( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அணுவுலை அரசு பயங்கரவாதம் !


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் மீண்டும் வலுவடைந்து வருவது எதை காட்டுகிறது?

    லகிலேயே மனித உயிர்களை மிக மலிவான பொருளாக கருதுவது ஒருவேளை இந்தியாவில் மட்டும் தானோ? என்ற எண்ணம் நமக்கு அடிக்கடி வந்துவிடுகிறது. ஒருபகுதி மக்கள் தங்களது வாழ்வின் ஆதரங்களுக்காகவும் வாழ்வுக்காகவும் தொடர்ந்து போராடுகிறார்கள் தங்களது எதிர்ப்பை காட்ட நியாயமான வழிமுறைகள் எவைகளெல்லாம் உண்டோ அவைகளை நாடுகிறார்கள் ஆனால் அவர்கள் தட்டுகின்ற கதவுகள் எதுவும் அவர்களுக்காக திறக்கப்பட வில்லை மாறாக அவர்கள் முகத்தில் இரக்கமே இல்லாமல் அடிதான் விழுகிறது.

அரசாங்க நிர்வாகத்தின் அனைத்து இயந்திரங்களும் அந்த மக்களின் உண்மையான பிரச்சனையை மனசாட்சியோடு பார்க்க மறுக்கிறது. கண்முன்னால் தெரிவது பேரழிவு மட்டுமே என்றாலும் அதை நான் பார்க்க மாட்டேன் அதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்ற வகையில் தான் நிர்வாகங்கள் நடந்து வருகிறது. தங்களை பற்றி சிறிது கூட கவலைபடாத அரசு இயந்திரத்தை நோக்கி மக்கள் போராடத்தான் முடியும்.ணுமின் நிலையத்தால் மின்சாரம் கிடைக்கிறது அது நாட்டு வளர்ச்சிக்கு நல்லது தானே? அதை ஏன் எதிர்க்க வேண்டும்? வேண்டாம் என்று மறுக்க வேண்டும்?

     மின்சாரத்தால் நாட்டுக்கு நல்ல வளர்ச்சி இருக்கிறது என்பது உண்மை தான் இன்றைய நிலையில் மின்சாரம் என்பது இல்லா விட்டால் சுவாசிக்க காற்று இல்லாமல் உயிர்கள் எப்படி மறித்து போகுமோ அதை போலவே மின்சாரம் இல்லாமல் வளர்ச்சியும் நின்று போகும் ஆனால் அந்த மின்சாரத்தை பெறுவதற்கு அணுவுலை மட்டும் தான் ஒரே வழி என்பதை ஏற்றுகொள்ள முடியாது.

சர்வதேச அளவில் எந்த நாட்டிலும் முழுமையான மின்சார தேவையை அணுவுலைகள் பூர்த்தி செய்ய வில்லை செய்யவும் முடியாது. கூடங்குளம் அணுவுலையில் இருந்து பெறப்போவதாக சொல்லப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்த பட்சம் தமிழ்நாட்டு மின்சார தேவையை கூட பூர்த்தி செய்யாது.

அணு மின்சாரத்தால் ஆக்கபூர்வமான விளைவுகளை விட அழிவுகளே அதிகம் என சொல்லலாம். மனித தவறாலோ இயந்திர கோளாறாலோ இயற்க்கை சீற்றத்தாலோ ஒரு சிறிய விபத்து ஏற்பட்டால் கூட அதன் விளைவுகள். மிக மோசமானதாக இருக்கும். அணுகுண்டுகள் வினாடி நேரத்தில் பல உயிர்களை காவுகொள்ளும் என்றால் அணுவுலை நின்று நிதானமாக பல உயிர்களை பறித்து விடும். பலரை நிவாரணம் செய்ய முடியாத அளவிற்கு பாதிப்படைய செய்து விடும். அதனால் மட்டுமே அணுமின்சாரம் வேண்டாம் என்று இயற்க்கை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

விபத்து ஆபத்து எல்லா துறையிலுமே இருக்கிறது. சாதாரணாக சைக்கிளில் சென்றால் கூட ஆபத்து இருக்கிறது. ஆபத்தை மட்டுமே பார்த்தால் வளர்ச்சியை எப்படி அடைய இயலும்.

