( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஜாதிகளால் நன்மை ?    னித உடம்பு என்று வந்துவிட்டாலே அதில் நோய் இல்லாமல் வாழ முடியாது. மனிதனுக்கு வருகின்ற நோய்களை இரண்டுவகையாக பிரிக்கலாம். ஒன்று நல்லது செய்யும் நோய் மற்றொன்று கெடுதி செய்யும் நோய் நோய்கள் எதுவாக இருந்தாலும் அதன் பயன் வலியும் வேதனையும் தானே அதில் போய் நன்மையான வியாதி என்று ஒன்றை தனியாக பிரித்து பேசுகிறானே என்று நீங்கள் நினைக்கலாம். சளி, ஜுரம் என்று சாதாரணமாக வருகின்ற நோய்கள் நமது உடம்பிற்குள் புகுந்துவிட்ட விஷ கிருமிகளை வெளியேற்றுவதற்காக உடம்பே நடத்துகிற யுத்தம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் நன்மையான நோய்களும் இருக்கிறது என்று சொன்னேன். 

இந்த உலகம் முழுவதுமே நன்மை தீமை என்ற இரண்டு நிறைந்திருக்கிறது. இவை இல்லாமல் எதுவும் இல்லை வெளிச்சம் நன்மை என்றால் இருட்டு தீமை இனிப்பு நல்லதென்றால் கசப்பு தீமை. வெற்றி நல்லதென்றால் தோல்வி தீமை. வாழ்க்கை நல்லதென்றால் மரணம் தீமை ஆக அனைத்துமே நல்லதும் கெட்டதும் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆனால் நாம் ஏனோ சிலவற்றை நன்மையாகவே பார்க்கிறோம் வேறு சிலவற்றை தீமையாகவே பார்க்கிறோம். நாம் தீமை என்று கருதுகின்ற வற்றில் துளி கூட நன்மை இருக்காது என்று பிடிவாதம் செய்கிறோம். இப்படி நம்மால் முழுக்க முழுக்க கெட்டது என்று ஒதுக்கப்பட்ட ஒரு விஷயம் ஜாதி. 

இந்திய சமூகத்தில் ஜாதி என்பது ஒரு சாபக்கேடாக இருக்கிறது ரத்தமும் சதையும் கொண்டு நடமாடுகின்ற சக மனிதர்களில் இவன் உயர் பிறப்பாளன் இவன் தாழ்ந்த குலத்தவன் என்று பிரித்து பார்க்கும் ஜாதி என்ற தத்துவமே மனித தன்மையற்றது எனவே அது ஒதுக்க பட வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் அடிசுவடு இல்லாமல் கூட அழிக்கப்பட வேண்டும் என்று பல சீர்திருத்த வாதிகள் பலகாலமாக அதாவது சரித்திர பூர்வமாக சொல்வது என்றால் ஸ்ரீ ராமானுஜர் காலமுதற்கொண்டே பாடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் கூட ஜாதி விஷயத்தில் யாரும் முழுமையான வெற்றியை அடைந்து விட்டதாக சொல்ல முடியாது. 

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற முயற்சி ஒருபுறத்திலே நடந்துகொண்டிருந்தாலும் ஜாதியை வளர்ப்பதற்கான வாழவைப்பதற்கான முயற்சி இன்னொருபுரத்திலே தங்குதடை இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் வேதனையான அதிசயம் என்னவென்றால் ஜாதி வேண்டாமென்று கொடி பிடிக்கும் சில மனிதர்களே திரைக்கு மறைவில் ஜாதியை வளர்த்து விடுவதற்கு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கான முழுமையான சுயநலமே ஆகும். 

