Store
  Store
  Store
  Store
  Store
  Store

உலகம் அழிந்து விட்டதா...?


     ண்களை நன்றாக அழுத்தி துடைத்து தெளிவாக நாலு திசையும் உற்று பாருங்கள் கண்ணாடி போடும் பழக்கம் இருந்தால் அதை துடைத்து சுத்தமாக்கி கண்களில் போட்டு பாருங்கள் நேற்று இரவு உறங்க போகும் போது வைத்த பொருள் அனைத்தும் வைத்த இடத்தில் அப்படியே இருக்கிறதா? 

கைவசம் செல்போன் இருந்தால் உங்கள் அமெரிக்க நண்பரின் எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசி பாருங்கள் அவர் நன்றாக நலமோடு இருப்பது அவரது குரலில் தெரிகிறதா? தொலைபேசியை மேஜையில் வைத்து விட்டு வெளில் வந்து தெருவை பாருங்கள் பால்காரர் பேப்பர் போடுபவர் தெருவில் சில தெரிந்த மனிதர்கள் நடமாடி கொண்டிருக்கிறார்களா? எல்லாவற்றையும் கவனமாக பார்த்து உறுதிபடுத்தி கொண்டிர்களா? சந்தேகம் எதுவும் இல்லையே 

அப்பாடா! உலகம் இன்னும் அழியவில்லை நேற்று எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் கடுகளவு கூட மாறாமல் இருக்கிறது. இதில் சந்தேகமே வேண்டாம் நீங்களும் நானும் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம். இனியும் இருப்போம் இன்றோடு உலகம் சுற்றுவதை நிறுத்திவிடும் அதன் கதை முடிந்துவிடும் நம் ஒவ்வொருவரின் வாழ்விற்கும் சுபம் போட்டுவிட வேண்டியது தான் என்று ரக்கை கட்டி பரந்த படு பயங்கரமான வதந்திக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கபட்டிருக்கிறது. 

மாயன் காலண்டரை காரணம் காட்டி உலகம் முழுவதும் திட்டமிட்டு ஒரு மரண பயத்தை ஏற்படுத்தி மத விரிவாக்க பணிகளை செய்ய துணிந்த ஒரு கூட்டத்தாரின் விஷம பிரச்சாரத்திற்கு காலம் ஒரு சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறது என்று துணிந்து சொல்லல்லாம். 

இதில் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த உலகில் பல ஆயிர கணக்கான காலண்டர்கள் இருக்கிறது இந்திய அரசு ஆய்வு செய்தபடி இந்தியாவில் மட்டுமே ஏழாயிரம் வகை காலண்டர்கள் உள்ளன விக்கிரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம், தமிழ் வருடகணக்கு, கொல்லம் ஆண்டு என்ற மலையாள கணக்கு, யுகாதி என்ற தெலுங்கு கணக்கு என்று ஏராளமான கால கணித முறைகள் இருக்கின்றன. அப்படி ஒரு கால கணித முறையே மாயான் காலண்டர் தமிழ் வருடம் அறுபது இருப்பது போல மாயன் காலண்டரில் ஐயாயிர வருடங்கள் இருக்கின்றன. அறுபது வருடம் முடிந்து அடுத்த வருடம் பிறப்பது போல மாயன் ஆண்டும் அடுத்ததாக துவங்குகிறது. இதுவொரு சாதாரண நிகழ்வு இதற்காக உலகத்தை அச்சுறுத்தியது மிகபெரிய பாவம். 

கடவுள் நம்பிக்கையே இல்லாத சீன நாட்டில் கூட இந்த காலகட்டத்தில் லட்சகணக்கான மெழுகுவர்த்திகள் விற்பனையாகி இருக்கிறதாம். மெழுகுவர்த்தி ஏற்றி ஜபம் செய்தால் உலக அழிவில் இருந்து தான் மட்டும் தப்பித்து கொள்ளலாம் என்ற ஆசை அந்த அப்பாவி மக்கள் மனதில் விதைக்க பட்டிருக்கிறது. 

நமது இந்தியாவில் கூட உலகத்தின் இறுதி நாட்கள் சமீபத்தி விட்டது மனம் திரும்புங்கள் கர்த்தரை ஏற்றுக் கொண்டால் ரச்சிக்க படுவீர்கள் என்ற பிரசாரம் நேற்று மாலை வரை கூட உச்சகட்டமாக நடந்தது நேரம் செல்ல செல்ல அவர்கள் கணக்குப்படி உலகத்தின் இறுதி நாளின் மணிதுளியை நெருங்கும் நேரம் வரவர பிரச்சாரத்தின் தொனி மாறிவிட்டது. 

ஒரு கிருஸ்தவ தொலைகாட்சி நிகழ்ச்சியில் டிசம்பர் இருபத்தி ஒன்றாம் தேதி முதல் உலகத்தின் முகம் மாறி புதிய உலகத்தின் முகம் தெளிவாக பிரகாசம் அடைந்து கர்த்தரின் வருகைக்காக காத்திருக்க துவங்கி விட்டது என்ற ரீதியில் பேச துவங்கி விட்டார்கள். 

அதாவது ஆயிரத்து தொளாயிரமாவது ஆண்டில் உலகம் அழிந்துவிடும் என்றவர்கள் அதை எண்பதாவது வருடம் என்று மாற்றினார்கள் பிறகு அதை இரண்டாயிரம் ஆக்கி இப்போது இரண்டாயிரத்து பனிரெண்டு என்று சொல்லி அதுவும் முடியாத போது இனி மிக விரைவாக அழிய துவங்கும் என்று கதையளக்க ஆரம்பித்து விட்டார்கள். 

பயந்தவர்களை பலகீனமானவர்களை உதவி தேவைபடுபவர்களை எந்த வகையிலாவது ஆடுகளை பட்டியில் அடைப்பது போல தங்களது மத கூடாரத்திற்குள் அடைக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த வதந்திகளை பரப்பி விடுபவர்களின் மிக முக்கிய நோக்கமாக இருக்கிறது. இனியாவது இவர்கள் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க பழக வேண்டும் என்பதே நமது எண்ணம். 

உலகம் இறைவனின் அருளால் இன்னும் பல நூற்றாண்டுகள் வளமையோடும் செழுமையோடும் அமைதியாக இருக்கும். நாமும் நமது தலைமுறையும் நமது முப்பாட்டன் மார்கள் வாழ்ந்த இந்த பூமியில் வாழ்வாங்கு வாழ்வோம் இதில் சந்தேகமே இல்லை.



2012 - உலகம் அழியுமா என்ற பதிவை படிக்க ---->



Contact Form

Name

Email *

Message *