Store
  Store
  Store
  Store
  Store
  Store

பெற்றவரே முதல் ஆசான் !


குருஜி அவர்கலுக்கு வணக்கம்,

   ஐயா நான் தொடர்ந்து உங்களது பதிவுகளை படித்து வருகிறேன்.இந்து மதவரலற்று தொடரில் தாங்கல் குறிப்பிட்டுள்ளீர்.இந்து குழந்தைகளுக்கு நம் மதத்தை பற்றி கற்றுத்தற வேண்டும் என்று. எந்த வயதில் இருந்து தொடங்குவது, யாரிடமிருந்து கற்று கொடுப்பது.எந்த விசயங்களை கற்றுகொடுப்பது.என்பதை பற்றி ஒரு பதிவு வெளியிட்டால் மிகவும் உதவியாக இருக்கும்.ஏனெனில் நாங்கள் வடமதுரையில் குடியிருக்கின்றோம்.இது போன்ற கிரமத்தில் வசிக்கும் அனைவருக்கும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள நகரத்திர்கு செல்ல வசதி இல்லாத சூல்நிலை உள்ளது.

நன்றி ஐயா
இப்படிக்கு உங்கள் சீடர்களில் ஒருவன் சுந்தரம்.




       ந்துமத வரலாறு என்ற தொடரை எழுத ஆரம்பிக்கும் போது ஒரு மனத்தயக்கம் இருந்தது இந்துமதத்தில் உள்ள சாஸ்திர சம்பிராதயங்கள் என்பதை தவிர தத்துவம் சித்தாந்தம் இவைகள் அனைத்தும் மிக கடினமானது சாதாரணமாக புரிந்துகொள்ள முடியாதது அப்படியே புரிந்தாலும் படிப்பதற்கு பலருடைய ஆர்வத்தை தூண்டாதது என்று நினைத்தேன் ஆனாலும் மனிதனுக்கே உரிய சிறுபிள்ளைதனமான ஆசையினால் மிக கடினமான அப்பணியை நம்முடிய சிறிய அறிவை கொண்டு செய்து தான் பார்ப்போம் படிப்பவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை பரிசோதிப்போம் என்பதனால் தைரியமாக எழுத துவங்கினேன்

தொடரின் ஆரம்ப அத்தியாயங்களிலேயே பலருடைய பாராட்டுகளை அது பெற்ற போது ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் மலைப்பாகவும் இருந்தது என்றாலும் இன்னொருபுறம் பயமாகவும் இருந்தது அதற்கு காரணம் எடுத்துக்கொண்ட பணி கடிமனது மட்டுமல்ல அவ்வளவு சுலபமாக எளிமையாக சொல்லி விளங்க வைக்கவும் முடியாது முடிந்தாலும் அதில் எதாவது குறை இருக்கும் அந்த குறை நம்மை தாக்கினால் பரவாயில்லை நமது உயிரினும் மேலான மதத்தை தாக்கினால் நம்மால் களங்கம் ஏற்பட்டு விட்டதே என்று மனசாட்சி குத்த துவங்கி விடும் என்பதற்காக அச்சபட்டேன்

இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து சாம்பசிவம் என்ற அன்பர் என்னை தொலைபேசியில் அழைத்து எனது இருபது வயது குழந்தைகள் நீங்கள் எழுதும் இந்துமத வரலாற்று தொடரை ஆர்வமோடு படிக்கிறார்கள் நமது மதத்தின் உயரிய கருத்துக்களை தெரிந்துகொள்ள மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள் எனவே எத்தனை தடை வந்தாலும் அதை நீங்கள் எழுதி முடிக்க வேண்டும் அதனால் நமது இளைய தலைமுறையினர் நமது மதத்தை பற்றி அதன் பெருமையை பற்றி தத்துவங்களின் ஆழத்தை பற்றி புரிந்துகொண்டு வாழ்கையை நடத்த வேண்டும் என்று சொன்னார் அதை கேட்பதற்கு சந்தோசமாக இருந்தது

