( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யாருக்கு மாரடைப்பு வரும்...?
  னது நண்பருக்கு நாற்பது வயது கூட முழுமையாக பூர்த்தியாகவில்லை நண்டும் சிண்டுமாக இரண்டு குழந்தைகள் உலக விபரமே தெரியாத கணவன் மட்டுமே எல்லாமும் என்று நினைக்கும் மனைவி அவருக்கு வருவாய் என்று அதிகமாக எதுவும் கிடையாது. தனியார் கம்பெனியில் மேலாளர் வேலை இவரின் சம்பளத்தை வைத்து தான் வீட்டு வாடகை குழந்தைகளின் படிப்பு செலவு குடும்ப பராமரிப்பு அவசரமாக வரும் திடீர் செலவுகள் என்று எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். 

ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டவே மாட்டார் திருமணம் பிறந்தநாள் விழா என்று எங்கள் மத்தியில் எந்த விஷேசங்கள் நடந்தாலும் அங்கே எதாவது ஒரு மூலையில் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கிறது என்றால் அந்த இடத்தில் அவர் இருப்பார். தனது கஷ்டத்தையும் மற்றவர்களின் கஷ்டங்களையும் தனது வேடிக்கை பேச்சால் மறந்து போக செய்வார். தனக்கு தெரிந்த எவருக்கேனும் பிரச்சனை என்றால் அங்கே ஓடோடி சென்று உதவிகள் செய்வார். அப்படிப்பட்ட அந்த மனிதர் ஒருநாள் இரவு உறங்க போனவர் காலையில் கண்விழிக்கவே இல்லை. 

அவர் மரணத்திற்கு இருதய நோய் காரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் அவர் காலமாவதற்கு ஒருநாள் முந்திதான் அவரை பார்த்தேன். இருதய நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியையும் அவரிடம் காணமுடியவில்லை. இதற்கு முன்பு அவருக்கு நெஞ்சுவலி என்று வந்ததே இல்லை என அவர் மனைவி அழுது புலம்பி சொல்கிறார். ஆனாலும் அவர் அந்த நோயால் தான் மரணமடைந்தார் என்பது மறுக்க முடியாத நிஜம். 

ஒருநிமிட வேதனையில் அவர் போய் சேர்ந்துவிட்டார். இனி அவர் குடும்பம் அடைகின்ற வேதனை வருடங்கள் பல சென்றாலும் நீங்காது மாறாது. தகப்பன் இல்லாத பிள்ளைகளும் கணவன் இல்லாத மனைவியும் இந்த சமூகத்தில் வாழ்ந்து ஜெயிக்க வேண்டுமென்றால் மிக கடுமையாக எதிர்நீச்சல் போட வேண்டும். வருகின்ற தடைகளை கடந்து செல்வது என்பது சாமான்யமான வேலையில்லை. நாம் ஆறுதல் சொல்லலாம் முடிந்த சிறிய ஒத்தாசைகள் செய்யலாம் ஆனாலும் அது பூரணமாகாது. 

எனது நண்பரை போலவே இளம் வயதில் இந்த நோயால் மறித்து போனவர்கள் எத்தனையோ பேர் சிறிய அறிகுறிகள் ஏதேனும் முதலில் தென்பட்டால் தான் பரிசோதனை சிகிச்சை என்று போக முடிகிறது. இல்லை என்றால் சத்தமில்லாமல் வரும் காலதேவன் பின்னால் மறுப்பேதும் சொல்லாமல் போகவேண்டியவனாகவே மனிதன் இருக்கிறான். நோய் வந்த பிறகே நம்மால் தடுக்க போராட முடிகிறது. வருவதற்கு முன்னால் இது இன்னாருக்கு வரும் என்று தெரிந்தால் ஓரளவு நோயின் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்ள முடியும். 

