( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

காமத்தின் சின்னம் தராசு !       மேஷம் முதல் துலாம் வரையில் ஜாதக கட்டத்தை எண்ணிக்கொண்டு வந்தால் துலாம் ராசி ஏழாவது ராசியாகவரும் ஒரு ஜாதகத்தில் ஏழாம் இடத்தை களஸ்திர ஸ்தானம் காமஸ்தானம் என்று அழைப்பார்கள் மனிதர்களுக்கும் சரி மற்ற உயிரினங்களுக்கும் சரி இறைவனால் கொடுக்கப்பட்ட காம உணர்வு என்பது மிகவும் முக்கியமானது குறிப்பாக காம உணர்ச்சியின் தராதரத்தை பொறுத்தே ஒரு மனிதனின் கெளவரம் அமைகிறது. 

காமம் என்பது ஒரு மனிதனுக்கு அதிகமாகும் போது அவனது உடல்நலம் பாதிப்படைகிறது. மனமோ கொந்தளிப்பான நிலையை அடைகிறது. அந்த நேரத்தில் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் திறமைசாலியாக இருந்தாலும் வீரனாக இருந்தாலும் தடுமாற்றத்தை அடைகிறான். அதே போலவே ஜாதகத்தில் எழாவது இடம் அல்லது எழாமிடத்தின் அதிபதி தீயகிரகத்தின் சாரம் பெற்று இருந்தாலோ அல்லது தீய கிரகத்திற்குரிய இடமாக இருந்தாலோ மனிதன் புத்தி தடுமாறி படுகுழியில் விழுந்து விடுகிறான். அதே நேரம் காமம் கட்டுக்குள் இருந்தால் அதாவது எல்லை மீறாமல் நெரிபடுத்தபட்டு இருந்தால் எவ்வளவு இக்கட்டான நிலையிலும் சமாளித்து ஒருவன் முன்னுக்கு வந்துவிடுவான்.

களத்திரஸ்தானமான துலாம் ராசியின் சின்னம் துலாக்கோல் அல்லது தராசு ஆகும். தராசின் இரு முனைகளிலும் இரண்டு தட்டுகளால் ஆனது அதே போலவே ஆண்களின் மர்ம உறுப்பும் காட்சி தருகிறது. இதை சூசகமாக சுட்டிக்காட்டவே தராசை எழாவது ராசியின் சின்னமாக நமது பெரியவர்கள் தீர்மானம் செய்திருக்கிறார்கள் தராசு சின்னத்தை இந்த ராசிக்கு கொடுத்ததற்கு வேறொரு காரணமும் உண்டு தராசின் இரு முனைகளும் எந்த பக்கம் கனம் அதிகமாக இருக்குமோ அந்த பக்கம் சாயக்கூடியது. காம உணர்சிகள் அதிகமாகும் போது உடல் உறுப்புகள் சாய்ந்து விடுகிறது. அதாவது கீழ் நிலைக்கு வந்து விடுகிறது. எந்த புறமும் சாயாமல் சரியாக இருப்பதே தராசின் இலட்சணமாகும். காம எண்ணமும் மிகுதி அடையாமலும் தகுதி குறையாமலும் சமமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது வாழ்வின் சிறந்த லட்சணமாக கருதப்படும். சுருங்க சொல்வது என்றால் காம உணர்வு சமமாக இருக்க வேண்டும். 

ஏழாவது ராசியான துலாத்தின் அதிபதி சுக்கிரன் இவரை அசுர குரு என்றும் ஜோதிட நூல்கள் சொல்கின்றன குருவாக இருப்பவர் சிஷ்யர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். அவர்கள் நல்லதை செய்யும் போது பாராட்டி பக்க துணையாகவும் இருக்க வேண்டும். ஆனால் அசுர குருவான சுக்கிராட்சாரியார் தனது நல்ல மாணவன் மாவலி தானம் வழங்கும் போது வண்டு வடிவம் எடுத்து கெண்டியிலிருந்து நீர்வராமல் தடுத்தார் இதனால் தனது ஒற்றை கண்ணையும் இழந்தார். காமம் கூட அப்படி தான் சாதகத்தை மட்டும் பார்க்கும் ஒரே ஒரு கண்தான் அதற்கு உண்டு பாதகத்தை காட்டும் கண் அதற்கு இல்லை உலகத்தையே வளர்ச்சி பாதைக்கு ஜனசமூக விருத்திக்கு அழைத்து செல்லும் உயரிய உணர்வாக இருந்தாலும் சில்லறை தனமான அடிமை உணர்ச்சிக்கு மனிதனை ஆட்படுத்தி நற்செயல்களை தடுத்து விடும். 

எனவே சுக்கிரனை போல் நல்லதை தடுக்காமலும் கீழ்த்தரமான புலனுணற்சிகளுக்கு ஆட்படுத்தமலும் காமம் சமமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே தராசு என்ற சின்னம் துலாம் ராசிக்கு தரப்பட்டு இருக்கிறது. ஜாதகத்தில் கேந்திர பகுதியான ஏழாமிடம் சிறப்பாக அமைந்து விட்டால் மனிதனின் இல்லறம் நல்லறமாக இருக்கும் நல்லறமான இல்லறத்தில் பிறக்கும் குழந்தைகளே சமூக வளர்ச்சிக்கு தூண்களாக இருப்பார்கள். இல்லறம் கெட்டுவிட்டால் குடும்பம் மட்டுமல்ல நாடும் கெட்டு விடும். அதனால் தான் தராசு போல் நீதி வழியில் நின்று காம உணர்ச்சியை பயன்படுத்த வேண்டும் என்பதே நம் முன்னோர்களின் விருப்பம்.+ comments + 7 comments

Anonymous
09:47

பயனுள்ள தகவல்.

Excellent guruji.

Anonymous
16:02

nice it's right

Anonymous
18:57

Nalla vilakkam koduthu irukreengal,nanri

Nalla Seithi...

nal vazhikal

nalla karuthugal


Next Post Next Post Home
 
Back to Top