( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கலைஞரின் குரு ஏற்ற கடவுள் !

   ன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வாசகத்தை கலைஞர் கருணாநிதியின் குருவான அண்ணாத்துரையும் ஒருகட்டத்தில் ஏற்றுக் கொண்டார்

கடவுள் ஒருவர் என்பதிலும் அவர் எங்கும் இருக்கிறார் என்பதிலும் சில அதிமேதாவிகள் தவிற வேறு யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை

எங்குமிருக்கும் இறைவனை கோயிலுக்கோ சர்ஜ்க்கோ மசூதிக்கோ சென்றுதான் வணங்க வேண்டுமா?

எந்த இடத்தில் வேண்டுமானாலும் வணங்க கூடாதா என பலருக்குத் தோன்றும்

அப்படித்தான் வணங்க வேண்டுமென எந்த மதமும் கட்டாயப்படுத்த வில்லை

ஆனால் பாலை உற்பத்தி செய்யும் சக்தி பசுவின் உடல் முழுவதும் இருக்கிறது.

அதன் காது தொடங்கி வால் நுனி வரையில் பாலுக்கான அணுக்கள் நிரம்பியிருக்கிறது.

அதற்காக பசு காதுகளை பிடித்து பால் கறந்து விட முடியுமா?

காம்புகளை பிடித்து கறந்தால் தான் பால் கறக்க முடியும்.

பகல் பொழுதில் சூரிய வெளிச்சம் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது என்பதற்காக பஞ்சு பொதியை வெயிலில் தூக்கி போட்டால் நெருப்பு பிடித்து எரியுமா?

சூரியகாந்த கண்ணாடிக்கு கீழ் பஞ்சை வைத்தால் தான் நெருப்பு பிடிக்கும்.

அதே போலத்தான் கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். ஆனால் வழிபாட்டு தலங்களில் விஷேஷமாக வெளிப்படுறகிறார்.

நமது வீடுகளிலும், அலுவலகங்களிலும், வெளிப்புறங்களிலும் பல்வேறுபட்ட எண்ண அதிர்வுகள் நிறைந்தியிருக்கிறது.

நமது துக்கமும், சந்தோஷமும், அகங்காரமும், காதுக்கு கேட்காத அதிர்வுகளாக இந்த பகுதிகளில் நிறைந்திருப்பதனால் தான் நமது மனம் இங்கு எல்லாம் அமைதி அடைவது இல்லை.

ஆலயத்தில் கொள்ளையடிக்க வந்தவன் கூட ஒரு கணமேனும் இறை சிந்தனைக்கு ஆட்படுவான்.

பல்வேறுபட்ட மக்கள் தங்களது பயபக்தியாலும் புனித எண்ணங்களாலும் ஆலயத்தை பரிசுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

எனவே அங்கிருந்து வெளிப்படும் இறை சக்தியை மிக சுலபமாக நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எல்லாம் சரி கடவுள் ஒருவர்தனே நமது எல்லா விதமான தேவைகளுக்கும் அவர் ஒருவரிடமே வேண்டிக் கொள்ளலாமே

அதை விட்டுவிட்டு படிப்பு வர ஒரு சாமி நோய்போக வேரொறு சாமி என்று வணங்க வேண்டும் என்றும் சிலருக்குத் தோன்றக் கூடும்

நமது நாடு முழுவதும் ஜனாதிபதியின் ஆட்சிதான் நடைபெறுகிறது.

நாட்டின் ஒவ்வொரு அசைவுமே அவரது அதிகாரத்திற்கு உட்ப்பட்டது தான்.

பிரதம மந்திரியும் முதலமைச்சர்களும் இதர பிரதிநிதிகளும் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க உள்ளவர்கள்.

அதற்காக கிராம பஞ்சாயத்தின் ஆண்டு வரவு செலவை ஜனாதிபதியா வந்து தீர்மானிக்க முடியும்?

அதற்கு என்று இருக்கும் தனித்தனி அலுவலர்கள் தான் அதை செய்ய வேண்டும்.

ஆயினும் ஊர் தலையாரி கூட ஜனாதிபதி அதிகாரத்தின் ஒரு சிறு கூறுதான் என்பதை நாம் மறக்க கூடாது.

கடவுளும் ஒருவர் தான். எல்லாம் வல்லவர் தான். ஆனாலும் அவரது அதிகார அம்சங்களாக பல தேவதைகள் பல காரியங்களை செய்கிறார்கள்.
     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 3 comments

Anonymous
13:38

ஒவ்வொவொரு தேவைகளுக்கும் ஒவ்வொவொரு கடவுள் என்பதற்கான விளக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி குருஜி

குருஜி அவர்களே ஒருவரை தாழ்த்துவதன் மூலம் ஒருவர் எவ்வாறு உயர முடியும்?. பெரியார் கடவுள் இல்லையென்று சொன்னார். ஆனால் ஒரு சக்தி பிரபஞ்சத்தை இயக்குகிறது என்றும் சொல்லியிருக்கிறார் அல்லவா. இன்று நித்தியானந்தா போன்ற கருப்பாடுகளை பற்றி தங்களின் கருத்து என்ன?. இது போன்ற போலிகளை பெரியாரின் காலத்தில் அவர் கண்டிருக்க கூடும் அல்லவா?. உங்களை உண்மையான துறவி என்று நான் முழுமையாக நம்புகிறேன். அதே விநாடி துறவறம் பெற்ற அனைவரும் துறவியாகவே வாழ்கிறார்களா?. பகவத் கீதையில் பரமன் என்ன சொல்கிறார் "உலகின் இரட்டை தன்மைக்கு, தான் ஒருவனே காரணம்" இவைகளை அறிந்த நீங்கள் ஏன் ஒருவரை தாழ்துகிறிர்கள். இப்பொழுது உங்களுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்?. கடைசியாக ஒரு கேள்வி இக்காலத்தில் ஆரியன் ஒருவன் தொழில் நோக்கின்றி மந்திரத்தை சொல்கிறானா?. மன்னிக்கவும் குருஜி நான் ஒருவரையும் தாழ்த்துவதை விரும்பாதவன். நேர்மறை எண்ணங்களுடன் தினத்தை துவக்குங்கள். தவறு இருப்பின் உங்களின் அறிவுரை எனக்கு தேவை. அறியாதவன் செய்வது தவறல்ல.

கருத்து பகிர்வுக்கு நன்றி.
கவி.சுந்தர்..மனநூல் ஆய்வாளர்.,
எண்ணம் போல் வாழ்க.

Anonymous
20:14

Manmohan Singh is the only fellow to be blamed for all anti tamil activities. He has big personal interest in Nuclear deals and that is why he bribed inside the Parliament to get the treaty passed. Jaya lalitha can only pity and can not do anything as we can see in the case of training given secretly to Srilankan army in Tamilnadu by MMS Government. She has staged her protest but MMS has declared that he will train the Tamil killers only in Tamil Nadu. She can not stop a central Government project in Tamil Nadu legally and constitutionally. High Court and Supreme Court have approved the project and so she is helpless. It is only in the hands of the anto Tamil MMS. Karunanidhi can stop it as DMK is a partner in the Central Government. But, he will not bother even if Kani mozhi is killed by MMS Government, as 1,86,000,000,000 Rs is common and combined booty.


Next Post Next Post Home
 
Back to Top