Store
  Store
  Store
  Store
  Store
  Store

அரசியலில் வெல்ல முருகனை வழிபடு !




    திப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் என் பெயர் மாணிக்கவேலு நான் சிங்கப்பூரில் வாழ்கிறேன். எனக்கு சிறிய வயது முதல் அரசியலில் ஈடுபட்டு பெரிய அளவில் தேச சேவை செய்யவேண்டும் என்ற ஆசை உண்டு அதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகிறேன். நான் இணைந்துள்ள அரசியலமைப்பு நல்ல செல்வாக்குள்ள அமைப்பு என்றாலும் என்னால் அந்த அமைப்பில் திறமையாக செயல்பட முடியவில்லை. எதாவது பிரச்சனைகள் சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கிறது. ஒருவேளை எனக்கு சரிபட்டு வராத துறையில் வீணாக பாடுபடுகிறேனோ என்ற அச்சம் சமீபகாலமாக வருகிறது. இத்துடன் என் ஜாதகத்தை இணைத்துள்ளேன். தயவு செய்து அதை ஆராய்ந்து நான் அரசியலில் ஈடுபடலாமா ? வேண்டாமா? என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிடவும். ஈடுபடலாம் என்றால் அதில் முன்னேற நான் என்ன செய்ய வேண்டும் அதாவது என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விளக்குமாறு பணிவோடு வேண்டுகிறேன். 
இப்படிக்கு
மாணிக்கவேலு 
சிங்கபூர் 




       ளிகைக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை வைப்பது போல எங்கள் ஊரில் கட்சி அமைத்து அரசியலில் ஈடுபடுவதும் ஒருவித வியாபாரமே. உங்கள் ஊர் நிலைமை எப்படி என்று எனக்கு தெரியாது. ஆனாலும் உலகம் முழுவதும் இன்று நடைபெறுகின்ற அரசியலை உற்று நோக்கினால் லாப நோக்கம் முற்றிலும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. 

ஒரு மனிதன் அரசியல் வாதியாக பரிணாமம் அடையவேண்டுமானால் பெரியதாக எந்த தகுதியும் வேண்டாம் என்று நாம் நினைக்கிறோம். அந்த நினைப்பு எந்த இடத்தில் உதயமாகிறதோ அங்கே தான் அரசியல் என்பது ஒழுங்கீனமாக மாறி விடுகிறது. உண்மையில் அரசியல் வாதிக்கென்று சிறப்பான தகுதிகள் உள்ளன. ராக்கெட் ஓட்ட தெரிந்தவனுக்கு அது மட்டும் சரியாக தெரிந்தால் போதும். சமையல் செய்ய தெரிந்தவனுக்கு அதுமட்டும் தெரிந்தாலே போதுமானது. ஆனால் அரசியல்வாதி அப்படி அல்ல. அவனுக்கு அனைத்து துறைகளை பற்றிய ஞானமும் வேண்டும். 

வரலாறு, அறிவியல், புவியல், வானியல், பொருளியல், சமூகவியல், நிர்வாகவியல், தத்துவம், இலக்கியம், சமயம் என்று அனைத்தும் தெரிந்திருப்பவனே சிறந்த அரசியல்வாதியாக நல்ல தலைவனாக உருவாக முடியும். ஆனால் இன்றைய நிலைமை அப்படி அல்ல. அறிவு பலத்தை புறக்கணித்து பண பலத்தையும் படை பலத்தையும் அரவணைத்து இருந்தாலே தலைவனாகி விட முடியும். 

இந்த நிலைமை அரசியலுக்கு வந்ததற்கு முழுமையான காரணம் அரசியல்வாதிகள் என்று சொல்ல முடியாது. பொதுமக்களும் அதற்கு முக்கியமான காரணங்களாக இருக்கிறார்கள். கொள்கைகளை கோட்பாடுகளை சித்தாந்தங்களை செயல் திட்டங்களை கவனிக்காமல் கவர்ச்சியை மட்டுமே கவனிப்பதனால் போலியான அரசியலே தெரியாத அரசியல் வாதிகள் உருவாகி விடுகிறார்கள். இந்த நிலைமை மாறி அறிவுபூர்வமாக மக்கள் என்று அரசியலை அனுகுகிறார்களோ அன்றே அரசியல் சரியானதாக மாறும். அதுவரை சிக்கல் தான்.

