( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நாய் கடியும் மேள சத்தமும்
    யா நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் என் பெயர் மணிகண்டன் எங்கள் ஊரில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது யாருக்காவது நாய் கடி பட்டுவிட்டால் அவர்கள் இறப்பு ஏற்பட்ட வீடுகளுக்கு செல்ல கூடாது. பிணங்களை பார்க்க கூடாது. மீறி பார்த்தால் விஷம் தலைக்கேறி இறந்து விடுவார்கள் என்பதே அந்த நம்பிக்கையாகும். இது உண்மையா? என்பதை தெரியபடுத்தவும் 

இப்படிக்கு 
மணிகண்டன் 
திருநெல்வேலி 
    நாய் கடிப்பதை பற்றி இடத்துக்கிடம் நம்பிக்கை மாறுபட்டிருக்கிறது. சில பகுதிகளில் நாய் கடி பட்டவர்களை முறத்தால் அடித்தால் குணமாகி விடுமென்று நினைக்கிறார்கள். வேறு சிலர் கடித்த நாய் சாப்பிட்ட தட்டில் கடிபட்டவர் உணவருந்தினால் சரியாகிவிடுமென்று நினைக்கிறார்கள். இவைகள் அனைத்துமே தவறான நம்பிக்கைகள் இவற்றிற்கு அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவோ எந்த ஆதாரமும் கிடையாது. 

திருநெல்வேலி பகுதியில் நாய்கடி பற்றி வேறு சில சுவையான நம்பிக்கைகள் இருக்கின்றன. திருவிழா காலங்களில் ஆலயங்களில் வாசிக்கப்படும் மேள கச்சேரியையோ திருமண மேளத்தையோ கேட்க கூடாது மீறி கேட்டால் கண்டிப்பாக பாதிப்பு உண்டு என்றும் நம்புகிறார்கள். என்ன மருந்து சாப்பிட்டாலும் கடித்த நாய் இறந்துவிட்டால் கடிபட்டவருக்கு மரணம் நிச்சயம் என்றும் நம்புகிறார்கள். இப்படி எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு. அவற்றிற்கு ஆதாரம் இல்லை என்பதே எனது எண்ணம்.

+ comments + 2 comments

நண்பர் மணிகண்டன் சொல்வது போல் எங்கள் ஊரில் ஒரு சம்பவம் : எங்கள் பகுதியில் ஒரு பெண்மணியை நாய் கடித்துவிட்டது . அந்த பெண்மணியும் மருத்துவ சிகிச்சை எடுக்காமல் அசால்ட்டாக விட்டுவிட்டார். சிறிது காலத்துக்குப் பின்னர் அந்த பெண்மணியின் பக்கத்து வீட்டிலுள்ள ஒருவர் தீக்குளித்து கருகி இறந்துவிட்டார். அந்த இறந்தவரின் பிண வாடையை முன்பு நாய் கடிபட்டு ஊசி போடாத பெண்மணி சுவாசிக்க நேர்ந்தது. விளைவு - பிண வாடையை சுவாசித்த பெண்மனியும் இறந்துவிட்டார்.

Next Post Next Post Home
 
Back to Top