேண்டியதை எல்லாம்
அனுபவித்து பார்த்து
தேடும் இன்பம்
இவைகளில் இல்லை என்று
தெரிந்த பின்
ஏங்கி கிடந்ததும்
நினைவு திரையில் வந்து மோதுகிறது.

காலம் முழுவதும்
பெற்றதை கூட்டி
கணக்கு பார்த்ததும்
கணக்கின் முடிவு
பூஜியம் என்றதும்
பூஜியம் இல்லாத ராஜ்ஜியம் எங்கே
என்று தேட சொன்னதும்
கரும்பலகை எழுத்தை
அழிக்க முயன்று
தோற்று போனதாய் ஞானம் வருகிறது.

நடந்தவை எல்லாம்
கடந்தவை என்றாலும்
நடப்பதில் ஏனோ
கிடக்க முடியவில்லை
காரணம்
நினைவு குதிரை
சாட்டையை சுழற்றி
மீண்டும் மீண்டும் அடித்தாலும்
முன்னே செல்ல மறுத்து
பின்னே இழுக்கிறது.

முன்னும் பின்னும்
இழுபடுவது ஒன்றே
வாழ்க்கை துன்பம்
இருப்பது ஒன்றில்
இருப்பது மட்டுமே
நிஜமான இன்பம்
நிஜம் இதுவென
தெரிந்த பிறகும்
பாலும் மனது
பழசை நினைத்து கனத்து கிடக்கிறது.

பாரம் என்பது தலையில் அல்ல
மனதில் என்று தெரிந்த பிறகும்
மனது ஏனோ மறக்க மறுக்கிறது.
மறந்து போக
மருந்து உண்டா
மரணம் மட்டுமே மறக்க வைக்குமா
மறுபடியும் பிறந்தால்
நினைவுகள் தொடருமா
சண்டிக்குதிரை
ஓட்டும்
ஒருவனுக்கே சத்தியம் தெரியும்.

http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG


+ comments + 2 comments

சிந்திக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...
தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி...

அருமை அருமை அருமை....


Next Post Next Post Home
 
Back to Top