ஒரு ரயில் விபத்திற்கும் அணுவுலை விபத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அணுவுலையில் விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சி சம்மந்தப்பட்ட நிலபகுதியோடு நின்றுவிடாது கதிர்கள் காற்றின் மூலமாக பயணப்பட்டு பல பகுதிகளை சூன்ய பிரதேசமாக மாற்றிவிடும். அந்த பகுதியில் பல நூற்றாண்டுகள் எந்த உயிர்களும் வாழ முடியாத நிலை உருவாகி விடும்.


ப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகள் இந்த அணுவுலையால் எந்த அபாயமும் ஏற்படாது என்று சொல்கிறார்களே பிறகு எதற்க்காக பயப்பட வேண்டும்?

       ரு சினிமாகாரனிடம் போய் திரைப்படங்கள் எடுக்கபடுவது நிறுத்தப்பட்டு விட்டால் என்ன நிகழும் என்று கேட்டால் உலகமே அழிந்து விடும் என்று பதில் சொல்வான் காரணம் அவனுக்கு சினிமா மட்டுமே தெரியும் அவற்றால் ஏற்படும் சமூக விளைவுகளை பற்றி அதிகம் தெரியாது. அப்துல்கலாம் அவர்களின் கூற்றை இந்த வகையில் நம்மால் எடுத்துகொள்ள இயலாது காரணம் அவருக்கு அணுகசிவால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்குமென்று நம்மைவிட அதிகமாக தெரியும். ஆனாலும் அவர் ஒரு சாதாரண சினிமாக்காரனை போல் மக்களை மயக்குவதற்காக பேசுகிறார். இது நமது நாட்டின் மிகபெரிய துரதிஷ்டம்.


ப்படியென்றால் அணுவுலை எதிர்ப்பாளர்கள் மட்டும் தான் மக்களுக்கு துயரம் வரக்கூடாது என்று நினைக்கிறாகள் மற்றவர்கள் அனைவரும் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

     ப்படி நான் கூற வேண்டாம் என்று தான் விரும்புகிறேன். ஆனால் இந்த விஷயத்தின் நடைமுறையை பார்க்கும் போது அப்படி கூறவேண்டிய நிலை வந்துவிடுமோ என்று அச்சபடுகிறேன். காரணம் காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி கொண்டுவந்த திட்டம் அதை மாற்ற கூடாது என்று நினைக்கிறார்கள் பாஜக இந்த போராட்டத்தில் கிருஸ்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அதில் நாம் நியாயத்தை பேச வேண்டாம். என்று கருதுகிறார்கள் திமுக அதிமுக போன்ற மாநில கட்சிகளுக்கு அணுவுலையால் ஏற்படும் மக்கள் பாதிப்பை விட டெல்லி அரசாங்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்வதே மிக சிறந்தது என்று தோன்றுகிறது. அதனாலேயே அவர்கள் நடக்கும் காரியம் அநியாயம் என்பதை நன்றாக தெரிந்திருந்தும் சுயநலத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.

தமிழக அரசாங்கம் இந்த விஷயத்தை மிக கவனமாக பரிசிலித்து செயல்பட வேண்டும் காரணம் அணுவுலை எதிர்பாளர்களுக்கு பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லை என்றவுடன் பல சிறிய தமிழ் தேசிய பிரிவினை வாத அமைப்புகள் ஆதரவு கொடுக்கின்றன. போராட்ட களத்தில் மிக முக்கிய பங்கு பணியாற்றும் மீனவ மக்களை இந்த அமைப்புகள் தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்த துவங்கினால் வருங்காலத்தில் தென்தமிழகத்தில் மிகபெரிய வன்முறை சம்பவங்கள் நிகழலாம் எனவே வரக்கூடியதை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும்.ப்படி என்றால் கூடங்குளத்தில் அணுவுலை வேண்டாம் என்கிறீர்களா?

