Store
  Store
  Store
  Store
  Store
  Store

உடனடி பலனைத் தரும் அபூர்வ யாகங்கள்


     ஜிலாதேவி இணையதளத்தின் வாசக இதயங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள் உங்களோடு நேரில் பேசி வெகுநாட்காளாகி விட்டது அதற்கான நேரமில்லை என்பதை விட சரியான மனோநிலை அமையவில்லை என்று சொல்வது சரியாக இருக்கும். காரணம் எதை செய்தாலும் முழு மனதோடும் ஈடுபாட்டோடும் செய்ய வேண்டும் என்பது என் கருத்து பாதி மனதோடு செய்கின்ற எந்த காரியமும் முழுமை பெறாது என்பது என் அனுபவம் ஒரு சில கருத்துகளை புத்தக வடிவமாக கொண்டு வரவேண்டும் என்பதனால் அதற்கான ஆயத்த பணியிலேயே பல மாதங்கள் ஓடி விட்டன. மனது முழுமையும் அதில் இருந்ததனால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை 

இப்போது அந்த பணிகள் ஓரளவு நிறைவை நோக்கி நகர்ந்து விட்டதனால் அடுத்த கட்ட வேலையை துவங்க மனம் ஆயத்தமாகி விட்டது. நல்லது செய்யுங்கள் நல்லதை நினையுங்கள் என்று சொல்லி கொண்டிருத்தால் மட்டும் போதாது அதை நாமும் செய்ய வேண்டும். மற்றவர்களையும் செய்ய வைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படவே ஸ்ரீ குருமிஷன் என்ற அறக்கட்டளையை துவங்கி அதன் மூலம் காரனை பெரிச்சானுர் வடகரை தாழனூர் அரும்பராம்பட்டு காடகனுர் சென்னகோணம் ஆகிய ஐந்து கிராமங்களை தேர்வு செய்து அதில் முதல்கட்ட சேவை பணியாக வஸ்திர தானம் முதல் வயது முதிர்ந்த ஏழைகளுக்கு ஒருமாதத்திற்கான உணவு பொருள்களை வழங்குவது வரை சில பணிகளை செய்ய துவங்கி இருக்கிறோம். 

இதில் மகுடம் வைத்தார் போல் வடகரை தாழனுரை சேர்ந்த ஏழுமலை என்ற கண்பார்வையற்ற ஒருவருக்கு அவர் செய்து கொண்டிருந்த மிக பரிதாபகரமான பிச்சை எடுக்கும் பணியை நிறுத்த சொல்லி அவரும் அவரது மனைவியும் இணைந்து ஒரு சிறு தொழிலை துவங்கி தங்களது வாழ்க்கையை சீர்படுத்தி கொள்ள அவர்களுக்கு தானங்களிலேயே சிறந்த தானமான கோதானம் என்ற பசு தானத்தை வழங்கி அவர்கள் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கை கீற்றை நமது அறக்கட்டளையின் மூலம் வழங்கி இருக்கிறோம். இந்த பணி திறம்பட நடக்க பல நல்ல கனிந்த இதயங்கள் பொருளுதவி செய்தார்கள் என்பது ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும் அந்த அறக்கட்டளையின் பணி இன்னும் சிறப்பாக நடக்க பலர் உதவி செய்து கொண்டே இருக்கிறார்கள். அது மேல்மேலும் தொடரும் என்பதில் எனக்கும் ஐயமில்லை 

இந்த நேரத்தில் ஏழைகளுக்கு பொருளாதார உதவி செய்வது மட்டும் தான் நமது பணியா? அதையும் தாண்டி இறைவனின் அருளை அவர்கள் பெறுவதற்கு உதவி செய்வதும் நமது பணிதானே என்ற சிந்தனை எனக்கு வந்தது. அந்த நேரத்தில் விருதாசலத்தில் இருந்து பேசிய ஒரு அன்பர் வாழ்க்கையில் நாங்கள் பல விதங்களிலும் கஷ்டங்களை அனுபவிக்கிறோம் இல்லாதவனுக்கு பணகஷ்டம் இருப்பவனுக்கு சொல்ல முடியாத பல கஷ்டம் ஆக துன்பங்கள் இல்லாத மனிதர்களே உலகத்தில் கிடையாது. ஆனாலும் ஏழைகளின் துன்பத்திற்கு பல நேரம் பரிகாரம் என்பதே தேட முடியவில்லை அப்படியே தேடி போனாலும் அதற்கு ஆகும் செலவை எங்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை எனவே அதற்கு நீங்கள் ஒரு நல்ல ஏற்பாட்டை செய்யுங்கள் என்று சொன்னார். 