மக்களுக்கு சேவை செய்யும் பொதுவாழ்வில் இருப்பவர்களின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு மூன்றாம் இடம் ஆறாமிடம் பதினோராம் இடம் ஆகிய இடங்களில் சூரியன் செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுவாக அமைந்து குருவின் பார்வையை பெற வேண்டும். இந்த மாதிரி ஜாதக அமைப்பு உடையவர்கள் கண்டிப்பாக அரசியலில் பிரவேசிப்பர்கள் உங்கள் ஜாதகமும் அப்படி இருக்கிறது.

இந்தமாதிரியான கிரகங்கள் அமைந்துவிட்டாலும் கூட உடனடியாக அவர்கள் அரசியல் துறையில் வெற்றிவாகை சூடிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அரசியலில் ஈடுபடும் காலத்தில் வலுவான கிரகங்களின் திசையும் புத்தியும் அமைய வேண்டும் அல்லது ஈடுபட்ட பிறகு அந்த திசை வரும்வரை காத்திருக்க வேண்டும். உங்கள் ஜாதகப்படி இன்னும் சிறிது காலத்தில் நல்ல திசை வருகிறது. அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.

பொதுவாக அரசியலில் திறமை இருந்தும் வெற்றிபெற முடியாதவர்கள் அல்லது நல்ல வாய்ப்புகளை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பவர்கள் செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையான முருக கடவுளை வழிபட வேண்டும். முருகனின் வழிபாடு பொது தொண்டில் இருப்பவர்களுக்கு இருக்குமேயானால் அவர்களது வெற்றியை சுலபமாக தடை செய்துவிட முடியாது.

சனி கிரகத்தினுடைய ஈர்ப்பாற்றல் திருநள்ளாரில் இருப்பது போல செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு திருசெந்தூரில் இருக்கிறது. தேவ சேனாதிபதியான முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு செவ்வாயிடமிருந்து எந்த தொல்லைகள் வராமல் தடுப்பவராகவும் இருக்கிறார். யாமிருக்க பயம் ஏன் என்று முருகபெருமான் சொல்வதன் காரணம் இதுவே ஆகும். 

பொதுவாக அரசியலில் முன்னேற நினைப்பவர்கள் பெளர்ணமி தினத்தில் திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி நாழிகிணற்றில் குளிக்காமல் கோவிலுக்கு சென்று கொடிமரத்தை சுற்றி வணங்கி தனது பிராத்தனையை வைத்துவிட்டு முருகபெருமானையும் வணங்கி விட்டு வரவேண்டும். இப்படி இருபத்தி ஏழு பெளர்ணமி தினம் செய்தால் கண்டிப்பாக பலன் உண்டு என்று அனுபவ பட்டவர்கள் சொல்கிறார்கள். 

நான் சிக்கபூரில் இருக்கிறேன் இருபத்தி ஏழு மாதம் எப்படி தொடர்ந்து திருச்செந்தூர் போக முடியும் என்று மாணிக்கவேலன் நினைப்பது நமக்கு தெரியாதது அல்ல. இவரை போலவே அடிகடி திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள அம்மன் அல்லது துர்க்கை ஆலயதிற்கு வளர்பிறை தினத்தில் வரும் தசமி திதியில் சென்று அம்மனை வழிபடவும் முப்பது மாதங்கள் தொடர்ந்து இப்படி செய்தால் முப்பது மாதம் முடிவதற்குள் கண்டிப்பாக எதாவது ஒரு நல்ல பதவி அரசியலில் கிடைக்கும் மக்கள் பணியாற்றலாம்.


Contact Form

Name

Email *

Message *