  கூடங்குளத்தில் மட்டுமல்ல உலகில் எந்த மூலையிலுமே அணுவுலை என்பது தேவையில்லை பயங்கரவாதத்தை எப்படி மனித சமூகம் வெறுத்து ஒதுக்குகிறதோ? அதே போலவே அணுவுலைகளை வெறுத்து ஒதுக்க வேண்டும் அணுவுலை என்பது உலகிற்கு மிகபெரிய அச்சுறுத்தல்


+ comments + 19 comments

rompa nanri sir ethunal varikkum nanum entha anuminilaya ethirpavargal panam vangi kondu poradukirakal yenu ninaithen eppathan unmai theriyathu.

நன்றி குருஜி உங்களின் கருத்து மிகவும் உண்மை. உலகின் எந்த மூலையிலும் அணுஉலை தேவை இல்லை. காரணம் இயற்கை அழிவு, எந்திர கோளறு என்று எவை ஏற்பட்டாலும் அனுகசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதைவிட கொடுரமான ஒன்று அணுகழிவுகளை கடலில் சேர்பதனால் ஏற்படும் விளைவுகளே. அனுகழிவுகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு நீரின் தன்மையையும், நீர் வாழ் உயிரினங்களின் தன்மையும் பெரிதாய் பாதிக்கும். மொத்தத்தில் தமிழக மக்களின் விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக தமிழகத்தில் அணுஉலை திறக்க ஏற்பாடு செயப்படுகிறது. அணுஉலை திறக்கப்பட்ட மூன்று மாதத்தில் 60 சதவிகித மக்கள் தொகை குறைய வாய்புள்ளது. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல இவ்வுலகிற்கே ஏற்படவிருக்கும் ஒரு மாறுதல். இது இயற்கையின் விதிவிலக்கு. நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

கவி.சுந்தர்.மனநூல் ஆய்வாளர்..
எண்ணம் போல் வாழ்க.

Anonymous
17:51

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்கையில் ஆபத்தானது இல்லாமல் இருக்காது. ஒரு விமானத்தை விண்ணில் செலுத்தும் விமாநிக்கும் சரி, ஒரு ரயிலை இயக்கும் ரயில் ஓட்டுனருக்கும் சரி, ஒரு பஸ்ஸை ஓட்டும் டிரைவரும் சரி அவர்கள் அவர்களுடைய வாகனத்தை விட்டு இறங்கும் வரை அவர்களுடைய உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது, அவர்களை நம்பி ஏறிய பயணிகளின் உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது. இப்படி எல்லோருமே நம்பிக்கையின் பேரில் தான் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். இதே தமிழ் நாட்டில் தான் கல்பாக்கத்தில் அனல் மின் நிலையம் ஒன்று உள்ளது. அது ஆரம்பிக்கும் போது இது போல் பிரச்சனை ஒன்றும் இல்லையே ஏன்? அப்பொழுது எல்லாம் மக்கள் எழுத படிக்க தெரியாமல், பொது அறிவு இல்லாமல் இருந்திருப்பார்களோ? இப்போது எதிர்ப்பு காட்டுபவர்கள் எல்லோரும் எங்கே இருந்தார்கள் என்று தெரிய வில்லை? ஏன் சமீபத்தில் சிவகாசி மதளிபட்டியில் நடந்த வெடிவிபத்தில் பலியானவர்களை இவர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை? அணு ஒரு பேராபத்து என்றால் பட்டாசுகளில் உள்ள வேதி பொருள்களும் பேராபத்து தானே? இதற்காக பட்டாசு ஆலைகளை மூடிவிட்டால் அங்குள்ள மக்களின் பிழைப்பிற்கு என்ன வழி? ஆக வாழ்க்கை என்பதில் ஆபத்தானது எந்த சுழலிலும் ஒட்டிக்கொண்டேதான் இருக்கும். எந்த ஒரு ஆபத்தும் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வருவது கிடையாது. அது போல் எந்த ஒரு அரசாங்கமும் தன் தாய் நாட்டு மக்கள் பேராபத்தில் சிக்கி மாண்டுவிட வேண்டும் என்று எப்போதும் நினைக்க மாட்டார்கள், அப்படி நினைக்கும் பட்சத்தில் நாமெல்லாம் அகதிகளாக இருப்போமே தவிர நம் நாட்டின் சட்ட திட்டங்களை இப்படி சுதந்திரமாக, வெளிப்படையாக விமர்சிப்பவர்களாக ஒருக்காலும் இருந்திருக்க மாட்டோம். ஆகவே நம் நாடு நமக்கு எந்த விதத்திலும் நன்மையே செய்யும் என்று எண்ணுவோமாக.