அதையும் விட மறக்க முடியாத தொலைபேசி அழைப்பு ஒன்று சென்னையிலிருந்து வந்தது ஒரு தனியார் நிறுவனத்தில் காவல் காரராக பணியாற்றுகின்ற சண்முகம் என்பவர் அந்த போனில் பேசினார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சில கிருஸ்தவ நண்பர்கள் தனக்கு இருந்ததாகவும் அவர்கள் எப்போதுமே இந்து மதம் என்றாலே சிலைகள் வழிபாடு சாமியாட்டம் ஆடு, கோழி வெட்டுதல் மட்டும் தான் அறிவுபூர்வமான மனதிற்கு அமைதி தரக்கூடிய எதுவுமே இந்து மதத்தில் கிடையாது கிறிஸ்தவ மதம் ஒன்று தான் வரலாற்று பூர்வமானது அறிவு மயமானது சகல உயிர்களையும் நேசிக்க கற்று தருவது என்று பேசினார்கள் அதனால் சிறிது சிறிதாக தனது மனம் கிறிஸ்தவ மதத்தின்பால் ஈர்க்க பட்டதாகவும் சண்முகம் என்ற தான் சாமுவேல் என்று ஞானஸ்தானம் பெற்றதாகவும் சொன்னார்

சமீபத்தில் தனது அலுவலகத்தில் பணிபுரிகின்ற ஒரு நண்பர் தனக்கு கணினி பயன்பாட்டையும் இணையதளங்களை வாசிக்கும் முறைகளையும் கற்று தந்ததாகவும் அதன் பயனாக எதேச்சையாக இந்துமத வரலாற்றை படிக்க முடிந்ததாகவும் அதில் நான் எழுதியிருக்கும் பல விஷயங்கள் தனது அறிவு கண்ணை திறந்து விட்டதாகவும் படிப்படியாக தேவாலையம் செல்லும் ஆர்வம் குறைந்து தேவாரம் திருவாசகம் வள்ளலாரின் திருவருட்பா பகவத்கீதை போன்ற நூல்களை படித்து வருவதாகவும் இப்போது தான் உண்மையாகவே சண்முகமாக மாறிவிட்டதாகவும் தான் ஒரு இந்து என்ற பெருமை தனக்குள் முளைத்து விட்டதாகவும் சொன்னார் அவருடைய கூற்று என்னை சிலிர்படைய செய்தது யாரவது ஒருவர் நூறு கோடி ரூபாய் கொடுத்திருந்தால் கூட இந்த நாட்டுக்கே அரசானாக என்னை முடி சூட்டியிருந்தால் கூட அவ்வளவு சந்தோசம் எனக்கு வந்திருக்காது. ஆனால் அவர் சொல்லிய தகவல் என்னை புது மனிதனாகவே ஆக்கி விட்டது.

இந்துமத வரலாற்று பதிவை தொடர்ச்சியாக உடனுக்குடன் எழுத வேண்டும் மிக விரைவில் அதை நூலாக கொண்டு வரவேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தாலும் எனது உடல்நிலை வேறு சில வேலைகள் எல்லாமே அவ்வபோது தடைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் வேறு எந்த பதிவை எழுதும் போதும் எனக்கு கிடைக்காத இன்பத்தை இந்த பதிவு எழுதும் போது நான் அனுபவிப்பதனால் ஆயிரம் தடைகள் வந்தாலும் மாதத்தில் சில நாட்களாவது எழுத உட்கார்ந்து விடுகிறேன். பலருடைய பாராட்டை பெறுகிறது பலரும் மனம்மாருகிறார்கள் என்பதனால் மட்டும் நான் சந்தோசப்பட வில்லை இசை எப்படி பாடுபவனையும் கேட்பவனையும் ஆனந்தமடைய செய்கிறதோ அதே போலவே இந்துமத கருத்துக்களும் சொல்பவனையும் கேட்பவனையும் மகிழ்வடைய செய்கிறது என்ற ஒரே காரணமே தவிர வேறில்லை