சரி ஜாதி வேண்டும் வேண்டாம் என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும் எல்லா விஷயத்தையும் தீர்க்கமாக யோசித்து செயல்பட்ட நமது முன்னோர்கள் பாழாய்போன இந்த ஜாதியை எதற்கு கண்டுபிடித்தார்கள் இதனால் என்ன லாபம் இருக்கிறது என்று இளைஞர்களுக்கு தோன்றும். அதற்க்கான பதிலை சிறிய அளவில் கூட கொடுக்கவில்லை என்றால் முழுமையான விஷயத்தை யோசிக்க முடியாது. இந்தியாவில் மட்டும் தான் ஜாதிகள் இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். இது முற்றிலுமான தவறு ஜாதிகள் இல்லாத மனித சமூகமே இல்லை என்பதே சரியான உண்மையாகும். வேண்டுமானால் அவர்கள் ஜாதி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருக்கலாமே தவிர மற்றப்படி அனைவரிடத்திலும் ஜாதிகள் இருக்கிறது. 

உலகத்துனுடைய மக்கள் கூட்டத்தை அறிஞர்கள் கற்றறிந்த புத்திசாலிகள் என்றும் ஆளும் வர்க்கம் என்றும் தொழிலார்கள் என்றும் வியாபாரிகள் என்றும் பிரிக்கிறார்கள். சில அறிஞர்கள் தொழிலாளிகளையும் வியாபாரிகளையும் தனித்தனியாக பிரிக்காமல் இரண்டு பிரிவினரையும் ஆளப்படுபவர்கள் என்று ஒருவகைக்குள் அடக்கிவிடுகிறார்கள். அதாவது மனிதனுடைய அறிவின் அடிப்படையில் பொருளாதார அடிப்படையில் ஆட்சி அதிகார அடிப்படையில் தனித்தனி குழுக்களாகவே கருதபடுகிறான் . இந்த குழுக்களுக்கு இந்திய சமூகம் கொடுத்த பொதுவான பெயர் தான் ஜாதி. 

நீங்கள் மேலே சொன்ன குழுக்களின் அடிப்படையில் இந்திய சமூகம் கட்டமைக்க பட்டிருக்கிறது என்றால் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளை ஏன் வகைபடுத்துகிறார்கள் என்று நியாயமாக தோன்றும் இதே போல பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளை எந்த நாட்டிலும் யாரும் வகைபடுத்த வில்லையே ஜாதியை பிறப்பை ஒட்டி அமைத்ததால் அன்றோ ஏற்ற தாழ்வுகள் வருகிறது எனவே மற்ற நாடுகளில் கூறப்படுகிற குழுவும் நம் நாட்டில் இருக்கும் ஜாதியும் நிச்சயம் வேறு வேறானது என்று கூட சிலருக்கு தோன்றும். பகுத்தறிவு பார்வையோ பக்தி பார்வையோ இல்லாமல் சமமான பார்வை கொண்டவர்கள் வேத இலக்கியங்களை படித்து விளக்கம் சொல்ல வந்தால் மனிதனது மனபக்குவத்தின் அடிப்படையிலேயே ஜாதி பிரிவுகள் இருக்கின்றன என்று தெளிவாக சொல்வார்கள். நாமும் புரிந்துகொள்ளலாம். ஆனால் துரதிஷ்டவசமாக நமது நாட்டில் அப்படி ஒரு வாய்ப்பு நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு இல்லவே இல்லை. 

வேதங்கள் கூட ஜாதிகளை பிறப்பின் அடிப்படையில் கூறாத போது பிறகு எப்படி அந்த வழக்கம் நமக்கு வந்தது என்று தோன்றும். அதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் மீது அந்நியர்கள் பலர் பல நூற்றாண்டுகளாக படையெடுத்து வந்ததே ஆகும் . இதை பலரும் ஒத்துகொள்ள தயங்குகிறார்கள்.இந்த உண்மையை ஒற்றுகொண்டால் எங்கே தங்களை அடிப்படை வாதிகள் பிற்போக்கு வாதிகள் என்று மற்றவர்கள் அதாவது எண்ணிக்கையில் மிக குறுகியதாக இருக்கும் பகுத்தறிவு கூட்டம் ஏளனம் செய்துவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு. 