குருஜி நீங்கள் ஜாதகம் மூலம் யாரை நாய் கடிக்கும் யாரை கடிக்காது என்று கூட தெளிவாக சொல்கிறீர்கள் நாய் கடியேயை அறிந்து சொல்லும் நீங்கள் ஜாதகப்படி ஒருவருக்கு இருதய நோய் வருமா வராதா என்று கண்டுபிடித்து சொல்லிவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். எனவே தயவு செய்து எந்த கிரகம் எப்படி இருந்தால் இருதய நோய் வரும் என சொல்லும்படியும் அதற்கான தடுப்பு பரிகாரங்கள் எவையேனும் இருந்தால் அதையும் தெரிவிக்கும் படியும் தாழ்மையுடன் வேண்டுகிறேன். 
இப்படிக்கு 

கே.சுடலைமணி 

நடுவகுறிச்சி 


   இரத்த கொதிப்பு சக்கரை நோய் இருதய நோய் என்பவைகள் எல்லாம் பணக்காரர்களுக்கு மட்டும் தான் வருமென்று முன்பு சொல்வார்கள் காரணம் வசதி படைத்தவர்கள் உடலை வளைத்து வேலை செய்ய மாட்டார்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து நகர மாட்டார்கள் ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து குடிப்பதற்கு கூட சோம்பேரித்தனம் பட்டு வேலைக்கு ஆள்வைப்பார்கள் அதனால் அவர்களுக்கு இந்த நோய் வருமென்று நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் இன்று அந்த உதாரணங்கள் எல்லாம் சரிபட்டு வராது. காரணம் உழைப்பாளி முதலாளி என்ற வித்தியாசங்களை கடந்து நோய்கள் வர துவங்கி விட்டன. 

சில மருத்துவர்கள் வியர்வை சொட்ட சொட்ட வேலை செய்ய வேண்டும் அல்லது உடல் பயிற்சி செய்ய வேண்டும் அப்படி செய்தால் இருதய நோய் வராது என்றும் சொல்கிறார்கள். சில யோகா மாஸ்டர்கள் நுரையிரலை திடகாத்திரமாக வைத்துகொள்ள வேண்டும் தடையற்ற சுகமான சுவாசம் இரத்த நாளங்களில் ஓடுகின்ற ரத்தம் தடையில்லாமல் ஓட வழிசெய்யும் என்றும் சொல்கிறார்கள். இவைகளை தவறு என்று ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன். ஆனால் இந்த நோய் அப்படி ஒழுக்கமாக வாழ்பவர்களையும் தாண்டி வருகிறது. 

எனக்கு தெரிந்த ஒரு பையன் நல்ல உழைப்பாளி பக்கத்து கிராமத்தில் மளிகைக்கடை நடத்துகிறான் கடைக்கு தேவையான பொருள்களை வாங்கி வருவது நிலத்து வேலையை கவனிப்பது போன்றவைகள் அவன் செய்ய கூடிய வேலை பகல்நேரத்தில் முழுவதும் இந்த பணிகளிலேயே இருப்பான். மாலை நேரத்தில் மட்டுமே கடையில் வந்து உட்காருவான். அவன் கடையை கவனிக்க முடியாத நேரம் அவனது தாயாரும் மனைவியும் மாறி மாறி வியாபாரம் செய்வார்கள். 

நூறு கிலோ அரிசி மூட்டையை அவன் ஒருவனே வண்டியில் ஏற்றி இறக்குவான். சமையலுக்கு தேவையான விறகு பிளப்பது கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவது என்று அவன் மிக கடினமான வேலைகளை கூட சுலபமாக செய்வான். பொதுவாக இப்படிப்பட்ட கடின வேலைகளை செய்வதற்கு உடல் சக்தி எந்த அளவு தேவைப்படும் என்பது நமக்கு தெரியும். அத்தகைய உழைப்பாளியாகவும் ஆரோக்கியசாலியாகவும் இருந்த அவன் தனது 35 ஆம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு நொடிபொழுதில் மறித்து போனான். இதற்கு என்ன காரணத்தை சொல்ல முடியும். 

எனவே இன்னாருக்கு தான் நோய் வரும் இன்னாருக்கு வராது என்று சொல்வதும் இந்தமாதிரி நடந்துகொண்டால் ஆரோக்கியமாக நூறுவயது வாழலாம் என்று சொல்வதும் பல நேரங்களில் சரியாக இல்லை. காரணம் ஒவ்வொரு மனிதனின் ஆரம்பத்தையும் முடிவையும் இறைவனே தீர்மானிக்கிறான். அவன் தீர்மானிப்பதற்கு விரோதமாக எதுவும் நடப்பதில்லை. ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்டால் அவர் உடனடியாகவோ அல்லது அதிகபட்சமாக இரண்டு வருடத்திலோ மரணம் அடைந்து விடுவார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் ஒருவருக்கு முற்றிபோன நிலையில் புற்றுநோய் கண்டுபிடிக்க பட்டு சில மாதங்களில் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் அவர் அந்த நோயுடனே ஏழு வருடங்கள் உயிர் வாழ்ந்தார். இவைகள் எல்லாம் நமக்கு தரும் பாடம் நம் கையில் எதுவும் இல்லை அனைத்தும் இறைவன் கையிலேயே இருக்கிறது என்பதாகும். 