தற்போது அன்பர் சுந்தரம் இந்துமத வரலாற்று பதிவால் கவரப்பட்டு எனது எழுத்தின் நோக்கமான இளைய தலைமுறையினர் நம் மதத்தின் கருத்துக்களை தனது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டுமென்ற சித்தாந்தத்தை செயல்படுத்த விரும்புகிறார் முதலில் அவருக்கு எனது பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க விரும்புகிறேன் நமது குழந்தைகளுக்கு உணவும் உடையும் எப்படி அவசியமானதோ அதே போலவே சனாதன தர்மத்தின் கருத்துக்களும் வாழ்க்கை முறைகளும் மிகவும் அவசியமானது நமது ஹிந்து மதம் என்பது வெறும் மத அடையாளம் மட்டுமல்ல அது நமது தேசியத்தின் அடையாளமாகும். தேசியத்தின் அடையாளம் இன்னெதென்று தெரியாத எந்த குழந்தையும் அறிவுபூர்வமான குழந்தையாக இராது வளராது என்பது எனது அபிப்ராயம் அனுபவமும் கூட

பொதுவாக குழந்தைகளின் பண்பாட்டு பயிற்சி என்பது அவர்கள் பிறந்தவுடனையே எண்ணெய் தேய்ப்பது, குளிப்பது என்பதிலிருந்து துவங்கி விடுகிறது. அவர்கள் வைத்து விளையாடும் பொம்மைகளில் கூட பண்பாட்டு பயிற்சி அடங்கி இருக்கிறது. துப்பாக்கி கவச வாகனங்கள் இராணுவ உருவங்கள் ஆகியவைகளை குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளாக கொடுத்தால் அவர்கள் வளரும் போது போராட்ட காரர்களாகவே இருப்பார்கள். சாமி பொம்மைகள் வைத்து விளையாடும் குழந்தைகள் பலவும் வளர்ந்த பிறகு பக்தி சிரத்தையோடு இருப்பதை கண்டிருக்கிறேன். எனவே விவரம் தெரியாத நாளிலிருந்து கூட போதனை துவங்கி விடுகிறது.

இருந்தாலும் முறைப்படியான மத கல்வி குழந்தையின் ஐந்தாவது வயதிலிருந்து துவங்கலாம் எளிமையான கதைகள் பாடல்கள் தெய்வ உருவங்களுக்கு விளக்கங்கள் என்ற வகையில் துவங்கி அவர்கள் வளர் வளர சொல்லுகின்ற விஷயத்தில் கனத்தை அதிகரித்துக்கொண்டு போகலாம் இதில் கவனிக்க வேண்டியது எந்த வகையிலும் நமது போதனை என்பது குழந்தைகளை வலுகட்டாயபடுத்துவதாகவோ எரிச்சலூட்ட செய்வதாகவோ இருக்க கூடாது. மாறாக அவர்களது ஆர்வத்தை அறிவை கற்பனை திறத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.இவைகளை கற்றுகொடுக்க வெளியிலிருந்து ஆசிரியர்கள் வரவேண்டிய அவசியமே இல்லை தாயும் தகப்பனுமே குழந்தைகளுக்கு ஆசானாக இருந்து செயல்படலாம். ஏனென்றால் உங்கள் குழந்தைக்கு எது வேண்டும் எது சிறந்தது எது பிடிக்கும் என்று உங்களை தவிர வேறு எவராலும் சரியாக தீர்மானிக்க முடியாது. எனவே குழந்தையின் பிறப்புக்கு காரணமான நீங்களே அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் காரணமாக இருங்கள். கடவுள் துணை நிற்பான்



Contact Form

Name

Email *

Message *