Sir your post is good but you have to just think from where the problem has its start?...........and do not criticise anyone.......even our ancesters used atoms (from many tamil ilakiangal) ...........do not support such activities and help the government(as we are the government)..................if it is so then this project can be opposed when it was start and why did they do so?...........

kunnakudimashthaan- koodangulam
00:29

அணுவுலை வேண்டுமா? வேண்டாமா? என்று இங்கே உட்காந்து வெட்டி பேச்சி பேசாதீங்க அணுக்கசிவால் ஏற்பட்ட அபாயத்தை ரஷ்யாவில் செர்நோவில் நகரத்தை போய் பாருங்க மனிதர்கள் யாருமே இல்லாத கட்டடங்கள் மட்டுமே பேய் மாதிரி நிற்கிற கொடுமையை பார்த்த பிறகு அணுவுலை எப்படி பட்ட கொடிய அரக்கன் என்பதை புரிந்து கொள்வீங்க அந்த ஊரில் மனுஷ ஜாதி ஒன்றிரண்டு வருஷமில்லிங்க ஒரு ஆயிர வருஷம் வாழ முடியாதாம். இந்த நிலம நம்ம நாட்டுக்கு வருணுமா?

kunnakudimashthaan- koodangulam
00:34

ஹாலோ சார் இந்த போராட்டம் இப்போ துவங்கினது இல்ல ராஜீவ் காந்தியும் கோர்பச்சேவ்வும் ரஷியாவில் கையெழுத்து போட்டாங்களே அப்போது துவங்கியது கன்னியாகுமரியில் போராட்டமும் துப்பாக்கி சூடும் உயிர் பலியும் நடந்தது சரித்திரம் கால்நூற்றாண்டு காலமா போராடி வருகிறோம். அடிநுனி தெரியாம அழகா இங்கிலிசுல பேசாதிங்க வயிறு எரியுது

Anonymous
16:17

சார் பீச் பக்கம் யாரும் போகாதீங்க சுனாமி எப்ப வேணும்னாலும் வந்து தூக்கிட்டு போயிடும், வாந்தி பேதி உள்ள குழந்தைகள் பக்கம் யாரும் போகாதீங்க உங்களுக்கும் வாந்தி பேதி ஆயிடும், கண்ணு தெரியாதவர் ஒருத்தர் ரோட்ட கிராஸ் பண்ண கேட்டா உதவி செய்யாதீர்கள் உங்களுக்கும் கண்ணு தெரியாம போயிடும், அணு உலைய திறக்காதீங்க நாமெல்லாம் நாசமாபோயிடுவோம் என்ன சார் பேசறீங்க நீங்க? ஜப்பான் நம்ம விட பரப்பளவிலும் சிறியது, மக்கள்தொகையிலும் சிறியது ஆனால் துயரங்களை நம்மை விட பல மடங்கு சந்தித்து உள்ளது. ஒரு அணுகுண்டினால் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பையும் அறிந்தவர்கள். (ஹீரோஷீமா, நாகசாகி) அணுவைப் பற்றி அணு இந்த அளவு கொடூரமானது என்பது தெரிந்தும் ஏன் அவர்கள் தங்கள் நாட்டில் அணு உலைகளை நிறுவினார்கள். ஹீரோஷீமா, நாகசாகி விபத்தை நாம் நம் கண்ணால் பார்க்க வில்லை ஆனால் சமீபத்தில் ஜப்பானில் வந்த சுனாமியை உலகமே கண்டது. எல்லோருமே ஜப்பானின் காலம் இருண்ட காலம் ஆகி விட்டது என்றுதான் எண்ணினோம். ஆனால் இப்பொழுது சுனாமீயால் (செயற்கையால் அல்ல இயற்கையால்) அணு உலைக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் சரி செய்து மக்களுக்கும் எந்த வித பாதிப்பும் (உயிர் பலி இல்லாமல்) இல்லாமல் உலகையே அவர்களை பார்த்து வியக்க வைத்து விட்டார்கள். நம் நாடு ஜப்பானை விட பல மடங்கு பாதுகாப்புள்ள வளிமுறைகளைத்தான் கூடங்குளத்தில் பின்பற்றி உள்ளது. ஆகவே நம் அரசாங்கம் நமக்கு எல்லாவிதத்திலும் நன்மையே நினைக்கும் என்று எண்ணுவோமாக!

