( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மரணத்தின் சின்னம் தேள் !


     மேஷத்தை முதல்ராசியாக கொண்டு எண்ணி வந்தால் எட்டாவதாக இருப்பது விருச்சிக ராசி ஜாதகத்தில் எட்டாம் பாவத்தை ஆயுள் பாவம் என்று சொல்வார்கள் மனிதனின் ஆயுள் முடிவை இந்த இடத்தின் தன்மையை வைத்தோ அல்லது இவ்விடத்தின் அதிபதியின் தன்மையை வைத்தோ அறிந்து கொள்ளல்லாம். இப்படி மரணகாலத்தை காட்டுகின்ற எட்டாம் ராசிக்கு விருச்சிகம் அல்லது தேள் என்று பெயரையும் சின்னத்தையும் வைத்ததற்கு ஆழ்ந்த காரணம் உண்டு.

தேள் என்ற விஷ ஜந்துவின் உருவத்தை நன்கு உற்று பாருங்கள் அதில் நமது மனித உடம்பின் உள்கட்ட அமைப்பு நிழல் போல தெரியும். தேள் ஒன்றை பிடித்து தலைகீழாக தூக்கி பிடித்தோம் என்றால் அதன் கால்கள் நமது முதுகையும் மார்பையும் இணைக்கும் விலா எலும்புகள் போல தெரியும். அதன் கொடுக்கு பகுதி நமது இடுப்பு பகுதியாக தோற்றம் அளிக்கும் அதே போல அதன் வால் நமது கழுத்து எலும்புகள் போல இருக்கும். தேளின் கொடுக்கு பகுதியில் தான் விஷம் உண்டு அதே போல நமது இடுப்பு பகுதி என்ற மூலாதாரத்தில் நம் உயிர் தங்கி இருப்பதாக யோக சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. 

உயிர் என்பது நுரை ஈரலை போல மூளையை போல ஒரு பெளதிக பொருள் அல்ல அது உடம்பிற்குள் கண்ணுக்குள் தெரியாமல் மறைந்திருக்கும் ஒருவித இயக்க ஆற்றல் இதை நவீன மருத்துவ விஞ்ஞானம் ரசாயன கலவை என்றும் சொல்கிறது. அதாவது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவாகும் ஒருவித ரசாயனமே உயிர் என்பது விஞ்ஞானத்தின் முடிவு. ஆனால் பஞ்ச பூதங்களையே சேர்த்து வைக்கும் சக்தி எதுவோ அதுவே உயிர் அதன் பெயர் இயக்க சக்தி என்பது நமது மெய்ஞானம். எது எப்படி இருந்தாலும் உயிராற்றல் என்பது மூலாதாரத்தில் இருக்கிறது என்பது மட்டும் நிஜம் 

மூலாதாரத்தில் இருக்கின்ற உயிர் சீதோஷ்ண நிலையாலும் உணவு பழக்க வழக்கத்தாலும் உணர்வுகளின் அதீத தாக்கத்தாலும் விஷமாகி விடுகிறது. இந்த விஷ தன்மை முற்றி போன நிலையே மரணம் என்று அழைக்க படுகிறது. மனிதனை தாக்கும் நோய்களோ எதிர்பாராமல் நடைபெறும் விபத்துக்களோ மனித உடலை பாதிக்கும் போது அதனுள் எதிர்ப்பு சக்திகளால் அடக்க முடியாத அளவு ஆற்றல் வாய்ந்த விஷம் விழித்தெழுகிறது இதனுடைய நேரடி தாக்குதலில் உயிர் தாக்குபிடிக்க முடியாமல் கூட்டை விட்டு பறந்து போய்விடுகிறது. 

ஏதாவதொரு வடிவத்தில் விஷமே மனித உயிரை போக்குகிறது என்பதை காட்டுவதற்கு மட்டுமே நமது ஜோதிட அறிஞர்கள் விரும்பி இருந்தால் எட்டாவது ராசியை விருச்சிகம் என்று அழைக்காமல் சர்ப்பம் என்று பாம்பு பெயரை வைத்து அழைத்திருக்கலாம் ஆனால் அவர்கள் உயிர் தங்குமிடம் மூலாதாரம் மட்டுமே என்பதை நமக்கு காட்ட உருவக வழியில் தேள் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்கள். 

இதுமட்டுமல்ல தேள் என்பது நேருக்கு நேராக நம்மை தாக்காது மறைந்திருந்து எதிர்பாராத விதமாக நம்மை தாக்க கூடியது. அதனால் தான் எதிர்பாராமல் நடக்க கூடிய விபத்துக்கள் ஆபத்துக்கள் அனைத்தும் ஜாதகத்தில் எட்டாம் இடத்தை அடிப்படையாக வைத்து கணிக்க படுகிறது. மரணத்தின் சின்னமாகவும் விபத்துக்களின் சின்னமாகவும் தேள் இருப்பதனால் அது ஆயுள் பாவமான எட்டாம் பாவத்தில் விருச்சிகம் என்று அழைக்க படுகிறது.+ comments + 6 comments

Anonymous
10:17

my sign is scorpion

10:47

அற்ப்புதமான பதிவு அழமான கருத்துக்கள் நம் குருஜி அவர்களுக்கு கோடி
நமஸ்காரம் / janardanan k

Nandri

Nandri guru ji

ARUMAI.GURUJI. THANKS

ARPUTHAMANA, UNMAYANA THELIVAI KODUTHATHARKU MIKKA NANDRI GURUJI.


Next Post Next Post Home
 
Back to Top