( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தவம் செய்ய திருமணம் தடையா...?அந்தகால முனிவர்களை போல் இந்தகாலத்தில் தவம் செய்ய முடியுமா?
    ந்த முனிவர்களும் தாயின் கருவறையில் பத்து மாதங்கள் இருந்தவர்கள் தான் நாமும் பத்து மாதமே கருவறை வாசம் இருந்திருக்கிறோம். இதனால் அவர்களால் முடிந்தது நம்மால் முடியாது என்பதெல்லாம் கிடையாது. தவம் என்பதே மன ஒருநிலை பாடுதான். அதனால் நம்மாலும் அது முடியும்.

தவம் செய்ய தனியிடம் தேவையா?
    னிமையான இடம் என்பது எதை குறிக்கிறது ஆள் அறவமற்ற பிரேதசத்தையா? அப்படியும் அர்த்தபடுத்தி கொள்ளலாம். ஆனால் உண்மையில் தனிமையான இடம் என்பது உன் மனதிற்கு எது இனிமையான இடமாக படுகிறதோ அதுவே ஆகும். மனதிற்கு இனிமையான பகுதி உள்ளத்தில் எழும் எண்ண அலைகளை கட்டுபடுத்தும். விசிராந்தியான அமைதியை தரும். எனவே அந்த இடமே தவம் செய்ய ஏற்ற இடம்.

தவற்றில் வெற்றி பெற கட்டுபாடுகள் உண்டா?
  தாறுமாறாக எழுப்படும் ஓசை வெறும் சக்தம் சந்தைக்கடை கூச்சலில் என்ன பேசபடுகிறது என்று யாருக்கும் புரியாது. ஆரவாரத்தில் அமைதியும் இருக்காது இனிமையும் இருக்காது. ஒரு இலக்கண வரம்பிற்குள் வருகின்ற சக்தம் கூட இசையாகி விடுகிறது. தவம் என்பதும் இலக்கணத்திற்குள் கட்டுப்பட்ட இசைபோன்றது தான். எண்ணம் செயல் வார்த்தை இவற்றில் மட்டுமல்ல சுவை காட்சி பரிசம் இவைகளிலும் கட்டுப்பாடு இருந்தால் தான் தவத்தில் மேன்மை உண்டு வெற்றி உண்டு

தவம் செய்வதற்கு எது தடை?
   வம் செய்ய தடை என்று எதையும் சொல்ல முடியாது. தடைகற்களாக இருப்பவைகளை கூட படி கற்களாக மாற்றுவது தான் தவம் உண்மையில் தவத்திற்கு தடை என்று எதாவது உண்டா? என்று தேடி பார்த்தால் நமது அறிவுக்கு தென்படுவது மனமும் குழப்பமும் மட்டுமே இவை இரண்டையும் அடக்கி விட்டால் அல்லது கடந்து விட்டால் எந்த தடையும் கிடையாது.

தவத்தில் வெற்றி அடைய திருமணம் தடையா?
  திருமணம் என்பதை இல்லறம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் இல்லறம் என்றால் வீட்டு தர்மம் வீட்டு அறம் என்று பொருள் அறமாக இருக்கும் எதுவும் தவத்திற்கு தடையாக இருக்காது. இல்லறம் என்பது உடல் சுகம் மட்டுமே என்று நினைப்பதில் தான் தவறு இருக்கிறது. உண்மையில் இல்லறம் என்பது உடலையும் மனதையும் தாண்டிய விஷயம் இதை அப்படி பார்ப்பவர்கள் மட்டுமே சந்தோசமாக அனுபவிக்க முடியும். உடலோடு சம்மந்தபடுத்தினால் துக்கம் மட்டுமே ஏற்படும். எனவே இல்லறம் தவத்திற்கு தடையல்ல.+ comments + 4 comments

அருமையான விளக்கம். நன்றி

Good explanation Guruji.

MIGA THELIVANA VILAKKAM GURUJI. MANATHODU PESUM ANUBAVAM KODUTHIRGAL...

Everybody should do daily prayers without break.Hindus should be taught to do Tapas/Jabam at their home with all family members -like a Mini Antharyogam.


Next Post Next Post Home
 
Back to Top