அவர் சொல்வதில் தவறுகள் இருப்பதாக எனக்கு படவில்லை அஞ்சனங்கள் மற்றும் பரிகார முறைகளை பற்றி நான் எழுதும் பதிவுகளை படித்து விட்டு தினசரி பலர் என்னோடு தொடர்பு கொள்கிறார்கள். அவர்களுக்காக பலவற்றையும் நான் செய்து கொடுக்கிறேன். ஆனாலும் அதற்காக அவர்கள் செலவு செய்கின்ற பணத்தின் அளவு சற்று அதிகம் என்று சொல்ல வேண்டும். உதாரணமாக குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக செய்யபடுகின்ற சரஸ்வதி அஞ்சனம் ஒருவர் பெற வேண்டுமென்றால் அதற்கு ரூபாய் 3000 க்கு மேல் செலவாகிறது. லஷ்மி அஞ்சம் சர்வகாரிய சித்தி அஞ்சம், ராஜ வசிய அஞ்சனம், போன்றவைகள் செய்ய இதைவிட பலமடங்கு செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அதற்கு காரணம் அந்தந்த மூலிகைகளை சரியான முறையில் பெறுவதற்கு இவ்வளவு பணம் தேவை படுகிறது. இதை அனைவராலும் கொடுக்க முடியாது. என்பது எனக்கு மிகவும் நன்றாக தெரிகிறது. இதனாலையே பலருக்கும் நம்மால் ஒத்தாசை செய்ய இயலவில்லை. 

எனவே அனைவரும் பயனடைய வேண்டும் அதே நேரம் செலவும் குறைவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆதிகால மக்களும் சரி மன்னர்களும் சரி தங்களது கோரிக்கைகளை வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்ள மிகபெரிய யாகங்களை நடத்தி இருக்கிறார்கள். நம் நாட்டில் உள்ள புராண குறிப்புகளும் சரித்திர ஆதாரங்களும் பல யாகங்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்ற செய்யப்பட்டதாக தகவல்கள் தருகின்றன. யாகங்கள் என்பது நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றும் ஒரு அர்த்தமற்ற சடங்கு அல்ல சில குறிப்பிட்ட கணித அளவுகள் படி யாக குண்டங்களை வடிவமைத்து நமது கோரிக்கைகளுக்கான நிவாரண மந்திரங்களை முறைப்படி சொல்லி சில மூலிகை பொருள்களை அக்னியில் ஆகுதி செய்வதனால் மந்திரங்களால் எடுத்து சொல்லப்படும் நமது வேண்டுதல்கள் குறிப்பிட்ட தேவதைகளிடம் சென்றடைகிறது. முறைப்படி செய்யப்படும் எந்த யாகமும் தோற்று போனதாக சரித்திரம் இல்லை 

யாகங்கள் செய்வதில் பல வாய்ப்புகள் கிடைக்கிறது. அதாவது மிக முக்கியமாக யாகத்தை ஒருவருக்காக மட்டுமல்ல பலருக்காகவும் ஒரே நேரத்தில் ஒரே யாகத்தை செய்யலாம். ஒரு சிறிய யாகத்தில் நூறு பேருக்காக சங்கல்பம் செய்து கொண்டாலும் நூறு பேருக்கும் சமமான பலன் கிடைக்குமே தவிர ஏற்ற தாழ்வு உள்ள பலன்கள் கிடைக்காது. அதாவது நூறுபேருக்கும் தனித்தனியாக யாகங்கள் நடத்தினால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலனை பலரும் ஒரே நேரத்தில் அடையலாம். கூட்டு பிராத்தனை போல கூட்டு யாகமும் நல்ல பலனை தரவல்லது கூடி செய்வதனால்பண செலவும் குறைகிறது. 