நமது வீட்டில் வரவேற்பறையில் வைக்க வேண்டிய பொருளை அங்கேயும் சமயலறையில் வைக்க வேண்டியதை அங்கேயும் கழிவறையில் வைக்க வேண்டியதை அங்கேயும் வைப்போம். ஒன்றை மாற்றி ஒன்றை வைக்க மாட்டோம். ஆனால் திடிரென்று ஊருக்குள் வெள்ளமோ நெருப்போ வந்துவிட்டால் என்ன செய்வோம்? அவைகள் எல்லாவற்றையும் ஒன்றாக திரட்டி காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வோம். அபாயம் வந்துவிட்டால் காப்பாற்றுவதும் காப்பாற்ற படுவதும் தான் மிக முக்கியமானதே தவிர மற்றவைகள் அல்ல நிம்மதியாக சுயேச்சையாக தன் காரியத்தை தானே பார்த்துகொண்டிருந்த போது இந்திய சமூகத்தில் ஜாதிகள் இல்லை அதாவது வேதம் படித்து பிராமணனாக வாழுகின்ற ஒருவனுக்கு வியாபாரம் செய்கின்ற ஒருவன் மகனாக பிறந்துவிட்டால் அவன் அப்போது பிராமணனாக கருதப்படவில்லை வைசீகனாகவே கருதபட்டான். ஆனால் அந்நியர்கள் காலடி எடுத்து வைத்தவுடன் நமது கலைகளையும் பண்பாட்டையும் தொழில்நுட்பத்தையும் அழிந்து போகாமல் பாதுகாக்க வேறு வழியே இல்லாமல் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளை கொண்டு வந்தார்கள் நமது முன்னோர்கள். இது தான் உண்மையே தவிர மற்றவை அனைத்துமே திரித்து கூறபடுகிற ஏகாதிபத்திய கருத்துக்களே ஆகும். 

நாடு சுதந்திரம் அடையும் வரையில் அதாவது ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் நமது நாடு அந்நியர்களாலே ஆளப்பட்டது. அடிமையாக ஆயிரம் வருடம் இருந்து பழக்கப்பட்டு விட்ட இந்தியனுக்கு பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்ற சலுகையை சுகத்தை விட்டு விட மனது வரவில்லை. ஒருவேளை வருங்காலத்தில் இந்த சலுகைகள் தங்களைவிட்டு போய்விடுமோ? என்ற அச்சத்தில் சாஸ்திரங்களை தங்களுக்கு சாதகமாக திருத்தி அமைத்து கொண்டனர். சில சுயநல அறிஞர்கள் அவர்களின் சுயநல ஆசையினாலையே சமதர்மமாக இருந்த இந்திய சமூகம் ஏற்றத்தாழ்வு மிகுந்ததாக ஆகிபோனது. அந்த ஏற்றத்தாழ்வு இன்று அழுகிய புண்ணை போல புரையோடிவிட்டது. இதனால் என் ஜாதி உயர்ந்தது உன் ஜாதி தாழ்ந்தது என்ற போட்டா போட்டிகள் மலிந்து விட்டன. 

ஜாதிகளை வேண்டாமென்று சொல்பவர்களாக இருக்கட்டும் அது தேவை என்று வாதிடுபவர்களாக இருக்கட்டும் இவர்கள் அனைவருக்குமே ஜாதிகளின் மேல் ஈர்ப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. வெளிப்படையாக இல்லை என்றாலும் உள்ளுக்குள் மனதிற்குள் தங்களது ஜாதியை பற்றிய கர்வமோ தாழ்வு மனப்பான்மையோ கண்டிப்பாக இருக்கிறது. இதை அவர்கள் கண்ணாடியின் முன்னால் நின்று கேட்டு பார்த்தார்கள் என்றால் நிச்சியம் அவர்களின் அறிவு ஆமாம் என்ற பதிலை சொல்லும் இதனால் தான் பல சீர்திருத்த வாதிகள் கடினமாக பாடுபட்டும் ஜாதிகளை ஒழிக்க முடியாமல் இன்றுவரை அது வாழ்ந்து வருகிறது. 