Anonymous
19:48

Foreign force is behind this movement... anti-national elements should be found and funished

Radja
00:14

அய்யா , நீங்க அணு உலைய சுனாமி, வெடிபொருள் கூட ஓட்டுப் பாக்குறீங்க..ஆனா, அது அவ்ளோ சாதாரணமானது இல்ல..மெதுவா கொல்லுற விஷம் கூட அணு சக்தி இடாகாது. சுனாமி வந்தா நம்ப தான் காலியாவோம், ஆனா, அணு வெடிச்சா அதோட விளைவு, நம்பளோட நாலு சந்ததியா தாக்கும்..
அப்புறம், உங்களுக்கு அரசியல், புபிசார் அரசியல் பத்தி தெரியாது-ன்னு நேநெகிறேன், அரசாங்கம் எப்பவுமே தன பிரஜைகளின் நலனை எண்ணி ஓடாது, பெரும் சமயங்களில், பணத்தினை தான் தன குறிக் கொலாகாக வைக்கும், முக்கியமாக, வளரும் நாடுகளின் கதி அது தான்.. உதாரணம் சீனம்.

இக்கருத்து Mr Anonymous அவர்களுக்கு, கடலில் சுனாமி வரும் என்பது உண்மை. அதே கடலில் தான் முதலையும் வாழும். முதலைகள் அதிகம் இருக்கின்ற இடத்தில் குளிக்க நீங்கள் தயாரா?. சாலையை கடக்க நினைப்பவன் குருடன் என்று உதவுவது தவறல்ல அவன் குடிகாரன் என்று தெரிந்து உதவுவது எப்படி சாத்தியம். இயற்கைக்கு புறம்பான எந்த செயலும் அழிவை நோக்கி வீரநடை போடும் என்பதே உறுதி. நீங்கள் அணு உலைக்கு அருகில் வாழ தயாரா?. உங்களின் பெயரை கூட வெளியிடாமல் கருத்து தெரிவித்ருக்கும் பொழுதே தெரிகிறது நீங்கள் படிப்பில் கெட்டிக்காரர் அனுபவ வாழ்வில் தோல்வி கண்டவர் என்று.

கவி.சுந்தர்.மனநூல் ஆய்வாளர்..
எண்ணம் போல் வாழ்க.

எங்கே போய் இருந்தார்கள் . அணு உலை கட்டி முடிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு அணு உலை செயல் படத்துவங்கும் சமயம் போராட்டம் எதற்கு . யார் தூண்டி விடுவது. யாருடைய வேலை. பத்து மாதம் முடிந்து குழந்தை பிறக்கும் நேரத்தில் குழந்தை வேண்டாம் என்று சொல்வது போல் உள்ளது தற்பொழுது நடக்கும் அணு உலை வேண்டாம் போராட்டம் . யாரை ஏமாற்றும் வேலை . அணு உலை தேவையில்லை என்பதில் மாற்று கருத்து இல்லை . ஆனால் தற்பொழுது நடக்கும் அணு உலை வேண்டாம் போராட்டம் முட்டாள் தனமானது .