இன்று பொதுவாக செய்ய படுகின்ற பல யாகங்கள் வேதங்களில் உள்ள கர்ம காண்டத்தை பின்பற்றியே நடத்த படுகிறது. வேதங்களில் உள்ள கர்ம காண்ட வழிகாட்டுதலின் படி செய்ய படுகின்ற யாகத்தின் பயனை மிக விரைவாக அடைய சித்தர்கள் என்ற மகரிஷிகள் பலர் பல ரகசிய வழிகளை ரகசிய பொருள்களை கூறி இருக்கிறார்கள். அவைகளை பற்றி பல ஆச்சாரிய பெருமக்களுக்கு சரிவர தெரியாது. காரணம் அவர்கள் வேதங்களை மட்டும் முறைப்படி கற்றவர்களே தவிர சித்தர்களின் மூலிகை ரகசியங்கள் தாந்திரீக வழிபாட்டு சூட்சமங்கள் போன்றவற்றை அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பு இல்லை ஒருசில ஆச்சாரியார்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து முறைப்படி யாகங்களை நடத்துவோமானால் பண்டைய கால அரசர்கள் பலாபலனை உடனடியாக பெற்றது போல நாமும் பெறலாம். 

எனவே அத்தகைய அபூர்வ அதிசய யாக விஷயங்களை பற்றி எனக்கு இறைவன் அருளால் ஓரளவு ஞானம் இருப்பதாலும் எனக்கு தெரிந்த சில வேத விற்பன்னர்கள் அதை முழுமையாக கற்றிருப்பதாலும் அந்த யாகங்களை நமது ஸ்ரீ நாராயணா மிஷன் ஆசிரம வளாகத்தில் முறைப்படி யாகசாலையை அமைத்து பலருடைய நன்மையை முன்னிட்டு மாதத்தில் ஒருமுறையோ அல்லது சில குறிப்பிட்ட நாளில் மட்டுமோ நடத்தலாம் என்று நினைக்கிறேன். இந்த யாகங்களை நடத்துவதற்கு கூட பல ஆயிரகணக்கான ரூபாய் செலவு பிடிக்கும் ஆனால் அதை ஒரே ஒருவர் மட்டும் சிரமப்பட்டு சுமக்காமல் பலரும் அவர்களுக்கு முடிந்த தொகையை கொடுத்து அதாவது மிக குறைவான ரூபாய் ஐநூறு துவங்கி அவர்களால் முடிந்த வரை கொடுத்து யாகத்தை நடத்தி ஆயிரகணக்கான ரூபாய் செலவில் பெறக்கூடிய பலனை சில நூறுரூபாய் செலவில் பெறலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. எனவே மிக விரைவில் அதை செயல்படுத்தலாம் என்று நினைக்கிறேன். 

இதற்கு நமது உஜிலாதேவி வாசகர்களின் விருப்பமும் ஒத்துழைப்பும் கருத்துக்களும் மிகவும் அவசியம். இதை பற்றிய உங்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக தெரியபடுத்துங்கள் அதை ஒட்டியே இந்த யாக திட்டத்தை செயல்படுத்தலாம் என்று நினைக்கிறேன். இப்படி யாகங்கள் நடத்துவது எந்த அளவில் பயன்தரும் என்று நீங்கள் கேட்கலாம். எனது அனுபவத்தை பொறுத்தவரை அவைகள் முழுமையான பலனை தந்திருக்கிறது என்று என்னால் உறுதி சொல்ல முடியும். எனவே உங்கள் கருத்துக்களை எனக்கு தெரியபடுத்துங்கள் அதை பொறுத்து நமது அடுத்த கட்ட பணிகளை செய்யலாம். மீண்டும் உங்களிடம் வேறொரு நாளில் பேசுகிறேன் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்வும் சிறப்படைய செய்வான். ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.


Contact Form

Name

Email *

Message *