குருஜி அவர்களுக்கு வணக்கம் எனக்கு அடிக்கடி சிறுநீரக தொற்று ஏற்படுகிறது. சிறிய அளவில் கற்களும் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். லேசர் முறையில் அறுவைசிகிச்சை செய்தும் மீண்டும் மீண்டும் வருகிறது. மாத்திரைகளாக சாப்பிட்டு சாப்பிட்டு உடலில் வேறு சில உபாதைகளும் வருகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை அடிக்கடி பயணம் செய்வது என்வேலை பலவகையிலும் இந்த வியாதி எனக்கு பெரிய தொல்லையாக இருக்கிறது. தயவு செய்து சரியான முறையில் எனக்கு வழிகாட்டி என் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
கிருபாகரன்
கண்டி இலங்கை
சிறுநீரக தொற்றும் கற்களும் இருந்தால் அடைய கூடிய வேதனை என்னவென்று அனுபவபூர்வமாகவே எனக்கு தெரியும். அது ஏனோ தெரியவில்லை ஆங்கில வைத்திய முறை இந்த நோயை பூரணமாக விலக்கமாட்டேன் என்கிறது. தமிழ்நாட்டு வைத்தியர்களுக்கு தான் விஷயம் தெரியவில்லை என்று யோசித்தேன் ஆனால் இலங்கையிலும் இதே கதை இருப்பது தெரியும் போது தவறு வைத்தியர்களிடம் தவறு இல்லை வைத்தியத்தில் தவறு இருப்பதாக தெரிகிறது.
இந்தமாதிரியான நோய்களுக்கு உடனடி நிவாரணம் ஹோமியோபதி சிகிச்சையில் சிறந்தமுறையில் இருக்கிறது. உங்கள் பகுதியில் இருக்கும். நல்ல ஹோமியோபதி மருத்துவரை பாருங்கள் அவர் தருகின்ற மருந்துகளை அவர் சொல்லுகிறப்படி சாப்பிட்டு வாருங்கள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மேலும் அந்த வியாதி நிரந்தரமாக வரக்கூடாது என்றால் நெறிஞ்சி முள்ளை சேகரித்து நன்றாக உலர்த்தி அரைத்து பவுடர் போல் ஆக்கி கொள்ளுங்கள். தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு நெருஞ்சி முள் பவுடரை நல்ல குடிதண்ணீரில் கலந்து தொடர்ந்து ஐந்து மாதங்களாவது குடித்து வாருங்கள். மிக கண்டிப்பாக நிவாரணம் அடைவீர்கள். இது அனுபவ உண்மை.

+ comments + 2 comments
இணையத்திலிருந்து....
http://azeezahmed.wordpress.com/tag/ஃபிரஞ்சு-பீன்ஸ்/
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ.10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
French Beans ஃபிரஞ்சு பீன்ஸ்
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…
Usefully tips