நண்பர் சுந்தரேசன் அவர்களே நீங்கள் சொல்வதை சற்று திரும்பவும் சிந்தித்து பாருங்கள். ஒருவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து நாள் குறிக்கப்பட்டுள்ளது நாளை காலை திருமணம். அதற்குள் பெண்ணினால் பெரிய ஆபத்து என்று தெரிகிறது பின்பு அந்த பெண்ணை மனம் செய்து கொள்விர்களா?. திருமண ஏற்பாடுகள் வெகு விமரிசையாகவும் செலவுகள் அதிகமாக செய்துவிட்டோம் என்றும் அப்பெண்ணை மணக்க தயாரா?. திருமணமே முடியல்வில்லை அதற்குள் குழந்தையை பற்றி பேச்சு. இப்பொழுது செய்திருக்கும் செலவுகளை விட அணு உலை துவங்கிய பின் அதை பராமரிக்கவும் அதை மூடவும் செலவுகள் அதிகமாகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இன்னும் தாலி கட்டவில்லை ஆகையால் திருமணத்தை நிறுத்துவதே உத்தமம். இல்லை நான் அவளுடன் தான் வாழ்வேன் என்றால் அதன் பின்விளைவுகளை ஏற்கும் பக்குவம் தேவை.

கவி.சுந்தர்..மனநூல் ஆய்வாளர்..
எண்ணம் போல் வாழ்கை.

சீர்மிகு அன்புள்ள வரே,
அணு ,அணு சக்தி அதனால் மக்களுக்கு தீமை ,வர்க்கம் போய்விடும் ,சந்ததி இருகக்காகது என்னறுபோராடும் மக்கள் ஒருபுறம் இறுக்க .

இன்று அணுவினால் ,கதிர் வீச்சால் ,மக்கள் க்களுக்கு ஏற்படும் தீமை களை விட ,பிற செய்ல்கள் எவவ்ளு தீமை என்று யாரும் கணக்கில் கொள்வதில்லை .

புகை ,புகை இலலை,சிகரட் ,பீடி ,பாண் பார்க் ,இன்னும் வெள்ளை poweder ,கஞ்சா,மற்றும் பல பொருட்கள் மக்களை சீரழித்து கொண்டுள்ளது .அதை யார்ரும் எதிர்த்து போராடவில்லை ?ஏன் ?

கை யில் பணம் இல்லையா ? போனால் போகு து என்று விட்டு விட்டார்களா ?

இதானால்அதிகம் பேர் ஒனும் பதிக்கவில்லை என்று கணக்கு சொல்கிறகள?யாரு துண்டி விட வில்லையா?
பின்னல் உத உம் என்று ,அன்று இதை பிரச்சனை ஆக்கலாம், என்று உள்ளார்களா ?

சரி ,இந்த பிளாஸ்டிக் -பை ,தெர்மகோல் இன்னும் பல ,தீமை செய்வது தெரியும் என்று நினைக்கிறன் .
பிளாஸ்டிக் பைகள் ஏற்ரிப்ப்பதால் எற்படும்புகை என்ன தீமைகள் இந்த மக்கள் ஏற்படும் ?என்று தெரியாத ?
தீமைகள் ;நச்சு புகை சுவாசி ப்பதால்,குறையுள்ள பிள்ளை பிறக்கும் ,தோல்நோய் ஏற்படும் ,சுவாச பைகள் வீணாகும் ,
சுவாச கோளாறுகள் ஏற்படும் ,ஏன் புற்று நோய்உண்டாகும் ,இன்னும் பல நோயை உண்டாக்கும் இவேர்றைஒழிக்க யார்ரும் முன்வரவில்லை ?
தினம் தினம் எவலோவு குப்பை எறிக்கபடுகிறது அதனுடன் பிளாஸ்டிக் பைகளும் சேர்ந்து எரிந்து எப்படி புகை நம் காற்றில் கலந்து விடுகிறது .எங்கையோகலந்தால் நமக்கு என்ன ,அதனால் நமக்கு ஒன்று மில்லை என்று கூறி தட்டி கழிக்கக் முடியாது .
அணுக்கதிர் வீச்சிமட்டும் நம்மை தாக்கவில்லை ? காற்று,தண்ணீர் மாசுகளும் நம்மை தாக்குகிறது .கடல் தண்ணீரில் குருட்என்னை கலப்பது ,பிளாஸ்டிக் சாமான்களை போட்டு கடல் மாசு படுகிறது ,அதனால் கடல் மீன் வழியாக நமக்கு நோய் ஏற்பாடு கிறது .
சமையல் பொருளில் கலப்படம் ,அதனால் புற்று நோய் ஏற்படுகிறது .மருந்தில் கலப்படம் அதனால் உயீர்போகிறது .

