Store
  Store
  Store
  Store
  Store
  Store

தர்மத்தை காக்கும் வில் !


     ராசி சக்கரத்தில் ஒன்பதாவதாக வருகின்ற ராசி தனுசு தனுசு என்றால் வில் என்று நமக்கு தெரியும் . ஜாதக கட்டத்தில் ஒன்பதாம் பகுதியை தர்மஸ்தானம் என்று அழைப்பார்கள் இதற்கு வில் உருவத்தை கொடுத்ததற்கும் தர்மஸ்தானம் என்று அழைப்பதற்கும் ஆழ்ந்த பொருளுண்டு 

ரிக், யஜுர், அதர்வண, சாம என்று நான்கு வேதங்கள் நமக்கிருப்பது தெரியும் நமது பண்டைய கால ஞானிகள் ஐந்தாவதாக ஆயுர் வேதத்தை ஆறாவதாக தனுர் வேதத்தையும் வேதங்களின் வரிசையில் வைத்து சொன்னார்கள் ஆயுர் வேதம் என்பது மனித உடம்பின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு அமைந்ததாகும். அதே போல தனுர் வேதம் என்பது யுத்த சாஸ்திரத்தை சொல்வதாகும். 

ஒரு நாடு வலுவோடு இருக்க வேண்டும் என்றாலும் நாட்டு மக்கள் பயமின்றி பாதுகாப்பாக வாழவேண்டும் என்றாலும் வீரம் பொருந்திய அரசாங்கமும் அரசும் அமைய வேண்டும். அரசாங்க பாதுகாப்பு என்பது ராணுவ பலத்தையும் ஆயுத பலத்தையும் நம்பியே இருக்கிறது. சிறந்த வீரர்கள் இருந்து ஆயுதம் இல்லை என்றாலும் ஆயுதங்கள் இருந்து அதை பிரோயோகம் செய்ய தகுந்த வீரர்கள் இல்லை என்றாலும் எந்த பயனும் கிடையாது. ஆயுதமும் வீரர்களும் ஒருங்கே இருக்க வேண்டும்.

அப்படி ஒருங்கே அமைந்தால் மட்டுமே நாட்டில் சரியான பாதுகாப்பு இருக்கும் பாதுகாப்பு இல்லாத நாட்டில் சட்டம் ஒழுங்கு நியாய தர்மம் சரிவர இராது எனவே தர்மத்தை காக்க வேண்டுமென்றால் பலம் வேண்டும். பலமில்லாத தர்மம் அதர்மத்தால் அழிந்து போகும். இதை தெளிவு படுத்தி காட்டவே ஒன்பதாம் பகுதிக்கு தர்மஸ்தானம் என்ற பெயரும் தனுசு என்ற வில் சின்னமும் கொடுக்க பட்டிருக்கிறது. 

இதுமட்டுமல்ல வீரானாக இருப்பதற்கு உடல் வலு மட்டுமல்ல நல்ல திடகாத்திரமான மனவலுவும் வேண்டும் மனோதிடம் என்பது மன ஒருநிலைபாட்டால் மட்டுமே கிடைக்கும் வில்வித்தை சாதாரணமாக அனைவராலும் பழகி விட முடியாது. யாருக்கு நினைத்த மாத்திரத்தில் மனதை ஒருநிலை படுத்த முடிகிறதோ அவர்களாலே வில் வித்தையை கற்று கொள்ள முடியும் அர்ஜுனனுக்கு நிகரான பலசாலியான கர்ணன் கூட அர்ஜுனை போல் மன ஒருநிலை பாடு இல்லாததால் சிறந்த வில்வீரனாக வரமுடிய வில்லை வில்லுக்கு விஜயன் என்ற பெயர் அர்ஜுனனை மட்டுமே தஞ்சமாக இருந்தது 

ஒருவனது மனவலிமையையும் ஜாதகத்தில் ஒன்பதாமிடத்தை வைத்து முடிவு செய்து விடலாம். அதே நேரம் ஒன்பதாமிடம் தர்மஸ்தானமாக இருப்பதனால் தர்மத்தை காக்கும் மன வலிமையையும் ஒன்பதாமிடம் தருகிறது. இதனாலையே ராசி சக்கரத்தில் இதற்கு தனுசு என்ற வில் வடிவ ராசி சின்னம் கொடுக்க பட்டிருக்கிறது.




Contact Form

Name

Email *

Message *