ஜோதிடம் என்பதும் இறைவனின் திட்டத்தை இதுவாகத்தான் இருக்கும் என்று ஓரளவு கணித்து சொல்லும் முறையாகும். இதில் தெளிவான கணக்குகளை அனுபவ பூர்வமாக போட்டு பார்த்தால் கடவுள் நமக்கு தரப்போகும் சன்மானத்தையோ சாபத்தையோ ஐம்பது சதவிகிதமாவது தெரிந்து கொள்ளலாம். முழுக்க முழுக்க தெரிந்து கொள்ளலாம் என்று யாரவது சொன்னால் அது ஆணவத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். 

ஒருவருடைய ஜாதகத்தின் லக்கினத்திற்கு ஆறாமிடத்தின் அதிபதி மூன்றாம் இடத்திலிருந்து அவருடைய தசாபுக்தி நடக்கும் போது அந்த மூன்றாம் இடம் கடகராசியாக இருந்தால் அவருக்கு இருதய நோய் வருமென்று சொல்லலாம். மிக குறிப்பாக மூன்றாம் இடத்து அதிபதி செவ்வாய் மற்றும் குருவாக இருந்தால் கண்டிப்பாக இதயநோய் வருமென்று சொல்லலாம். 

இப்படிப்பட்ட கிரகமிருக்கும் மனிதர்கள் ஐயோ என் ஜாதகம் இப்படி அமைந்துவிட்டதே கண்டிப்பாக எனக்கு மாரடைப்பு வரும் ரயிலிலோ, பஸ்சிலோ படுக்கையிலோ செத்து போவேன் எனக்கு விமோஷனமே கிடையாது என்று மூலையில் உட்கார்ந்துவிட வேண்டிய அவசியம் இல்லை. காரணம் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவன் வைத்தியனாதனான இறைவன். அவனை நம்பி அவனிடம் பூரணமாக சரணடைந்து விட்டால் நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும். பிணிதான் என்ன செய்யும். குமரேசன் தாளும் வேலும் நம்மருகில் இருக்கும் போது என்று குமரகுரு பர சுவாமிகள் சொல்வதை நினைவில் வைக்க வேண்டும். 

இத்தகைய கிரகதோஷம் இருப்பவர்கள் முருகபெருமானை வணங்க வேண்டும். முருகனின் பீஜ மந்திரமான சடாச்சர மந்திரத்தை தினசரி நூற்றியெட்டு முறையாவது உச்சாடனம் செய்ய வேண்டும். வருடம் தோறும் சஷ்டி விரதமன்று திருசெந்தூர் முருகனை தரிசனம் செய்ய வேண்டும். காரணம் இதய நோய் ஏற்படுத்தும் குரு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு திருச்செந்தில் ஆண்டவனே அதிபதியாக இருக்கிறான். அவனை முறைப்படி வணங்கி வந்தால் எந்த குறையும் ஏற்படாது. குமரனின் ஞானவேல் மனிதனின் புத்தியை மட்டும் தெளிவிக்காது. மனிதனின் ரோகத்தையும் சுற்றி வந்து சூரனை கூறுபட கிழித்து போல கிழித்து போடும். முருகனை நம்பினால் கெடுவதில்லை இது நான்கு மறையின் தீர்ப்பு.


+ comments + 3 comments

Anonymous
20:25

Dear Guruji,

migavum arumaiyana aanal unmaiyana karuthu, muruga entru sonnal anaithu kastamum theerum idu arunakiri nadahar vakku

regards

ramesh kumar

tirupur

7667681752

Anonymous
20:32

Dear Guruji,

Neenga sonna karuthu manam payam ullavangalukku

oru nalla marunthu,

Murugan adimai

ramesh kumar k

tirupur

7667681752

Very good Information, Thank you


Next Post Next Post Home
 
Back to Top