ஜாதிகளை ஒழித்தே ஆகவேண்டும் என்று நாம் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும் இந்த ஜாதிகளால் சிறிதளவு கூட நன்மையே இல்லையா? என்பதை நாம் சிந்தித்தே ஆகவேண்டும் ஒரு குறிப்பிட்ட ஜாதியாரை கீழானவர்கள் என்று ஒதுக்கி வைக்கும் கொடுமையான மனோன்நிலை இருப்பது அருவறுப்பானது என்றாலும் கூட ஜாதிகளால் சில நன்மைகள் இருப்பதையும் நாம் காண முடிகிறது. ஜாதிகளால் நன்மையா? இது என்ன புது கருத்து இந்த ஆள் ஜாதிகள் வேண்டுமென்று சொல்வதற்காக இப்படி பேசுகிறானா? என்று நீங்கள் நினைக்க வேண்டாம். பக்க சார்பற்ற முறை என்று வருகிற போது நல்லது கெட்டது இரண்டையுமே சீர்தூக்கி பார்க்க வேண்டும். அதை தான் நானும் செய்கிறேன். ஜாதிகளால் என்ன நன்மை என்று 
+ comments + 4 comments

வணக்கம் ஐயா நீங்கள் சொல்லவது முற்றிலும் உண்மை .
அனால் இந்தியா வில் மட்டும் தான் இந்த ஜாதி ,வரதச்சனை வெறி தலைவிரித்து ஆடுகிறது
ஆனால் மலேசியா சிங்கபூர் போன்ற நாடுகளில் படித்தவர் படிக்காதவர் என்று
இரு ஜாதிகள் மட்டுமே .படித்த மலையாளமோ , படித்த தெலுகோ பிரச்னை யே இல்லை
பெற்றோரே முன் நின்று திருமணதை நடத்தி வைக்கின்றனர் . இது உண்மை
இந்தியா விலும் இதை போல பின்பற்றினால் வருங்கால சந்ததினர் படித்தவர்களாகவும் ,
திறமையான வர்களாகவும் பிறக்க வாய்ப்பு உள்ளது .
இது நான் கண்ட உண்மை தப்பிருந்தால் மன்னிக்கவும் .

The casteism is not without any merrit.It should be allowed to survive.But the problem is intercaste relationship particularly " Marriage ".
Menu sastra says " women and Monks have no caste ". Anyone irrespective of caste can become a sanniyasi and any women can marry any person of any caste. To put in a nut shell " Marriage has no caste. If that gold verse is put into practice
caste system would never be a problem.

வருணாசிர தர்மம் உண்டானது, தாங்கள் குற்றம் சாட்டும் அந்நியர் படையெடுப்பிற்கு முன்பா? அல்லது பின்பா? அல்லது தங்களின் திசை திருப்பும் முயற்சியா? அந்நியர் படையெடுப்புக்கு முன்பு, வேத சாஸ்திரங்கள் சாதி பேதமில்லாமல், அனைவருக்கும் பயிற்றுவிக்கப்பட்டதா? அந்நியர்கள் நம் நாட்டை விட்டு போன பின்பும், குலக்கல்வித் திட்டத்தை வருணாசிர தர்மத்தின் அடிப்படையில் இராஜாஜி கொண்டு வந்தாரே, அது பிறப்பின் அடிப்படையிலா அல்லது சமதர்ம சமுதாயத்தை அமைப்பதற்காகவா? பல கேள்விகளுக்கு விடையளிக்க இயலாது. என்னைப் பொறுத்தவரை, வலைத் தளங்களில், ஜாதி, மதம், உணவு பழக்க வழக்கங்களைப் பற்றி விவாதம் செய்யாமலிருப்பது நல்லது என நினைக்கிறேன்.


Next Post Next Post Home
 
Back to Top