தினம் வெட்டப்படும் மரங்கள் எவளோ தெரியுமா ?காடுகள் அழிக்க படுவது தெரிமா?
தினம் நம் இந்தியாவில் வெட்டப்படும் மரங்கள் --இரண்டு கோடி -
அதனால் யாரும் மக்கள் சாகவில்லையே ?--------காடுகுறைதாள் ,மழை இலலை ,
நீர் இன்றி அம்மை யாது உலகு , பூமி வெப்பம் ஆகும் ,பனி உருகும் ,கடல் மட்டம் உயரும் ,அதன் பலன் நமக்கு தெரியும் .நாம்போராடவில்லை .நம்மை யாரு ம் தூண்டவில்லை.அதுதான் காரனம்.
நம்மை அன்னியரிக்கு விற்பதற்கே எல்லாம்
நாம் திரும்ப வெள்ளையர் கள் அடிமை ஆகவேண்டும் .நம்முடிய செல்வங்கள் கொள்ளை போக வேண்டும் இதுதான் அவர்களின் குறிக்கோள் .அதை நாம் புரிந்து கொளவேண்டும் .நாம் என்றும் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் .

நண்பர் விஜயராகவன் அவர்களே தங்களின் கருத்துபடி தனிமனித கட்டுப்பாடும், விழிப்புணர்வும் இல்லை என்பது தெளிவாக புரிகிறது. உங்களின் கருத்துக்கு நன்றி. இதை இன்னும் சற்று தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள அணைத்து தீமைகளின் வாழ்நாள் கெடுபலனை இந்த அணுஉலை ஒரே நாளில் கொடுத்துவிடும். சற்று நாம் இங்கு சிந்திக்க வேண்டும். தனிமனித கட்டுப்பாடு வீட்டின் நலன் நாட்டின் நலன் அனைத்தையும் காக்கும்.

கவி.சுந்தர்...மனநூல் ஆய்வாளர்..
எண்ணம் போல் வாழ்க.

best alternative is solar energy.

நண்பர் சுந்தர் அவர்களே
யாரோ பெண்ணினால் பெரிய ஆபத்து என்று சொன்னால் உடனே நம்பி திருமணத்தை நிறுத்தினால் பெண்ணிற்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் ஏற்படும் துன்பங்களையும் நினைத்து பார்க்க வேண்டும். என்றோ வரும் மரணத்தைக் கண்டு பயந்து உடனே சாக வேண்டும் என்று சொல்வது போல உள்ளது. குழந்தை இன்னும் பிறக்க வில்லை அதற்குள் குழந்தை வளரும் சமயம் ஏற்படும் செலவுகளைப் பற்றி சொல்லுகிறீர்கள் . அணுஉலைகளினால் ஏற்படும் நன்மைகளை பாருங்கள். என்றோ தீமைகள் ஏற்படலாம் என்று இன்றே குழந்தையை கொல்ல வேண்டாம் . யாரோ எங்கிருந்தோ தூண்டி இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்துகிறார்கள் . நம்பி பலியாகவேண்டாம் .

