Store
  Store
  Store
  Store
  Store
  Store

குழந்தையின் சண்டித்தனம் மாற பரிகாரங்கள்



    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் என் பெயர் முத்துலஷ்மி நான் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிராமத்திலிருந்து எழுதுகிறேன். ஐயா எனக்கு வஞ்சனை இல்லாமல் கடவுள் ஆறு குழந்தைகளை தந்திருக்கிறார். விவசாய நிலமும் சிறிது இருக்கிறது. என் கணவர் சொந்த ஊரிலே ஜவுளிக்கடை நடத்துகிறார். கடவுள் அருளால் எந்த குறையும் இல்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் எனது மூன்றாவது மகன் ரகுநந்தன் வீட்டில் யார் பேச்சையும் கேட்பது இல்லை தான் விரும்பியபடியே எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறான். சரியாக படிப்பதும் இல்லை. இப்போது பதினோரு வயது தான் ஆகிறது என்பதனால் சமாளித்துவிடுகிறேன். ஆனால் அவன் வளர வளர பிரச்சனை அதிகமாக இருக்குமோ என்று பயப்படுகிறேன். எங்கள் ஊரில் உள்ள ஜோசியர் அவன் ஜாதகத்தை பார்த்து இவன் வீட்டுக்கு அடங்காத பிள்ளை என்று சொல்கிறார். அவன் வாழ்க்கை திசைமாறி போகும் என்று நான் பயப்படுகிறேன். ஐயா அவர்கள் அவனது ஜாதகத்தை பார்த்து அவனுக்கு என்ன செய்தால் நல்ல பிள்ளையாக வருவான் என்பதை சொல்லவும். தயவு செய்து என் குழந்தையை காப்பாற்றி எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி தொடரும்படி செய்யுங்கள் 

இப்படிக்கு 

ஆர்.முத்துலஷ்மி 
ஆத்தூர் 
தூத்துக்குடி மாவட்டம்.




    குழந்தைகள் மழலை மொழியில் நம்மை பார்த்து முட்டா பயலே என்று அழைத்தால் சந்தோசம் அடைகிறோம் என் பிள்ளை எவ்வளவு அழகாக பேசுகிறான் பாரென்று மற்றவர்களிடம் சொல்லி ஆனந்தமடைகிறோம். அதே பிள்ளை இருபது வயதில் அப்படி அழைத்தால் நம்மால் அதை தாங்கி கொள்ள இயலாது. ஊரை கூட்டி பஞ்சாயத்து வைக்கிறோம். வார்த்தை ஒன்று என்றாலும் அது பேசுகின்ற வயதை பொறுத்து தரத்தில் மாறி அமைகிறது.

அதே போலதான் குழந்தைகளின் குறும்பும் வளர்ந்து பெரியவன் ஆனவன் குறும்புகள் செய்தால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல ஊரில் உள்ளவர்களும் கூட தண்டிக்க ஆரம்பித்து விடுவார்கள். சண்டித்தனமான பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் நிம்மதியாக வாழ்வதும் மிகவும் அரிது. ஆனால் இதை புத்திசாலித்தனமாக முன்பே அறிந்து கொண்டு நல்ல முறையில் செயல்படுபவர்கள் தங்கள் குழந்தைகளையும் தங்களையும் பாதுகாத்து கொள்கிறார்கள். 

ஒரு குழந்தையின் ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்திற்குரிய கிரகத்தின் திசை நடக்கும் போது அதாவது அந்த திசை குழந்தையின் ஆறுவயது முதல் பதினெட்டு வயதிற்குள் வருமேயானால் கண்டிப்பாக அந்த குழந்தை வம்புகாரனாக இருப்பான். 19 வயதிற்கு மேல் ஒன்பதாம் வீட்டின் அதிபதிகுரிய திசை வந்தால் திசைகாலம் முடிவும் வரை அந்த ஜாதக காரர்களால் குடும்பத்திற்கு பலவித தொல்லைகள் வரும். அவரே கூட வீட்டை விட்டு ஓடிவிட கூடிய அபாயமும் உண்டு.

அப்படி பட்ட ஜாதகம் அமையபற்ற குழந்தைகளை ஒன்பதுக்குடைய திசை நடக்கும் போது துர்க்கை அம்மன் அல்லது மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு வெள்ளிகிழமை அழைத்து சென்று 27 முறை சுற்றி வர செய்து ஆலய தேவிக்கு தாமரை மலர் சூடி குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி ஒன்பது வாரங்கள் செய்து வந்தால் குழந்தையின் அடாவடித்தனம் மாறி நல்ல பிள்ளையாக இருப்பான். 

ஒருவேளை பிள்ளை பெரியவனாக இருந்து கோவிலுக்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்தால் அந்த ஒன்பதாம் இடத்திற்குரிய கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற தானியத்தை குழந்தையின் தலையணைக்கடியில் ஒன்பது நாள் வைத்து உறங்க செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் அந்த தானியத்தை திருஷ்டி சுற்றி ஆற்றில் அல்லது கிணற்றில் போட்டுவிட வேண்டும். இப்படி செய்வதும் நல்ல பலனை தரும். கவலை படாமல் இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் நல்லது நடக்கும்.



Contact Form

Name

Email *

Message *