Store
  Store
  Store
  Store
  Store
  Store

நகைக்கடையில் என்ன சாமிபடம் வைக்கலாம்...?


     யா நான் புதிதாக நகைக்கடை ஆரம்பிக்க இருக்கிறேன் எனது தொழில் சிறப்பாக அமைய நகை சம்மந்தப்பட்ட தொழிலுக்கென்று விஷேசமான தனி தெய்வ படங்கள் அமைக்க வேண்டுமென்று நினைக்கிறேன். என் கடையில் அப்படி என்னென்ன சுவாமி படங்கள் வைக்க வேண்டுமென்று எனக்கு அறிவுரை கூறும்படி வேண்டுகிறேன். 

கமல்நாத்,

திருவல்லிகேணி
சென்னை 


    ந்துவாக பிறந்தவன் வாழ்வில் ஒவ்வொரு சம்பவத்திலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறான். நமது மதமும் மத பெரியவர்களும் இதையையே வற்புறுத்தி கூறுகிறார்கள்.

ஒரு குழந்தை பிறந்து தொட்டிலில் போடும் சடங்கில் துவங்கி இந்துமத சம்பிரதாயங்கள் அவனது இறுதி பகுதிவரை தொடர்ந்து வருகிறது. அந்த சம்பிரதாயங்கள் இல்லை என்றால் இந்துவின் வாழ்க்கை வறண்ட பாலைவனமாக மாறிவிடும்.

தொழில் துவங்குவதும் வியாபாரம் நடத்துவதும் மற்றவர்களை பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சிக்காக இருக்கலாம். ஆனால் ஒரு இந்துவுக்கு தொழில் துவங்குவது என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல.

நமது பெரியவர்கள் நீ என்ன தொழில் செய்தாலும் அது உனக்கு மட்டுமல்ல பலருக்கு பயன்படுவதாக ஒரு சிலருக்காவது வாழ்க்கை கொடுப்பதாக இருக்க வேண்டும் என்றார்கள். அதனால் தான் அறிவில் சிறந்த நமது முன்னோர்கள் பல விஞ்ஞான கருவிகளை கண்டுபிடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

உதாரணமாக விவசாயத்தை எடுத்துகொள்வோம் நிலம் ஒருவனுக்கு சொந்தமானதாக இருக்கலாம் ஆனால் அதில் விதை விதைக்க நாற்று நட களையெடுக்க மருந்தடிக்க அறுவடை செய்ய தானியத்தை வீட்டில் கொண்டுவந்து சேர்க்க ஒரே ஒரு மனிதனால் முடியாது. பலரின் ஒத்துழைப்பு தேவை 

ஒத்துழைப்பது என்றால் உழைப்பில் கூட்டாக வருவது வருகின்ற வருவாயை நாலுபேரோடு பகிர்ந்து கொள்ளுதல் இது தான் ஒரு இந்துவின் தொழில் இந்தியாவின் தர்மம் தர்மத்தை பற்றி மட்டுமே சிந்தித்ததனால் நமது அறிஞர்களால் தனிமனித சுகத்தை தரும் தனி மனிதனுக்கு மட்டுமே வளத்தை தரும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நினைத்து பார்க்க முடியவில்லை 

எனவே நீங்கள் புதியதாக தொழில் துவங்க இருப்பதற்கு எனது வாழ்த்துக்கள் அதே நேரம் எனது தனிப்பட்ட விருப்பத்தை அறிவுரையாகவும் சொல்ல விரும்புகிறேன் நகை தொழிலென்பது இன்று நேற்று தோன்றியது அல்ல மனிதனது கலை உணர்ச்சி என்று பிறந்ததோ அன்று தோன்றியதாகும்.

குறிப்பாக சொல்வது என்றால் இந்திய நகைகலைக்கு தனி வரலாறே உண்டு தெய்வங்களுக்கான நகை அரசர்களுக்கான நகை வணிகர்களுக்கான நகை சாதாரண பொதுமக்களுக்கான நகை என்று நகையை வடிவமைப்பதில் கூட பல வித்தியாசமான தனித்துவங்களை உருவாக்கியவர்கள் நமது முன்னோர்கள்.

அவ்வளவு பாரம்பரியம் மிக்க நகை தொழில் என்று இயந்திரமயமாகி பல தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலம் ஆக்கி விட்டது நீங்கள் இயந்திரங்களால் செய்யப்படும் நகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் மனித கைகளால் செய்யப்படும் நகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும் தொழிலில் கலாச்சாரத்தை காப்பாற்றியதாகவும் இருக்கும். 

பொதுவாக வியாபாரஸ்தலங்களில் கணபதி மகாலட்சுமி போன்ற தெய்வங்களை வைத்து வழிபடுவார்கள் எந்த தொழிலாக இருந்தாலும் இந்த தெய்வங்களின் படங்கள் பொதுவானது குறிப்பாக நகைக்கடைகளில் அல்லது வட்டிகடை பணதொடர்புடைய மற்ற தொழில்ஸ்தானங்களில் மகாவிஷ்ணு, மகாலஷ்மி படங்களோ அல்லது சொர்ண பைரவர் படத்தையோ வைப்பது சிறந்தது என்று அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் சொல்கிறார்கள். அதை செய்யுங்கள் நாராயணன் உங்களுக்கு நல்லதை செய்வான்.


Contact Form

Name

Email *

Message *