நண்பர் சுந்தரேசன் அவர்களே உங்களின் பக்குவமின்மையை கண்டு பரிதாபபடுவத அல்லது பாராட்டுவத என்று தெரியவில்லை. ஒதுங்க வந்த நாய் ஊர் நாயை விரட்டுவது போல அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்டையில் குறைந்த விலையில் மின்சாரம் கொடுத்து நம் நாட்டு மக்களை பாழடைந்த கிணற்றில் தள்ளிகொன்ருகின்றனர் இன்றைய அரசியல் தலைவர்கள். நீங்கள் நன்றாக சிந்திக்க வேண்டிய ஒன்று வளர்ச்சியடைந்த நாட்டிலும் மனிதன் ஓடிக்கொண்டுதான் இருக்கிறான். நாம் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை அழிவுகளை நோக்கி வீரநடை போட்டுக்கொண்டிருகிறோம் என்பதை மறந்து விடாதிர்கள். உங்களின் வெற்றி பத்து பேரின் விழ்ச்சியில் தான் உள்ளது என்றால் நீங்கள் பக்குவமின்றி போட்டி உலகில் வாழ்கிறீர்கள் என்று தான் பொருள். அதாவது மகிழ்ச்சி தேடி மகிழ்ச்சி தொலைத்த கதை தான் உங்கள் கதை. நல்லது நண்பரே உங்களின் சேவை வளர வாழ்த்துக்கள்... பிரபஞ்சத்தின் அனைத்து செயல்களும் மிக துல்லியமாக நிகழ்கின்றன.

கவி.சுந்தர்.. மனவியல் நிபுணர்..
எண்ணம் போல் வாழ்க...

நண்பரே நீங்கள் தான் பக்குவமின்றி இருக்கின்றீர்கள்
1 . ஒதுங்க வந்த நாய் ஊர் நாயை எப்படி விரட்ட முடியும் .ஏதாவது ஊர் நாய் உதவி இருக்கும்.
2 . அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் தரும் அரசியல் தலைவர்களை உருவாக்கும் நம் மக்கள். மக்கள் திருந்தாதவரை அரசியல் தலைவர்கள் இவ்வாறு தான் செய்வார்கள்.
3 . வளர்ச்சியடைந்த நாடுகளில் மின்சார தட்டுபாடு இல்லை.
4 . வெற்றி பெற்ற ஒருவன் இருந்தால் நிச்சயம் தோல்வி பெற்ற ஒருவன் இருப்பான். மறக்க வேண்டாம் . இது இயற்க்கை . மாற்ற முடியாது .
5 . நான் யதார்த்த உலகில் வாழ்கிறேன் . ஏன் எதற்கு எப்படி என்று எனக்குள் கேட்டு கொள்கிறேன் . முடிவு நம் மக்களின் அறியாமையை கண்டு மனம் நொந்து கொள்கிறேன் . நல்ல அரசியல் தலைவர்களை தேர்ந்து எடுக்க முடியாமல் தேர்ந்து எடுக்க தெரியாமல் குற்றவாளிகளையே மறுபடியும் தேர்ந்து எடுக்க உதவும்
நம் அரசியல் அமைப்பு மாற வேண்டும் . மன்னர் ஆட்சி ஒழிந்து குடும்ப ஆட்சி ஏற்பட்டு உள்ளது . இதை மற்ற முடிந்தால் ? . முடியாது மக்கள் மனம் மாறும் வரை .
தலைவர்களின் துதி பாடுவதை நிறுத்தும் வரை.
6 . மகிழ்ச்சி தேடி மகிழ்ச்சி தொலைத்த கதை என்னது அல்ல . நம் நாட்டு மக்களுடையது .
7 . ஏதாவது விஷயம் கிடைக்காத என்று எதிர் பார்த்து மக்களின் நலனைக் கருதாமல் அரசியல் லாபம் எதிர்பார்க்கும் தலைவர்களை நம்பி விவரம் தெயரியாமல் புரியாமல் போராட்டம் நடத்துவதால் மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும் .

Anonymous
02:53

தமிழ்நாட்டில் விளைநிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்டாக மாறிவருகின்ரன மாநிலத்தின் பாதி அரிசி தேவையை கர்நாடகா,ஆந்திரா பொன்னி அரிசிதான் நிறைவுசெய்கின்ரன நம் எல்லாதேவைக்கும் மற்ற மாநிலத்தையை நம்மி உள்ளோம். அணு உலையாவது வைத்து மின்சாரம் உற்பத்தி பண்ணி அதை கொடுத்தாவது நாம் எதாவது பெற்றுகொள்ள முடியும்


Next Post Next Post Home
 
Back to Top